புதன், 12 மே, 2010

இளைஞனை வெள்ளை வான் கடத்தியது

மட்டக்களப்பு மாவட்டம், ஜீவபுரம் சந்திவெளிப் பகுதியைச் சேர்ந்த இளைஞனொருவர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு வெள்ளை வானொன்றில் வந்தோரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

பார்வதியம்மாள் மீது தினமலர் அவதூறு; கண்டனத்தைப் பதிவு செய்யுங்கள்

காலையில் தினமலர் செய்தித் தாளைப் பிரித்ததும் எனக்கேற்பட்ட உணர்வுகளை என்னவென்று சொல்வது! தினமலரின் வக்கிரத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பார்வதியம்மாள் வருகைக்கு நிபந்தனைகள் விதிக்கவில்லை (அடப்பாவிகளா?) என்ற ரீதியில் முதல்வர் கருணாநிதி பேரவையில் பேசிய செய்தி வெளியாகியிருந்தது. அந்தச் செய்தியில் தலைப்பு முதற்கொண்டு செய்தியில் எல்லா இடத்திலும் ‘பார்வதி‘ என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

வேண்டுகோள்!


என் சகோதர்களே! நீங்கள் மிண்டும் மிகப்பெரிய வரலாற்று பிழை விட்டுக்கொண்டே போகிறீர்கள். இதனை என்றுதான் உணரப் போகிறீர்கள் என்பதுதான் புரியாமல் இருக்கிறது. சகோதரரே! எமது விடுதலை புலிகளுடன் நீ கைகொடுத்து இருப்பின் இவ்வாறு நாம் அநாதிகள் ஆகியிருக்கமாட்டோம். அவன் போராட்டும் எனக்கென்ன என்ற எல்லோரின் சுயநலம் தான் நாம் படும் துன்பங்களின் ஆணிவேர். அண்ணன் திலீபன் தன்னைக்கொடுது ``மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திரம் மலரட்டும்`` என்றான். புரியாத முட்டாள்கள் நாம். இன்றைய நிலை என்ன? நாடுகடந்த தமிழீழம் என்று சிறு குழுவும், நாம் தமிழர் என மற்றும் சிலரும்,கனடாவில் சிலரின் ஆர்பாட்டமும் நடக்கிறது. மற்றைய தமிழர் என்ன செய்கிறீர்கள்? நீங்கள் தமிழர் தான என ஒருகணம் சிந்தியுங்கள்! உங்களுக்கு முன்னுக்கு போக முடியாவிட்டால் அவர்களுடன் இணையுங்கள். மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை மரியாதைக்குரிய உருத்திரகுமார் அவர்கள் உங்களுக்கு உருவாக்கிதந்துள்ளார். ஒருவர் முன்வரும் போது அவரை முற்றுமுழுதாக நாம் பயன்படுத்த வேண்டும்.மீண்டும் வரலாறு பிழைக்கா பின் கவலை படுவதை விட புலம்பேர்தமிழர்கள் நீங்கள் அவர்களின் கரங்களை பற்றிக்கொள்ளுங்கள். ஒன்றுபட்ட குரலாய் தனி ஈழம் என்று ஒருமித்து நில்லுங்கள். என் மதிப்புக்குரிய இளையோர் அமைப்புகளே! வருகின்ற 18 ம் திகதி உலகெல்லாம் முள்ளி வாக்கால் அவலம் கேட்டும் கேட்காமல் யார் எல்லாம் இருந்தானோ அவனின் காதுகளை உங்கள் குரல் கிழிக்கவேண்டும். தமிழர்களை மாபெரும் சக்தியாக உருமாற்றுங்கள். செயல் திறன் மிக்க அமைப்பாக உங்களை உருமாற்ருங்கள். மீண்டும் நீதிகேள்! மீண்டும் மீண்டும் நீதிகேள்! மக்கள் புரட்சி வெடிக்கும் சுதந்திர தமிழீழம் மலரும்.

ஆசிய நாடுகளை நோக்கி திரும்பும் மேற்குலகத்தின் கவனத்தை ஈழத்தமிழ் மக்கள் தன்பக்கம் திருப்பவேண்டிய கட்டாயம் ஒன்று உள்ளது

ஈழத்தமிழ் மக்களை காப்பாற்றும் பொறுப்பில் இருந்து விலகி ஐக்கிய நாடுகள் சபை தவறு இழைத்துள்ளதாகவும், சிறீலங்கா விவகாரங்களில் அரசியல் மற்றும் இராஜதந்திர வழிகளில் தலையீடுகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை ஐ.நா தவறவிட்டுள்ளதாகவும் பிரித்தானியாவின் புகழ்மிக்க பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வேந்தர் கிறிஸ்தோபர் பிரான்சிஸ் பற்றன் தெரிவித்துள்ளார்.

எம் தலைவன் கிழக்கு திசை..


நிகழ்த்தப்பட்ட மாந்த பேரவலத்தை நினைத்துப் பார்க்கும் நாளுக்கு வந்திருக்கிறோம். ஹிரோஷிமா-நாகசாக்கி வீசப்பட்ட அணுகுண்டின் வெளிச்சம் அகிலத்தையே ஆட்டிப் படைத்தது. இரண்டாம் உலகப்போரின் வெற்றியை அமெரிக்கா தக்கவைத்துக் கொள்ள ஜப்பானின் நகரங்களின்மீது வீசிய அணுகுண்டு குறித்த தகவல்கள் அந்த மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த பாதிப்பை அவர்கள் ஏற்றுக் கொண்ட பின்னர்தான் அந்த பாதிப்பில் கிடைத்த அவலங்களை பார்த்த பின்னர் தான் அடடா என்று கதறினார்கள்

.அன்பார்ந்த தமிழ் ௨றவுகளே‚ மே 18... சிங்கள தேசம் எங்கள் மக்கள் மீது நிகழ்த்திய கொடூர யுத்தத்தின் இறுதி நாள்... கொத்துக் குண்டுகளும், எங்கள் மக்கள் மீது கொடூர நச்சுக் குண்டுகளும் பரீட்சித்துப் பார்த்த நாள்... எங்கள் மக்கள் பல்லாயிரக்கணக்கில் உயிரோடு புதைக்கப்பட்ட நாள்... மே 18... எங்கள் நெஞ்சங்களை ரணமாக்கிய நாள்... பூக்களும், பிஞ்சுகளும், காய்களும், பழங்களுமாய் பூத்துக் குலுங்கிய எங்கள் தேசத்து ஆலம் விருட்சம் வேரோடு சாய்க்கப்பட்ட கரி நாள்... உயிர் காக்க, உடல் தெறிக்க ஓடிய எம் பாசத்திற்குரிய மக்கள் சிங்களம் வீசிய குண்டுகளுக்கு வீழ்ந்து கருகிய நாள்... மே 18... மனிதமே வெட்கித் தலைகுனிய மானிட தர்மம் நிலை குலைய விடுதலை வேண்டிய தமிழர்கள் வீழ்ந்து சாய்ந்த நாள்... மிருகவதைச் சட்டம் போட்டு விலங்குகளுக்கும் காவலர்களாய் நின்ற, அகில உலகமும் வேடிக்கை பார்க்க, எமது மக்கள் சிங்களத்தால் வேட்டை ஆடப்பட்டு குருதி சிந்திய நாள்... மே 18... நாகரீக உலகில், நமக்கு மட்டும் சுதந்திரம் மறுக்கப்பட்டது... வாழும் மனிதர்கள் போல் வாழ விரும்பிய ஈழத் தமிழர்கள் இழி நிலைக்குள் தள்ளப்பட்ட கொடூர நாள்... விடுதலை எமக்கு மீண்டும் மறுக்கப்பட்ட நாள்... எங்கள் மக்கள்மீது இழைக்கப்பட்ட கொடுமைகளை உலகுக்கு எடுத்துச் சொல்லும் நாளாக இந்த மே 18-ம் நாளை போர்க் குற்றவியல் நாளாகத் தமிழீழ மக்கள் அவை பிரகடனப்படுத்துகின்றது.எங்கள் தேசத்து மக்களின் சுதந்திர தாகத்தை முற்றாகத் துடைத்தெறிய... சிங்களம் திட்டமிட்டு நடாத்திய இனப் படுகொலையை நாம் மறந்துவிட முடியுமா...? முள்ளிவாய்க்காலில் எமது மக்களின் மூச்சு நிறுத்தப்பட்டதை உலகத் தமிழினம் மறந்துவிட முடியுமா...? மே 16 முதல் 18 வரை ஈழத் தமிழர்களுக்கு முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட கொடூரங்களை மனித குலம் மறந்துவிட முடியுமா...? எனவே, இந்தக் கொடூர நாளை சிங்கள அரசின் அதி உச்ச "போர்க் குற்றவியல் நாள்" என்று ஈழத் தமிழர்கள் சார்பில் தமிழீழ மக்கள் அவையினர் பிரகடனப்படுத்துகின்றனர். 1) சர்வதேசங்களினால் தடை செய்யப்பட்ட நச்சுக் குண்டுகளையும், எரிகுண்டுகளையும் பாவித்து பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்தது, 2) பாதுகாப்பு வலையங்களாக அறிவித்து, மக்களை அங்கே வரவழைத்து, அவர்கள்மீது விமானக் குண்டுகளையும், எறி கணைகளையும் இரவு பகலாக வீசி இன அழிப்பு நடாத்தியது, 3) பாதுகாப்புத் தேடிப் பதுங்கு குழிகளுக்குள் பதுங்கியிருந்த மக்களை ஈவிரக்கமில்லாமல் உயிரோடு மண்மூடிப் புதைத்தது, 4) காயப்பட்ட, அங்கவீனப்பட்ட மக்கள்மீதும், போராளிகள் மீதும் கனரக வாகனங்களை ஏற்றிக் கதறக் கதற நெரித்துக் கொன்றது, 5) வெள்ளைக் கொடியுடன் நிராயுதபாணிகளாக வருமாறு கூறி, அவ்வாறு வந்த போராளிகளை இரக்கமின்றிச் சுட்டுக் கொன்றது, 6) காயப்பட்டுக் களத்தில் வீழ்ந்த பெண் போராளிகள் மீது மிருகத் தனமாகப் பாலியல் கொடும் வதை புரிந்து, அவர்களைப் பலி கொண்டது, என எண்ணற்ற போர்க் குற்றங்கள் புரிந்த கொடூரமிக்க சிங்கள அரசினை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டனை பெற்றுக் கொடுக்க நாம் அனைவரும் அணி திரள்வோம்.

மட்டக்களப்பு வாழ் தழிழ் மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!

கடந்த வருடம் வன்னியில் நடந்துகொண்டிருந்த இன அழிப்பு யுத்தத்தின்போது நாளாந்தம் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இனவெறிகொண்ட சிங்கள இராணுவத்தினரால் கொல்லப்பட்டுக்கொண்டிருந்தபோது மட்டக்களப்பில் பல பாகங்களிலும் களியாட்ட நிகழ்ச்சிகளும் விழாக்களும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டதை யாவரும் அறிவோம்.

அம்பாறை பாடசாலை மாணவ, மாணவிகளின் ஆபாச இறுவெட்டு!

அம்பாறையில் அப்பிரதேச மாணவர்களினால் எடுக்கப்பட்ட ஆபாச இறுவெட்டுக்கள் பெருமளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து இவ்வாறான இறுவெட்டுக்களை பொலிஸார் கைப்பற்றியதோடு இரு மாணவர்களையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். குறித்த இறுவெட்டுக்களை விற்பனை செய்த கடை உரிமையாளரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசரணையின்போது பல முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளன. இப்பிரதேசத்தில் உள்ள ருகுணகம என்ற பாடசாலையில் கல்விகற்கும் இருமாணவிகளும், மூன்று மாணவர்களுமே இவ்இறுவெட்டில் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் மற்றவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். மாணவிகளை காதலிப்பது போல் நடித்தே இவ் இறுவெட்டுக்கள் எடுக்கப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது

தமிழர்களின் கவனத்தை ஈர்க்க.................

மீள்குடியேற்ற அமைச்சை ஒப்படைத்தால் அவர் மீள் வெளியேற்றம் செய்ய எத்தணிக்கின்றாரே!!! என்ற ஐயப்பாடு எழுகின்றது. இறுதிக்கட்ட யுத்தத்தின் மூலம் புலிகளை ஒடுக்கியாகி விட்டுது, நாடுகடந்த அரசின் மூலம் தமிழர்களின் அரசியலையும் அபிலாஷைகளையும் புலத்தில் தள்ளியாகி விட்டுது,

இளைஞர் மற்றும் யுவதிகளைக் வெள்ளை மற்றும் கருப்பு வான்களில் கடத்தி சிறுநீரகம் மற்றும் கண்களைத் தோண்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சிங்கள அரசு - அதிர்ச்சித் தகவல் - நிராஜ் டேவிட்

வெள்ளை வான், கறுப்பு வான் கடத்தல்கள் தமிழர் வாழும் பிரதேசங்களில் தொடர்ந்தபடிதான் இருக்கின்றன. யுத்தம் முடிவுக்கு வந்து, இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வு பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்ற இந்த நேரத்திலும், தமிழ் இளைஞர்கள், யுவதிகள் இதுபோன்ற வான்களில் வருபவர்களால் கடத்திச் செல்லப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக வடக்கு கிழக்கில் இடம்பெற்றபடிதான் இருக்கின்றன. அண்மையில்

யாழில் தொடரும் கடத்தல் சம்பவங்கள்

யாழ் குடா நாட்டில் கடத்தல் சம்பவங்கள் கட்டுப்படுத்தப்படும் என படைத்துறையினர் மற்றும் நீதி துறையினர் கூறிய பின்னரும் கூட கடத்தல் சம்பவங்கள் தொடர்கின்றன. நேற்றைய தினம் பருத்தித்துறை ஆத்தியடியைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவரைச் சிலர், பல வந்தமாக வானில் ஏற்றி, தாக்கிய பின்னர் பருத்தித்துறை சாரையடிப் பகுதியில் தள்ளி விழுத்திவிட்டுச் தப்பியொடியுள்ளனர்

சர்வதேச செவிலியர் (தாதியர்) தினம்

உலக ளாவிய ரீதியில் ஒவ்வொரு மே 12 ஆம் திகதியும் சர்வதேச செவிலியர் (தாதியர்) தினம் (International Nurses Day) கொண்டாடப்பட்டு வருகின்றது. செவிலியர்கள் (தாதிகள்) சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பும் அவர்களின் சேவைத் தியாகங்களையும் சிறப்பாக நினைவுகூர இத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது

தளபதி கேணல். ரமணன்.....................


பாடசாலைக் கட்டிடத்திற்குள் இருந்த புழுக்கத்தை ஆற்றங்கரைக் காற்று கழுவிக் கொண்டிருந்தது. அது வகுப்புக்களுக்கான நேரம் அல்ல. வகுப்பறைகள் வெறிச்சோடிப் போய்க் கிடந்தன. காவலாளியும் காணப் படவில்லை. முற்றிலும் ஆளரவமற்றிருந்தது அந்தப் பாடசாலைஇ மதிலோரமும் தொருவோரக் கட்டிடத்திற்குள்ளும் பதுங்கியிருந்த சிலரைத் தவிர. பச்சைக்கரைப் பாவாடையைப் போல வயலும் நீலத் தாவணி போல வாவியும் கதிரவன் எழும்போதும் விழும் போதும் சிவக்கும் வானமுமாக கண்களுக்கு எப்போதுமே