திங்கள், 6 டிசம்பர், 2010

சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய யுனிசெவ் நிறுவன அதிகாரிகளே பாடசாலை சிறார்களைக் கொண்டு கூலி வேலை செய்விக்கும் பரிதாபம் ?????

சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய யுனிசெவ் நிறுவன அதிகாரிகளே பாடசாலை சிறார்களைக் கொண்டு கூலி வேலை செய்விக்கும் பரிதாபம் தென்மராட்சியில் இடம் பெற்று வருகின்றது யுனிசெவ் அமைப்பின் உதவியுடன் குடாநாட்டு பாடசாலைகள் சிலவற்றில் சமையலறைகளில் சிக்கன அடுப்பு அமைக்கப்பட்டு வருகின்றது.



உணவு தயாரிப்பதற்கான விறகை சேமிக்கவே யுனி செவ் இத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது . தென்மராட்சியின் கிராமப் பாடசாலைகளிலேயே இவ்வாறான சிறுவர் தொழிலாளர் துஷ்பிரயோகம் இடம் பெற்று வருகின்றது. ஏனெனில் அங்கு உரிய உயரதிகாரிகள் எவரும் செல்வதே கிடையாது.




இவ்வாறு நடந்த சம்பவம் ஒன்று வருமாறு: சமையலறை சிக்கன அடுப்பை அமைத்து வழங்க அன்று தொழிலாளர்கள் எவரும் வந்திருக்கவில்லை. வந்திருந்த யுனிசெவ் அதிகாரிகளுக்கோ அங்கிருந்து திரும்பிச் சென்று வேறொரு நாளில் வர நேரமில்லை.


இதன் காரணமாக அவசர அவசரமாக வகுப்பறைகளிலிருந்து அழைத்துவரப்பட்ட சிறார்கள் மண்ணை குழைக்கத் தொடங்கினர் அதிபர் சகிதம் யுனிசெவ் அதிகாரிகள், கதிரைகளில் அமர்ந்திருந்தவாறு வேலைகளை மேற்பார்வை செய்தனர்.


அந்தச்சிறார்களுக்கான அன்றைய பாடங்கள் கிட்டியிருக்கவேயில்லை. சேறுபடிந்த கை, கால்களுடன் அவர்கள் மாலை வீடு திரும்பினர்.


சிறுவர் போராளிகள் பற்றி பக்கம் பக்கமாக அறிக்கை எழுதிய யுனிசெவ் அதிகாரிகள் கைகள் சோர்ந்து போனதால் என்னவோ இச் சிறுவர் தொழிலாளர்கள் குறித்து கண்டுகொள்ளவேயில்லை பணிமுடிந்து குளிரூட்டப்பட்ட வாகனங்களில் அலுவலகம் திரும்பினர் என்பதுதான் குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக