இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வியாழன், 16 டிசம்பர், 2010
விடுதலைப்புலிகள் இயக்கம் மாற்று தோற்றங்களில் செயற்படுகிறது
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு விட்டாலும், அது மாற்று தோற்றங்களில் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாக வெளிநாட்டு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் அவதானத்துடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆசிய – மத்திய கிழக்கு ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், முழு ஆசியாவையும் அச்சுறுத்தும் இயலுமைக் கொண்டது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
லியாம் பொக்ஸின் இலங்கை விஜயம் ஒத்தி வைப்பு
பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் லியாம் பொக்க்ஷ், தமது இலங்கைக்கான விஜயத்தை ஒத்தி வைத்தள்ளதாக பி.பி.சி தெரிவித்துள்ளது. இந்த விஜயத்துக்கு பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சு வெளிப்படுத்திய எதிர்ப்பைத் தொடர்ந்து, அவர் இந்த விஜயத்தை கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும் லியாம் பொக்ஸின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நீடிக்கும் நோக்கில், இலங்கை தாக, லியாம் பொக்ஸின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எப்படி இருந்தவர் இப்படியாகிவிட்டார் !!!!!!....
எனக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தினை வழங்கியிருந்தவர் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த கத்துருசிங்கவே. நாட்டையும் மக்களையும் காக்கும் தலையாய கடமையில் அவர் நீடூழி வாழ வேண்டும் என இமெல்டா சுகுமார் தெரிவித்திருந்தார். புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ் இணையங்களை நடத்தி வருகின்றவர்கள் அரசிற்கு விரேதமானவர்கள். அவர்கள் மக்களுக்கும் விரோதமானவர்கள். அவர்கள் பொய்யான வதந்திகளை பரப்பி வருகின்றார்கள். இணையங்களில் அவர்கள் பிழையான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் குற்றம் சாட்டியுள்ளார்
வடக்குகிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தாயகம் அல்ல: எல்லாவல மேதானந்ததேரர்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் தாயகம் அல்ல. அதற்கான எவ்விதமான சட்டபூர்வ ஆதாரங்களும் இல்லை. அவ்வாறு கூறுவதற்கு உரிமையில்லை. ஆனால் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் தாயக பூமி அல்ல என்பதற்கும் அது சிங்கள மக்களால் ஆளப்பட்ட பிரதேசங்கள் என்பதற்கும் எம்மிடம் அதிகளவான சான்றுகள் உள்ளன. மேலும் வன்னி என்பது தமிழ் சொல் அல்ல. அது சிங்கள சொல்லாகும். அங்கு 1583 விஹாரைகள் இருந்துள்ளன. ஆறாவது பரகும்பா அரசனின் பிரதிநிதியான சபுமல் குமாரயாவே யாழ்ப்பாணத்தின் நல்லூர் கோயிலை கட்டினார் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற மேதானந்த தேரர் தெரிவித்தார்.
தமிழரைச் செம்மணியிலும் முள்ளி வாய்க்காலிலும் கொன்று குவித்த சரத் பொன்சேகாவுக்குத் தமிழரையே வாக்களிக்கக் கேட்டதை நினைத்துப் பார்த்தால் ஆறறிவு பற்றிப் பேசுவது ???
இன்று தமிழரின் உரிமைப் பிரச்சினையாக ஸ்ரீ லங்காவின் தேசிய கீதத்தை தமிழில் பாடும் உரிமை மறுக்கப் பட்ட விடையம் மிகப் பெரிய அளவில் பேசப் படுகிறது. இதைப் பேசுபவர் தமிழரின்
கடவுள்தான் இனித் தமிழர்களைக் காப்பாற்றவேண்டும் -தந்தை செல்வா
10 வருட செயற்பாட்டுத் திட்டமொன்றின் கீழ் 2011இல் ‘மும்மொழி இலங்கை’ என்ற திட்டத்தினை ஆரம்பிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன்.இத்திட்டம்.....
இறுதிநாள்!!!!!
சிறீலங்காவின் போர்க்குற்றங்களை ஆராயும் முகமாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் அமைத்துள்ள நிபுணர் குழு முறைப்பாடுகளை ஏற்று கொள்ளும் இறுதி நாள் இன்றாகும்.இந்தநிலையில்...
ஒரே மரத்தில் தொங்கி மூவர் தற்கொலை!!
வேலூர் அருகே ஒரே மரத்தில் தந்தையும், 2 மகன்களும் இன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வேலூர் அருகே உள்ள கொணவட்டம். இங்குள்ள சதுப்பேரி ஏரிக்கரைக்கு இன்று அதிகாலை சிலர் சென்றனர்.
புலிகள் இல்லாத தேசத்தில் நரிகள் வாலாட்டம்!!!
யாழ்ப்பாணத்தில் தொடரும் கொள்ளைச் சம்பவங்களால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். யாழ். மானிப்பாய் வீதியின் ஆறுகால் மடச் சந்தியிலுள்ள வீட்டிற்குள் நேற்று நள்ளிரவுவேளையில் புகுந்த பத்திற்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட
விடுதலைப்புலிகளால் உயிருக்கு ஆபத்து அல்ல. இவர்களால் தான் தமிழ் இனத்திற்கு ஆபத்து’-சீமான்
பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதலமைச்சர் கருணாநிதி, மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் உள்பட நாட்டின் முக்கிய தலைவர்களுக்கு, விடுதலைப்புலிகளால் ஆபத்து இருப்பதாகவும், தமிழகத்தில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும்படியும், மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதாக தமிழக போலீஸ் டி.ஜி.பி லத்திகா சரண் தெரிவித்தார்.
அவசரகாலச் சட்டம் மற்றும் உயர் பாதுகாப்பு வலயங்கள், குறிப்பாக வடக்கில் உள்ளவை தளர்த்தப்பட வேண்டும்!-ரொபேர்ட் ஓ பிளேக்
வடக்கில் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுமாறு அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. அவசரகாலச் சட்ட விதிகளில் மேலும் தளர்வுகள் ஏற்படுத்தப்பட வேண் டும் எனவும் தெரிவித்துள்ள அது, விரைவில் வடக்கில் தேர்தல்களை நடத்த வேண்டும் என்றும் கேட்டுள்ளது.
புதன், 15 டிசம்பர், 2010
த.தே.கூ – தமிழ் கட்சிகளின் அரங்கம் சந்திப்பு பயனற்றது- சிறிதரன்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தமிழ்க் கட்சிகளின் அரங்கமும் தற்போது சந்தித்திருப்பது ஒரு பயனற்ற விடயமே. இது எவ்விதத்திலும் பயன்படப் போவதில்லை. இவர்களால் தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வை பெற்றுக்கொள்ள முடியாது
விடுதலைப்புலிகள் மீதான தடையினை நீடிப்பதற்கு...........
விடுதலைப்புலிகள் மீதான தடையினை நீடிப்பதற்கு ஈழத் தமிழ் தேசியத்திற்கு எதிரான இந்திய ஊடகங்களும் சில சக்திகளும் தயாராகியுள்ளதாக தெரியவருகின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி ஆகியோரை இலக்குவைத்து பாரிய தாக்குதலொன்றை மேற்கொள்ள விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளதாக இந்திய புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாக தெரியவந்திருக்கின்றது.
முஸ்லிம் மக்களின் ஒரு தொகுதியினர் - யாழ்ப்பாணத்தை நோக்கி
யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்த நிலையில் புத்தளத்தில் வசித்து வந்த முஸ்லிம் மக்களின் ஒரு தொகுதியினர் மீள் குடியேற்றத்திற்காக புத்தளத்திலிருந்து யாழ்ப்பாணத்தை நோக்கிப் பயணமாகினர்.
"வளமான ஸ்ரீலங்காவை கட்டியெழுப்புவோம்" என்ற அமைப்பினால் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் இம்மக்கள் குடா நாட்டுக்கான தங்களது பயணத்தை ஆரம்பித்தனர்.
"வளமான ஸ்ரீலங்காவை கட்டியெழுப்புவோம்" என்ற அமைப்பினால் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் இம்மக்கள் குடா நாட்டுக்கான தங்களது பயணத்தை ஆரம்பித்தனர்.
குழையைக் காட்டி ஆட்டை கூட்டிச் செல்லும் கலாசாரம்........
தமக்குப் பின்னால் வரமறுக்கின்ற ஆடுகளுக்குக் குழையைக் காட்டி அதனைக் கூட்டிச் செல்லும் வழக்கம் ஒன்று நம் ஊர்களில் உண்டு. குழைக்கு ஆசைப்பட்ட ஆடுகள் அழைப்பவர் யாரென்று தெரியாமல்- குழை இன்னதென்று அறியாமல் பின்னால் செல்லும். ஆடு குழையைச் சாப்பிட எத்தனிக்கும்போது குழையை இழுத்துக் கொள்வது ஆட்டைக் கூட் டிச்செல்பவரின் நுட்பமாக இருக்கும். எனினும் சில ஆடுகள் நிலைமையை உணர்ந்துகொண்டு குழைக்குப் பின்னால் செல்ல மறுக்கும்.இச் சந்தர்ப்பத்தில் ஆட்டுக்குக் குழையைக் காட்டியவர் சற்று இறங்கி குழையை ஆட்டுக்குச் சாப்பிடக் கொடுப்பார்.
சங்கானையில் குருக்களைச் சுடுவதற்கு படையினர் ஆயுதம் வழங்கி உதவினர்
சங்கானையில் குருக்களும் அவரது மகன்களும் படைச் சிப்பாய்கள் இருவரின் உதவியுடனேயே சுடப்பட்டுள் ளனர். சூடு நடத்தியவர்களுக்கு ரி56 துப்பாக்கிகளைக் கொடுத்து உதவிய இராணுவத்தின் கோப்ரலான குணசேன, சிப்பாய் ரட்ணாயக்க இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாயில் பணியாற்றும் கோப்ரல் ஒருவரே சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ரி56 துப்பாக்கிகளை சந்தேக நபர்களுக்கு வழங்கி உள்ளார். அவர் சிகரெட் மற்றும் கஞ்சாவுக்கு அடிமையானவர். மற்றொரு சிப்பாயும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளார்'
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)














