புதன், 7 ஜூலை, 2010

எந்தவொரு சர்வதேச விசாரணைக் குழுவுக்கோ, அழுத்தங்களுக்கோ அடிபணிந்து இலங்கையின் சுயாதீனத்தன்மையையும் இறையாண்மையையும் காட்டிக் கொடுக்கப் போவதில்லை. நாட்டை காட்டிக் கொடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உள்நாட்டின் நீதிமன்றத் துறைக்கு சர்வதேச விசாரணைக் குழுக்களினால் களங்கம் ஏற்படுமாயின் அதற்கு இலங்கை அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்காது.

ஐ.நா. நிபுணர்குழு கலைக்கப்பட மாட்டாது!

இலங்கை அமைச்சரின் கோரிக்கைக்கு இணங்க ஒரு போதும் ஐ.நா. நிபுணர்குழு கலைக்கப்படமாட்டாது. அந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவும் மாட்டாது. இவ்வாறு ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளரான பர்ஹான் ஹக் நேற்றிரவு பி.பி.ஸி. க்குத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் பி.பி.ஸிக்குத் தெரிவித்தவை வருமாறு:-
தமிழீழம்,
என் பாசமிகு தங்கைக்கு உன் அண்ணனின் இறுதி மடல் இது.
ஜெயமலர், நான் கரும்புலியாகச் சென்று வீரச்சாவடைந்தயிட்டு
கவலைப்படக்கூடாது. ஏனெனில் நாம் இருவரும் ஒரு வரலாற்றுத் தலைவனின் வழி காட்டலில் நிற்கின்றோம். இழப்புக்கள் எமக்கு புதியவை இல்லை.இழப்புக்கள்
இல்லாது எம் தமிழீழத்தை வென்றுஎடுக்க முடியாது என்பதை நீ
படித்திருப்பாய்.மற்றும் நீ எனது பணியைத் தொடர்ந்து செய்யவேண்டும்.நீ இயக்கத்தை விட்டுவிலகக்கூடாது இதுதான் நீ செய்யும் ஆத்மா சாந்தியாகும்.
இப்படிக்கு,
தணிகைமாறன்,
(அன்ரன் பெனடிற்).

இங்கு என்ன தான் நடக்குது எம் இனமானம் போகிறது...........

யாழ்ப்பாணம் தன்மானத் தழிழனின் கலாச்சார பூமி புலம்பெயர் தமிழனின் அடையாளம்..
இங்கு தான் என்ன நடக்கிறது
யாழின் முதல் குடிமகன் எங்கடை அரச அதிபர் அது தான் கணேஸ் ஜயா
டக்ளஸ் மாமாவின் துதி பாடலும்,, மகேஸ்வரி நிதியமென்று பண கையாடலும்
மட்டுமா......இல்லையே...........
ஊர் சண்டியன் போல சண்டித்தனங்களூம்,,கொலை மிரட்டல்களும்,,கப்ப அறவீடுகளும்
என்னய்யா நடக்குது


சிங்களவனின் செருப்பாக,,சிங்களவனின் காலில் வீழ்ந்து வணங்குவதா?..
.எம் தமிழ் மானம் எங்கு போயிற்று..
ஐயகோ!!!! நல்லூரானே யாரிடம் முறையிடுவது.யாரை தான் நோவது?........
2009 மே17 முன்பு எல்லாமே நல்ல படியாகதான் நடந்தது இப்போ என்னவாயிற்று
ஆரியகுளம் சந்தியில் பிற்பகல் என்ன நடக்குது இப்போ........
கோட்டை முனியப்பர் கோவில் பற்றைகளிற்க்குள் ஜோடிகளின் சங்கமங்கள்.
மொழி தெரியா பெண்டுகளின் உரசல்கள்...
யாழ் மாநகர சபையோ மனைவி,கணவன் தம்பதிகளாய் நடத்தும் அட்டூழியம்,நிதி
கையாடல்கள்,,மோசடிகள்,,பழிவாங்கல்கள்,கடத்தல்கள்.
ஐயகோ..........நாம் என்ன செய்ய யாரைத்தான் நோவது..........
2009 மே17 முன்பு எல்லாமே நல்ல படியாகதான் நடந்தது இப்போ என்னவாயிற்று
பல்கலைகழக தம்பிகளின் ஆவேச பேச்சுகளை காணவில்லை அவர்களின் வாய்களை மெளனம் ஆக்கிய யார்?
தேர்தல் என்றவுடன் கத்திதிரிந்த அறிமுகமான,அறிமுகமில்லாத கனவான்களை
காணவில்லை கண்டால் கேட்டதாக சொல்லுங்கோ...
நீதவான்களுக்கே நீதியில்லாத போலி உலகமிது,
போலிகளிலும், மாயைகளிலும்,,புரள வைக்கிறது சிங்களம்
2009 மே17 முன்பு எல்லாமே நல்ல படியாகதான் நடந்தது இப்போ என்னவாயிற்று

இளைய சமுதாயமே!

உலகமெங்கும் வாழும் எம் தமிழ் இளையோர்களே... எம் இனத்திற்காக நீங்கள் ஆற்றிய பணிகள் மிகச்சிறப்பானவை. எமது தேசியத் தலைவரின் நன்மதிப்பை பெற்றவர்கள் நீங்களே. எமது தேசியத் தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்கப்போகின்றவர்கள் நீங்களே. மாவீரர்களின் கனவுகளை நிஜமாக்கப்போகின்றவர்கள் நீங்களே.

காலம் நிச்சயமாய் தலை கீழாய் மாறுமடா...!



கலவரம் கொள்ளாதே நிலவரம்
நிச்சயமாய் தலை கீழாய் மாறுமடா...!


இந்த உலகம் உனக்கு சிறையல்ல
நீதான் கைதியாய் வாழ்கிறாய்

யுத்தத்தை வென்ற சண்டியன்களாகச் சர்வதேசத்துக்கு தம்மைக் காட்டிக் கொண்டு இருப்பதால்......!

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கியுள்ள வன்னி மக்கள் தொடர்பில் இன்று மூன்று விடயங்கள் அவதானிக்கப்பட்டுள்ளன. தாமதமாகி வரும் மீள் குடியேற்றம், அவர்கள் முகங்கொள்ளும் பிரச்சினைகள், மீள்குடியேற்றப்பட்ட மக்களின் அடிப்படை வசதிகளின்றி தொடரும் அவல வாழ்வு. இவை குறித்து இன்று உள்ளூர் மட்டத்தில் மட்டுமல்ல சர்வதேச மட்டத்திலும் கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளன.

போதையில் மீண்டும் உளறல்

அரசாங்கம் கடன்களை வாங்குகின்றது என எதிர்க்கட்சியினர் ஆர்ப்பரிக்கின்றனர். வாங்குகின்ற கடனில் 65 வீதமானவை வடக்கு கிழக்கிலேயே பயன்படுத்தப்படுகின்றது என பிரதியமைச்சர் விநாயகர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
மூன்று இலட்சம் மக்கள் தப்பித்து வருகின்ற வேளையில் அவர்களோடிருந்த 10 ஆயிரம் பயங்கரவாதிகள் மக்களை சுட்டுள்ளனர். எனினும், குறைந்தளவான இழப்புடன் படையினர் மக்களை மீட்டெடுத்தமையை மறக்கமுடியாது என்றும் அவர் சொன்னார்.