புதன், 15 டிசம்பர், 2010

விடுதலைப்புலிகள் மீதான தடையினை நீடிப்பதற்கு...........

விடுதலைப்புலிகள் மீதான தடையினை நீடிப்பதற்கு ஈழத் தமிழ் தேசியத்திற்கு எதிரான இந்திய ஊடகங்களும் சில சக்திகளும் தயாராகியுள்ளதாக தெரியவருகின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி ஆகியோரை இலக்குவைத்து பாரிய தாக்குதலொன்றை மேற்கொள்ள விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளதாக இந்திய புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள்  செய்தி வெளியிட்டுள்ளதாக தெரியவந்திருக்கின்றது.
இந்தியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தடை நீடிப்பு வழக்கில் மத்திய அரசுக்கு 3 வாரத்தில் பதில் அளிக்குமாறு இந்திய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை தெரிந்ததே.தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தடை நீடிக்கப்பட்டதை மத்திய தீர்ப்பாயம் உறுதி செய்திருந்தது. அந்த தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்யக்கோரும் வைகோவின் மனு மீது விசாரணை நடந்தது. தமது மனுவை தீர்ப்பாயம் நிராகரித்தது சரியல்ல என்று நீதிமன்றத்தில் வைகோ வாதிட்டிருந்தார்.
வைகோ மனு மீதான வழக்கில் 3 வாரத்தில் பதில் அளிக்க இந்திய உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.மத்திய அரசு புலிகளுக்குச் சாதகமான முடிவினை எடுத்துவிடலாம் என்ற அச்சம் காரணமாக  விடுதலைப் புலிகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி தடை நீடிப்புத் தீர்ப்பினை வலுப்படுத்தும் நோக்கானதென்று நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக