வெள்ளி, 7 மே, 2010

சர்வதேச அழுத்தங்களையிட்டு சமாளிக்க சார்க்கை துணைக்கு இழுக்கும் மகிந்த

மனிதஉரிமைகளைப் பாதுகாப்பதற்கும், ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்கா அண்மைக்காலமாக வலியுறுத்தி வருகிறது. பூட்டானில் நடைபெற்ற சார்க் மாநாட்டுக்குச் சென்றிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, அமெரிக்காவின் தெற்காசியப் பிராந்தியத்துக்கான துணை இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்கைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். இந்தச் சந்திப்புப் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டனவே தவிர,

குற்றங்கள் மலிந்த பூமியாக...........................

போர் முடிவுக்கு வந்து ஒரு வருடமாகப் போகின்ற நிலையிலும் யாழ்ப்பாணக் குடாநாடு பதற்றம், பீதிக்குள் இருந்து விடுபட முடியாத நிலைக்குள் சிக்கிப் போயிருக்கிறது. இதைச் சொல்லப் போனால் அரசாங்கத்துக்கு எரிச்சலோ, கோபமோ கூட வரலாம். ஆனால் உண்மை நிலை இதுதான்.
வேதனையின் வழியோடும் ஓராண்டை நோக்கும் தமிழர்களும்! வெற்றியின் ஓராண்டைக் கொண்டாடும் மகிந்தவும. வலி சுமந்த மாதம் இந்த மே மாதம். இது ஈழத்தமிழர்களுக்கு அதிலும் குறிப்பாக வன்னியில் பல ஆண்டுகளாக வாழ்ந்து அங்கு விடுதலைப்புலிகளுக்கு தூண்களாக நின்ற நமது உறவுகளுக்கு இந்த மாதம் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் நினைவுகளோடு பிறந்துள்ளது

போர்க்குற்ற விசாரணைகள் நியாயமான முறையில் மேற்கொள்ளுக!

வன்னிப் போரின் போது இடம்பெற்ற சர்வதேச போர் நியமங்களுக்கு மாறான செயல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழு பக்கச் சார்பற்ற முறையில் நியாயமான முறையில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது

புலம்பெயர் தமிழர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியமில்லை

புலம்பெயர் தமிழர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள் வடக்கு கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் வரதராஜா பெருமாள் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழர்களின் கருத்துக்கள் அநாவசியமானவை எனவும், அவர்கள் ஒருபோதும் நாடு திரும்பப் போவதில்லை எனவும் வரதராஜா பெருமாள் அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் அபிவிருத்தி மற்றும் சமாதான முனைப்புக்களில் புலம்பெயர் தமிழர்கள் பங்களிக்கப் போவதில்லை என இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின் போது அவர் தெரிவித்துள்ளார். தமிழர் பிரதேசங்களை ஸ்திரமற்றத் தன்மையும், யுத்தமும் நிலவ வேண்டும் என்றே புலம்பெயர் சமூகம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை வாழ் தமிழர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டள்ளார்.

பிரித்தானியாவின் புதிய பிரதமராக,டேவிட் கெமரூன்?

பிரித்தானியாவின் புதிய பிரதமராக பழமைவாதக் கட்சியின் தலைவர் டேவிட் கெமரூன் வருவதற்கான வாய்ப்புக்களே இருப்பதாக அந்நாட்டின் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. பிரித்தானியாவின் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நேற்றிரவு 10 மணியுடன் முடிவடைந்திருந்தது. இத்தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி, பழமைவாதக் கட்சி, சுதந்திர ஜனநாயக கட்சி மற்றும் பிர்த்தானிய தேசயக் கட்சி என நான்கு கட்சிகள் தேர்தல் களத்தில் முக்கிய பங்கு வகித்தன. இத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் பழமைவாதக் கட்சி 302 ஆசனங்களைப் பெற்று முன்னிலையில் உள்ளது. அடுத்த இடத்தில் உள்ள தொழிலாளர் கட்சி 256 ஆசனங்களைப் பெற்றுள்ளது. பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின் படி பழமைவாதக் கட்சி 307ஆசனங்களையும், தொழிலாளர் கட்சி 255 ஆசனங்களைக் கைப்பற்றும் என்று எதிர்வு கூறப்பட்டிருந்தது. ஆட்சியில் அமர்வதற்கு பழமைவாதக் கட்சிக்கு 325 ஆசனங்கள் இருக்க வேண்டும். இதனால் சிறு கட்சிகளின் ஆதரவைப் பெற்று பழமைவாக் கட்சி ஆட்சி அமைக்கும் என்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், நாட்டை நிர்வகிக்கும் நம்பிக்கையை தொழிலாளர் கட்சி இழந்து விட்டது என பழமைவாதக் கட்சியின் தலைவர் டேவிட் கெமரூன் கூறியுள்ளார். பிரித்தானிய மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும், இம்மாற்றம் புதிய தலைவரை வரவேற்கத் தயாராகி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடத்தப்பட்ட 11 வயது மாணவி மீட்பு

யாழில் இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட மாணவி மயக்கமுற்ற நிலையில் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். யாழ். மானிப்பாய் சங்கரப்பிள்ளை வீதியைச் சேர்ந்த 11 வயது மாணவி நேற்று மாலை இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டார். இன்று கடத்தப்பட்ட மாணவி மானிப்பாயில் உள்ள கைவிடப்பட்ட பகுதி ஒன்றிலிருந்து இராணுவத்தினர் இவரை மீட்டுள்ளனர். நவாலி விவேகானந்தா வித்தியாலய மாணவியான இவரை சைக்கிளில் வந்தவர்களே கடத்திச் சென்றதாகக் கூறப்படுகின்றது. இவர் காணாமல் போனது தொடர்பாக செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, இராணுவத்தினர் மானிப்பாய் பிரதேசத்தில் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாகவும் இதன்போதே மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

ஐ.தே.கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணையும் சாத்தியம்

ஐக்கிய தேசியக்கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணையும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா....

உலகம் முழுக்க ஈழத்தமிழர்கள் கொடிகட்டி பறந்தாலும், சொந்த மண்ணில் வெந்த புண்ணாகதான் இருக்கிறது அவர்களின் வாழ்க்கை.

இவர்களை ஏமாற்றுவதில் இப்போது இந்திய தமிழனுக்கும், இலங்கை தமிழனுக்கும் நடக்கும் போட்டி உச்சகட்டத்திற்கு வந்திருக்கிறது.

தலைகுனிந்து ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை இது.

தமிழர்களை கொன்று குவித்த ராஜபச்சேவின் ஆலோசனையின்படி நடைபெறப் போவதாக அறிவிக்கப்பட்ட இந்திய திரைப்பட விழாவில்

தி.மலவரயனின் கருத்துக்கு.............

அன்புள்ள, ஊடக நண்பர்களே, இரு தினங்களாக 'தி.மழவராயன்' என்கிற நாமத்தில் ஒரு, தமிழ் தேசிய இந்திய அடிவருடி மின்னஞ்சல் ஒன்றினை அனுப்பியிருப்பார். பல நண்பர் அதனை என் பார்வைக்கு திருப்பிவிட்டார்கள். என்னைப்பொறுத்தவரை, இது போன்ற அனாமதேயங்களுக்கு பதில் சொல்வதில்லை . நான் கணனிக்கு முன்னால் குந்தியிருந்து எழுதுகிறேனா.. அல்லது கடந்த கால போராட்ட படிப்பினைகளை வைத்து எழுதுகிறேனா.. என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் எழுதிய நாடு கடந்த தேசியத்துவம் பற்றிய கட்டுரையை இவர் படிக்கவில்லை போல் தெரிகிறது. இவரின் அவதூறுக்கடிதத்தில், யாழ் மேட்டுக்குடி ஆதிக்க மனோபாவம் [ மன்னிக்கவும் தாயக ஒருமைப்பாட்டை நேசிக்கும் எனது யாழ் நண்பர்களே] அளவிற்கு மிஞ்சி தொனிக்கிறது. இந்தியாவையும், கூட்டமைப்பையும் காப்பாற்றும் அதேவேளை, நாடுகடந்த அரசாங்கத்துள் வேறு யாரும் இணையாமல் தாங்களே அதிகாரம் செலுத்தவேண்டும் என்கிற ஆதங்கமும் இந்த மனிதரிடம் தெரிகிறது. இந்த முகமூடி ஊடக மபியாக்களையிட்டு நான் அஞ்சப்போவதில்லை. இவர் விரும்பினால் எனது TAX OFFICE REFERENCE NUMBER ஐ அனுப்பலாம். அடிவருடிகளிடம் காசு வாங்கிக்கொண்டு எழுதி வாழ்வதுதான் கொடுமை. இவருக்கு நான் பிறந்த திருமலை மண் பற்றி என்ன தெரியும்? ஒருதடவையாவது அந்த 'சீலன்' பிறந்த மண்ணிலோ அல்லது மட்டக்களப்பிலோ இவர் காலடி வைத்திருப்பாரா? என்ன... கொஞ்சம் பொறாமை, வெறுப்பு, தாழ்வுச்சிக்கல், அரசியல் வெறுமை, செத்த வீட்டிலும் தானே பிணமாக இருக்க வேண்டுமென்கிற கிறுக்குத்தனம்... என் எழுத்து யாரையோ பலமாக உதைக்கிறது. எனது பெயர் கூட அவருக்கு ஒழுங்காகத் தெரியவில்லை. நல்ல புலனாய்வு புரோகிதர்.. நன்றி இதயச்சந்திரன்

தமிழ் இளைஞர்களுக்கு அநீதி இளைத்தவர்கள் தண்டிக்கப்படவேண்டுமாம் - பொன்சேகா

யுத்தக் காலப்பகுதியில் இராணுவத்தினர் நாட்டுக்கும், மக்களுக்கும் எதிராக குற்றம் செய்திருந்தால், அவை வெளிக்கொணரப்படும். தமிழ் இளைஞர்களுக்கு அநீதி இழைத்தவர்கள் எவராயினும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஜனநாயக தேசிய கூட்டணியின் விசேட செய்தியாளர் மாநாடு இன்று நாடாளுமன்ற கட்டட தொகுதியில் நடைபெற்றது. இதன்போது போர்குற்றங்கள் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்வியொன்றுக்குப் பதில் அளிக்கும் போதே ஜெனரல் சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்திருந்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய பொன்சேகா, "முன்னாள் இராணுவத் தளபதி என்ற வகையில், விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் எந்தவொரு சம்பவத்தையும் மறைக்க விரும்பவில்லை. இச் சம்பவங்கள் தொடர்பில் எந்தச் சந்தர்ப்பத்தில், எவர் கேட்டாலும் அவை குறித்து வெளிப்படையாகக் கூற நான் தயாராக இருக்கிறேன்" என மேலும் தெரிவித்தார்.

பட்டினி சாவின் உச்சத்தில் முள்ளிவாய்கால் மீள்பார்வை .........


மே மாதம் முதலாம், இரண்டாம் நாட்களும் முள்ளிவாய்க்கால் தற்காலிக வைத்தியசாலை , குடிசைகள் மீது ஆட்லறி எறிகணைகள் வீழ்ந்து வெடித்த வண்ணம் உள்ளன. ஆனால் விமான தாக்குதல்கள் முன்னையதை விட இன்று குறைவாக இருந்தது. இதற்கு காரணம் பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராட்சியம் ஆகியன பாதுகாப்பு சபையில் பேசும் போது இலங்கை வாக்குறுதிகளை மதித்து நடக்க பழகவேண்டும் என கூறி இருந்தன.

போர்வெற்றி கொண்டாட்டங்களுக்கு பெருந்தொகையான சிங்களமக்கள்

சிறிலங்காவின் இராணுவ தலைநகராக மாற்றப்பட்டுவரும் கிளிநொச்சி பெருநகரில் எதிர்வரும் 20 ஆம் திகதி சிங்களதேசத்தின் போர் வெற்றி நாள் கொண்டாடப்படுவதற்கான பெருமெடுப்பிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.