வெள்ளி, 26 நவம்பர், 2010

இன்று தமிழீழ மாவீரர் நாள் ,

கடைசிக்கணம் வரை தமிழ் ஈழமே தாகம் என விலைமதிப்பற்ற தம் உயிரை தியாகம் செய்த நமது மாவீரர்களை நினைவு கூரும் இந்தப்புனிதநாளில், எதிரிகளின் நயவஞ்சக செயற்பாடுகளை உதாசீனப்படுத்தி தேசியவிடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்டுள்ள அடுத்தகட்ட நகர்வான அதிஉச்ச இராஜ தந்திர  நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கி முடிந்தவரை நாம் தமிழர்களாக தலைநிமிர்ந்து நிற்போம்!

இன்று தமிழீழ மாவீரர் நாள் ,

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள் காலத்தின் குறிப்பேட்டில் கால் பதித்துச்செல்பவர்கள் சாவு அவர்களைத் தீண்டுவதில்லை அவர்கள் காலத்தின் காவியமாக எமது தேசத்தின் ஆன்மாவில் காலமெல்லாம் நிலைத்திருப்பவர்கள்

இன்று தமிழீழ மாவீரர் நாள் ,

விடுதலை வேண்டிக்களமாடி வீழ்ந்த எமது வீரப்புதல்வர்களை நாம் எமது நினைவில் உயிர்ப்பித்துப் பூசிக்கும் நன்நாள் . தமிழ் இனத்தின் தேசிய வாழ்வு நிலைப் பதற்காகத் தமது சொந்த வாழ்வை ஈகம்செய்த சுதந்திர வீரர்களுக்கு நாம் சிரந்தாழ்த்தி வணக்கம் செலுத்தும் புனித நாள் . எமது இனத்தின் இருப்பிற்காக , தமது இன்னுயிரை ஈகம் செய்த உன்னதமானவர்களை ,
எமது நெஞ்சத்தின் நினைவாலயத்தில் நாம் நினைவு கூரும் நன்நாள் .
விடுதலை என்பது வாழ்வின் அதியுயர்ந்த விழுமியம் .
அந்த விழுமியத்தை இலட்சியமாக வரித்து ,
அதற்காக வாழ்ந்து, அதற்காகப் போராடி ,
அதற்காக மடிந்த எமது மாவீரர்கள் மகத்தான மனிதப் பிறவிகள் .
அவர்களது வாழ்வும் வரலாறும் எமது வீர விடுதலைக் காவியத்தின் உயிர்வரிகள். மாவீரர்களே,
தமிழர் தேசம் உங்களுக்குத் தலைவணங்குகிறோம் .

முட்டாள்கள் சிங்களவர்களா? தமிழர்களா?

போர் நிறைவடைந்து சுமார் இரண்டு வருடங்களை எட்டுவதற்கிடையில் தமிழர்கள் படும் அவஸ்தை சொல்லிலடங்காது.

சிங்களவர்களின் ஆதிக்கம் குடாநாட்டில் அதிகரித்திருப்பதுடன், நிலவளம், கடல்வளம் என்பவற்றை அபகரித்தும் செல்கின்றனர், அத்துடன் வெளிநாட்டு பணத்தையும் வறுகுவதற்கு என பல தமிழ் ஏமாற்று பேர்வழிகள் அரசியல் பின்னனியில் செயற்பட்டுவருகின்றனர். இதற்கு சிங்கள கூட்டும் ஒருபுறம்.

கார்த்திகை பூ எடுத்து வாடா..!

கார்த்திகை பூ எடுத்து வாடா.!
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா...!




இனம் வாழ இவர் செய்தார் தியாகம்.!
இவர் எண்ணம் வாழ நாம் செய்வோம் யாகம்.!
உறவுகளுக்காய் உயிர் கொடுத்த உத்தமரே..!
மக்களின் துன்ப துயரங்களில் பங்குகொண்டு அவர்களின் சுமைகளை நாமும் தாங்கி அவர்களின் கஷ்டங்களைப் போக்குவதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை.

- வே.பிரபாகரன்