வெள்ளி, 30 ஜூலை, 2010

புலிகளை அழிக்க உதவி செய்தும் இலங்கையில் ஆதிக்கம் செய்ய முடியாத நிலை இந்தியாவிற்கு -கேர்னல் கரிகரன்

1987 ஜூலை 29 இல் இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 23 வருடங்கள் கழிந்துள்ளது. ராஜீவ் ஜெயவர்தனாஉடன்படிக்கையென இந்த ஒப்பந்தம் குறிப்பிடப்படுகிறது.துரதிர்ஷ்டவசமாக இந்த விடயமானது மகிழ்ச்சியற்ற விதத்திலேயே நினைவுகூரப்படுகின்றது.



1987 க்கும் 1990 க்குமிடையில் விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தின்போது தனது நோக்கம் குறித்து விளங்கிக்கொள்ள முடியாத வகையில் இந்தியா தன்னை ஈடுபடுத்திக்கொண்டது. தனது 1200 படைவீரர்களின் உயிரை இந்தியா தியாகம் செய்த பின்னர் விடுதலைப்புலிகளுடன் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ கரங்கோர்த்துக் கொண்டபோது தான் ஏமாற்றப்பட்டதை இந்தியா உணர்ந்தது.


தமது பணியை நிறைவேற்றுவதற்கு முன்னர் இலங்கையிலிருந்து இந்தியப் படையினரை வெளியேற்றுவதற்காக புலிகளுடன் பிரேமதாஸ கரங்கோர்த்தபோதே இந்தியா தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தது.


1991 இல் தனது படையினர் வெளியேறிய பின்னர் விடுதலைப்புலிகளின் தற்கொலைக் குண்டுதாரி ராஜீவ் காந்தியைக் கொன்றதையடுத்து இந்தியா மோசமான அனுபவத்தைப் பெற்றுக்கொண்டது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் திட்டமிடப்பட்டு இடம்பெற்ற கொலையானது அடையாளமான தாக்கத்திலும் பார்க்க அதிகளவாகவிருந்தது.


தமிழ்நாட்டில் தமிழ்ப்போராளிகள் பெற்றிருந்த மக்கள் செல்வாக்கு முடிவுக்கு வந்தது. இலங்கையில் தான் காட்டிய ஈடுபாட்டை இந்தியா குறைத்துக்கொண்டது. இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பான அணுகுமுறையை அமைதியான முறையில் உள்வாங்கிக்கொண்டது.


பிரபாகரனின் தந்திரோபாயத் தவறு இறுதியில் அவரின் வாழ்வுக்கு விலையாக அமைந்தது. இந்தியாவின் உதவியுடன் இலங்கை 2009 இல் நான்காவது சுற்று யுத்தத்தில் புலிகளை அழித்தது.


இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான தந்திரோபாய நலன்கள், இலங்கையிலுள்ள இந்திய வம்சாவளி மக்கள்,சிறுபான்மைத் தமிழரின் உரிமைகள் ஆகிய மூன்று முக்கியமான விவகாரங்களுக்கு ஒன்றுபட்டு தீர்வுகாணும் விடயமானது சில சமயங்களில் ராஜீவ்ஜெயவர்தனா உடன்படிக்கையைப் பொறுத்தவரையில் அதிகளவிலான எதிர்பார்ப்புகளைக் கொண்டதாக இருக்கக்கூடும்.


இதன் வெற்றியானது இரு நாடுகளிடமிருந்தும் எட்டப்படும் அரசியல் ஆதரவிலேயே தங்கியிருந்தது. இந்த உடன்படிக்கையில் மகிழ்ச்சியடையாத அரசியல் தலைவர்கள் இருநாடுகளிலும் அதிகாரத்திற்கு வந்தபோது உடன்படிக்கையானது ஓரங்கட்டப்பட்டது.


இதன் விளைவாக இந்த உடன்படிக்கையில் நம்பிக்கை கொண்டிருந்த சிறுபான்மைத் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். மகிழ்ச்சியற்ற விதத்திலான இந்த மாற்றங்கள் உடன்படிக்கையின் சாதகமான விடயங்களை விளங்கிக்கொள்வதில் இருளை ஏற்படுத்திவிட்டன.


யாவற்றுக்கும் மேலாக இந்த உடன்படிக்கையே இலங்கை அரசியலமைப்பிலும் இலங்கை அரசியலிலும் தமது கோரிக்கைகள் சிலவற்றுக்கு அங்கீகாரம் பெறும் தன்மையை இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படுத்தியிருந்தது.


கெடுபிடி யுத்த சகாப்தம் முடிவடைந்து கொண்டிருந்த வருடங்களில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இது தந்திரோபாயமான உடன்படிக்கை என்பதில் எந்த சந்தேகத்தையும் ஏற்படுத்தாததொன்றாகக் காணப்பட்டது.


இந்தியாவின் பாரம்பரிய கொள்கையிலிருந்தும் வெளியேறியதொன்றாக இது அமைந்திருந்தது.இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி மக்களின் அந்தஸ்து மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான சிறுபான்மைத் தமிழர்களின் தாகம் என்ற இரு விடயங்களையே பெருமளவு கொண்டதாக இந்தியாவின் பாரம்பரியக் கொள்கை காணப்பட்டது.


ஒன்றுபட்ட இலங்கைக்கும் சுதந்திரமான தமிழீழம் உருவாகுவதற்கான எதிர்ப்புக்குமான தனது ஆதரவை இந்தியா தொடர்ச்சியாக உறுதிப்படுத்தி வந்தது.


அதேசமயம்,இலங்கையிலுள்ள தமிழர்களின் சமவுரிமைகளுக்கான தாகம் குறித்தும் இந்தியா அனுதாபம் கொண்டிருந்தது. இந்த விடயத்தில் தமிழ்நாட்டு மக்கள் இலங்கையிலுள்ள தமது சகோதரர்கள் மீது கொண்டிருந்த வலுவான அனுதாபம் இந்த விவகாரத்தில் இந்தியாவின் கொள்கைக்கு வடிவமைப்பதில் முக்கியமான காரணியாக விளங்கியது.


தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கு எதிரான தனது மூன்று இராணுவ நடவடிக்கைகளின்போது இந்த காரணி குறித்து மதிப்பீடு செய்து தந்திரோபாயமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலைமை இலங்கைக்கும் ஏற்பட்டிருந்தது.


2005 இல் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரின் போராட்டம் விடுதலைப்புலிகளைத் தோற்கடிப்பதிலும் தமிழ்ப் பிரிவினைவாதத்தை நசுக்குவதிலும் மையம் கொண்டதாக அமைந்தது. 2006 ஈழப்போரின் போது இந்தியா குறிப்பிடத்தக்களவு ஆயுதங்களை விநியோகிக்கும் நாடாக இருக்கவில்லை.


ஆயினும் இலங்கைப் படையினருக்கு பயிற்சியளித்ததுடன், பெறுமதியான புலனாய்வு விடயங்களை வழங்கியது. இதன் மூலம் புலிகளைத் தோற்கடிப்பதற்கு வழியமைத்துக் கொடுக்கப்பட்டது.அத்துடன், ஈழப்போரின் விளைவுகள் தமிழ்நாட்டில் ஏற்படாமல் இருப்பதற்கான நிலைமையை புதுடில்லிஇசென்னையிலுள்ள அரசாங்கங்கள் சமாளித்துக் கொண்டன.


புலிகளுக்கு சார்பான கிளர்ச்சியை தமிழ்நாட்டில் புலிகளுக்கு ஆதரவான கட்சிகளும் ஆதரவாளர்களும் முன்னெடுத்துச் செல்லாத விதத்தில் மத்திய,மாநில அரசாங்கங்கள் சமாளித்துக் கொண்டன. இதன் விளைவாக தமிழ்நாட்டை புலிகள் தமது ஆதரவுத்தளமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை.


தனது கேந்திரோபாய முக்கியத்துவமான அயல்நாட்டில் உலகின் மிகவும் வலிமையான கிளர்ச்சிக் குழுக்களில் ஒன்றாக விளங்கும் புலிகள் தன்னிச்சையாக இயங்குவதற்கு அனுமதிக்கக்கூடாதென இந்தியா சில சமயங்களில் விளங்கிக்கொண்டிருக்கக்கூடும்.


இது இலங்கை இராணுவம் கடுமையான முறையில் நடவடிக்கைகளை முன்னெடுத்து இறுதியில் புலிகளை அழித்துவிடுவதற்கான விடயத்தில் இந்தியா கைகழுவிவிட்ட தன்மையை கடைப்பிடித்ததற்கான காரணங்களிலொன்றாக இருக்கலாம்.


துரதிர்ஷ்டவசமாக யுத்தத்தின் பின்னர் இலங்கை அரசாங்கத்தின் மீது குறிப்பிடத்தக்க செல்வாக்கைச் செலுத்த முடியாத தன்மை காணப்படுகிறது. யுத்தம் முடிவடைந்து ஒரு வருடம் பூர்த்தியடைந்த பின்னரும் சிறுபான்மைத் தமிழரின் கோரிக்கைகளை நிறைவேற்றும் அரசியல் தீர்வு காணப்படாமலுள்ளது.


வட மாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கணிசமானளவு மக்களுக்கு இயல்புவாழ்வு மீளஏற்படுத்தப்படவில்லை. யுத்தத்தின் பாதிப்பிலிருந்தும் அவர்கள் இன்னரும் மீட்சிபெறாதவர்களாக உள்ளனர். அவர்களின் மீள்கட்டுமானத் தேவைகளும் உறுதியுடன் முன்னெடுக்கப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக