வெள்ளி, 14 மே, 2010

முள்ளிவாய்க்கால்...........................!!!!


விடிகிறது ஒவ்வொரு இரவுகளும் எங்கள் குருதி குடிப்பதற்காகவே. ஆனாலும் எஞ்சியவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் இன்னும் வலிகளுடன். எங்கள் முற்றங்களில் வெடித்துச் சிதறியிருப்பது குண்டுகளின் எச்சங்கள் மட்டுமல்ல எங்கள் உறவுகளின் உடல்களும் தான். ஓடிஓடி ஓய்ந்து போன........................
கால்களுடன் பி...ணங்களைப் பார்த்துப் பார்;த்து மரத்துப் போனது மனதும் தான். அழுவதற்காகத் தவிர எங்கள் வாய்கள் திறக்கப்படவேண்டிய அவசியமே கிடையாது. வாழ்வதற்கு வீடில்லை.

ஓர் இனக்கூட்டம் ஈனஸ்வரத்தில் தனது அஞ்சலிக்காகத் தானே கதறித் தவம் இருக்கும் குரல் கேட்கிறதா! அந்தத் திசையைப் பாருங்கள் – தெரிவதுதான் ஈழம்!


ஆயிரக்கணக்கான மரணங்களை, கொடூரக் கொலைகளை, குண்டு வீச்சுக்களைத் தாங்கி சாட்சிகளே இல்லாத சாவுக் களமாய்க் கிடக்கிறது தாய் மண். கிளஸ்டரும் வெள்ளை பாஸ்பரசும் இன்ன பிற நச்சு ஆயுதங்களும் வீசிய சத்தம் இன்னமும் நினைவிலாடும் தேசம். சொந்த தேசத்து மக்களையே கொன்று குவித்த குற்ற உணர்ச்சி சிறிதும் இல்லாமல் வெற்றி விழாவை நடத்தினாலும், காட்டுக்குள் இருந்து கணைகள் வருமோ, கடலுக்குள் இருந்து பகை வருமோ என்ற பயத்தால் அலரி மாளிகைக்குள் ஆட்சியாளர்கள் பதுங்கி இருக்கிறார்கள். ஓர் இனக்கூட்டம் ஈனஸ்வரத்தில் தனது அஞ்சலிக்காகத் தானே கதறித் தவம் இருக்கும் குரல் கேட்கிறதா! அந்தத் திசையைப் பாருங்கள் – தெரிவதுதான் ஈழம்! உலகம் வேடிக்கை பார்க்கவில்லை, தூண்டியேவிட்டது.

வாழ்க தமிழீழ தாயகம்

உலகெங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உரிமை காக்கும் சமர் தொடர்ந்து ஆதிக்கவாதிகளால் முறியடிக்கப்படுவதும், சிறிது காலம் அவை அமைதி காப்பதும் மீண்டும் அடக்கமுடியாத பேரிரிரைச்சலோடு தமது விடுதலையை நோக்கி பயணிப்பதுமான நிகழ்வுகள் சக்கரம் போல் சுழன்று கொண்டிருக்கிறது. இச்சமர்களுக்கு இதுவரை தோல்வி ஏற்பட்டது கிடையாது. நடைபெற்று முடிந்த எவ்வித விடுதலை போர்களானாலும்சரி, எதிர்காலத்தில் நடைபெற இருக்கின்ற போராட்டங்களானாலும் சரி, இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் போராட்டங்களானாலும் சரி, அவை வெற்றியை அடையாளப்படும்வரை ஓய்வு பெற போவது கிடையாது.

ஒரு நீண்ட தொலை தூரப் பயணத்திற்கு நான் தயாரான பொழுதில் கனவுகளையும் ஆடைகளைப் போலவே அள்ளிச் சுருட்டி விடலாம் என்று நம்பினேன்.....ஆயினும், துரத்திய மரணமும், துப்பாக்கித் தோட்டாக்களும் வழிநடத்திய இந்தப் பயணத்தில் எனது முந்தைய பயணங்களைப் போல இல்லாமல் கனவு என்கூட வருவதற்கு மறுத்துத் தப்பி ஓடி விட்டது.........., என் உடலைப் போலக் கனவுகள் அத்தனை எளிதில் இடம் மாற ஒப்புக் கொள்ளவில்லை, அவை பிறந்த மண்ணையே சுற்றி வந்தன, பெரும் சீற்றத்துடன் பொங்கும் கடலை, உலகின் மிகவும் உயரமான சிகரங்களை, பெயர் தெரியாத ஊர்களை எல்லாம் கடந்து அவை எப்படியும் தப்பி ஓடி விடுகின்றன........, கனவுகள் வழக்கம் போலவே மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு நாளில் நான் அவற்றைப் பிரிந்து வெகு தூரம் வந்திருந்தேன், இருட்டிய பிறகு கனவுகள் மெல்லத் திரும்பித் தோட்ட மரத்தில் வழக்கமாய்க் கூவும் குயிலின் ஓசை கண்டு தாவிக் குதித்து, பூட்டிய வீட்டின் சாளரம் உடைத்து, முற்றத்தில் குதித்து, உயிர் வாழும் என்று நான் நம்பி இருந்தேன்..........., இடிபாடுகளுக்கிடையில் கனவுகள் என் வீட்டை இந்நேரம் பழுது பார்த்திருக்கும், மண்மூடிய என் வீட்டுத் தோட்டங்களில் கனவுகள் மீண்டும் மலர்களை நட்டிருக்கும், நான் விட்டு வந்த நிலவைக் கிணற்று நீருக்குள் கட்டி வைத்து என் கனவுகள் காவலிருக்கும்....., அந்த இடிந்த என் பழைய வீட்டிலிருந்து என்னை நீங்கள் துரத்தியதைப் போல என் கனவுகளைத் துரத்த உங்களால் முடியாது, அவை எப்போதும் அகதிகள் இல்லை............

உலகத்தமிழர் செய்யவேண்டியவை..............!

சிறிலங்காவின் போர்குற்ற விசாரணைகளை நம்பிக்கை வாய்ந்த மூன்றாம் தரப்பு திர்ப்பாயங்கள் மேற்கொள்ளவேண்டும். இதனைஉலக அமைப்புக்களுக்கு உலகத்தமிழர்கள் அழுத்தங்கள் கொடுப்பதற்கான போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும். இனவழிப்பு போரினை செய்து சிங்கள அரசு ஓராண்டாகின்றது. அதற்கான வெற்றிவிழாவினை கொண்டாடி இனவழிப்பு போரினை மூடி மறைக்க நினைக்கின்றது.

விடுதலைப்புலிகள் மீதான தடையை இந்தியா நீடித்துள்ளது


தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான விதிக்கப்பட்டிருந்த தடையை இந்திய அரசாங்கம் மேலும் இரண்டு வருடக்காலத்திற்கு இன்று நீடித்துள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழக மண்ணில் மீள ஒன்று சேர்வதாக கிடைத்த புலனாய்வு தகவல்களை அடுத்தே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் இலங்கையில் முற்றாக துடைத்தெறியப்பட்டுள்ள நிலையிலும் தமிழகத்தில் அவர்கள், செயற்படுவது குறித்து அறிக்கை கிடைத்துள்ளதாக உள்துறை அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அகதிகள் என்ற போர்வையில் இந்திய மண்ணில் தமிழீழ விடுதலைப்புலிகள் ஊருடுவல் செய்வதை முற்றாக மறுக்கமுடியாது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதம மந்திரி ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட நிலையில் முதன்முதலாக தமிழீழ விடுதலைப்புலிகளை தடைசெய்யப்பட்ட அமைப்பாக இந்திய அரசாங்கம் 1992 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தியது. அதைத் தொடர்ந்து அந்த தடை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நீடிக்கப்பட்டு வருகிறது.







மேஜர் சோதியா ..........மகளீர் படையணின் முதற் தாக்குதற் தளபதி

பச்சைப் பசேல் என்ற குளிர்மைக்காடு அது. அதுதான் எங்கள் மணலாறு. பசுமை மரங்களின் நடுவே நாம் போராளிகளாக நிமிர்ந்த நாட்கள், போராளிகள் என்ற நிமிர்வு ஒருபுறம். அண்ணனுடன் இருக்கின்றோம் என்ற... தலைக்கிரீடம் ஒருபுறம்.. நிச்சயமாக... நிச்சயமாக என்னால் எம்மால் மறக்க முடியாத நாட்களாகிவிட்டன. இந்திய இராணுவக் காலப்பகுதி, ஓ! அதுதான் மேஜர் சோதியாக்காவை நாம் கண்டு பழகி, வழிநடந்த, நேசித்த காலம். நெடி துயர்ந்த பெண், வெள்ளையான நிமிர் தோற்றமான பெண். பல்வரிசை முழுமையாகக் காட்டிச் சிரிக்கும் மனந்திறந்த சிரிப்புடன் எம்மைப் பார்வையிட்ட அந்த இனியவர் அப்போ தலைமை மருத்துவராகக் காட்டில் வலம் வந்தவர்.

புலியின் பெயர் கொண்டவன் வா... உன் விடுதலை உன்னால் தான் தீர்மானிக்க முடியும். நீ அடிமையாவதை நீ தான் தவிர்க்க வேண்டும். களத்திற்குள் நீ வந்தாலொழிய வரலாறு மாறாது. வெறும் கனவுகள் விடுதலையை வானிலிருந்து பொழியாது. உறங்கும் போது வரும் கனவு ஒன்றுக்கும் உதவாது. மறவனாய், மாற்றமாய் மண்ணை விரும்பும் தோழனாய். அடக்குமுறையை அடக்கும் தோளினாய். நீ இருப்பாய்... உயிர் கொடைக்கும் அஞ்சாதே. உயிர் கொடுக்க அஞ்சாதே. உதிரம் விடுதலைக்கு உயிர் வார்க்கும். உறவுகளின் செழிப்புக்கு உன் உறக்கத்தை பலியாக்கு. விடுதலையின் வேர் குருதியில் தான் முளைக்கிறது. வரலாறு உன் பெயரை வாசிக்கும். வருங்காலம் உன் செயலை நேசிக்கும். நீ... காற்றின் திசை திருப்பும் புலியின் பெயர் கொண்டவன். மானத்தைக் காக்கும் தலைவனின் வழி வந்தவன். மஞ்சள் நதியை அடக்கி ஆண்ட மாவோவின் புரட்சி சீனத்தின் துயர் தீர்த்தது. பகைவனின் பகை முறிக்க படை திரட்டு. பாடையில் அவன் திமிரடக்க நடைப்பழகு. தலைவனின் பணி சிறக்க பணியாற்று. மலரும் தமிழீழத்திற்கு சுடர் ஏற்று

மரணங்களின் மத்தியில் ..............

மனமுள்ள தமிழன் நான் ! மண்டியிட்டு பிழைக்கிறேன்.. மானம் கேட்டு கதைக்கிறேன்.. கொத்துக் கொத்தாய் மரணங்கள் மலிந்துகிடக்கின்றன. பச்சிளம் பள்ளியில் கற்பழித்து கதறுகிறாள். வெள்ளையாம்,கறுப்பாம்,கடத்தலாம், தமிழ் என்பதால் இவை அனைத்தும். பரிசு கெட்ட தமிழா நீ! படுத்த படுக்கையில் மீண்டும் புரண்டு படுக்கிறாய். அரை விழி காண்களோடு. நண்றாக தூங்கிக்கொள்! பாய்தின்னும் கறையான் உன்னை தின்ன எவ்வளவு நாளாகும்? அப்போதும் தூங்குவாயா? தூங்கிக்கொள் இப்போது மரணங்களின் மத்தியில்.....

அழிவுகளின் முடிவு அல்ல அவலங்களின் திறவுகோல்

முள்ளிவாய்க்காலில் முடிந்து போன போருக்குப் பின்னர் தமிழரின் தேசிய பலம் சிதைந்து போயிருப்பது தான் மிச்சம். ஆயுதங்களை மௌனிக்கும் முடிவு எடுக்கப்பட்ட பின்னர் நடந்த தற்காப்புப் போருடன் புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தது. தொடர்ந்தும் தமிழர்களால் ஆயுதப் போரை முன்னெடுப்பது சாத்தியமற்றதென்ற கட்டத்திலேயே ஆயுதங்களை மௌனிக்கும் முடிவு தேசியத் தலைமையால் எடுக்கப்பட்டது.

இளம்பெண் மீட்பு!

யாழ் வலிகாமம் உடுவில் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் குற்றுயிராக இளம்பெண் ஒருவரை உறவினர்கள் மீட்டுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) நண்பகல், உடுவில் மல்வம் பகுதியில் உள்ள தனது வீட்டின் பின்புறத்தில் நாய்க்கு உணவு வைப்பதற்காக சென்ற கலைவாணி (அகவை 19) என்ற பெண், நீண்ட நேரமாக வீடு திரும்பாத நிலையில் அவரைத் தேடிச் சென்ற குடும்பத்தினர், தமது வீட்டிற்கு பின்புறமாக உள்ள பிறிதொரு வீடொன்றில் இருந்து இவரைக் குற்றுயிராக மீட்டுள்ளனர். கைகள், கால்கள் கட்டப்பட்டு, கழுத்து நெருக்கப்பட்டு, வாயில் துணியால் கட்டப்பட்ட நிலையில் வெட்டுக்காயங்களுடன் இவர் காணப்பட்டுள்ளார். இவர் வழங்கிய வாக்குமூலத்தின்படி, தனது வீட்டிற்குப் பின்புறமாக மறைந்திருந்த இரண்டு பேர் தன்னை பிடித்துசென்று, மயக்க மருந்து கொடுத்துப் பின்னர் கைவிட்டுச் சென்றதாகவும், மயக்கமுற்ற நிலையில் என்ன நடந்தது என்பது தனக்குத் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார். யாழ் குடாநாட்டில் அண்மைக் காலங்களில் சிங்களக் குண்டர்களினதும், ஈ.பி.டி.பி போன்ற சமூக விரோதக் கும்பல்களினதும் அட்டூழியங்களும் அடாவடித்தனங்களும், சமூக சீர்கேடுகளும் அதிகரித்து வருகின்றமை சுட்டிக் காட்டத்தக்கது.