திங்கள், 12 ஜூலை, 2010

இவர்கள் வைராக்கிய விருட்சத்தின் விழுதுகள்! ஏகாதிபத்தியத்தை ஏப்பம் விட்ட அக்கினிக் குஞ்சுகள்!

குறைப் பிரசவங்களுக்கும்
கருச்சிதைவுகளுக்கும் மத்தியில்
பூரணமானவர்கள்
சூறாவளியினாலும் புயற் காற்றினாலும்
அசைக்க முடியாது போன
ஆலமரங்கள் !
இரத்தக் கடலிலே
நீச்சலடித்தவர்கள்

உலகின் பார்வையிலிருந்து தப்பிக்க முடியாமால் இருந்த ஒரு போராட்டம் தமிழீழ விடுலைப் போர்.!

தீர்க்கதரிசனமான ஒரு தலைமை. ஒழுங்கமைப்பட்ட ஒரு நாட்டிற்கான கட்டுக்கோப்பு. அந்த நாட்டின் நிர்வாகப் பரம்பல் அதனூடான திடமான திட்ட நடைமுறைகள். அதற்கான படையணிகளின் பங்கேற்பு. அவற்றின் சீரிய செயற்பாடு. எல்லைகள் எத்தகைய எதிர்ப்பையும் தாண்டிக் காக்கப்பட்ட அந்தத் தேசம்.
வடக்கே 70 மைல் நீளத்திற்கு கட்டிக்காக்கப்பட்ட எல்லைக்கோடு. மணலாற்றில் மற்றுமொரு மாபெரும் களம். விடுவிக்கப்பட்ட கிழக்கில் நிலச் சொந்தக்காரருக்கே சிம்மாசனம். இப்படித்தான் இருந்தது அந்தத் தேசம்.

'நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர்'

இலங்கையில் புதிய நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் பதவி ஒன்றை ஏற்படுத்துவது குறித்து அரசாங்கத்துக்கும், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையே உடன்பாடு காணப்பட்டுள்ளது.

இலங்கைக் கடற்படை அடியோடு மறுக்கிறது!

இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் எது வும் நடத்தப்படவில்லை என இலங்கைக் கடற்படை அடியோடு மறுத்துள்ளது.
கச்சதீவுப் பிரதேச கடற்கரையில் கடந்த சனிக்கிழமையன்று இரவு மீன்பிடி நடவ டிக்கையில் ஈடுபட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 50 மீனவர்கள் மீது

மகிந்தராஜபக்சவும் விமல் வீரவன்சவும் மேற்கொண்ட நாடகம்....

உண்ணாவிரதம் என்றால் என்ன என்பதை தியாகி திலீபனிடம் ஜனாதிபதியின் இயக்கத்தில் நடித்த விமல் வீரவன்ச கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
விமல் வீரவன்சவின் போராட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நம்பிக்கைகள்..............

நாம் மடியேறி முத்தமிட்ட மண்ணை மொட்டை மரமென மூளியாக்கினான் எதிரி.
தென்றல் காற்று கைவிட்டு போக அக்கினி காற்றே எம் சுவாசமாச்சு......
பேய்கள் ஊர் புகுந்த போது ஊர் சிதறி ஒடியிருந்தோம் யாருமற்று திரும்பி வருகையில்
சிதறியவீடும்,எம் உறவுகளின் சிதறிய எலும்பு துண்டுகளுமே எமை வரவேற்றன.....
நாதியற்று நாங்கள் கூவிய போது பேசாதிருந்தவர் இப்போ குமுறுகின்றார்.
மீண்டும் எம் தேசம் எழும் ,காற்றிப்போ எம் பக்கம் ,அண்ணாந்து பார்க்கும் அழகோடு
எம் தேசம் மிளிரும் . இதுவே எம் நம்பிக்கைகள்..

லெப். பாவலன் (பாலமுரளி - பாலகிருஸ்ணன்)

தமிழீழத்தில் யாழ் மாவட்டத்தின் வலிகாமம் பகுதியில் தான் இணுவில் என்ற கிராமம் அமைந்துள்ளது. வளங்களால் வனப்புப் பெற்ற பிரதேசங்களைக் கொண்டது தானே தமிழீழம். கல்வி, செல்வம் நிறைந்த அந்தக் கிராமம் தலைவரின் காலத்துடன் வீரமும் பெற்றது. எல்லா எழிலும் நிறைந்த கிராமமானஇணுவில் தான் பாலகிருஸ்ணன் இராசம்மா தம்பதிக்கு முதலாவது தவப் புதல்வனாக 16. 10. 1979 இல் பிறந்தான்.

தாதிகள் கறுப்புப் பட்டி போராட்டம்

வேலணையில் பணியாற்றிய குடும்பநல உத்தியோகத்தர் தர்ஜிகாவை படுகொலை செய்த சிங்கள வைத்தியர் மீது சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ் மாவட்டத்தில் உள்ள குடும்பநல உத்தியோகத்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி யாழ் மாவட்டத்தில் உள்ள குடும்பநல உத்தியோகத்தர்கள் கறுப்புப் பட்டி அணிந்தவாறு கடமைக்கு சென்றுள்ளனர்.

புலம்பெயர்ந்து நாம் கண்டது ?

புலம்பெயர்தல் ஆக்கிரமிப்பின் முதல் படி படையெடுப்புகளின் வழிகாட்டி புலம்பெயர்தல் , ஆக்கிரமிப்பு, படையெடுப்பு, இம்மூன்றும் இந்த உலக மக்களை ஒரு விதத்தி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப்பாதித்து வருகின்றன.
புலம்பெயர்தல், இன்றைய உலகத்தில் தவிர்க்க முடியாத ஒன்று. இது ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கோ, அல்லது அல்லது ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊரிற்கோ இருக்கலாம்.


இஸ்ரேலின் தமிழின துரோகம் ........

முள்ளிவாய்க்கால் படுகொலை எச்சங்களை அழிப்பதில் கடந்த 06 மாதங்களாக இஸ்ரேல் நிபுணர்கள் நேரடியாக உதவி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. சர்வதேச பயங்கரவாதம் தொடர்பில் ஆலோசனை வழங்கும் பிரித்தானிய பிரஜை ஒருவரால் இந்த செய்தி கசிந்துள்ளது.

சீமான் கைது!

வன்முறை மற்றும் பிரிவினையை தூண்டும் விதத்தில் பேசிய வழக்கில் நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் கைது செய்யப்பட்டார்.

உண்ணாவிரதமும் பிஸ்கட்டுக்கு விளம்பரமும் ............