ஞாயிறு, 9 ஜனவரி, 2011

உரும்பிராய் பகுதியில் குடும்பஸ்தரை காணவில்லை

உரும்பிராய் வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த குடும்பஸ்தர்  காணாமல் போயுள்ளதாக  முறையிடப்பட்டுள்ளது. நான்கு பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடைய சின்னத்துரை குகதாஸ் என்பவரே காணாமல் போயுள்ளார். செருப்புத் தைக்கும் தொழிலாளியான இவர் தனது வீட்டுத் தேவைக்கு விறகு வாங்கி வருவதாக கூறி கடைக்குச் சென்றவர்  வீட்டிற்குத் திரும்பாத நிலையில் மனைவி இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார்.
கடந்த பத்து நாட்களுக்குள் இந்தப் பகுதியில் இருந்து காணாமல் போயுள்ளவர்களில் இது மூன்றாவது சம்பவமாகும் இத்தகைய நிகழ்வுகளையிட்டு இந்தப் பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் கலங்கிப் போயுள்ளதுடன் பதட்டத்துடனும் காணப்படுகின்றார்கள்
.

புலிகளின் ஆயுதக்கப்பலுக்கு அரசின் தகவல்களை பரிமாறியதாம் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆயுதக்கப்பல் தொடர்பான அரசின் தகவல்களை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு தக்க சமயத்தில், புலிகளிடம் பரிமாறிக் கொண்டது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாகுமாரதுங்க குற்றஞ்சுமத்தியுள்ள போதிலும், அந்தக் குற்றச்சாட்டை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவராகச் செயற்பட்ட ட்ரைக்கோவ்டெலிப்சன் மறுத்துள்ளார் என்று விக்கிலீக்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

40 போராளிகளுடன் சரணடைந்த புலிகளின் மன்னார் தளபதி எங்கே?

மன்னார் மாவட்டத்தில் புலிகளின் சிறப்புத் தளபதியாக இருந்த எனது கணவர்,40 முக்கிய போராளிகளுடன் 18.05.2009 அன்று  முல்லைத்தீவில் பங்குத்தந்தை வண.பிதாபிரான்சிஸ்ஜோசப் முன்னிலையில் இராணுவத்தினரிடம் சரணடைந்தார்.  இதுவரை அவர் பற்றி தகவல் எதுவும் இல்லை. எனது கணவர் இப்போது எங்கே இருக்கிறார் என்று தகவல் தாருங்கள்.இவ்வாறு  இளம்தாயான ஆர்.வெரோனியா கற்றுக் கொண்டபாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் கோரிக்கை விடுத்தார். "