திங்கள், 6 டிசம்பர், 2010

விவாகரத்துக்கு காரணமாகும் பேஸ்புக்!

பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத் தளங்கள் உலக அளவில் ஏராளமான மக்களை ஒன்றிணைப்பதாக ஒருபுறம் பெருமையுடன் பேசிக்கொண்டிருக்கையில், மறுபுறம்
அமெரிக்காவில் நடக்கும் ஒவ்வொரு ஐந்து விவாகரத்திலும் ஒரு விவாகரத்துக்கு ஃபேஸ்புக் காரணமாக உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

கூட்டமைப்பின் இலண்டன் கிளை!

பல ஆயிரக்கணக்கான உயிர்களைத் தியாகம் செய்து இரத்தத்தால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று தனது இலக்கினையும் தியாகிகளின் இலட்சியத்தினையும் புறந்தள்ளி விட்டு எதேச்சதிகாரத்துடனும் தன்னிச்சையான போக்குடனும் செயற்படுவது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய யுனிசெவ் நிறுவன அதிகாரிகளே பாடசாலை சிறார்களைக் கொண்டு கூலி வேலை செய்விக்கும் பரிதாபம் ?????

சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய யுனிசெவ் நிறுவன அதிகாரிகளே பாடசாலை சிறார்களைக் கொண்டு கூலி வேலை செய்விக்கும் பரிதாபம் தென்மராட்சியில் இடம் பெற்று வருகின்றது யுனிசெவ் அமைப்பின் உதவியுடன் குடாநாட்டு பாடசாலைகள் சிலவற்றில் சமையலறைகளில் சிக்கன அடுப்பு அமைக்கப்பட்டு வருகின்றது.

கே.பி.பற்றி வீரவன்சவின் கருத்து கோத்தபாய ராஜபக்­ கடும் அதிருப்தி!

விடுதலைப்புலிகளின் முன்னாள் வெளி நாட்டு பொறுப்பாளர் கே.பி. தொடர்பில் அமைச்சர் விமல் வீரவன்ச அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச­ அதிருப்தி கொண்டதாக கூறப்படுகிறது.
அண்ணன் சுவிஸ்ல தலையால மண் கிண்டுகிறான். அவன் தங்கை இங்கே நோண்டுகிறாள் நொக்கியாவை"


அடிமேல் அடிவிழுந்தும் மீண்டும் மீண்டும் எழுந்து நிற்கின்ற குடாநாட்டு மக்களின் வாழ்வாதாரம் 90 வீதம் வெளிநாடு வாழ் உறவுகளின் கைகளில் தான் இருக்கின்றது.

கொல்லப்பட்டவர்கள் புலிகளே-ராஜபக்சே- தற்ஸ்தமிழ்

மிகக் கொடூரமான முறையில் தங்களிடம் பிடிபட்டவர்களை சிங்கள ராணுவத்தினர் கொலை செய்த செயலை அந்த நாட்டு அதிபர் ராஜபக்சே நியாயப்படுத்தி பேசியுள்ளார்.
போரின்போது பிடிபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை முறையாக நடத்தி விசாரணைக்குப் பின்னரே தண்டிக்க வேண்டும் என்பது சர்வதேச விதி, நியதி.




தமிழீழ மாவீரர் மரணத்தை வென்று வாழ்கின்றனர்-அனலை நிதிஸ் ச. குமாரன்

கோடான கோடி இதயங்களில் குடி கொண்டு மரணத்தையே வென்று வாழ்ந்து கொண்டிருக்கும் வேங்கைகளே மாவீரர்கள். கடந்த வருடத்துடன் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டாலும் மரணித்த மாவீரர்களின் கனவு ஒருபோதும் அழிந்துவிடப்போவதில்லை. உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனும் இவர்களை நெஞ்சில் நிறுத்தி பூசித்து வழிபட வேண்டும்.

திருகோணமலை கடத்தல் சம்பவங்களுக்கு பிள்ளையான், கருணாவே காரணம்!

திருகோணமலை மாவட்டத்தில் நடைபெற்ற கடத்தல் சம்பவங்களுக்கு, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், பிரதி அமைச்சர் விநாயகமூர்தி முரளிதரன் மற்றும் கடற்படையினர் ஆகியோரே காரணம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்

பேரினவாத போர் வெறியால் ஈழத் தமிழர்கள் முடமாகி மாற்றுத் திறனாளிகள் உருவாக காரணமாக இருந்துவிட்ட கருணாநிதி- வை.கோ

“கேள்வியும் நானே, பதிலும் நானே என்று 03.12.2010 அன்று வெளியிட்ட முதல்வர் கருணாநிதியின் அறிக்கையில் மாற்றுத் திறனாளிகளுக்குத் தொலைநோக்குடன் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கும் என்று அந்த அறிக்கையை படித்துவிட்டு மிகுந்த மனவேதனையும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.
சமூக நலத்துறை அமைச்சரின் தலைமையில் 5.1.2010 அன்று நடந்த கூட்டத்திற்கு பின் 27.3.2010 அன்று மாற்றுத் திறனாளிகளுக்காக தனித்துறை முதல்வரின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டடது.

இலங்கைத் தமிழர்கள் நாடு கடத்தல்..

தாய்லாந்தில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள் கட்டம் கட்டமாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களில் சுமார் 50 இலங்கைத் தமிழர்கள் கொழும்புக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாய்லாந்தின் குடிவரவுச் சட்டங்களை மீறி அங்கு தங்கியிருந்ததாகக் கூறி இரண்டு பாரிய சுற்றிவளைப்புகளின் போது சுமார் 200 இலங்கை தமிழர்களைத் தாய்லாந்து பொலிஸ் கைது செய்திருந்தது.

மன்னாரில் வௌ்ளம் மீள்குடியேறிய மக்கள் அவதி...!

நாட்டில் பரவலாக ஏற்பட்டிருக்கும் சீரற்ற கால நிலையின் காரணமாக மன்னார் மாவட்டத்திலும் அதன் தாக்கம் ஏற்பட்டிருக்கின்ற நிலையில் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வெள்ள நிலை ஏற்பட்டிருக்கின்றது. இந்நிலையில்..