ஞாயிறு, 9 மே, 2010

தமிழீழத்தை மீட்டெடுப்போம் .......................

மனித இனத்தின் தலைவிதி நிர்ணயிக்கப்படுவது அரசியலால்தான். அதில் பங்கு கொள்ளாமல் இருப்பது சமூக நலனை பொறுப்பற்ற முறையில் புறக்கணிப்பதாகாதா என ஷில்லர் இச்சமூகத்தைப் பார்த்து கேட்டான். இது, இந்த நொடி வரை நம்மைப்பார்த்துக் கேட்கும் கேள்வியாகவே இருக்கிறது. நாம் அரசியல் நெருக்கடியால் அடிமை வாழ்வுக்கு தள்ளப்பட்டோம். அதே அரசியலால்தான் அதை வெற்றிக் கொள்ள வேண்டும்.

என் இனிய ஈழத்து புலம்பெயர் உறவுகளே! உங்களிடமிருந்து ஒரு விடையத்தை அறிந்து தெரிந்துகொள்ள நான் விரும்புகிறேன்!…

உயிரினும் மேலான ஈழப்போராட்டத்தை, பயங்கரவாதமாகச்சித்தரித்து, உலக அரங்கில் தமிழருக்கு அவப்பெயர் உண்டாவதற்கும். பெருத்த பின்னடைவு உயிர் அழிவுகளுக்கும் எடுகோலாகி, உலகம் முழுவதையும் திசைதிருப்பி பெருத்த பிரச்சாரம் செய்து, வரலாற்றில் மறக்க முடியா வடுவையும் “வலியையும்” ஏற்படுத்தி, ஜீரணிக்க முடியாத கொடுமையான சதியை, திட்டமிட்டு தமிழர் மீது கொட்டி மண் போட்டவர்கள் எவர்?… இலங்கையுடன் சேர்ந்து இந்தியா என்ற சுயநலவாதிகள் தானே போராட்டத்தை பயங்கரவாதமென உலக நாடுகள் தடை விதிக்கவேண்டுமென ஆரம்பப் புள்ளியைப்போட்டு தலைவிரித்துக்கொண்டு ஆடியது!.. எது நடந்திருந்தாலும் சர்வதேசத் தூதர்கள் இடைவிடாமல் தேசியத் தலைமையுடன் தொடர்ந்தும் இராசதந்திர தொடர்புகளில் பேசிக்கொண்டுதானே இருந்தனர், புலிகள் பயங்கரவாதிகள் என்றால் இது எப்படிசாத்தியமானது?, எதையும் நியாயமாகவும் நேர்மையாகவும் எடுத்துக்கொள்ளாமல், ‘கொள்ளிக்கட்டையாக’ கோடரிக்காம்பாக’ நின்று அழித்தொழிக்க முயன்றது! முயலுவது!, யார்? இந்தியாதானே!,

அன்னையர் தினம்.............மாவீரர்களை ஈன்றெடுத்து தமிழீழ விடுதலைக்காக அவர்களைப் போர்க்களம் அனுப்பி வைத்த தாய்மாருக்கு இன்று எனது வீரவணக்கமும் வாழ்த்துக்களும் உரித்தாகுக.


அம்மா… இச்சொல்லில் புதைந்துள்ள அர்த்தங்களும், தொணிகளும் ஆயிரமாயிரம்… அம்மாக்களின் மேன்மையை எடுத்துரைக்காத எந்த மனிதருமே உலகத்தில் இருப்பாரென கூறமுடியாது. உலக அளவில் அம்மாக்களைப் போற்றும் வகையில் கொண்டாடப்படும் அன்னையர் தினம் Mother’s Day ஏனைய சர்வதேச தினங்களைப் போல ஒரு குறித்த நாளில் கொண்டாடப்படுவதில்லை. பொதுவாக மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறன்று உலகில் அநேக நாடுகள் கொண்டாடினாலும்கூட, வேறும் சில நாடுகள் அதற்கு முன்போ அல்லது பின்போ கொண்டாடுகின்றன.

தமிழீழம் தமிழர்களின் கடமை !


வரலாற்றின் எந்தப்பக்கமும் மிக எளிதாக கடந்ததில்லை. அது பல்வேறு கடினத்தன்மைகளை உடைத்தெறிந்து உள்வாங்கி புதியவற்றை படைத்தளித்து பதிவு செய்கிறது. மார்க்ஸ் சொல்வதை போன்று, வார்க்க போராட்டத்தின் விளைவே வரலாறு. எந்த ஒரு வர்க்கமும் தனது விடுதலைக்கான போரில் தோல்வி கண்டதில்லை. காரணம் போராட்டம் என்பது ஏதோ ஒரு எல்லையை வகுத்து நடத்தப்படுவதில்லை. இந்த நாளிலிருந்து இந்த நாளுக்கு இதை முடித்துவிடலாம் என்று சொல்வதற்கு போராட்டம் கட்டடமல்ல. அது ஒரு இயக்கம். அதன் ஒவ்வொரு அசைவும் ஏங்கிக் கொண்டே இருக்கும். அந்த இயக்கத்திலே சருக்கல் ஏற்படலாம், சரிவு ஏற்படலாம், தோல்வி ஏற்படலாம், வெற்றி ஏற்படலாம், ஒன்றுமே இல்லாமல் அழித்து துடைத்தெறியப்படலாம். ஆனால்

தமிழ் உறவுகளே...


தமிழ் என்ற சொல்லை நாவில் பதித்து, தமிழீழ தாகத்தை நெஞ்சில் சுமக்கும் என் சகோதரர்களே வணக்கம்... வைகாசி 18 (mai 18) எம்மை நெருங்கிகொண்டு இருக்கிறது... மானம் உள்ளவன் மண்டியிட மாட்டன் என்று மண்ணில் விதைந்த எங்கள் மாவீர செல்வங்களையும், புலிகள் தான் தமிழர் , தமிழர் தான் புலிகள் என்று உடலை ஆயுதமாக்கி களத்தில் மடிந்த எங்கள் ரேத்த உறவுகளையும் எண்ணி கண்கள் கலங்கும் நாள்... இன்றே சபதம் எடுப்போம் : இந்த நாளில் தமிழன் விழ்ந்தான் என்று வரலாற்றில் எழுதப்படக்கூடாது... உலகத்தமிழன் விழித்தான், போராடி ஜெயித்தான் என்று எழுதப்படவேண்டும்!! போராளிகளான நாங்கள் மரணிக்கலாம், அனால் எங்கள் போடட்டத்தை மரணிக்க விடமாட்டோம்... இதுதான் இன்று ஒவ்வொரு தமிழனும் நேசில் சுமக்கும் இலச்சியம்...ஓய்ந்து கொண்டிருக்கும் எங்கள் தமிழ் உறவுகளை மீண்டும் தட்டி எழுப்புங்கள் ...