வியாழன், 3 ஜூன், 2010

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவை வீழ்த்துவதற்கு இந்தியா கடும் முயற்சி ...



சிறீலங்காவில் வலுவாக கால்பதித்துள்ள சீனாவை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இருந்து அகற்றி இந்து சமுத்திர பிராந்திய நாடுகளை தனது பொருளாதார அபிவிருத்தி குடையின் கீழ் கொண்டு வர இந்தியா கடும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றது.


இந்தியாவுக்கும் – சீனாவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இந்த போட்டியில் சிறிலங்கா கடும் நெருக்கடிகளை சந்தித்துள்ளது
. சிறிலங்காவில் சீனா மேற்கொண்டுவரும் பொரளாதார அபிவிருத்திகளை முறியடிக்கும் நோக்கத்துடன் சிறீலங்காவுடன் பொரும் வர்த்தக உடன்படிக்கைகளை (சீபா) மேற்கொள்ள இந்தியா திட்டமிட்டு வருகின்றது.


இந்த இரு தரப்பு வர்த்தகத்திற்கான உடன்பாடுகள் அடுத்த வாரம் சிறிலங்கா அரச தலைவர் இந்தியா செல்லும் போது கைச்சாத்திடப்படும் என இந்தியத் தகவல்கள் தெரிவித்துள்ளன.


சிறீலங்காவில் பொருளாதார, படைத்துறை மற்றும் அரசியல் ஆதிக்கங்களை சீனா செலுத்தி வருவது இந்தியாவை பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாக ஆசியவை தளமாக கொண்ட இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


எனினும் சீனாவிடம் தனது இறைமைய அடகுவைத்து போரை முடிவுக்கு கொண்டவந்த சிறீலங்கா அரசு அதில் இருந்து மீளமுடியதாக சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளது.


இதனால் தான் அரசின் மறைமுகமான ஆதரவுடன் கடந்த வாரம் கொழும்பில் ஒரு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. அதாவது இந்தியாவுடன் சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் வர்த்தக உடன்பாடுகள் நிறுத்தப்படவேண்டம் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சிறிலங்கா சிங்கள வர்த்தகர்கள் கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.


இந்தியாவுடன் சிறிலங்கா முன்னெடுக்க உள்ள இந்த வர்த்தக உடன்படிக்கை மூலம் இந்திய வர்த்தகர் ஒருவர் தனது குடும்பத்துடன் சிறிலங்கா சென்று தொழிலை மேற்கொள்ள முடியும் என இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்த குமாரசிங்கா என்பவர் தெரிவித்துள்ளார்.


இந்த உடன்படிக்கையின் மூலம் தனக்கு அதிக அதிகாரங்கள் வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அதாவது இந்தியாவுக்கு சிறிலங்கா அரசு நிறைவேற்று அதிகாரங்களை வழங்கவேண்டும் என இந்தியா எதிர்பார்ப்பதாகவும் கொழும்பை தளமாக கெண்ட இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


ஏறத்தாள 800 பேர் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்தவர்களை உடனடியாக சந்தித்த சிறிலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா பேச்சுக்களை மேற்கொண்டிருந்தார். இந்த உடன்படிக்கையை மேற்கொள்வது தொடர்பாக தான் மறு ஆய்வு செய்வதாக மகிந்தா தெரிவித்துள்ளார்.


இதன் பின்னனி தெளிவானது. அதாவது சிங்கள மக்கள் எதிர்க்கிறார்கள் என்ற கருத்தை முன்வைப்பதன் ஊடாக இந்தியாவை புறம்தள்ளி சீனாவிற்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற அரசு திட்டமிட்டுள்ளது.


CHINA_-_SRI_LANKAஎனினும் சீனாவும், இந்தியாவும் இணைந்து சிறிலங்காவில் அபிவிருத்திகளை முன்னேடுக்க முடியும் என தாம் நம்புவதாக கொழும்பை தளமாக கொண்ட அரசியல் ஆய்வாளர் குசல் பெரேரா தெரிவித்துள்ளார்.


இவ்வாறான ஒரு நிகழ்வு மியான்மார் நாட்டில் நடைபெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


ஆனால் மியான்மார் நாட்டினால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சத்தை விட சிறிலங்காவால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் அதிகம் என வீரகேசரி வரஏட்டின் பத்தி எழுத்தாளர் அருஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.


மியான்மார் ஏற்கனவே சீனாவின் கூட்டாளி நாடாக உள்ளது ஆனால் இந்தியா அங்கு தனது பிரசன்னத்தை தக்கவைக்க முயல்கின்றது அவ்வளவு தான். ஆனால் சிறீலங்காவை சீனா தன்வசப்படுத்துமாக இருந்தால் இந்தியா முற்றுமுழுதான ஒரு முற்றுகைக்குள் கொண்டுவரப்படும் அபாயம் ஏற்படும் எனவும். அதனால் அதன் வளர்ந்துவரும் பொருளாதாரத்திற்கு தேவையான எரிபொருட்களை கொண்டு செல்லும் வழங்கல்பாதைகள் மிகப்பெரும் நெருக்கடிகளை சந்திக்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இந்தியாவுக்கும் – சிறிலங்காவுக்கும் இடையில் 1998 ஆம் ஆண்டும் ஒரு வர்த்தக உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது (The Indo-Sri Lanka Free Trade Agreement (ISFTA)). அதன் மூலம் 2000 ஆம் ஆண்டு 55.7 மில்லியன் டொலர் வர்த்தகமும், 2007 ஆம் ஆண்டு 516.4 மில்லியன் டொலர் வர்த்தகமும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.


ஆனால் 2002 ஆம் ஆண்டு சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் 350 மில்லியன் டொலர் வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வர்த்தக நடவடிக்கை 2009 ஆம் ஆண்டு 2 பில்லியன் டொலர்களை எட்டியுள்ளது. மேலும் வர்த்தக நடவடிக்கைகள், அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்நிறுத்தி 20,000 சீனா தொழிலாளர்கள் சிறீலங்காவுக்குள் புகுந்துள்ளனர்.


இந்த நிலையில் தான் சிறிலங்காவுடன் மேற்கொள்ளும் வர்த்தக உடன்படிக்கையை வலியுறுத்தி இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபாமா ராவ் இந்த வருடத்தில் இரு முறை சிறிலங்காவுக்கு வந்து சென்றுள்ளார்.


யாழில் தனது தூதரக அலுவலகத்தை அமைத்துள்ள இந்தியா தற்போது அம்பாந்தோட்டையிலும் தூதரக அலுவலகம் ஒன்று அமைக்க வேண்டும் என அடம்பிடிக்கிறது. ஆனால் கண்டியில் அதிக இந்திய வம்சாவழியினர் வாழ்வதால் அங்கு தூதரக அலுவலகம் அமைத்ததற்கு காரணம் உண்டு. யாழில் தமிழ் மக்கள் செறிந்து வாழ்வதால் அங்கும் தூதரக அலுவலகம் அமைத்ததற்கு காரணம் உண்டு ஆனால் அம்பாந்தோட்டையில் ஏன் இந்தியா தூதரக அலுவகம் அமைக்கின்றது என சிறிலங்கா கேள்வி எழுப்பியுள்ளது.


மேலும் சீனா தமக்கு பொருளாதார ரீதியாக உதவி வருவதாகவும், போரின் போது படைபல ரீதியாக உதவி வந்ததாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரீஸ் தெரிவித்துள்ளார்.


அதுமட்டுமல்லாது இந்தியாவை போலல்லாது சீனா ஐ.நாவின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை உள்ள நாடு எனவே அதுவே தமக்கு அதிக அனுகூலமானது என்ற ஒரு குண்டையும் பீரீஸ் தூக்கிப் போட்டுள்ளார்.


எனவே இந்தியாவின் நகர்வுகளை முறியடித்து சிறீலங்காவில் அதன் தலையீடுகளை குறைப்பதற்கு சிறீலங்கா தயாராகிவிட்டது. ஆனால் அதனை இந்தியா எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றது என்பது தான் தற்போதைய கேள்வி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக