புதன், 19 மே, 2010

தமிழகத்தில்இருந்து வெளி வரும் நக்கீரன் பத்திரிகையில் இவ்வாறு செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது ...........

ஈழ மண்ணில் சுதந் திரக் காற்று வீசும் என்ற நம்பிக்கை இன்னமும் அற்றுப் போய்விடவில் லை. கிழக்கு மாகாணக் காடுகளில் உள்ள மரங்களுடன் சேர்ந்து அந்த நம்பிக்கை உயர்ந்து நிற்கிறது. ""முள்ளி வாய்க்கால் கொடூரத்தின் ஓராண்டு நிறைவில், உலகத் தமிழர்கள் அனைவரும் ஈழத் துயர நினைவுகளில் மூழ்கி யிருக்கும் நிலையில், விடுதலை நம்பிக்கை வீழ்ந்துவிடவில்லை'' என்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் பாண்டி யன்.

இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று செயற்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ்: தேசியத் தலைவர் புகழாரம்


விடுதலை இலட்சியத்தில் பிடிப்பு ஏற்பட்டு விட்டால், எமக்கு துன்ப துயரங்கள் தெரிவதில்லை. வேதனைகள் புரிவதில்லை. உடல் உபாதைகள் அழுத்துவதில்லை. இயற்கைகூடக் குறுக்கே நிற்பதில்லை. எனது அன்புத் தளபதி பிரிகேடியர் பால்ராஜூக்கும் அப்படித்தான். ஓயாது குமுறும் சமர்க்களங்களையெல்லாம் அவன் ஓய்வில்லாது, உறக்கமில்லாது எதிர்கொண்டான். அங்கு இரவு, பகல் பாராது செயற்பட்டான். கொட்டும் மழையும் கோடையின் கொழுத்தும் வெய்யிலும் அவனைக் கட்டிப்போட்டது கிடையாது. கொடிய சண்டைக் களங்களில் எல்லாம் எத்தனையோ துன்பங்களைச் சுமந்தவாறு, எத்தனையோ நெருக்கடிகளைச் சமாளித்தவாறு, எத்தனையோ ஆபத்துக்களை எதிர்கொண்டவாறு அபாரமான மனவுறுதியோடு போராடினான். தலைசிறந்த போர்த்தளபதி என்ற வகையில் நான் அவனை ஆழமாக நேசித்தேன். அவன் மீது அளவுகடந்த அன்பும் பாசமும் கொண்டிருந்தேன். அவன் அறிமுகமாகிய நாளிலிருந்து அவனுள் அபூர்வ போர்ப் பண்புகளும் போர்க் குணங்களும் இயற்கையாகவே நிறைந்து கிடப்பதைக் கண்டுகொண்டேன். ஆற்றல் மிக்க, ஆளுமை மிக்க இலட்சியப் போராளியாக அவனை வளர்த்தெடுத்தேன். அபாரமான துணிவும், அசுர வேகமும், சிறந்த தாக்குதல் உத்திகளும், நேர்த்தியாகப் படை நகர்த்தும் ஆற்றலும், கூட்டுக்குலையாத குறிதவறாத செயற்பாடுகளுமாக அவன் வெளிப்படுத்திய போர்ப்பண்புகள், எமது எதிரிக்கு அச்சத்தைக் கொடுத்தன. அதேநேரம், எமது போராளிகளின் மனோதிடத்தையும் இலட்சிய உறுதியையும் மேலும் உரமாக்கின. எமது மக்களுக்கு பெரும் வெற்றிகளைத் தேடித்தந்தன.

வீரத்தளபதி பிரிகேடியர் பால்ராஜ்

இயற்பெயர்: பாலசிங்கம் கந்தையா, கொக்குத்தொடுவாய், முல்லைத்தீவு) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒரு முதுநிலைத் தளபதியாவார். தமிழீழத்தின் பல போர்க்களங்களை வழிநடத்தியவர். 1983 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார். 1991 ஆம் ஆண்டு தொடக்கம் 1993 ஆம் ஆண்டு வரையும் பின்னர் 1995 ஆம் ஆண்டு தொடக்கம் 1997 ஆம் ஆண்டு வரையும் விடுதலைப் புலிகளின் முதலாவது மரபுவழிப் படையணியான

இந்திய அரச பயங்கரவாதம் : காலத்தின் தேவை என்ன? : சபா நாவலன்


இந்தியா சீனா போன்ற புதிய ஆசிய வல்லரசுகள் இலங்கை அரசுடன் இணைந்து நிகழ்த்திய இனப்படுகொலையின் இரத்ததம் உறைந்து போய்விட முன்னமே இந்தியாவெங்கும் தனது எழைக் குடிமக்கள் மீது அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. இலங்கையில் நடைபெற்ற அதே போர்த்தந்திரோபாயங்களும், பிரச்சார முறமைகளும் உள்வாங்கப்பட்டு இந்தியப் புறச்சூழலுக்கு உகந்தவாறு பிரயோகிக்கப்படுகிறது. மனித அவலங்களுக்கு மத்தியில் அப்பாவி மக்கள் மந்தைகள் போல விரட்டியடிக்கப்படுகிறார்கள். ஆந்திரா, மேற்கு வங்கம், சட்டீஸ்கர். ஜார்க்கண்ட். மகாராட்டிரம். ஒரிசா போன்ற மாநிலங்களெல்லாம் ஏழை மக்களில் அவலக் குரல்கள் ஒலிக்கின்றன. மேற்குவங்கத்தில் நூற்றுக் கணக்கானோர் அனாதைப் பிணங்களாகக் கொல்லப்பட, இன்று ஏனைய மாநிலங்களில் இராணுவமும், துணைப்படைகளும் அன்னிய தேசம் ஒன்றுடன் போர் நடைபெறுவதைப் போல குவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

இலங்கை அரசாங்கப் படைகளினால் மேற்க்கொள்ளப்பட்ட மற்றுமோர் போர்க்குற்ற ஆதாரம் காணொளியில் - பிரித்தானியாவின் சனல் 4 தொலைகாட்சி


கரும்புலி மேஜர் சிறீவாணி -சின்த்தம்பி சாந்தி, மட்டக்களப்பு.,பளை ஆட்டிலறித் தள அழிப்பில் .....................

அவள் அழுதுகொண்டிருந்தாள், மனதுக்குள் அல்ல. அது ஒருபுறமிருக்க சத்தமாக விக்கி விக்கி அழுதாள். அவளது அழுகைச் சத்தம் எங்கும் பரவியது. ஆனால் அவளது அழுகைக்கான காரணம் சிலருக்குத்தான் தெரிந்திருந்தது. அந்த அழுகையில் ஏதோ ஒரு வேண்டுதல் இருந்தது. அவள் கலங்கும் விழிகளில் என்னவோ எதிர்பார்ப்பு நிறைந்திருந்தது. அவளது வேண்டுதல்களும் எதிர்பார்ப்புகளும் சாதாரணமாக இருக்கவில்லை. தாக்குதலுக்குப் புறப்படுகின்ற அணிகளோடு தானும் தாக்குதலுக்குச் செல்ல வேண்டும். அதற்காகத்தான் அந்த அழுகை.

நாம் தமிழர் இயக்கம் கட்சியானது

தமிழீழ பற்றாளர் இயக்குனர் சீமானின் நாம் தமிழர் இயக்கம் நேற்று மதுரையில் ஓர் அரசியல்கட்சியாக பரிணமித்தது ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் வந்திருந்ததாக செய்திகள் கூறுகின்றன. மாநாடு ஆரம்பிக்கும் முன் விரகனூர் சுற்றுவட்ட சாலை அருகே, தியாகி முத்துக்குமார் நினைவு நுழைவாயிலிலிருந்து பேரணி துவங்கப்பட்டது. மாலை 5 மணிக்குத் துவங்கிய இப்பேரணி, 7.30 மணிக்குப் பிறகும் தொடர்ந்தது.