சனி, 3 ஜூலை, 2010

எம் தேசத்திற்காய் எங்கெங்கும்...............


என்றுமே புரியாத புதிர்கள்!
மனதிலே விடுதலையை சும்ந்தவர்கள்!
எரிமலையாய் தடை உடைத்த கந்தக பூக்கள்!
புயலாய் சுழன்றடித்த் தென்றல்கள்!....................


இவர்களோடு பழகிய கணங்களை நினைத்து பார்க்கிறேன்.அற்புதமாய்,வரமாய்,கிடைக்கின்ற ஞானிகளின் தரிசனங்களின் பேறாய் இவர்களின் வரவுகள் இருக்கும்.
எரிமலையாய் வாழ்ந்த இவ் உள்ளங்களில்தான் எத்தனையோ நெகிழ்ச்சிகள்,துன்பங்கள்,இன்பங்கள்,காதல்கள்,துயரங்கள் அதற்கு மேலாய் தாயகத்தை நேசித்தார்கள்.
தங்கள் இலட்சியத்தை நிறைவேற்ற தம் உடல்களிலேயே கந்தகவெடி சுமந்தவர்கள்.
நவநாகரீகமாக,சுகபோகமாக,சுயமாக,எதிரியின் குகைகளில் வாழ்ந்த போதும் தடை உடைத்து வ்ழி சமைத்தவர்கள்.அலைபாயும் மனவுலகில் புதுமைகளையும்,
ஆசைகளையும் மனதில் தேக்கி நிற்கும் இளவயதில் தாயகத்தை,மண்ணின் துயரத்தை மனதில் சுமந்த வ்ல்லவர்கள்.
காதலனிற்கு காதலியாய்,காதலிக்கு காதலனாய்,உறவுகளிற்கு உயிராய் உணர்வுகள் மிளிர்ந்தபோதும் தேசத்தின் தடை உடைப்பே இவர்களின் இலட்சியமானது.


தமது இலக்கு எய்தும்வரை அக்குறிக்கோளே வாழ்வாக வரிந்து கொண்டவர்கள்!


அன்றொரு மாலைப்பொழுது இலக்கு ஒன்றை அழிப்பதற்கான திட்டமிடல்கள் நடந்தேறி இருந்தது. இலக்கை அழிப்பதற்கான கரும்புலிவீரன் சற்று தொலைவில் தயாராக இருந்தான்.
தளத்தின் தாக்குதல் பொறுப்பாளனின் வழி காட்டலில் தாக்குத்ல் திட்டங்கள் வரையப்பட்டு தாக்குதல் நிறைவேற தயாரான பொழுது கரும்புலிவீரன் நின்ற பகுதி
இராணுவச்சுற்றிவ்ளைப்புக்குள்ளாக்கப்படுகிறது.
கரும்புலி வீரனோ அவ்விடத்தை விட்டு வெளியேற முடியாதநிலை,தாக்குதல் இலக்காக கருதப்பட்ட சிங்கள இராணுவ முதன்மை நிலை அதிகாரியை தவறவிட்டால் பின்பு அழிப்பதற்கான சாத்தியங்கள் இன்மை,
அத்தோடு கிழக்கு மாகாணத்தில் பல படுகொலைகளை முன் நின்று நாடாத்திய அவ் அதிகாரியின் பாதுகாப்பையும் அதிகப் படுத்தியிருந்தது சிங்கள அரசதரப்பு.
இராணுவ அதிகாரியை தவற விடுதல் என்பது சாத்தியமற்றது என கருதிய அவ்தாக்குதலிற்கு பொறுப்பான பொறுப்பாளன் தானே கந்தகபொதியை சுமக்க தயாராகிறான்.
குறித்ததாக்குதல் நேரத்தில் இலக்கின் மீது தான் வரிந்து கொண்ட இலட்சியத்திற்காய் தம் உடலை வெடியாக்கி இலக்கினை அழித்தான்.


அவ் புலிவீரன் மனதில் இருந்ததுதான் என்ன?..........
புரிந்து கொள்ளுங்கள் கரும்புலிவீரரின் மனங்களை........


சிறு வயதிலே உறவுகளை பிரிந்த் புலிவீரனவன்,சிங்களப்படையினரால் சகோதரியின் குடும்பம் சிதைக்கபட்டு இருந்த்து. இயக்கத்தில் பொறுப்பாளனாகி,கரும்புலியாகி நின்றான்.
தன் உறவினர்களுடன் எதுவித தொடர்பும் கொண்டிருக்கவில்லை. அவன் கொழும்பில் தாக்குத்ல் நடவடிக்கைக்கான வேவுகளில் ஈடுபட்ட கரும்புலிகளில் இவனும் ஒருவன்.
மிக நீண்டகாலம் காத்திருந்த இலக்கு மீதான தாக்குதல் தருணம் அது.


இலக்கு வரும் வரை கொழும்பின் வீதியொன்றில் வெடிமருந்து அங்கியோடு காத்திருந்த வேளை மென்மையான கரமொன்று இவன் கரம் பற்றியது.
அவ்மென்மையான கரங்களுக்குரியவள் நீண்டகாலம் பிரிந்த்திருந்த தனது சகோதரியென்று இனம் கண்டபின்பும் உறவுகளிற்கு இடம் கொடுக்காத புலிவீரன்
"யாரக்கா நீங்கள் உங்களுக்கு யார் வேண்டும்" என்ற கேள்வியோடு சகோதரியை மேலே பேசவிடாது தடுத்தான்.தான் அழிக்கபோகும் இலக்கு மட்டுமே அவ் வேளை தன் மனதில் நிறைத்திருந்தான்.
ஒருவாறு நிதானித்து சகோதரியை அவ்விடத்தை விட்டு அகலச்செய்து விட்டு எம்மோடு தொலைபேசியில் "அண்ணே நான் யாரை என் உயிரைவிட நேசித்தேனோ அவளை கடைசி நிமிடத்தில் கண்டேன்.
என் அக்காவின் குடும்பத்தை அழித்த கொடியவர்களின் குகையை அழிக்கும் கடைசி நிமிடத்தில் என் அக்காவின் முகம் கண்ட பூரிப்பில் எனக்கான இலக்கை அழிக்கிறேன்." என்று சொன்னான்.
சொன்னவாறே செய்து முடித்து மனங்களில் நிலையாகி போனான்........


எழுத்துக்களால் சிறைப்பிடிக்கமுடியாத சிகரங்கள் இவர்கள்!!!!!!!!!!!!!!!!!!!!


கல்லுக்குள்ளே ஈரம் உண்டு!
கசிவதும் உண்டு!
கரும்புலிகள் விழிகளில் - நீர்
வழிவதுமுண்டு!!!!!!!!!!!!