வெள்ளி, 30 ஜூலை, 2010

இலங்கை பான் கீ மூனுக்கு எதிராக குற்றச் சாட்டுக்களை சுமத்தியுள்ளது...

பான் கீ மூன் இரண்டாம் தடவையாகவும் செயலாளர் நாயகமாக பதவி வகிப்பதனை தடுப்பதற்கு அரசாங்கம் பல்வேறு வழிகளில் முனைப்புக்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தெற்கே கதிர்காமத்தில் "சிங்களக் கந்தனும்", வடக்கே நல்லூரில் "தமிழ்க் கந்தனும்" ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு நிற்கிறார்கள்


இலங்கையில் இனப்பிரச்சினை கடவுளையும் விட்டு வைக்கவில்லை. ஆடி மாதம் தெற்கே கதிர்காமத்திலும், வடக்கே நல்லூரிலுமாக இரு பிரசித்தி பெற்ற முருகன் ஆலயங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன. கதிர்காமம் வரும் பக்தர்கள் பெரும்பாலும் சிங்களவர்களாகவும், நல்லூர் வரும் பக்தர்கள் பெரும்பாலும் தமிழர்களாகவும் உள்ளனர்.

இவ்வளவு இழந்தப்பின்னும் நாம் கேட்பது எமது அரை ஏக்கர் நிலத்தை மட்டுமே!


தொடர்ந்து மூன்று மாதங்களுக்கும் மேலாக தமது சொந்த இடங்களில் குடியேற்றாமல் சாந்தபுரம் வித்தியா லயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள கிளிநொச்சி சாந்தபுரம் மக்களை சந்திப்பதற்காக தமிழ்த் தேசியச் கூட்டமைப்பின் நாடாளுமன்ற பிரிதிநிதிகள் உட்பட்ட குழுவினர் நேற்றை தினம்(29-07-2010) சென்றிருந்தனர்.

கப்டன் - தமிழ்மதி (கந்தையா-விஜயலட்சுமி) தம்பிலுவில்-அம்பாறை

2005 ம் ஆண்டின் பகுதியில் தன்னை விடுதலைப் போராட்டத்தின் பால் இணைத்து கொண்டு பொறிவெடிகள்,, வரைபடம்,, மருத்துவம். தொடர்பான கற்கை நெறிகளில் ஈடுபட்டு தனது திறமைகளை வெளிக்கொணர்ந்தார்.


அம்பாறை வனப்பகுதியில் இடம்பெறும் எதிரிமீதான தேடுதல் நடவடிக்கை தாக்குதல் நடவடிக்கை அனைத்திலும் சிறப்பாக செயற்பட்டவர்.
2007 -04- 25 வக்குமுட்டிய பகுதியில் எம்மால் மேற்கொள்ளபட்ட

தமிழன் வாழவைக்கிறான் சிங்களவரை, தானமாக சிறுநீரகத்தை கொடுத்து ஆனால் சிங்களபௌத்த வெறி பிடிச்ச அரசோ ..????

மூளை செயலிழந்து உயிரிழந்த தமிழ் இளைஞன் ஒருவனின் சிறுநீரகத்தை இரண்டு சிங்கள நோயாளிகளுக்கு மாற்றீடு செய்யும் சத்திர சிகிச்சை கண்டி பொது வைத்தியசாலை வெற்றிகரமான முறையில் இடம்பெற்றது.

கே.பி இன் கம்போடியா சொத்து விபரம் பற்றி கம்போடியா பொருளாதார ஆலோசகருடன் பசில் பிரதிநிகள் ரகசியபேச்சு வார்த்தை ...

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் சினவத்ரா தனது பிறந்தநாளை கொண்டாட கடந்த 25 ஆம் திகதி தனிப்பட்ட விமானத்தில் இலங்கை சென்றதாகவும் அவர் கட்டுநாயக்கவில் உள்ள ஏர்போர்ட் கார்டன் விடுதியில் வைத்து அமைச்சர் பசில் ராஜபக்சாவின் பிரதிநிதிகளுடன் இரகசிய பேச்சுவாரத்தைகளை நடத்தியதாகவும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் முன்னைய வெளிகள பொறுப்பாளரின் பேட்டி.....! ஒட்டு மொத்த எமது போராட்டத்தை அடகு வைத்தது போல் ....

அரசாங்கத்தின் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னைய வெளிகளபொறுப்பாளர் குமரன் பத்மநாதன் உள்நாட்டு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி....

மிகவும் களைத்த நிலையிலேயே 7வது நாளாக சிவந்தன் தனது உறுதிமிக்க மனிதநேயப் பயணத்தை தொடருகின்றார்......

கடும் வெயில், காற்றின் மத்தியில் ஏற்றம் இறக்கமான பிரதேசங்கள் ஊடாகதமிழ் மக்களிற்காக நீதிகேட்டு இன்று 7வது நாளாக சிவந்தன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி தனது மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

உறவுகளைத் தேடி அலையும் பெற்றோர்!

வவுனியாவில் நடமாடும் நிவாரணச் சேவை நிலையத்தில் ஒன்று கூடிய இடம்பெயர்ந்த மக்களின் உறவினர்கள் தமது அன்புக்குரியவர்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு சிறீலங்கா காவல்துறையினரிடம் வலியுறுத்தியுள்ளனர். தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து

லெப்.கேணல் கௌசல்யன்


கௌசல்யன் கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளியை பிறப்பிடமாகக் கொண்டவன். தமது பாடசாலைப் பருவம் அது சிங்கள வெறி இராணுவம் தமிழர் தாயகத்தில் தமிழின அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை இந்த கௌசல்யன் மனதை சுட்டெரித்தது. தேசியத் தலைவனின் விடுதலைப் போராட்டம் அவனை ஈர்த்தது. இதன் விளைவாய் இவன் விடுதலைப் போராட்டத்தில் இணைகிறான்.

இலங்கையில் வானொலி நிலையம் தாக்கப்பட்டது!

இலங்கையில் பிரபல வானொலி ஒலிபரப்பு நிறுவனமான 'வொய்ஸ் ஒப் ஏஸியா நெட்வேர்க்' (Voice of Asia Network)இன் சியத்த எப்.எம்., றியல் ரேடியோ, வெற்றி எப்.எம்., ஆகியவற்றின் செய்திப்பிரிவு இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

புலிகளை அழிக்க உதவி செய்தும் இலங்கையில் ஆதிக்கம் செய்ய முடியாத நிலை இந்தியாவிற்கு -கேர்னல் கரிகரன்

1987 ஜூலை 29 இல் இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 23 வருடங்கள் கழிந்துள்ளது. ராஜீவ் ஜெயவர்தனாஉடன்படிக்கையென இந்த ஒப்பந்தம் குறிப்பிடப்படுகிறது.துரதிர்ஷ்டவசமாக இந்த விடயமானது மகிழ்ச்சியற்ற விதத்திலேயே நினைவுகூரப்படுகின்றது.

இலங்கை ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்துடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் -ஜப்பான்

அரசாங்க படைகளினால் யுத்தக் குற்றச் செயல்கள் புரியப்பட்டதாக தெரிவிக்கப்படுவது குறித்து ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்திற்கும் இலங்கைக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கை ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்துடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்று

சீன ராணுவம் கண்ணிவெடி அகற்றும் போர்வையில்,இலங்கையில் கால் பதிப்பது ....இந்தியாவை நோட்டம் விடவா ?

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளைத் துரிதப்படுத்து வதற்காக சீன இராணுவம் செல்கின்றது. இவர்கள் ஐந்து வருடம் அங்கு தங்கியிருந்து கண்ணிவெடிகளை அகற்றுவார்களாம்

தமிழ் மக்களின் காணிகளை கொள்ளையடிக்கவே இந்திய தூதுக்குழு வருகை !

வடபகுதி தமிழ் மக்களின் காணிகளை கொள்ளையடிப்பதற்காகவே இந்திய அரசாங்கத்தின் தூதுக் குழு இலங்கை வருகிறதே தவிர தமிழ் மக்களை மீளக் குடியமர்த்துவதை கண்காணிப்பதற்கல்ல என்று இட துசாரி முன்னணியின் அமைப்புச் செயலாளர் சமல் ஜயநித்தி தெரிவித்தார்.