சனி, 1 ஜனவரி, 2011

யாழிலும் மீன்பிடி முறைகளில் இறுக்கம்

இலங்கையில் நாடளாவிய ரீதியில் சட்டரீதியாக நடைமுறையில் உள்ள மீன்பிடி முறைகளுக்கமைய யாழ் பிரதேச மீனவர்களும் மீன்பிடி தொழிலில் ஈடுபட வேண்டும் என்றும், அவற்றை மீறிச் செயற்படுபவர்கள் மீன்பிடி தொழில்தண்டனைச்சட்டத்திற்கமைய தண்டிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஆண்டின் துவத்திலிருந்து இந்த நடைமுறை இறுக்கமாக கடைப்பிடிக்கப்படும் என கடற்தொழில் திணைக்களத்தின் யாழ் மாவட்டத்திற்கான உதவிப் பணிப்பாளர் கந்தையா தர்மலிங்கம் தெரிவித்திருக்கின்றார்.

குடாநாட்டில் மர்மமான முறையில் தொடரும் வன்முறைகள்

யாழ் குடாநாட்டில் மர்மமான முறையில் தொடரும் வன்முறைகள் மற்றும் ஆட்கடத்தல் சம்பவங்களினால் அங்குள்ள பொதுமக்கள் மத்தியில் அச்சமும் பதற்ற நிலைமையும் தொடர்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த இரண்டு தினங்களுக்குள், இளைஞன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார். மற்றுமொரு இளைஞனும் பெண் ஒருவரும் வெவ்வேறு சம்பவங்களில் கடத்திச் செல்லப்பட்டிருக்கின்றார்கள்.

வவுனியா – மன்னார் எல்லையில் 2500 ஏக்கர் காடழிப்பு! நில ஆக்கிரமிப்பு தீவிரம்

வவுனியா – மன்னார் எல்லையில் உள்ள 2500 ஏக்கர் காடுகள் முற்றாக தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலப் பகுதி சிங்கள மயமாக்கப்படும் அதேவேளை இயற்கை வளங்களும் சுரண்டப்பட்டுவருவதாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன.இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மன்னார் மாவட்டத்திற்குபட்ட சின்னத்தம்பனை, மடுக்குளம், வேலங்குளம் ஆகிய கிராமங்களை அண்டியதாக இந்த காடழிப்பு இடம்பெற்று வருவதாக அண்மையில் குறித்த கிராமங்களில் மீளக்குடியமர்ந்த மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

வன்னி மக்களைச் சொல்லி சிங்களக் குடியேற்றங்களுக்கு இந்தியா உதவி!!!!

வன்னிமக்களுக்கு எனத் தெரிவித்து வடக்கில் சிங்களக்குடியேற்றங்களுக்கு உதவிபுரியும் நடவடிக்கையில் இந்தியா செயற்பட்டுவருவதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவென இந்திய அரசினால் அனுப்பப்பட்ட உழவியந்திரங்களில் 200 கஜூ பண்ணை, கோகொணெற் பண்ணை ஆகியவற்றுக்கு அனுப்பப்பட்டதன் அடிப்படையிலேயே இந்தச் சந்தேகம் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

விடுதலைப் போராட்டத்தின் எதிரிகள் அத்தனைபேரும் அடையாளம் காணப்பட்ட ஆண்டு. பிரபாகரன் என்ற வீரனின் புகழ் தொடர்ந்து அதிகரித்து சென்ற ஆண்டு.!!

2010 என்னும் ஆண்டு. 2011 ஐ ஈழத்தமிழனுக்கென்றே உயில் எழுதிவிட்டுப் போகும் ஆண்டாகும்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக புலிகளால் வழி நடாத்தப்பட்ட இலங்கைத் தமிழர் அரசியல் அவர்களின் வழிநடாத்தல் இல்லாமல் தனிவழி நடந்து பார்த்த முழுமையான ஆண்டு இதுவாகும். இந்த ஆண்டில் நடந்த சம்பவங்கள் என்ன… 2010 விட்டுச் செல்லும் பாடங்கள் என்ன… இதோ சில உதாரணங்கள்…