புதன், 15 டிசம்பர், 2010

த.தே.கூ – தமிழ் கட்சிகளின் அரங்கம் சந்திப்பு பயனற்றது- சிறிதரன்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தமிழ்க் கட்சிகளின் அரங்கமும் தற்போது சந்தித்திருப்பது ஒரு பயனற்ற விடயமே. இது எவ்விதத்திலும் பயன்படப் போவதில்லை. இவர்களால் தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வை பெற்றுக்கொள்ள முடியாது

விடுதலைப்புலிகள் மீதான தடையினை நீடிப்பதற்கு...........

விடுதலைப்புலிகள் மீதான தடையினை நீடிப்பதற்கு ஈழத் தமிழ் தேசியத்திற்கு எதிரான இந்திய ஊடகங்களும் சில சக்திகளும் தயாராகியுள்ளதாக தெரியவருகின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி ஆகியோரை இலக்குவைத்து பாரிய தாக்குதலொன்றை மேற்கொள்ள விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளதாக இந்திய புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள்  செய்தி வெளியிட்டுள்ளதாக தெரியவந்திருக்கின்றது.

முஸ்லிம் மக்களின் ஒரு தொகுதியினர் - யாழ்ப்பாணத்தை நோக்கி

யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்த நிலையில் புத்தளத்தில் வசித்து வந்த முஸ்லிம் மக்களின் ஒரு தொகுதியினர் மீள் குடியேற்றத்திற்காக புத்தளத்திலிருந்து யாழ்ப்பாணத்தை நோக்கிப் பயணமாகினர்.
 "வளமான ஸ்ரீலங்காவை கட்டியெழுப்புவோம்" என்ற அமைப்பினால் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் இம்மக்கள் குடா நாட்டுக்கான தங்களது பயணத்தை ஆரம்பித்தனர்.

குழையைக் காட்டி ஆட்டை கூட்டிச் செல்லும் கலாசாரம்........

தமக்குப் பின்னால் வரமறுக்கின்ற ஆடுகளுக்குக் குழையைக் காட்டி அதனைக் கூட்டிச் செல்லும் வழக்கம் ஒன்று நம் ஊர்களில் உண்டு. குழைக்கு ஆசைப்பட்ட ஆடுகள் அழைப்பவர் யாரென்று தெரியாமல்- குழை இன்னதென்று அறியாமல் பின்னால் செல்லும். ஆடு குழையைச் சாப்பிட எத்தனிக்கும்போது குழையை இழுத்துக் கொள்வது ஆட்டைக் கூட் டிச்செல்பவரின் நுட்பமாக இருக்கும். எனினும் சில ஆடுகள் நிலைமையை உணர்ந்துகொண்டு குழைக்குப் பின்னால் செல்ல மறுக்கும்.இச் சந்தர்ப்பத்தில் ஆட்டுக்குக் குழையைக் காட்டியவர் சற்று இறங்கி குழையை ஆட்டுக்குச் சாப்பிடக் கொடுப்பார்.

சங்கானையில் குருக்களைச் சுடுவதற்கு படையினர் ஆயுதம் வழங்கி உதவினர்

சங்கானையில் குருக்களும் அவரது மகன்களும் படைச் சிப்பாய்கள் இருவரின் உதவியுடனேயே சுடப்பட்டுள் ளனர். சூடு நடத்தியவர்களுக்கு ரி56 துப்பாக்கிகளைக் கொடுத்து உதவிய இராணுவத்தின் கோப்ரலான குணசேன, சிப்பாய் ரட்ணாயக்க இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மானிப்பாயில் பணியாற்றும் கோப்ரல் ஒருவரே சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ரி56 துப்பாக்கிகளை சந்தேக நபர்களுக்கு வழங்கி உள்ளார். அவர் சிகரெட் மற்றும் கஞ்சாவுக்கு அடிமையானவர். மற்றொரு சிப்பாயும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளார்'

நஞ்சுக் குப்பி கடிக்கவும் தயங்காதவன், அட்டைப் பூச்சிக் கடிக்கு அரண்டுவிடுவான் என நினைத்ததே கேவலம். -சீமான்-

''ஏனடா எரிக்கிறாய் என்றோ,
ஏனடா அடிக்கிறாய் என்றோ
எவனடா கேட்டீர் அவனை?
அடியென அவனுக்குச்
சாட்டை கொடுத்தவனும்,
சுடுவென தோட்டா கொடுத்தவனும்,
தடையென எமக்குத்தானே விதிக்கின்றனர்.
என்ன கொடுமையடா இது!''

- புலிகளின் கவிஞர் புதுவை இரத்தினதுரை எழுதிய வரிகள் என் நித்திரையைக் கிழிக்கின்றன. புரண்டு புரண்டு படுக்கிறேன். கொசுக்கடி இல்லை. குளிர் இல்லை. அட்டைப்பூச்சியோ... அரிப்புத் தொல்லையோ இல்லை. ஆனாலும், நித்திரை வரவில்லை. 'தேசியப் பாதுகாப்பு சட்டத்தைப் பாய்ச்சுகிற அளவுக்கு அப்படி என்ன செய்தோம்?’ என்கிற கேள்வி மனதுக்குள் குறுகுறுக்கிறது. என் மீனவனின் தொண்டையில் விழுந்த தூண்டிலின் வலியைச் சொன்னது தவறா? அதற்கா தேசியப் பாதுகாப்புக்கு பங்கம் வந்துவிட்டதாகப் பாய்ச்சல் காட்டினார்கள்?

வாழ்வு முடியும் போதும், முடிந்த போதும் காவியமானவள் - நீ

ஈழத்தமிழர் இதயங்களில்
இமயமானவள் நீ
வாழ்ந்த போதும் இனத்திற்கு
வளங்கள் செய்தவள் நீ
வாழ்வு முடியும் போதும்
முடிந்த போதும் காவியமானவள் - நீ
இறந்த பின்னும் இனத்திற்கு
இனிதே செய்தவள் - நீ
உன் உருவம் கண்ட உலகிற்கு
எமது உரிமை சொன்னவள் - நீ
நெஞ்சை உருக வைத்தவள் - நீ
கலக்கமில்லா எண்ணம் கொண்ட
ஓவிய பெண் அவள் - நீ
இழக்க முடியா இழப்பை எல்லாம்
எமக்காய் இழந்தவள் - நீ
உடைந்து உருகி உணர்வைப் பிழிந்து
நன்றி கூறுகின்றோம்.
நன்றி என்ற வார்த்தை மட்டும்
நன்று இல்லையடி
உலகில் இறைவன் என்றொருவன்
எமக்கு வேண்டுமென்றால்
உன் உருவம் அன்றி வேறெதையும்
எம் இனம் கொண்டிடுமோ?

முடிந்து விழுந்து மடிந்த பின்னும்
உன் காலடி நாம் தொழுவோம்!
இந்த உலகம் இருக்கும் இறுதிக்கணமும்
உன் பெயர் நாம் மறவோம்
தமிழ் அன்னை உன் வடிவே என்று கொண்டுனை
அம்மா என்றிடுவோம்
தமிழ் அன்னை நீ என்றிடுவோம்.

அரச செயலகப் பணியாளரான இளம் பெண்ணைக் காணவில்லை! வவுனியாவில் சம்பவம்!

வவுனியா அரச செயலகத்தில் பணியாற்றும் இளம் பெண் ஒருவர்  காணாமல் போயிருக்கின்றார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா அரச செயலகத்தின் முகாமைத்துவ உதவியாளராகப் பணியாற்றி வருகின்ற 27வயதுடைய ஜெயசீலன் ஜெயப்பிரவீணா என்ற பெண் குருமன்காட்டிலுள்ள தனது இல்லத்தில் இருந்து நேற்றுக் காலை பணிக்கெனப் புறப்பட்டுச் சென்றிருக்கின்றார்.

மகிந்த ஆப்பிழுத்த குரங்கானது எப்படி?- கலாநிதி விக்கிரபாகு கருணாரட்ணா

நவம்பர் ஏழாம் நாள் நான் பிரித்தானியாவிலிருந்து திரும்பியிருந்தேன். மகிந்த அரசாங்கத்தினால் நான் கைதுசெய்யப்படலாம் என நண்பர்கள் என்னை எச்சரித்திருந்தனர்.
ஆனால் இந்த ஆட்சியாளர் எனக்கென சிறப்பான ஒழுங்குகளைச் செய்திருந்தனர்.

பெரும்பான்மை இனத்திற்காக அர்ச்சனை செய்வது- அவர்கள் விரும்பும்படியாகப் பேசுவது எல்லாம் சொந்த இனத்திற்குச் செய்யும் துரோகத்தனமாகும்.!

தமிழர்களின் விரோதிகளாக தமிழர்களே இருக்கின்றனர்பொதுவில் சிங்களவர்கள் நல்லவர்கள் என்று நாம் கேள்விப்பட்டதுண்டு. தென் பகுதியில், அரச பணியில் ஈடுபட்ட தமிழர்கள், மற்றும் தென்பகுதியில் வர்த்தகம் செய்த தமிழர்கள் இவ்விதம் கூறிக்கொள்வர். சிங்களவர்கள் உதவி செய்வார்கள், மற்றவர்க ளுக்கு மதிப்பளிப்பது அதிகம், இரக்கம் காட்டுவார் கள் என்றெல்லாம் எம்மவர்கள் கூறக் கேட்ட நாம் நடைமுறையில் அதைக் காணவில்லையே என்று நினைப்பதும் உண்டு.

புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் உயிரூட்ட வெளிநாடுகள் பலவும் முயற்சிக்கின்றதாக இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய குற்றம் சாட்டு

தற்போதைய நிலையில் முற்றாக முடக்கப்பட்டுள்ள புலிகள் இயக்கத்தின் புலம்பெயர் சக்திகளை ஒன்று திரட்டி புலிகளுக்கு மீண்டும் உயிரூட்ட பல வெளிநாடுகள் முயற்சிக்கின்றன என்று அவர் குறிப்பிடுகின்றார்.

கிறிஸ்மஸ் தீவிற்கு 70 அகதிகளுடன் பயணித்த கப்பல் கடலில் விபத்து !

கிறிஸ்மஸ் தீவிற்கு சுமார் 70 அகதிகளுடன் பயணித்த இந்தோனேசிய நாட்டைச்சேர்ந்த மீன்பிடிப்படகொன்று பாறைகளில் மோதி கடலில் மூழ்கியதில் அதில் பயணித்த பலர் உரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது,

படையினரின் சோதனைக்கெடுபிடிகள்!

அண்மைக்காலமாக யாழ்.நகருக்குள் சோதனை நடைமுறைகள் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளன. யுத்தத்தில் விடுதலைப்புலிகளை தாங்கள் வெற்றிகொண்டுவிட்டதாக