புதன், 15 டிசம்பர், 2010

சங்கானையில் குருக்களைச் சுடுவதற்கு படையினர் ஆயுதம் வழங்கி உதவினர்

சங்கானையில் குருக்களும் அவரது மகன்களும் படைச் சிப்பாய்கள் இருவரின் உதவியுடனேயே சுடப்பட்டுள் ளனர். சூடு நடத்தியவர்களுக்கு ரி56 துப்பாக்கிகளைக் கொடுத்து உதவிய இராணுவத்தின் கோப்ரலான குணசேன, சிப்பாய் ரட்ணாயக்க இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மானிப்பாயில் பணியாற்றும் கோப்ரல் ஒருவரே சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ரி56 துப்பாக்கிகளை சந்தேக நபர்களுக்கு வழங்கி உள்ளார். அவர் சிகரெட் மற்றும் கஞ்சாவுக்கு அடிமையானவர். மற்றொரு சிப்பாயும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளார்'
 விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பின்னர் இராணு வத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்ற இருவரே சம்பவத்தில் ஈடுபட்டசந்தேக நபர்கள் சக்தி என அழைக்கப்படும் காசிநாதன் முகுந்தன், ரமணன் என அழைக்கப்படும் பாலசுப் பிரமணியம் சிவரூபன் ஆகிய சந்தேகநபர்களே கைது செய் யப்பட்டுள்ளனர். இவர் களுக்கு உதவினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இராணுவத்தின் கோப்ரலான குணசேன, சிப்பாய் ரட்ணாயக்க ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் விசாரணைகளுக்காக மானிப்பாய் பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக