வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

புலம்பெயர் நாடுகளில் எமது தோல்வியை தடுப்போம்!

முள்ளிவாய்க்கால் முடிவுக்கு பின்னர் நாம் தொடர்ந்து வலியுறுத்தியும் எல்லோரையும் கேட்டுக்கொண்டுமிருப்பது ஒன்றே ஒன்றை தான். இனியாவது ஒரே அணியில் எல்லாரும் ஒரு பொது உடன்பாட்டின் அடிப்படையின் இணைந்து கொண்டு அடுத்த கட்டம் பற்றிய கருத்து பரிமாற்றங்களுக்கு உங்களை இணைத்துக்கொள்ளுங்கள் என்பதே! இன்றைய இறுக்கமான கால கட்டத்தில் குறிப்பிட்ட சிலரின் அதிகாரப்போட்டி, அதை வெளிப்படுத்தும் விதம், என்பன எம் தமிழ் ஊடகங்கள் ஊடகாவே திரிக்கப்பட்டு வியாபார ரீதியில் அவை விற்பனைத்திரியாக்கப்பட்டுள்ளது என்பதை சகல தமிழ் மக்களுக்கு தெரிவிக்கும் கடமையும் பொறுப்பும் பொறுப்பு வாய்ந்த ஊடகங்களின் பணியாகும். சின்ன குடில் எனினும் நெறி தவறாது வாழ வேண்டும் என்பது தமிழ் மக்களின் விருப்பு. அது புலம்பெயர்ந்து வந்து விட்டாலும் இன்னும் அவர்களின் குருதியில் இணைந்திருக்கும் என்று நம்புகின்றேன். வாழ்வாதாரத்தை மட்டும் தேடும் நிலையில் இன்று தாயக மக்கள் அடக்கப்பட்டுள்ள இன்றைய நிலையில் அது பற்றி அக்கறை இன்றி தமிழ் ஊடகங்கள் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதவை! கே.பியை காட்டிக்கொடுத்தது யார்? அவர் தானாகவே இணைந்தாரா? என்று எத்தனையோ கேள்விகளை கேட்டு தமிழ் பத்திரிகைகள் தமிழ் மக்களை குழப்பி தமது வியாபாரத்தை பெருக்க முயற்ச்சிக்கின்றன. ஒரு குறிப்பட்ட ஒரு காலப்பகுதியில் வந்த செய்திகள் குறிப்பிட்டு சொல்ல கூடிய தமிழ்த் தேசிய வாதிகள் மீதான சேறுபூசல்களாகவும், அதே நேரம் சிலரின் தகவல்கள் ஒரு சிலரால் திரிக்கப்பட்டு தமது காழ்ப்புணர்வு நிகழ்ச்சி நிரல் அரங்ககேற்றப்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை! குறிப்பாக ஐரோப்பிய நாடுகளின் ஜேர்மன், பிரித்தானியா, நோர்வே போன்ற நாடுகளில் வேகமான பரப்பட்ட செய்திகளும், சில மிரட்டல்களும் இவற்றை சொல்லி நின்றன என்றால். கனடா போன்ற வட அமெரிக்க நாடுகளில் எதைப்பற்றியும் அக்கறையில்லாத தன்மையில் மக்களும் அவர்களை வழிநடத்தும் அமைப்புக்களும் இயங்கி வருகின்றன. வன்னியில் மே மாதம் இறுதி நாட்களில் நடைபெற்ற நிகழ்வுகள் சதாரண மக்களாகிய எம்மை பாதித்துள்ளதே தவிர வேறு எந்த அமைப்பு சார் நபர்களையும் பாதிப்படைய வைக்கவில்லை என்பதை உணரக்கூடியதாக உள்ளது. ஏன் எனில் அவர்களது செய்ற்ப்பாடுகளில் முகாமில் இருக்கும் மக்கள் பற்றியதோ, தமிழீழ விடுதலை பற்றியதாகவோ இல்லை என்பதே! காலத்தின் பெயரிலும், அந்த காலத்தில் நம்பிக்கை கொண்டவர்களுமாகவே இவர்கள் அனைவரும் இருக்கின்றனர். ஆனால் ஆக்க பூர்வமற்ற செயற்ப்பாடுகளை செய்த படி காலத்தையும் அடுத்தவன் கருணையையும் எதிர்பார்ப்பது எவ்வளவு அறிவிலித்தனம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை. வெகுசன ஊடகங்கள் என்ற ரீதியில் பல பத்திரிகைகளும் வானொலி தொலைக்காட்சிகளும், தம்மை அரசியல் ரீதியில் நிலைநிறுத்த காலம் பார்த்துக்கொண்டிருந்தவை போல செயற்ப்படுவது தமிழினத்தின் வரலாற்றுக்கே இழுக்காகும். நடந்து முடிந்த கொடிய போரில் தம்மால் முடிந்தவற்றை செய்த போராளிகளுக்கும் அந்த மண்ணுக்காய் உயிர்கொடுத்த மாவீரர்களுக்கும் இந்த ஊடகங்கள் செய்யும் இரண்டகமாகும். இந்த இரண்டகத்தை செய்யும் தமிழர்களை நாம் ஏற்றுக்கொள்ள முடியுமா,? சிங்களவர்களுடன் சகவாசம் வைக்கலாம் வியாபாரம் செய்யலாம் என்று இன்றும் மேலதிக ஒப்பந்தங்களில் கையேழுத்திடும் தமிழர்கள் எப்படி அழைக்கப்படவேண்டியவர்கள்? தேசியத்தின் பால் வைத்திருந்த நம்பிக்கையை இழந்தவர்கள் எந்த இலட்சியத்தை நேசித்தார்களோ அதை நோக்கி மக்களை நகர்த்த முடியாமல் தாமும் நகர முடியாமல் திண்டாடும் இவர்கள் எந்த அடிப்படையில் தேசிய வாதிகள் என்று ஏற்றுக்கொள்ள முடியும்? சண்டையில் தோல்விக்கு பின் ஆய்வுகளுக்கோ, பகிரங்க மேடைகளுக்கோ வரப்பயந்து ஒழித்து வாழும் நபர்கள் எல்லாம் எந்த அடிப்படையில் இதுநாள் வரையில் செயற்ப்பட்டனர்? வாய்கிழியப் பேசிய தமிழீழம் என்னவாயிற்று? வீதி வீதியாய் மக்களை இறக்கி போராட்டம் நடாத்திய மக்கள் சமூகம் எங்கே? மாணவர் அமைப்புக்கள் எங்கே? குழம்பிக்கிடக்கும் எங்கள் மக்கள் முன் நாம் செய்ய வேண்டிய பாரிய பணி ஒன்று காத்திருக்கின்றது. அது மக்களிடம் போய் போராட்டம் நடாத்த பணம் கேட்பதல்ல. பணம் கேட்க சென்றவர்கள் இன்று பரப்புரைக்கு செல்ல வேண்டிய காலம் இது. வீடு வீடாக சென்று விடுதலைக்கு உரம் சேர்ப்பதற்க்காய் எம்மால் பணம் சேர்க்க முடியும் எனில், ஏன் ஒவ்வோர் தமிழர் வீடுகளுக்கும் சென்று, எமது இன்றைய நிலையை பற்றிய விளக்கத்தை கொடுக்க கூடாது? இப்போது வெளிநாட்டவர்களைவிட அதிக குழப்பத்தில் இருப்பது நமது தமிழ் மக்களே! அவர்களது குழப்பங்களும் நாங்களே காரணமாகிவிட்டோம். ஊடகங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்ட செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருக்க மக்களுக்குள் இன்னோர் கதை புனையப்பட்டுக்கொண்டிருக்க சிங்கள அரசு இன்னோர் கதையை செல்ல எந்த பக்கம் செல்வதை மக்கள் நம்புவது? தமிழ் மக்களுக்குள் எது நம்பகமான ஊடகம்! இவற்றை தெளிவு படுத்த வேண்டிய கடமை யாரினது? வெறுமனே போராட்டத்துக்கு பணம் சேர்க்க மட்டும் வீடு வீடாக சென்ற நாம் இன்று எம் செயற்ப்பாடுகளை மாற்றுவோம். எம் மக்களுக்கு நிலமையை உண்மையை தெளிவு படுத்துவோம். அதற்க்கான காலமே இது. மாற்றங்களை நோக்கிய நகர்வில் நாமும் பங்கேற்போம் எமது மக்களையும் பங்கேற்க வைப்போம். தமிழீழ புற நிலை அரசு பற்றி அறிவு 10 சத வீத மக்களுக்கு கூட இல்லை. அப்படியிருக்கையில் அப்படியான செயற்ப்பாடுகளை மக்களுக்கு அறிவிக்கப்ப போவது.. விளக்கப் போவது யார்? முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருக்கும் அந்தந்த நாட்டுப்பிரதிநிதிகளே! நாம் வானொலிக்குள்ளும் பத்திரிகைக்குள்ளும் சண்டையிடுதல் இனியும் கேவலம்! இனியும் மக்களுக்குள் பிரிவினையை விதைத்து செயற்ப்படுதல் முட்டாள்த்தனம். இன்னும் இன்னும் வேகமாக நாம் செயற்;ப்படவேண்டும். தன்னை நாட்டைக்காக்க எதையும் அர்பணிக்க தயார் என்று சரத் பொன்சேகா செல்கின்றான. நம் நாட்டை பிடித்த படியே அவன் அறை கூவல் விடுகின்றான். ஆனால் கேவலம் எம்மால் நெறிப்படுத்தப்பட்ட ஒரு பரப்புரை நடவடிக்கையை கூட எமது மக்களுக்குள் செய்ய முடியாத படி முடங்கி கிடக்கின்றோம். புலம்பெயர் நாடுகளில் துரித கதியில் சிங்கள ஆட்சியாளர்களின் பரப்புரையாளர்கள் பலரை தம்வசப்படுத்தி விட்டனர். ஆதற்க்கு காரணம் முகாம்களில் உள்ள எம் மக்களுக்கு நாம் எம்மால் முடிந்த உதவியை கூட செய்யாமல் அசட்டையாக உள்ளமையே! துன் உறவு பாதிக்கப்பட்டிருக்கும் போது அதற்க்கு நிவாரணம் பெறுவதையே எந்த ஒரு உறவும் விரும்புவான். அதற்க்கான எந்த நடவடிக்கையையும் செய்யாமல் நாம் இருப்பதே எமக்கு புலம்பெயர் நாடுகளில் கிடைக்க போகும் தோல்விக்கு முதற்காரணியாக அமையும். நாட்டில் ஆயுதப்போரின் தோல்வியை தடுக்க முடியாத கையாலாகத்தனத்துடன் சேர்ந்து கிடக்கும் புலம்பெயர் தமிழர்கள், நிச்சயம் இந்த சேர்வு நிலை தொடரும் பட்சத்தில் புலம்பெயர் கட்டமைப்புக்களிலும் தோல்வியை தழுவுவது தவிர்க முடியாததாகும். எனவே உறவுகளே விழித்தெழுங்கள்.. நீங்கள் தெளிந்திருங்கள்..!

மாவீரர்களின் பெயரால் இதைச் செய்வோமா

கண்கள் குளமாக எங்கள் கண்மணிகளை நாங்கள் நினைந்துருகும் நாள். ஒட்டு மொத்தத் தமிழனத்தின் கனவுகளை நனவாக்க வேண்டும் என்ற துடிப்புடன், தமிழினத்தின் அடிமை விலங்கறுக்க வேண்டுமென்ற ஆவேசத்துடன், தமிழ் மண்ணிலே தமிழன் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் தம் உயிரையே துச்சமென மதித்து தீரத்துடன் போராடித் தம் இன்;னுயிர்களைத் தியாகம் செய்த எம் தமிழ் மறவர்களுக்கான நாள். விண்ணே இடிந்து வீழ்ந்தாலும் விலைபோகாதவன் தமிழன் என்று தலைநிமிர்ந்து எம்மைச் சொல்ல வைத்து விட்டு வித்தாகிப் போன வீர மறவர்களுக்கான நாள். தமிழ் மண் விடுதலையடைய வேண்டும், தமிழ் மக்கள் அமைதியுடனும் சந்தோசத்துடனும் வாழ வேண்டும் என்பதற்காக தங்கள் எதிர்காலத்தை, விருப்பு வெறுப்புகளை, சொந்த பந்தங்களை எல்லாம் துறந்து உறுதியுடன் போராடி தங்கள் உயிர்களைத் தந்த மாவீரர்களை நினைவுகூருகின்ற நாள். மாவீரர் தியாகம் இலகுவில் மறக்கப் படக் கூடியதா? இளமைக் காலத்துக்கே உரிய குறும்புகள், குழப்படிகள், சீண்டல்கள் இவை எல்லாவற்றையும் புறம் தள்ளி, இன்னும் சரியாகச் சொல்வதானால் தங்களைத் தாங்களே ஒறுத்து, கட்டுக் கோப்பாக வாழ்ந்து மண்ணுக்காய் உயிர் தந்த மாணிக்கங்கள் அல்லவா இவர்கள்? என்குடும்பம், என் பிள்ளை, என் சொத்து என்ற குறுகிய வட்டங்களைக் கடந்து எம் நாடு, எம் மொழி, எம் மக்கள் என்று சிந்தித்த வித்தகர்களல்லவா இவர்கள் வாழ்ந்து முடித்து வயோதிபத்தை அணைத்து வெந்து நோய்கண்டு பாயில் கிடப்பவர்கள் கூடக் கண்டு அஞ்சும்மரணத்தை, தள்ளிப் போட நினைக்கும் மரணத்தை, ஏற்க விரும்பாத மரணத்தை, சிரித்த முகத்துடனே ஏற்கத் துணிந்த சீரியர்கள் அல்லவா இவர்கள்? ஒவ்வொரு போராளிக்குள்ளும் எத்தனை கதைகள்? அகிம்சை போர்வையுடுத்த அரக்கர்களின் முகத்திரையைக் கிழிப்பதற்காய் அன்னம் தண்ணீர் துறந்து என்னுயிர் போக நேரிட்டாலும் வானத்திலிருந்து மலரும் தமிழீழத்தைப் பார்ப்பேன் என்று சொன்ன திலீபன்கள் எத்தனை பேர்? தமிழன் விலை போகக் கூடாது என்பதற்காய் தம் மணமாலை காய்வதற்கு முன்பே பிணமாலையைச் சூடிக் கொண்ட குமரப்பாக்கள், புலேந்திரன்கள் எத்தனை பேர்? சிறிலங்கா அரசாங்கம் சிங்களத் தலைநகரில் வைத்துக் உங்களைக் கொல்ல முயற்சிக்காதா என்ற நிருபர்களின் கேள்விக்கு சிங்கள அரசை நம்ப முடியாது தான் ஆனால் அப்படி எனதுயிர் போனாலும் அது தமிழ் மக்களுக்காகத் தானே என்று சொன்ன தமிழ்ச் செல்வன்கள் எத்தனை பேர்? புலத்திலே வாழ்ந்த வசதியான வாழ்க்கையை உதறித் தள்ளிவிட்டு தாயகப் போரிலே தம்மை இணைத்துக் கொண்ட தயாள சீலர்கள் எத்தனை பேர்? அநுராதபுரத்திலே தாம் மூன்று முறை, நான்கு முறை காயப்பட்ட போதும் சிங்களத்தின் வான் கலங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் தலைமைக்கு அறிவித்துக் கொண்டே வீரமரணத்தைச் சந்தித்தவர்கள் எத்தனை பேர்? வீழ்ந்தாலும் வீழ்வேனே தவிர எதிரிக்கு விலைபோகமாட்டேன் என்று சொல்லி வீரமரணத்தைத் தழுவிய வரலாற்று நாயகர்கள் எத்தனை பேர் இத்துணை அரிய தியாகத்தையும் தீரத்தையும் சர்வதேசமுமே ஒன்றாய் நின்று அழித்து விட்டுக் எக்காளமிட்டுச் சிரிக்கின்ற ஒரு காலப்பகுதியிலே நாம் இன்று இருக்கின்றோம். சரியான வழிகாட்டியின்றி நட்ட நடுக்கடலிலே துடுப்பின்றித் தத்தளிக்கின்ற சின்னஞ்சிறு படகினைப் போலச் சிதறிப் போன எம்மினமும் தவிக்கின்றது, தத்தளிக்கின்றது. இந்தத் தடுமாற்றத்தை, குழப்பத்தை தமக்குச் சாதகமாக்கி தமிழனின் இலட்சியக் கனவை முழுமையாய் அழித்து விட எதிரி கங்கணம் கட்டி நிற்கின்றான். இந்த எதிரியின் சூழ்ச்சி நெருப்பை கோடாரிக் காம்புகளான எம்மவர்கள் சிலரும் நெய்யூற்றி வளர்த்துக் கொண்டிருப்பது வேதனையிலும் வேதனை. ‘அவனே தலைவன்’, ‘அவனது வாக்கே வேதவாக்கு’ என்று அடிக்கொரு தடவை சொன்ன அடிவருடிகள் சிலர் அராஜகச் சிங்களனைக் கட்டி அணைத்து பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லும் கொடூரமும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் எமக்காய் வாழ்ந்து, எமக்காய் உயிர் தந்த, எம்தமிழ்ப் புதல்வர்களின் கனவை, ஆசையை, எதிர்பார்ப்பை அழிய விடப் போகிறோமா என்ற கேள்வியை ஒவ்வொரு தமிழுணர்வுள்ள தமிழனும் தனக்குத் தானே கேட்க வேண்டிய நேரம் இது. இந்த மண்ணின் மைந்தர்களுக்கு நாங்கள் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம்? அந்தத் தியாக சீலர்களின் இலட்சியைக் கனவை நனவாக்க நாம் என்ன செய்யப் போகிறோம்? மக்களுக்காய் வாழ்ந்து மாவீரரர்கள் ஆனவர்கள் போக மண்காக்கப் புறப்பட்ட மறவர்களில் பலர் இன்று சிங்களத்தின் கொடூர சித்திரவதைக் கூடங்களிலே சொல்லொணாச் சித்திரவதைகளை அநுபவித்துக் கொண்டிருக்கிறார்களே? யுத்தக் கைதிகள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்ற சர்வதேச நெறிமுறைகள் முரணாக கொடூரமான சித்திரவதைக் கூடங்களிலே அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்களே? இப்படிச் சர்வதேச நெறிமுறைகளை மீறி நடக்கின்ற சிங்கள அரசிற்கெதிராக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று சர்வதேச சமூகத்தையும் ஐ.நா மன்றத்தையும் நோக்கிக் கேள்வி கேட்காது மௌனித்து விட்டோமே? இதுவா எம் தேச பக்தி? எங்கள் பிள்ளைகள் என்று சொல்லிப் போராளிகளை ஆதரித்து அவர்களைத் தம் பிள்ளைகளாகப் பார்த்த வன்னித் தமிழ் மக்கள் ஏதிலிகளாய் மழையிலும் வெயிலிலும் அநுபவிக்கும் கொடுமைகளைப் பார்த்தும் கேட்டும் அறியும் நாம் அவர்களை இந்த நிர்க்கதிக்குள்ளாக்கிய சர்வதேசத்திடம் நீதி கேட்டுக் குரல் கொடுக்கக் கூடத் திராணியற்வர்களாய்ப் போனோமே? இது எந்த வகையில் நியாயம்? எங்கள் மக்கள் படும் துயரை, எமக்கு இழைக்கப்படும் அநீதிகளை இந்நாட்டில் வாழும் எம் அயலவர்கள், சக வேலையாட்கள், பாடசாலை நண்பர்கள் ஆகியோருடன் கூடப் பகிர்ந்து கொள்ளாமல் மௌனம் சாதிப்பது எதற்காக? எம் மக்களுக்காய் எதுவும் செய்யாமல் வாழாவிருப்போர் ஒருபுறமிருக்க பதவி ஆசை பணத்தாசை கொண்டு குட்டையைக் குழப்பும் கூட்டமொன்றும் உருவெடுத்துள்ளது. அவர்களிடமும் ஒரேயொரு கேள்வி. விடுதலை விடுதலை என்று கூவி அழைத்த நீங்கள் பதவி ஆசையும் பணத்தாசையும் உந்தித் தள்ள திக்கிற்கொருவராயப் பிரிந்து ஏட்டிக்குப் போட்டியாய் அறிக்கை அரசியல் செய்கிறீர்களே! இலட்சிய வேட்கையுடன் வீழ்ந்த எம் செல்வங்களிற்கு நீங்கள் செய்யும் நன்றிக் கடன் இதுதானா? நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். நடக்கப் போவது நல்லதாய் நடக்கட்டும் என்று எண்ணி இந்த 27ம் திகதி ஒவ்வொரு நாட்டிலும் வாழும் ஒவ்வொரு தமிழனும் எங்கள் மாவீரர்களுக்காய் விளக்கேற்றி விட்டு அந்த உத்தம புருசர்களின் கனவை நனவாக்க எம்மால் இயன்றதைச் செய்ய உறுதியெடுப்போம். தமிழீழக் கனவுடன் கண் தூங்கும் எம் சொந்தங்களுக்காய் இதையாவது செய்வோமா? அதையும் காலம் தாழ்த்தாது செய்வோமா?

மீண்டும் மீண்டும் எழும்!

செந்தணல் எரியும் தேசத்தின் புதல்வர்களே செய்தி ஒன்று வரும் என்று காத்திருக்கும் காணகத்தின் நண்பர்களே! நிழல் எது நிஜம் எது தெரியாது தினம் தினம் வீசும் அறிக்கை வாளில் வெந்து நொகும் புலம் பெயர் உறவுகளே! சொந்தங்கள் நாங்கள் நெஞ்சத்தில் ஆயிரம் கனதியோடு பேசுகின்றோம் பெற்ற பிள்ளைகள் காணாமல் போனாலும் விட்டு வந்து ஊரை துறந்து நாம் இறத்தலே ஆகினும்...! நாம் நம் சொந்த மண்னை அடகு வையோம் சூரியத்தலைவனின் செந்தழல் விழிகாண விழிதிறந்து கிடக்கி்ன்றோம் மெய்யேன போனாலும் பொய்யேன ஆனாலும் தலைவன் அவன் ஒருவனே நம்பிக்கை! புது வழி செய்ய நீர் எந்த களம் புகிலும் நலம் காணப்போவது என்னவோ தலைவன் நாமத்தில் தான் வெற்றியோ கொண்ட எம் தலைவன் வீழ்ந்ததாய் எண்ணிடம் ஆகாது வேங்கை அவன் மீள்வது நிச்சயம் பொய்களால் ஆளும் பேதலிகளுக்காய் பேதை கொள்ளல் வேண்டாம் எமக்கு உறவுகளே! அறிக்கை போரால் அழிந்தவர் நாம் ஆயுதப்போரால் எழுந்தவர் நாம் மீண்டும் நாம் அறிக்கைக்குள் அள்ளுண்டு போகமல் இருந்திடல் அத்தனைக்கும் நன்மை செய்திடும் புலி பதுங்குமோ, பாயுமோ புன்னகைத்த படி கதை பேசும் புல்லர்கள் கதை முடித்து புறனானுற்றை படித்திட புலத்திலும் நிலத்தினும் எழுவோம்! புலி பாய்ந்ததா படுத்ததா கதைகளை விடுவோம் புலியின் பெயரால் தான் நாம் பூமியை ஆள்வது நிச்சயம் புன்னகைத்த படி நான் புளுகாங்கிதம் கொள்கின்றேன் மீண்டும் மீண்டும் எழும்! எம் தேசம்..,!

த‌மி‌ழ் பெ‌ண்களை அவதூறாக பே‌சிய நடிக‌ர் ஜெயரா‌ம் வீடு, அலுவலகம் மீது தாக்குதல்!

த‌மி‌ழ் பெ‌ண்களை அவதூறாக பே‌சிய நடிக‌ர் ஜெயரா‌ம் மன்னிப்புக் கோரியுள்ள நிலையில், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீடு மற்றும் அவரது அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பிரபல நடிகர் ஜெயராம் நடித்த ‘ஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ்’ என்ற மலையாள படம் தற்போது வெளியீட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இ‌ந்த பட‌‌த்‌தி‌ல் வீட்டு வேலைக்காரப் பெண்ணை ”சை‌ட்” அடிப்பது போல் காட்சிகள் உள்ளன. இந்நிலையில் ஏசியா நெட் தொலைக்காட்சியின் ‘டாக் ஷோ’வில் பங்கேற்ற ஜெயராமிடம், இது பற்றி குறிப்பிட்டு நிஜ வாழ்க்கையில் நீங்கள் வேலைக்காரியை சைட் அடித்து இருக்கிறீர்களா? என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்டார். அதற்கு பதில் அளித்து ஜெயராம் கூறும்போது, என் வீட்டு வேலைக்காரி கறுத்து தடித்த தமிழச்சி, போத்து (எருமை) மாதிரி இருப்பாள்; அதைப்போய் எப்படி சைட் அடிக்க முடியும் ? ” என்றார்.இது அந்த தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌ல் ஒளிபரப்பானது. ஜெயரா‌மி‌ன் இ‌ந்த கருத்துக்கு திரையுலகினரும், மகளிர் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தனர். அத்துடன் பா.ம.க. வழக்கறிஞர் சமூக நீதி பேரவை மாநில பொறுப்பாளர் இந்திராணி, இது தொடர்பாக ஜெயராம் மீது எழும்பூர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் மனு‌த் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், த‌மி‌ழ் பெ‌ண்களை அவதூறாக பே‌சியதற்காக ஜெயரா‌மின் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீடு மற்றும் அவரது அலுவலகத்தின் மீது ‘நாம் தமிழர்’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்று தாக்குதல் நடத்தினர். இதில், அவரது கார் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. சுமார் 25 பேர் கொண்ட குழுவினர் இத்தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தாக்குதலில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்டதாகவும், 6 பேர் சரணடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே தமது பேச்சுக்காக ஜெயராம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.தமது தாய் தமிழ்ப் பெண் என்றும் ,தமது தாய் மொழி தமிழ் என்றும், தமிழ்ப் பெண்களை இழிவுப்படுத்துவது தமது தாயை இழிவுப்படுத்துவதற்கு சமமானது என்றும், நகைச்சுவையாகவே தாம் தொலைக்காட்சியில் அவ்வாறு கூறியதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். Read more: http://meenakam.com/?p=5413#ixzz0egGC5kOr Read more: http://meenakam.com/?p=5413#ixzz0egGCGWe1 Read more: http://meenakam.com/?p=5413#ixzz0egGCRkrT த‌மி‌ழ் பெ‌ண்களை அவதூறாக பே‌சிய நடிக‌ர் ஜெயரா‌ம் மன்னிப்புக் கோரியுள்ள நிலையில், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீடு மற்றும் அவரது அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பிரபல நடிகர் ஜெயராம் நடித்த ‘ஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ்’ என்ற மலையாள படம் தற்போது வெளியீட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இ‌ந்த பட‌‌த்‌தி‌ல் வீட்டு வேலைக்காரப் பெண்ணை ”சை‌ட்” அடிப்பது போல் காட்சிகள் உள்ளன. இந்நிலையில் ஏசியா நெட் தொலைக்காட்சியின் ‘டாக் ஷோ’வில் பங்கேற்ற ஜெயராமிடம், இது பற்றி குறிப்பிட்டு நிஜ வாழ்க்கையில் நீங்கள் வேலைக்காரியை சைட் அடித்து இருக்கிறீர்களா? என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்டார். அதற்கு பதில் அளித்து ஜெயராம் கூறும்போது, என் வீட்டு வேலைக்காரி கறுத்து தடித்த தமிழச்சி, போத்து (எருமை) மாதிரி இருப்பாள்; அதைப்போய் எப்படி சைட் அடிக்க முடியும் ? ” என்றார்.இது அந்த தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌ல் ஒளிபரப்பானது. ஜெயரா‌மி‌ன் இ‌ந்த கருத்துக்கு திரையுலகினரும், மகளிர் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தனர். அத்துடன் பா.ம.க. வழக்கறிஞர் சமூக நீதி பேரவை மாநில பொறுப்பாளர் இந்திராணி, இது தொடர்பாக ஜெயராம் மீது எழும்பூர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் மனு‌த் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், த‌மி‌ழ் பெ‌ண்களை அவதூறாக பே‌சியதற்காக ஜெயரா‌மின் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீடு மற்றும் அவரது அலுவலகத்தின் மீது ‘நாம் தமிழர்’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்று தாக்குதல் நடத்தினர். இதில், அவரது கார் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. சுமார் 25 பேர் கொண்ட குழுவினர் இத்தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தாக்குதலில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்டதாகவும், 6 பேர் சரணடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே தமது பேச்சுக்காக ஜெயராம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.தமது தாய் தமிழ்ப் பெண் என்றும் ,தமது தாய் மொழி தமிழ் என்றும், தமிழ்ப் பெண்களை இழிவுப்படுத்துவது தமது தாயை இழிவுப்படுத்துவதற்கு சமமானது என்றும், நகைச்சுவையாகவே தாம் தொலைக்காட்சியில் அவ்வாறு கூறியதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். Read more: http://meenakam.com/?p=5413#ixzz0egGC5kOr Read more: http://meenakam.com/?p=5413#ixzz0egGCGWe1 Read more: http://meenakam.com/?p=5413#ixzz0egGCRkrT த‌மி‌ழ் பெ‌ண்களை அவதூறாக பே‌சிய நடிக‌ர் ஜெயரா‌ம் மன்னிப்புக் கோரியுள்ள நிலையில், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீடு மற்றும் அவரது அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பிரபல நடிகர் ஜெயராம் நடித்த ‘ஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ்’ என்ற மலையாள படம் தற்போது வெளியீட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இ‌ந்த பட‌‌த்‌தி‌ல் வீட்டு வேலைக்காரப் பெண்ணை ”சை‌ட்” அடிப்பது போல் காட்சிகள் உள்ளன. இந்நிலையில் ஏசியா நெட் தொலைக்காட்சியின் ‘டாக் ஷோ’வில் பங்கேற்ற ஜெயராமிடம், இது பற்றி குறிப்பிட்டு நிஜ வாழ்க்கையில் நீங்கள் வேலைக்காரியை சைட் அடித்து இருக்கிறீர்களா? என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்டார். அதற்கு பதில் அளித்து ஜெயராம் கூறும்போது, என் வீட்டு வேலைக்காரி கறுத்து தடித்த தமிழச்சி, போத்து (எருமை) மாதிரி இருப்பாள்; அதைப்போய் எப்படி சைட் அடிக்க முடியும் ? ” என்றார்.இது அந்த தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌ல் ஒளிபரப்பானது. ஜெயரா‌மி‌ன் இ‌ந்த கருத்துக்கு திரையுலகினரும், மகளிர் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தனர். அத்துடன் பா.ம.க. வழக்கறிஞர் சமூக நீதி பேரவை மாநில பொறுப்பாளர் இந்திராணி, இது தொடர்பாக ஜெயராம் மீது எழும்பூர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் மனு‌த் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், த‌மி‌ழ் பெ‌ண்களை அவதூறாக பே‌சியதற்காக ஜெயரா‌மின் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீடு மற்றும் அவரது அலுவலகத்தின் மீது ‘நாம் தமிழர்’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்று தாக்குதல் நடத்தினர். இதில், அவரது கார் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. சுமார் 25 பேர் கொண்ட குழுவினர் இத்தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தாக்குதலில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்டதாகவும், 6 பேர் சரணடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே தமது பேச்சுக்காக ஜெயராம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.தமது தாய் தமிழ்ப் பெண் என்றும் ,தமது தாய் மொழி தமிழ் என்றும், தமிழ்ப் பெண்களை இழிவுப்படுத்துவது தமது தாயை இழிவுப்படுத்துவதற்கு சமமானது என்றும், நகைச்சுவையாகவே தாம் தொலைக்காட்சியில் அவ்வாறு கூறியதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

பொன்சேகா ரஸ்ய வடிவிலான இராணுவப் புரட்சியை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தாராம்.

ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தால் ரஸ்ய வடிவிலான புரட்சியொன்றை மேற்கொள்ள ஜெனரல் சரத் பொன்சேகா திட்டமிட்டிருந்தாக ஊடகத்துறை அமைச்சர் இன்று ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். நாட்டின் தலைவர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர்களான பசில் , கோத்தபாய ஆகியோரை கொலை செய்த பின்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு குழுக்களை ஜெனரல் பொன்சேகா சகல அரச திணைக்களங்களிலும் நியமித்திருந்தாகவும் அவர்களில் பலர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் அணு தொழில்நுட்ப வர்த்தகம்: யுஎஸ் நிறுவனங்களுக்கு ஒபாமா பச்சைக் கொடி

இந்தியா தனது அணுசக்தி நிலையங்களை சர்வதேச அணுசக்திக் கழகமான ஐ.ஏ.இ.ஏ. (International atomic energy agency-IAEA) சோதனையிட அனுமதித்துள்ளது.​ இதன் மூலம் ஐ.ஏ.இ.ஏவுடன் இந்தியா செய்துகொண்ட கண்காணிப்பு ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நேற்று அறிவித்தார். இதுதொடர்பான அறிக்கையை தனது வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கு ஒபாமா அனுப்பியுள்ளார். இதன் மூலம் இந்தியாவில் அணுசக்தி தொழில்நுட்பம் தொடர்பான வர்த்தகத்தில் அமெரிக்க நிறுவனங்கள் ஈடுபட ஒபாமா அனுமதியளித்துள்ளார். இந்தியா-​அமெரிக்கா இடையே கடந்த 2008ம் ஆண்டு அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.​ இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் இடையே அந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.​ ஆனால், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாமல் இருப்பதால்,​​ தனது அணுசக்தி நிலையங்களை சர்வதேச அணுசக்திக் கழகம் கண்காணிக்க இந்தியா அனுமதிக்க வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்றம் வற்புறுத்தியது. இதனால் அமெரிக்காவுடனான ஒப்பந்தம் அமலாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து சர்வதேச அணுசக்திக் கழகத்துடன் கண்காணிப்பு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.​ இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியாவின் ராணுவம் தவிர்த்த பிற அணுசக்தி நிலையங்களில் ஐ.ஏ.இ.ஏ. எந்த நேரமும் சோதனை நடத்தலாம். இந்த விதியை இந்தியா ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இந்திய அணு உலைகளில் ஐஏஇஏ ஆய்வுகளை ஆரம்பித்தது. நேற்று கூடங்குளம் அணு ஆராய்ச்சி மையத்துக்கு சர்வதேச விஞ்ஞானிகள் குழு வந்துள்ளதை 'தட்ஸ்தமிழ்' தெரிவித்தது. இதுவும் இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான். இந் நிலையில் தான் ஐ.ஏ.இ.ஏவுடன் இந்தியா செய்துகொண்ட கண்காணிப்பு ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவில் அணுசக்தி தொழில்நுட்பம் தொடர்பான வர்த்தகத்தில் அமெரிக்க நிறுவனங்கள் ஈடுபட ஒபாமா பச்சைக் கொடி காட்டிவிட்டார். எனினும் இந்திய-அமெரிக்க ஒப்பந்தத்தில் ஓரிரு அம்சங்களில் மட்டும் இன்னும் தீர்வு எட்டப்படாமல் உள்ளது.​ இவையும் தீர்க்கப்பட்டால் தான் அணுசக்தி ஒப்பந்தம் முழுமையாக அமலுக்கு வரும்.

மீள முடியுமா?

உலகப் பொருளாதாரத்துக்குத் தலைமை தாங்குகிறதோ இல்லையோ,​​ அதை வழிநடத்துவது என்னவோ அமெரிக்காதான்.​ சர்வதேச வர்த்தகமும்,​​ பங்குச் சந்தைகளும் அமெரிக்க டாலரின் மதிப்புக்கேற்ப அவ்வப்போது மாறுவதுதான் அதற்குக் காரணம்.​ அப்படியிருக்க பொருளாதார மந்தநிலை காரணமாக தேக்க நிலையில் இருந்த அமெரிக்கத் தொழில்துறைக்குப் புத்துயிர் ஊட்டவும்,​​ பொருளாதார நடவடிக்கைகளுக்குப் புதிய திசைவேகம் அளிக்கவும் அந்த நாட்டு பட்ஜெட்டை ஒரு கருவியாகப் பயன்படுத்தியிருக்கிறார் அதிபர் ஒபாமா. வேலை வாய்ப்புகளைப் பெருக்குவது,​​ அமெரிக்கத் தொழில்,​​ வர்த்தகத் துறைகளுக்கு முன்னுரிமை அளிப்பது,​​ ஏழை,​​ நடுத்தர மக்களின் துயரங்களைக் குறைக்கும் விதமாக,​​ ​ வரிச்சலுகைகள் உள்ளிட்ட சலுகைகளை அளிப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு புதிய பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறார். 1930-களில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவுக்குப் பிறகு இதுவரை இருந்திராத அளவுக்குப் பற்றாக்குறை பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார்.​ பற்றாக்குறை அளவு 1.56 டிரில்லியன் டாலர்களாகும்.​ மொத்த பட்ஜெட் மதிப்பு 3.83 டிரில்லியன் டாலர்களாகும்.​ ​(ஒரு டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி.​ ஒரு டாலருக்கு இப்போதைய சராசரி மதிப்பு சுமார் 46 ரூபாய்.) மொத்த பட்ஜெட் மதிப்பில் கிட்டத்தட்ட சரிபாதி பற்றாக்குறையாக இருக்கும் அளவுக்குப் பட்ஜெட் போடப்பட்டிருக்கிறது.​ லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும்,​​ அமெரிக்கப் பொருளாதாரத்துக்குத் தேவைப்படும் அடித்தள கட்டமைப்பு வசதிகளைச் செய்து தரவும்,​​ மின்சாரம் உள்ளிட்ட ஆற்றல்களைப் பெருக்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சந்திரனுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பி சோதனை நடத்தும் "நாசா'வின் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.​ இதற்குத் தேவைப்படும் கோடிக்கணக்கான டாலர்களை வேறு செலவுகளுக்குப் பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.​ அதேசமயம்,​​ இனி விண்வெளி ஆய்வுகளுக்காக நாசா நேரடியாகச் செலவழிப்பதற்குப் பதில் விண்வெளி வாகனங்கள்,​​ ஆய்வுக்கருவிகள் ஆகியவற்றை அமெரிக்காவின் தனியார் நிறுவனங்கள் மூலமே தயாரித்து வாங்கிக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ராணுவத்துக்கான செலவுகளைக் குறைக்கவோ,​​ மாற்றவோ முடிவு செய்யப்படவில்லை.​ அமெரிக்காவின் பெரிய தொழில் நிறுவனங்கள் ராணுவத் தளவாட உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.​ அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையே இந்த நிறுவனங்களின் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டுதான் வகுக்கப்படுகிறது என்றுகூட அரசியல் விமர்சகர்கள் கூறுவதுண்டு.​ எனவே அந்த நிறுவனங்களுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடிய முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.​ ​ ​ ​ ​ அரசுக்கு வேண்டிய வருவாயைப் பெருக்க,​​ பெரிய தொழில்துறைகளின் வருவாய் மீதும்,​​ ஆண்டுக்கு 2.5 லட்சம் டாலர்களுக்கு மேல் ஈட்டும் தனிநபர்கள் மீதும் கூடுதலாக வரி விதிக்கத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.​ ​ முதலாளித்துவப் பொருளாதாரத்தை ஏற்றுக்கொண்டுள்ள அமெரிக்க அரசால்,​​ அந்த முறையைக் கைவிடவே முடியாது.​ உலகின் தலைமைப் பதவியை வகிக்க வேண்டும் என்ற எண்ணம் காரணமாக சர்வதேச அரங்கில்,​​ தான் எடுக்கும் முடிவுகளுக்கு ஏற்ப கூடுதல் செலவுகளையும் தவிர்க்க முடியாது.​ இவ்விரு நிரந்தர அம்சங்கள் தொடரும்போது இப்படிப்பட்ட பட்ஜெட்தான் சாத்தியம்.​ ​ அதேவேளையில் வங்கித்துறையில் ஏற்பட்ட சரிவு,​​ நிதி நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி போன்றவற்றால் எதிர்காலத்தில் இந்த நிறுவனங்கள் திவாலாகாமல் காப்பது எப்படி என்ற வழிமுறைகளில் இனி அதிக கவனம் செலுத்தப்படக்கூடும். வெளிப்பணி ஒப்படைப்பு செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்குச் சலுகைகள் குறைப்பு,​​ வேலைவாய்ப்புகளை அதிகம் உருவாக்கும் நிறுவனங்களுக்கு ஊக்குவிப்பு என்ற அறிவிப்பும் ஏற்கெனவே வெளியாகியிருக்கிறது.​ அரசின் செலவுகளில் அதிகம் பலன் தராதவை என்று அனுபவப்பூர்வமாக உணரப்பட்டவற்றைக் குறைக்கவும்,​​ வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடியவற்றை அதிகப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நடவடிக்கைகளால் பலன் ஏற்படாது என்பவர்களும் இவை போதாது என்பவர்களும் உண்டு.​ ஆனால் இப்போதைக்கு முடிந்தது இவைதான் என்று அமெரிக்க அரசின் பொருளாதார ஆலோசகர்கள் தீர்மானித்திருப்பதையே பட்ஜெட் எதிரொலிக்கிறது. பராக் ஒபாமா அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அமெரிக்காவில் மட்டும் அல்ல,​​ உலக அளவிலும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.​ அமெரிக்கர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவார்,​​ ஆப்பிரிக்க,​​ ஆசியக் கண்டங்களில் உள்ள வறிய நாடுகளுக்கு உதவுவார் என்றெல்லாம் பேசப்பட்டது.​ இராக்,​​ ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் அமெரிக்க ராணுவம் தலையிட்டதால் ஏற்பட்ட நெருக்கடிகளைக் குறைப்பார் என்றும் கூறப்பட்டது.​ இவை எதுவுமே நடைபெறவில்லை. அவர் பதவிக்கு வந்து ஓராண்டு முடிவடைந்ததை ஒட்டி மக்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில் அவருடைய செல்வாக்கு வெகுவாகச் சரிந்திருப்பது தெரியவந்தது.​ இந்த பட்ஜெட் தாற்காலிகமாக அதிபர் ஒபாமாவின் செல்வாக்குச் சரிவைச் சற்றுத் தடுத்து நிறுத்துமே தவிர,​​ நிரந்தரத் தீர்வாக இருக்குமா என்பது கேள்விக்குறி. அமெரிக்காவின் மிகப்பெரிய பலவீனம் சந்தைப் பொருளாதாரத்தைத் தாரக மந்திரமாகக் கொண்டிருப்பதுதான்.​ மக்களின் ஆடம்பர மோகத்தையும் திட்டமே இல்லாமல் செலவழிக்கும் மனோபாவத்தையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் ​ கொள்ளை லாபம் ஈட்டும் வர்த்தக நிறுவனங்கள்தான் அமெரிக்க அரசின் நிதிக் கொள்கையைத் தீர்மானிக்கின்றன.​ குடியரசுத் தலைவரும் ஆட்சியும் மாறினாலும்,​​ தனியார் முதலாளிகளுக்குச் சாதகமான பொருளாதாரக் கொள்கையை அமெரிக்காவில் மாற்றிவிட முடியாது என்பதுதான் யதார்த்த நிலை.​ ​ சேமிப்பது என்கிற எண்ணமே இல்லாமல் மக்களைச் செலவழிக்கத் தூண்டும் நுகர்வுக் கலாசாரம் தொடரும்வரை அமெரிக்கா தனது நிதி நெருக்கடியிலிருந்து முற்றிலுமாக மீள முடியுமா என்பது சந்தேகம்தான்.

இறுதியில் நானும் விமானம் ஏறினேன் ..

உவிந்து குருகுலசூரிய கொழும்பிலிருந்து பணியாற்றிய ஒரு சிங்கள ஊடகவியலாளர். சுதந்திர ஊடகவியலாளர் சங்கத்தின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவரான அவர் ஊடகத்துறையை தனித்து ஒரு ஊதியம் பெறும் தொழில் துறையாகக் கருதாமல், ஊடக அறம், கருத்துச் சுதந்திரம் போன்ற விடயங்களில் அதிக அக்கறை கொண்டு செயற்படுபவர். கடந்த வருடம் சிறிலங்காவில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் அதிகரித்துச் செல்லவே, கொழும்பிலிருந்து வெளியேறி பிரித்தானியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். சிறிலங்காவில் ஊடகத்துறையினதும், ஊடகவியலாளர்களது தற்போதைய நிலைபற்றி அவர் மனந்திறந்து எழுதியவற்றை சுவீடனைச் சேர்ந்த FOJO என்ற ஊடக அமைப்பு அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதன் தமிழாக்கத்தை இங்கு பிரசுரிக்கிறோம். நான் கொழும்பில் விமானம் ஏறியதன் பின்னர், என்னைப்போன்று சிறிலங்காவிலிருந்து தப்பிவர முனைந்த எனது ஊடகத்துறை நண்பன் ஒருவரை அரசாங்கம் கைது செய்தது என்பதனை நான் லண்டனுக்கு வந்து சேர்ந்த பின்னர்தான் அறிந்தேன். 2000ம் ஆண்டில் எனது ஊடகத்துறை நண்பன் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நான் லண்டனுக்கு வந்தேன். அவர் கொல்லப்படுவதற்கு முன்னர் நான் அவருடன் இணைந்து ஒரு விவகாரம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வந்தேன். எனக்கு பிரித்தானிய அரசு நிரந்தர வதிவிடவுரிமையை தந்திருந்தது. இருந்தாலும் ஒன்றரை வருடங்கள் கழித்து நிலமை சீரானதால் நான் நாடு திருப்பினேன். இப்போது ஒன்பது வருடங்கள் கழித்து மீள வர வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளது. ஒன்பது வருடம் கழித்து, மீள லண்டனுக்கு வந்துள்ளேன். எனக்கு என்ன நடந்தது என்று சிந்திக்கிறேன், கடந்த வருடம் ஜனவரியில் நான் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு 12 நாட்களுக்கு முன்னர் எனது நல்ல நண்பரான லசந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்டார். நான் அவர் இறந்தபோது அவருடன் மருத்துவமனையில் இருந்தேன். இக்கொலையால் நான் உறைந்து போன நிலையில் இருந்தேன். என்னால் சிந்திக்க முடியவில்லை. என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. உணர்வுகள் மரத்துப்போன நிலையில் இருந்தேன். எப்போது நான் சாப்பிடவேண்டும் எப்போது உறங்க வேண்டும் என்பதனை மற்றவர்களே எனக்குச் சொல்லிதர வேண்டியிருந்து. நான் கவலைப்படவில்லை ஆனால் என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. பத்து மாதங்கள் இப்படியே கழிந்தன. லசந்த விக்கிரமதுங்க போன்ற துணிச்சல்கார ஊடகவியலாளர்கள் வேறெவரையும் நான் காணவில்லை. நான் சுதந்திர ஊடகவியலாளர் அமைப்பின் செயலாளராக இருந்தபோது, நாங்கள் இருவரும் சிறிலங்காவில் ஊடக ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடினோம். கடந்த நான்கு வருடங்களில், பத்தொன்பது ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். டசின் கணக்கில் ஊடகவியலாளர்கள், மிரட்டலுக்கும், அடக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்., துன்புறுத்தப்பட்டுள்ளார்கள். உளவியல் ரீதியாக ஊடகவியலாளர்களை பயமுறுத்தி வைப்பது தொடர்ந்த வண்ணமுள்ளது. எதை பற்றி எழுதியது என்பதல்ல அங்குள்ள பிரச்சனை, எதைப்பற்றி எழுதக்கூடாது என்பதுதான் முக்கிய பிரச்சனையாக உள்ளது. எதைப் பற்றியெல்லாம் எழுதக்கூடாது என எங்களுக்கு சொல்லப்பட்டது. உதாரணத்துக்கு, ஐனாதிபதியைப்பற்றி, அல்லது பாதுகாப்புச் செயலாளர் குறித்து என்ன விடயங்களை நாங்கள் எழுதக்கூடாது என எங்களுக்குச் சொல்லப்பட்டது. நான் இதனை எழுதிக் கொண்டிருக்கும் போது, எனது இன்னொரு நண்பன் கடத்தப்பட்டுள்ளான், ஒரு பத்திரிகை ஆசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார், பிறிதொரு பத்திரிகை ஆசிரியர் தலைமறைவாகி விட்டார். நான் இப்போது திரும்பவும் இரவுகளை நித்திரையின்றிக் கழிக்கிறேன். நாங்கள் எதற்காகப் போராடுகிறோம் என சிந்தித்துப் பாரக்கிறேன். நாங்கள் ஊடகங்களின் உரிமையாளர்களின் நலனை பாதுகாப்பதற்காக போராடுகிறோமா? ஏனெனில் நாங்கள் ஒரு புதினப்பத்திரிகையை வாசிக்கும் போது எவற்றை வாசிக்கிறோம்? எல்லாமே பக்கச்சார்பான செய்திகள்! பத்திரிகை உரிமையாளர்கள் ஊடகவியலாளர்களுக்கு போதிய ஊதியம் வழங்காமையால், தாங்கள் எழுதிச் சம்பாதிப்பதை விடவும், எழுதாமல் விடுவதனால் அதிகம் சம்பாதிப்பதாக. அங்குள்ள ஊடகவியலாளர்கள் சொல்கிறார்கள். ஊடகவியலாளர்கள் மௌனமாக இருப்பதற்காக அரச அதிகாரிகள் அவர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள். சிறிலங்காவில், ஊடகத்துறையிலும் ஊழல் மலிந்து காணப்படுகிறது. ஊடகவியலாளர்களுக்கான தொழிற்சங்கங்களும் ஊழல் நிறைந்த அமைப்புகளாகவே இருக்கின்றன. செய்தியாளர்களுக்கு சுதந்திரமோ, செய்திவெளியிடுவதில் ஜனநாயகம் கடைப்பிடிப்தோ அங்கு கிடையாது. ஊடக சுதந்திரத்திற்காக போராடும்போது அது சமூக பொறுப்புணர்வுடனானதாக அமையவேண்டும். இல்லாவிடில் சீரான ஊடகத்துறையை எவ்வாறு ஏற்படுத்த முடியும்? ஒரு முழுமையான அணுகுமுறையை நாம் கடைப்பிடிக்க வேண்டும். பல விடயங்களில் நாம் மாறவேண்டும். அந்த மாற்றம் ஊடகவியலாளர்களான எங்களிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும்.

இலங்கையில் உண்மையான சுதந்திரம் இருக்கின்றதா?

இலங்கையின் சுதந்திரம் குறித்து மதகுருமார்கள், விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் அதிருப்தி கொண்டிருப்பதாக Asia News தெரிவித்துள்ளது. இலங்கையின் 62வது சுதந்திர தின நிகழ்வுகளை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி பகிஸ்கரித்துள்ள நிலையில், சுதந்திரம் என்ற சொல்லின் உண்மையான அர்த்தம் குறித்து மதகுருமார்கள், விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் போன்றவர்களிடம் Asia News கருத்துக் கேட்டுள்ளது. 'பேச்சுச் சுதந்திரம்' மற்றும் 'அனைவருக்கும் சமவுரிமை' போன்ற உரிமைகள் இல்லாவிடத்து 'என்ன சுதந்திரம்?' என இவர்கள் கேள்வி எழுப்பியுள்ளதாக Asia News தெரிவித்துள்ளது. 'ஒரு நபரின் அரசியல், பொருளாதார, கலாச்சார மற்றும் பேச்சுரிமைகளை உறுதிப்படுத்துவதே சுதந்திரம்' என வணக்கத்துக்குரிய மாடம்பஹம அசாகீ தேரோ (Madampagama Assagi Thero) தெரிவித்திருப்பதாக இச்செய்தித்தளம் குறிப்பிட்டுள்ளது. 'இலங்கையில் உண்மையான சுதந்திரம் இருக்கின்றதா?' எனக் கேள்வி எழுப்பிய கத்தோலிக்க மதகுருவான ஷெல்டன் பெர்ணான்டோ, 'அனைவரும் சமமாக நடாத்தப்படுவதே சுதந்திரம்' எனக் குறிப்பிட்டுள்ளதுடன், இலங்கையில் நடைபெறும் சம்பவங்கள் உண்மையான சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது' எனத் தெரிவித்துள்ளார். 'தேர்தல் பிரச்சாரக் காலத்தில் அரசாங்கம் எப்படி நியாயமற்ற, வெட்கக்கேடான முறையில் தனது அதிகாரத்தைப் பிரயோகித்தது என்பதற்கு தாங்கள் அனைவரும் சாட்சியங்கள்' என Platform for Freedom என்ற அமைப்பைச் சேர்ந்த பெர்ணான்டோ பிரிட்டோ கூறியுள்ளார். போரின் வலிகளை யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் நினைவு கூர்ந்ததாக தொவித்துள்ள Platform for Freedom, ஜனாதிபதித் தேர்தல் தமிழ் மக்களின் மனங்களில் ஆழ்ந்த அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக கொழும்பில் வாழ்கின்ற கோபிதா என்ற பெண்மணி கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், தமிழ் மக்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்கப்படமாட்டாது என சுதந்திர தின நிகழ்வில் ஆற்றிய உரையின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு சிறீலங்கா ஒரு தவறான வழிகாட்டி: த ரைம்ஸ்

ஏற்படுத்தும் என பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த ரைம்ஸ் நாளேடு தெரிவித்துள்ளது. அதன் தமிழ் வடிவம் வருமாறு: உலகின் நிகழ்வுகளில் பொதுநலவாய அமைப்பு முக்கிய பங்கை வகிப்பது மிகவும் அரிதானது. ஆனால் கடந்த வாரம் சிறீலங்காவில் நடைபெற்ற அரச தலைவருக்கான தேர்தலில் அதற்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. சிறீலங்காவில் நடைபெற்ற தேர்தலை கண்காணிப்பதற்கு அவதானிப்பாளர்களை அனுப்பிய பிரதான அனைத்துலக அமைப்பு அது மட்டுமே. மகிந்தா ராஜபக்சாவுக்கோ அல்லது ஜெனரல் பொன்சேகாவுக்கோ சார்புநிலை எடுக்காத அமைப்பு அது என கருதப்பட்டது. தேர்தலை கண்காணிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றிற்கு அழைப்புக்கள் அனுப்பப்பட்ட போதும் அவர்கள் அதில் கலந்துகொள்ளவில்லை. எனவே தேர்தல் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கை பொதுநலவாய அமைப்பின் வசம் சென்றது. வேறு அனைத்துலக அமைப்புக்களோ, அல்லது அரசுகளோ தேர்தல் தொடர்பான நீதியையும், சுதந்திரமான ஊடகங்கள் மற்றும் எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் மீதான வன்முறைகளையும் வெளியில் தெரிவிப்பதில் பங்காளர் ஆகவில்லை. முன்னாள் ஜமேக்கா வெளிவிவகார அமைச்சர் கே டி நைற் தலைமையில் பொதுநலவாய நாடுகளின் 5 கண்காணிப்பாளர்கள் அங்கு சென்றிருந்தனர். ஆனால் அவர்கள் இந்த மாதம் நடுப்பகுதியில் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கை தொடர்பில் பல நெருக்கடிகளை சந்தித்துள்ளனர். இறுதி முடிவுகளை மாற்றுவதற்கு போதுமானதல்ல என்ற போதும், அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்தியுள்ளதாக அவர்கள் ஏற்கனவே தமது முடிவுகளை தெரிவித்துள்ளனர். குறிப்பாக அரச ஊடகங்கள் அவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளன. பொன்சேகா வாக்களிக்கவில்லை, அவர் வாக்காளராக தன்னை பதிவுசெய்யவில்லை, வாக்குகள் எண்ணப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் பொன்சேகா தங்கியிருந்த விடுதி இராணுவத்தினரால் சுற்றிவழைக்கப்பட்டது இவை எல்லாவற்றையும் அவர்கள் கருத்தில் எடுத்துள்ளனர். பொன்சேகாவின் அலுவலகத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட தேடுதல்களுக்கும், அவரின் பாதுகாப்புக்கள் அகற்றப்பட்டதற்கும், இரண்டு ஊடகங்கள் மூடப்பட்டதற்கும், பெருமளவான ஊடகவியலாளர்கள் துன்புறுத்தப்பட்டதற்கும் அவர்கள் சாட்சி. ஆனால் கேள்வி என்னவெனில் இது ஒரு அரசியல் முறைகேடு என அவர்கள் கண்டணங்களை முன்வைப்பார்களா? என்பது தான். இராணுவப்புரட்சி ஏற்படப்போவதாக தான் சந்தேகப்பட்டதாக அரசு தன்னை நியாயப்படுத்த முயன்றாலும் அதனை ஏற்றுக்கொள்வதும், உறுதிப்படுத்துவதும் கடினமானது. மகிந்தா அதனை பின்னர் சரிசெய்து கொள்ளலாம். ஆப்கானிஸ்த்தானில் நடைபெற்ற தேர்தலை முன்வைத்து அவர் மேற்குலக நாடுகளை பேசவிடாது செய்துவிடலாம். ஐக்கிய நாடுகள் சபையில் தனக்கு சீனாவினதும், ரஸ்யாவினதும் ஆதரவுகள் தற்போதம் உண்டு என்பதை அவர் அறிவார். சிறீலங்கா மீதான போர் குற்ற விசாரணைகளை அவர்கள் தான் தடுத்தவர்கள். ஆனால் பொதுநலவாய அமைப்பு வேறுபட்டது. அது 1971 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் முன்மொழியப்பட்ட கொள்கைகளை கொண்டது. உறுப்பு நாடுகள் ஜனநாயக மற்றும் ஊடகச்சுதந்திர நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற 1991 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட கொள்கைகளையும் உடையது. இந்த இரண்டு பிரகடனங்களும் உறுப்பு நாடுகள் சுதந்திரமானதும், ஜனநாயகமானதுமான அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றன. கடந்த வருடம் நடைபெற்ற அதன் 60 ஆவது ஆண்டு விழாவில் மனித உரிமைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் உலகளாவிய ரீதியில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. சுதந்திர, தகுதிவாய்ந்த, காத்திரமான ஊடகங்களின் ஊடாக தகவல்களையும், கருத்துக்களையும் பரிமாறிக்கொள்வதாகவும் அவர்கள் உடன்பட்டிருந்தனர். ஆனால் சிறீலங்கா அரசு இந்த விதிமுறைகளை முற்றாக மீறிவிட்டதாக கடுமையான கருத்துக்கள் எழுந்துள்ளன. அரச சொத்துக்கள் முறைகேடக பயன்படுத்தப்பட்டுள்ளன, எதிர்க்கட்சிகள் துன்புறுத்தப்பட்டுள்ளன, அவர்கள் சுதந்திரமாகவும், ஜனநாயக வழிகளிலும் அரசியல் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. தேர்தலுக்கு முன்னர் கூட சிறிலங்கா அரசு அனைத்துலக மனித உரிமை விதிகளை மீறியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருந்தது. ஜி.எஸ்.பி பிளஸ் வர்த்தக வரிச்சலுகையை பெறுவதற்கு மனித உரிமைகளை நிலைநாட்டுதல் அவசியம். 2006 ஆம் ஆண்டில் இருந்து 14 ஊடகவியலாளர்களும், பணியாளர்களும் சிறிலங்காவில் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் அதற்கு காரணமான ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை. பெருமளவான ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளனர். எனவே தான் 2011 ஆம் ஆண்டு சிறீலங்காவில் நடைபெற இருந்த பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களின் கூட்டத்தை பிரித்தானியா தடுத்துள்ளது. சிறீலங்கா மீதான மேலதிக நடவடிக்கைகள் கண்காணிப்பாளர்களின் அறிக்கையை பொறுத்தே அமையும். அதற்கான நடவடிக்கை பொதுநலவாய நாடுகளின் அமைச்சர்களுக்கான நடவடிக்கை குழுவின் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும். 1995 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த குழு தமது ஜனநாயக கொள்கைகளில் எற்பட்ட முக்கியமான வன்முறைகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ளும். 1995 ஆம் ஆண்டு அரசியல் தலைவர் கென் சரோ-விவா கொல்லப்பட்டதை தொடர்ந்து நையீரியா பொதுநலவாய அமைப்பில் இருந்து நீக்கப்பட்டது. 1999 ஆம் ஆண்டு ஜெனரல் முஷ்ராஃப் இராணுவப்புரட்சி மூலம் பாகிஸ்த்தானில் பதவியை கைப்பற்றியபோது பாகிஸ்த்தான் அதில் இருந்து நீக்கப்பட்டது. வேறுபட்ட காலப்பகுதிகளில் சிரோலியோன், சிம்பாபே, பிஜி ஆகிய நாடுகளும் நீக்கப்பட்டிருந்தன. ஆனால் உண்மை என்னவெனில் சிறீலங்காவை நீக்குவது கடினமானது, ஏனெனில் சிறீலங்கா இராணுவப்புரட்சி என்ற காரணத்தை முன்வைத்துள்ளதுடன், மேலும் தீர்மானங்கள் உறுப்பு நாடுகளுடன் விவாதிக்கப்பட்ட பின்னரே எடுக்கப்படுவதுண்டு. சுழற்சிமுறையில் தெரிவுசெய்யப்படும் 9 நாடுகளில் சிறீலங்காவும் ஒன்று. எனினும் சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கடந்த நவம்பர் மாதம் வரையிலும் அவர்கள் கவலைகளை கூட வெளியிடவில்லை. பொதுநலவாய நாடுகளின் அமைச்சர்களுக்கான நடவடிக்கை குழுவில் தற்போது அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பங்களாதேசம், கனா, ஜமேக்கா, மலைதீவு, நமீபியா, வனாடு, திரினிடாட், ரொபாகோ ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஆகவே கடந்த இரண்டு வருடங்களில் முதல் தடவையாக ஆசியாவின் மிகவும் பழமைவாய்ந்த ஜனநாகயத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் ஜனநாயக விரோதங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் சந்தர்ப்பம் பொதுநலவாய அமைப்புக்கு கிடைத்துள்ளது. பொதுநலவாய அமைப்பு நடவடிக்;கை எடுத்தால் அது சிறீலங்காவுக்கு வருத்தமானது. ஆனால் ஜனநாயக சீர்கேடுகளை கொண்டுள்ள ஏனைய பொதுநலவாய உறுப்பு நாடுகளுக்கும் அது நெருக்கடிகளை கொடுக்கலாம். நடவடிக்கை எடுப்பதற்கு தவறினால், அது பொதுநலவாய நாடுகளின் முதன்மை கொள்கைகளின் தரம் குறைந்துள்ளதாக கொள்ளப்படுவதுடன், ஏனைய உறுப்பு நாடுகளுக்கும் அது தவறான வழிகாட்டல்களை ஏற்படுத்தும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர் கைது தொடர்பில் அவுஸ்திரேலிய பொலிஸாருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத சட்டத்தின் கீழ் தமிழர் ஒருவர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டமை தொடர்பில், அந்த நாட்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிட்னியில் கணக்காளராக பணியாற்றிய ஆறுமுகம் ரஜீவன் என்ற 43 வயதுடைய தமிழரை, கடந்த 2007 ஆம் ஆண்டு ஜுலை மாதம் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நீதிபதி கோலன் தலைமையில் நடைபெற்றது.கைது செய்யப்படும் போது, தமது பொறுப்புக்களுக்கு மேலதிகமாக பொலிஸ் அதிகாரிகள் செயற்பட கூடாது எனவும், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய கூடாது எனவும் அவர் எச்சரித்துள்ளார். கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையின் போது நிதி வழங்கிய தமிழர்கள், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர். எனினும் அந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல், அவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்படுகின்றமை சட்டத்துக்கு முரணானது என அவர் தெரிவித்துள்ளார்

பயங்கரவாத நாடுகள் பட்டியலில் வடகொரியா இல்லை : ஒபாமா

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் பட்டியலில் வடகொரியாவை வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அமெரிக்க அதிபர் பராக ஒபாமா தெரிவித்துள்ளார்.பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் எவை என்பது குறித்த அமெரிக்காவின் பட்டியலில் வடகொரியாவை மீண்டும் இடம்பெறச் செய்ய வேண்டும் என அதிபர் பராக் ஒபாமாவை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தி வந்தனர். ஆனால் அப்பட்டியலில் வடகொரியாவை வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அமெரிக்க நாடா. உமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் ஒபாமா தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த 1987 ஆம் ஆண்டில் விமானம் ஒன்றை வடகொரியாவின் உளவு ஏஜெண்ட் குண்டு வைத்து தகர்த்ததில், அதில் பயணித்த 115 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, 1988 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மேற்கூறிய பட்டியலில் வடகொரியா இடம் பெற்றது. ஆனால் கடந்த 2008 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபராக இருந்த புஷ் அந்த பட்டியலிலிருந்து வடகொரியாவை நீக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

லண்டன் நிதித்துறையில் 48 ஆயிரம் பேர் வேலையிழப்பு

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் லண்டனில் 17000 மூத்த நிதித்துறை அலுவலர்கள் உட்பட 48000 பேர் பதவி இழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள முன்னணி நிதி நிறுவனங்களில் இருந்த மூத்த அதிகாரிகளில் 10 சதவீதத்தினர் அதாவது 17000 பேர், இன்சால்வென்ஸி, விஆர்எஸ் போன்ற பல்வேறு காரணங்களால் வேலை இழந்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை தனிப்பட்ட நபர்களைச் சார்ந்து இயங்கும் நிறுவனங்களின் அடிப்படையில் தரப்பட்டுள்ளதாகவும், பெரும் நிறுவனங்களில் பதவி இழந்த பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இதில் சேர்க்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. நிதித் துறையில் மட்டுமே இந்த இரு ஆண்டுகளில் 48000 அதிகாரிகள் வேலை இழந்துள்ளனர். அதே நேரம், பிரிட்டனில் இன்னும் பொருளாதார மீட்சிக்கான அறிகுறி தெரியவில்லை என ஐஎம்ஏஎஸ் கார்ப்பரேட் அட்வைஸர்ஸ் தெரிவித்துள்ளது.

துபாய் கடலில் செயற்கை தீவுகள்

துபாய் அருகே கடலில் புதிதாக தீவுகள் அமைக்கும் பணி 2001ல் துவக்கப் பட்டது. பாமாயில் மரம் போன்று அமைக்கப்பட்டுள்ளதற்கு ஜுமாரியா என்றும் "பாம்' தீவு எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இதற்காக கடலில் இருந்தும், வேறு இடங்களில் இருந்தும் ஐந்து கோடி கியூபிக் மீட்டர் அளவு மணல் சேகரிக்கப் பட்டு இங்கு கொட்டப் பட்டது.பெர்சியன் கடலில் அமைந்துள்ள இந்த தீவு. கடல் மட்டத்தை விட உயரமாக அமைக்கப் பட்டுள்ளது.அடுத்ததாக 2003ல் பணி துவங்கி 2008ல் குட்டி, குட்டியாக "உலக தீவு' என 300 தீவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.இதற்காக 32 கோடி கியூபிக் மீட்டர் மணல், 3.7 கோடி டன் பாறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த தீவுகளில் கடல் நீர் புகாதவாறு பாதுகாப்பு அமைப்பு உள்ளது

விவாகரத்து கேட்டு 12 வயது சிறுமி வழக்கு

சவுதி அரேபியாவில், 12 வயது சிறுமி ஒருவர், அவரது 80 வயது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி தொடர்ந்த வழக்கை, தீர்ப்புக்கு வருவதற்கு ஒரு நாள் முன்னதாக அவர் தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளார். சுமார் 22,000 டாலர்கள் பணத்துக்காக இந்த திருமணத்தை ஏற்பாடு செய்த தனது தந்தையை மீற விரும்பவில்லை என்று அவர் நீதிமன்றத்தில் கூறியதாக, சவுதி அரேபியாவிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. குழந்தைத் திருமணங்கள் மிகவும் அதிகரித்து வரும் அளவில் சர்ச்சைக்குரியதாக மாறிவரும் சவுதி அரேபியாவில், இந்த வழக்கு குறிப்பிடத்தக்க அளவு கவனத்தை ஈர்த்துள்ளது.

யாழில் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் மற்றும் பலக்லைக்கழகை அனுமதி ஆகியவைற்றை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் மற்றும் பலக்லைக்கழகை அனுமதி ஆகியவைற்றை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களை விட பல மடங்கு குறைவான வாக்களார்களே வாக்களித்துள்ளதாகவம் இதனால் அந்த மாவட்டத்தின் புதிதான சனத்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸநாயக்கா அறிவித்துள்ளார். இதன் மூலம் யாழ் மாவட்டத்தின் சனத்தொகை கணிசமாக குறைவடைந்துள்ளமை ஆவணப்படுத்தப்படவுள்ளது. இதனை அடுத்து பாராளுமன்ற பிரதிநிதித்துவம் சனத்தொகை பரம்பலுக்கு அமைவாக குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை புதிய சனத்தொகைக்கு அமைவாக பல்கலைக்கழைகத்திற்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வெளிமாவட்டங்களில் இருந்து சிங்கள மாணவர்கள் யாழ் பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரியவந்துள்ளது

பிரிவுகளை சந்தித்துள்ள சிறீலங்கா ஒற்றுமையை தேடுகின்றது

சிறீலங்காவில் நடைபெற்ற அரச தலைவர் தேர்தலைத் தொடர்ந்து அங்கு பிரிவினைகள் மேலும் அதிகரித்துள்ளன. ஆனால் தற்போது தான் சிறீலங்கா தனது ஒற்றுமையை தேடுகின்றது என 'த அல்ஜசீரா' செய்தி நிறுவனம் தன் செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளது. அதன் தமிழ் வடிவம் வருமாறு: சிறீலங்காவின் நெருக்கடிகளை குறைப்பதற்குச் சிறுபான்மை தமிழ் மக்கள் உதவ வேண்டும் என சிறீலங்கா அரச தலைவர் தனது சுதந்திரதின உரையில் கேட்டுக்கொண்டுள்ளார். உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர் நடைபெற்ற முதலாவது சுதந்திரதினம் இதுவாகும். கண்டியில் உரையாற்றிய மகிந்தா தமிழ் மக்களுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்கப்படமாட்டாது எனத் தெரிவித்துள்ளதுடன், தமிழ் மக்கள் அரசுடன் இணைந்து இயங்கவேண்டும் என தெரிவித்துள்ளார். கலந்துரையாடல்கள் மூலம் எமது பிரச்சனைகளை நாமே தீர்த்துக்கொள்ள வேண்டும் என அவர் தமிழ் மொழியில் தெரிவித்திருந்தார். ஆனால் மகிந்தாவின் இந்த கோரிக்கையை நிராகரித்துள்ள பிரித்தானியா தமிழ் பேரவையின் மூத்த உறுப்பினர் சுரேன் சுரேந்திரன், தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். மகிந்தா இதனை எப்போதும் தெரிவித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். மிகவும் மோசமான, இனவேற்றுமை கொண்ட அரச தலைவராக மகிந்தா தன்னை உறுதிபடுத்தியுள்ளார். தமிழ் மக்கள் சிறீலங்காவின் சுதந்திரதினத்தை கொண்டாடவில்லை. வடக்கு – கிழக்கில் அவர்கள் மகிந்தவுக்கு வாக்களிக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இரண்டாவது தடவை அரச தலைவராக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் மகிந்த பங்குபற்றிய முதலாவது வெளிப்படையான நிகழ்வு இதுவாகும். ஆனால் அவருக்கு எதிராக போட்டியிட்ட பொன்சேகாவை அவர் தாக்கி வருகின்றார். சுதந்திரதினத்திற்கு முன்னர் 5,000 இற்கு மேற்பட்ட பொன்சேகாவின் ஆதரவாளர்கள் கொழும்பில் உள்ள வீதிகளில் இறங்கி தேர்தல் முடிவுகளுக்கு எதிராக பேரணி ஒன்றை நடத்தியிருந்தனர். அரச தலைவரை தேர்ந்தெடுக்கும் மக்களின் உரிமைகளை மகிந்தா கொள்ளையடித்துள்ளதாக பொன்சேகா அங்கு பேசும் போது தெரிவித்திருந்தார். அவர் உரையாற்றும் போது அவருக்கு ஆதரவாக அளிக்கப்பட்டு பின்னர் எரிந்த நிலையில் குப்பைத் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட வாக்காளர் அட்டைகளையும் காண்பித்தார். என்ன விலை கொடுத்தாவது உங்களின் உரிமைகளை நாம் பெற்றுத்தருவோம். திருடிய வெற்றியை கொண்டாட நாம் அவர்களை அனுமதிக்கப்போவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஆனால் தேர்தல் முடிவுகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை தேர்தல் ஆணையாளர் தயானந்தா திஸாநாயக்கா மறுத்துள்ளார். தேர்தலுக்கு முன்னர் பிரச்சாரங்களின் போது நடைபெற்றவை தொடர்பில் நான் நிறைவடையவில்லை, ஆனால் தேர்தல் தினம் அமைதியாக இருந்ததுடன் முடிவுகளும் உண்மையானவை என அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்ட உள்ளூர் மற்றும் அனைத்துலக கண்காணிப்பாளர்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்ட காலம் வன்முறை மிக்கதாக இருந்ததாக தெரிவித்துள்ளனர். அதன்போது 5 பேர் கொல்லப்பட்டிருந்தனர். ஆனால் தேர்தல் தினம் அமைதியாக இருந்ததாகவும், சிறு சம்பவங்களே நடைபெற்றதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்பிரல் மாதம் மேற்கொண்டு அதிகாரத்தை மேலும் உறுதிப்படுத்த மகிந்த முயன்று வருகின்றார். மகிந்தாவின் அடுத்த 6 வருடங்களுக்கான பதவிக்காலம் இந்த வருடம் நவம்பர் மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக உயர் நீதிமன்றம் கடந்த புதன்கிழமை தெரிவித்துள்ளது. மகிந்தா இரு வருடங்களுக்கு முன்னர் தேர்தலை நடத்தியிருந்தார். ஊடகத்துறையினர் மீது வன்முறைகள் மேற்கொள்ளப்படுவதாக மகிந்தா அரசு மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. தேர்தலின் பின்னர் பல இணையத்தள ஊடகங்கள் மீது தடைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஒரு ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டுள்ளார், ஒருவர் காணாமல் போயுள்ளார். ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். பலருக்கு கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது. தற்போது அரச தலைவர் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார், ஆனால் மிக அதிகளவிலான குற்றச்சாட்டுக்களுக்கு அரசு உட்பட்டு வருகின்றது என நியூயோர்க்கை தளமாக கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியா பிராந்திய பணிப்பாளர் பிராட் அடம்ஸ் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு மறுநாள் சில அதிகாரிகள் தமது அதிகாரங்களை தவறாக பயன்படுத்த முனைந்திருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். மகிந்தா அரசு 14 மூத்த இராணுவ அதிகாரிகளை பதவி விலக்கியுள்ளது. அவர்கள் பொன்சேகாவின் ஆதரவாளர்கள் என அரசு கூறுகின்றது. அவர்களால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னாள் இராணுவ அதிகாரிகள் 15 பேர் உட்பட 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அரச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை பொன்சேகாவின் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போதும் பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். டசின் கணக்கான படை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரசுக்கு சார்பானவர்கள் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். தேர்தலுக்கு மறுநாளில் இருந்து பொன்சேகா மீதும் அவரின் ஆதரவாளர்கள் மீதும் அரசு பல குற்றங்களை சுமத்தி வருகின்றது. அவர்கள் அரச தலைவரை கொலை செய்ய முயன்றதாகவும், இராணுவப்புரட்சியை மேற்கொள்ள முயன்றதாகவும் அரசு குற்றம் சுமத்தியுள்ளது. ஆனால் தேர்தல் முடிவுகளை நீதிமன்றத்தின் மூலம் பெறப்போவதாக பொன்சேகா தெரிவித்து வருகின்றார். ஆனால் அதற்கான செயல்திட்டங்களை அவர் இன்றுவரை ஆரம்பிக்கவில்லை. மகிந்த நேர்மையாக வெற்றிபெற்றிருந்தால் ஏன் என்னை கண்டு அஞ்சுகிறார்? ஏன் எங்களின் சுதந்திரமாக நடமாட்டங்களை தடுக்கிறார். ஏன் எனது ஆதரவாளர்களை கைது செய்கிறார்? இந்த கேள்விகளை அவர் கடந்த புதன்கிழமை நடைபெற்ற பேரணியில் கேட்டிருந்தார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 மணிநேரத்தில் தமிழர் தாயகப்பகுதிகளில் 07 படுகொலைகள்

கடந்த 24 மணிநேரத்தில் தமிழர் தாயகப்பகுதிகளில் இரு தமிழர்கள் உள்ளிட்ட 07படுகொலைகள் நடந்தேறியுள்ளன.தமிழர்தாயகபகுதிகளான வவுனியா யாழ்ப்பாணம் அம்பாறை மாவட்டங்களில் இரண்டு தமிழர்கள் உள்ளிட்ட 07 படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. நேற்று வவுனியாவில் தமிழ்ப்பெண் உள்ளிட நால்வர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.வவுனியா நெளுக்குளம் பிரதேசத்தில் இரும்புக்கம்பியால் தாக்கி சிங்கள மக்கள் மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. இதில் காயம் அடைந்த ஒருவர் அனுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.சிங்களக்குடியிருப்புக்களுக்கு அருகில் உள்ள நெளுக்குளம் பகுதியில் இடம்பெற்ற இக்கொலைச் சம்பவத்தினைத் தொடர்ந்து பிரதேச மக்கள் அச்சம் அடைந்துள்ளார்கள். இதேவேளை வவுனியயா புளியங்குளம் பகுதியில் பெண் ஒருவர் மர்மமான முறையில் படுகொலைசெய்யப்பட்டுள்ளார்.ஏ09 வீதி புளியங்குளம் பகுதியினைச் சேர்ந்த 30 அகவையுடைய பாலச்சந்திரன் தங்கதேவி என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம் கொழும்புத்துறைமுகத்தில் இளம் குடும்பத்தலைவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுக் கிணற்றில் வீசப்பட்டுள்ளார். கொழும்புத்துறைமுகத்தினைச் சேர்ந்த இரண்டுபிள்ளைகளின் தந்தையான 34 அகவையுடை மார்க்கண்டு சிவராசா என்பவரே படுகொலை செய்யப்பட்டு இவரது உடலம் கிணற்றில் வீசப்பட்டுள்ளது.நேற்று முன்னாள் காணமல்போன இவர் நேற்று உடலமாக கிணற்றில் கண்ட்டெடுக்கப்பபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் உகண வலகம்பற காட்டுப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் பெண் ஒருவரின் உடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள். அம்பாறை உறமசந்திப்பகுதிக்கு அருகில் இருந்து பெண்ஒருவரின் உடலம் உருக்குலைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களது உடலங்கள் அடையாளம் காணும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறீலங்காப்படையினரின் கட்டுப்பாட்டுப்பகுதிகளில் தமிழ்மக்களின் மர்மக் கொலைகள் அண்மைய காலங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் 15வயது சிறுமியை திருமணம் செய்ய முயன்ற 25வயதான திருமணமானவர் கைது

வீடொன்றின் மதில் சுவரைக் கட்டுவதற்கு நியமிக்கப்பட்ட 25வயதான திருமணமான நபரொருவர் அவ்வீட்டின் அயல்வீட்டிலிருந்த 15வயதுச் சிறுமியை திருமணம் செய்து கொள்ள முயன்ற சம்பவமொன்று மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு கொக்குவில் பிரதேசவாசியான குறித்த நபர் மேசன்வேலை செய்பவராவார். சில தினங்களுக்கு முன்பு வெல்லாவெளி பிரதேசத்தில் மன்சூர் பகுதி கிராமத்திலுள்ள வீடொன்றின் சுற்றுமதில் எழுப்புவதற்காக அவர் வந்துள்ளர். இப்பணியில் ஈடுபட்டிருந்த போது அவர் அயல் வீட்டில் தங்கும் இடவசதியை ஏற்படுத்திக் கொண்டு தான் திருமணம் முடிக்காதவர் என்று தெரிவித்து சிறுமியை திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறி திருமணம் பதிவுக்காக பதிவாளரிடம் சென்றுள்ளார். இவர்மீது சந்தேகம் கொண்ட திருமணம் பதிவாளர் மேற்கொண்ட விசாரணைகளின் பின் அவர் ஏற்கனவே திருமணமானவர் என்பது வெளியானது. இதனையடுத்து அவர் பொலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

காங்கேசன்துறை, கீரிமலைப் பகுதிகளில் மண் அணை

யாழ் குடாநாட்டின் வலிகாமல் வடக்குப் பகுதியிலிருந்த மக்கள் கடந்த 20 வருடங்களாக பல இடங்களுக்கும் இடம்பெயர்ந்து அகதிகளாகத் திரிகின்றனர். இப்பகுதியானது இலங்கை ராணுவத்தில் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால், அந்தப் பகுதிகளுக்குள் மக்கள் சென்றுவரக்கூட அனுமதி இல்லை. ஆனால் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்துக்காக குடாநாடு வந்த ஜனாதிபதி மஹிந்த, அவர் சகோதரரான ஜனாதிபதி ஆலோசகர் பசில் ஆகியோர் மேற்படி உயர் பாதுகாப்பு வலயத்தில் மீண்டும் மக்கள் மீளக்குடியமர்த்தப்படுவர் என வாக்குறுதி கொடுத்தனர். இதனையே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் மக்களுக்குக் கூறினார். ஆனால் தேர்தல் வெற்றி கண்டபின்னர் அங்குள்ள நிலமை மாறியுள்ளது. மேலும் மேலும் அதிகபட்ச பாதுகாப்பு வலயத்தை ராணுவத்தினர் அமைத்து வருகின்றனர். காங்கேசன்துறை, கீரிமலைப் பகுதிகளை உள்ளடக்கியதாக பெரியதொரு மண் அணையைக் கட்டத்தொடங்கியுள்ளனர் ராணுவத்தினர். இந்தப் பகுதிக்குள் 20 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளடங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. வலிகாமம் வடக்குப் பகுதியில் மொத்தமாக 27 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன. அதில் 20 இந்த புதிய பாதுகாப்பு வலயத்துக்குள் செல்கிறது. மிகுதி 7 கிராமத்து மக்களும் தமது பகுதிகளுக்குச் சென்றுவர அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும், அவர்கள் இரவில் தமது வீடுகளில் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

11 ஆயிரம் புலிச் சந்தேக நபர்களையும் இன்னும் கூட சந்திக்க முடியாத நிலைமை மனிதாபிமான அமைப்புகள் விசனம்

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடை யவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 11,000 பேரை தாம் சந்திக்க முடியாத நிலை காணப் படுவதாக மனிதாபிமான அமைப்புகள் தெரிவித்துள்ளன. விடுதலைப் புலிகளுடன் தொடர்புடை யவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 11,000 பேரை தாம் சந்திக்க முடியாத நிலை காணப் படுவதாக மனிதாபிமான அமைப்புகள் தெரிவித்துள்ளன. விடுதலைப் புலிகளுடன் தொடர்புடை யவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நபர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்கு 2009 ஜூலை மாதத்திற்குப் பின்னர் தாங் கள் செல்லவில்லை எனத் தெரிவித்துள்ள செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது. முகாமில் உள்ளவர்களின் பெயர் விவ ரங்களை அவ்வேளையில் பதிவு செய்தோம். அதற்குப் பின்னர் எமக்குஅனுமதி வழங்கப்படவில்லை எனச் செஞ்சிலுவைச் சர்வதேசக்குழுவின் இலங்கைக்கான பேச்சாளர் சரசி விஜயரட்ண ஐ.பி.எஸ். செய்திச்சேவைக்குத் தெரிவித்துள்ளார். இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் இதே கருத்தை வெளியிட்டுள்ளார். இந்த முகாம்களில் யார், யார் உள்ளனர் என்பது தெரியாது. கடந்த தடவை ஜனாதிபதியை நாம் சந்தித்த வேளை அவர், சம்பந்தப்பட்டோரின் பெயர் விவரங்களை வெளியிடுவார் எனத் தெரிவித்திருந்தார். எனினும், இதுவரை எதுவும் இடம்பெறவில்லை என சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். அரசு தேர்தலுக்காகவே ஒரு சிலரை விடுவித்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, உள்ளூர் மனிதாபிமான அமைப்பொன்று தேர்தல் காரணமாக இவர்களைச் சந்திப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதை அரசு அதிகரித்துள்ளது எனத் தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களில் பெற்றோராலும் உறவினர்களாலும் இந்த முகாம்களுக்குச் செல்ல முடிந்துள்ளது. என்றாலும் அதிகாரிகள் மட்டத்தில் அதற்குப் பலத்த தடை காணப்படுகின்றது எனத் தெரிவித்துள்ள குறிப்பிட்ட அமைப்பின் பேச்சாளர், தமிழ் வாக்குகளைப் பெறுவதற்காகவே அரசு இதனைச் செய்ததாகக் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, காலியில் உள்ள அரச தடுப்பு முகாமொன்றில் விடுதலை செய்யப்பட்டவர்களில் 200 பேர் மீண்டும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனக் கிடைத்துள்ள தகவல்கள் குறித்துத் தாங்கள் ஆராய்ந்து வருகின்றனர் என்றும் அந்த அமைப்பின் பிரதிநிதி தெரிவித்துள்ளார். ஜனவரி 9ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டவர்கள் காலியில் உள்ள தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர் என 60 வயது நபர் ஒருவர் தெரிவித்தார் எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

உளவு தற்கொலைப்படை குண்டு வாகனம் ஒன்றை இந்திய இராணுவம் உருவாக்கியுள்ளது.

தீவிரவாதிகளை தீர்த்துக் கட்டும் 4 சக்கர வாகனம் ஒன்றை, இந்திய எல்லை பாதுகாப்பு படையின் தொழில்நுட்பப் பிரிவு உருவாக்கி உள்ளது. இதற்கு „உளவு தற்கொலைப்படை குண்டு வாகனம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இது ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படக் கூடியது. 200 மீட்டர் தூரத்தில் இருந்து இதை இயக்ககூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ள இவ்வண்டியில் இரவு நேரத்திலும் காட்சிகளை பதிவு செய்யக்கூடிய வீடியோ கமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. இதில் வெடிகுண்டைப் பொருத்துவதற்காக, ஒரு குழிவான பகுதியும் உள்ளது. இந்த வாகனத்தை தீவிரவாதியின் மறைவிடத்துக்குள் நுழைய வைத்து, 200 மீட்டர் தூரத்தில் இருந்தபடி இயக்கி, குண்டு வெடிக்கச் செய்து தீவிரவாதியை அழிக்கலாம்

இராணுவத்திலிருந்து தப்பியோடியிருந்த 1422 பேர் சரண்.

இராணுவத்திலிருந்து தப்பியோடி சேவைக்கு சமூகமளிக்காதிருந்தவர்கள் நேற்று சுதந்திர தினத்தன்று சரணடைந்தால் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுமென இராணுவத் தலைமையகம் விடுத்திருந்த அறிவிப்பை ஏற்று 1422 பேர் சரணடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். சரணடைந்த அனைவரும் இராணுவ முகாம்களில் உள்ளதாக தெரிவித்துள்ள பிரிகேடியர் சரணடைந்தவர்கள் மீது எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்படமாட்டாது எனவும் சரணடைய தவறியுள்ளவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

தேர்தல் ஆணையாளரின் மனைவி, மகள் ஆகியோரை இராணுவத்தினர் கடத்திச் சென்று தடுத்துவைத்திருந்தனர்

ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற கடந்த 26ம் திகதி இரவு இராணுவத்தினர் சிலரால் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்கவின் மகள், மனைவி ஆகியோர் கடத்திச் செல்லப்பட்டு வோடஸ் எஜ் விடுதியில் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாகதகவல்கள் கிடைத்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளதாக சிங்கள இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணையாளரின் மகள் வீட்டிலிருந்து வெளியில் செல்வதைக் கடுமையான நிராகரித்ததாகவும் இதனையடுத்து படையினர் அவரைத் தாக்கி பலவந்தமாக அழைத்துச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த 26ம் திகதி இரவு 12.30 அளவில் இடம்பெற்றதாகவும் இவர்கள் மறுநாள் 27ம் திகதி மாலை 5 மணிக்கே விடுவிக்கப்பட்டதாகவும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கூறியுள்ளார். அதேவேளை, தேர்தல் ஆணையாளரும் தேர்தல் தினத்திற்கு அடுத்தநாள் இந்த விடுதிக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும் அவ்வாறு கொண்டுசெல்லப்பட்ட அவர் 27ம் திகதி பிற்பகல் 1.30 அளவில் தேர்தல் திணைக்களத்தில் கொண்டுசென்றவிடப்பட்டதாகவும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் அவரை விடுவித்ததாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார். இவற்றை கோதாபய ராஜபக்ஸ பசில் ராஜபக்ஸ ஆகியோரே திட்டமிட்டதாகவும் இவர்களின் திட்டத்தின்படி இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஸவை 3 லட்சத்து 80 ஆயிரம் வாக்குகளில் வெற்றியடையச் செய்யத் திட்டமிட்டிருந்ததாகவும் பசில் ராஜபக்ஸவின் கணக்கீட்டுச் சிக்கல் காரணமாக அது 18 லட்சத்தையும் தாண்டியதாக அவர் கூறியுள்ளார். இதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தல்களில் வாக்கு எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்படும் போதும் மாவட்ட முடிவுகள் வெளியிடும் சந்தர்ப்பத்திலும் தேர்தல் ஆணையாளர் தனது செயலகத்தில் வேலைப்பளுவில் இருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது. எனினும், இம்முறை தேர்தல் ஆணையாளரை எவரும் காணவில்லை. இம்முறை மாவட்ட முடிவுகள் வெளியிடப்பட்ட போது அவை தொடர்பாக இறுதி முடிவுகளை பிரதித் தேர்தல் ஆணையாளர்களே மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது

வன்னிப்போரும் ரொனி பிளேயர் வாக்குமூலமும் ஓர் அடிப்படை ஒற்றுமை..04.02.2010

வன்னியில் காணாமல் போன பெரும் செல்வம் அதிர்ஷ்டமானவரின் கைக்கே போகும் என்பது உண்மையே. சிறீலங்கா இன்று 62 வது சுதந்திரதினத்தைக் கொண்டாடுகிறது. சிறீலங்கா அதிபர்களில் தானே மிகவும் அதிர்ஷ்டமான அதிபர் என்று கூறியுள்ளார். அவரைப் பாராட்ட வேண்டும், வன்னியில் காணாமல் போன பெரும் செல்வம் அதிர்ஷ்டமானவரின் கைக்கே போகும் என்பது உண்மையே. இந்த நேரம் பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரொனி பிளேயர் ஈராக் போர் குறித்து வழங்கிய வாக்கு மூலத்தையும், வன்னிப் போரையும் இணைத்துப் பார்க்க உதவியாக எழுதப்பட்டுகிறது இக்கட்டுரை. அளவுக்கு அதிகமாக பணம் திரட்சியடையும் இடங்கள் சர்வதேச சமுதாயத்தால் சூறையாடப்படும்.. இந்த உண்மையை அனைவரும் புரிய பிளேயரின் வாக்குமூலம் உதவியாக உள்ளது. சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இலங்கைத் தமிழ் மக்கள் வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி சேர்த்த செல்வங்களை சூறையாடுவதே சிறீலங்காவின் சுதந்திரதின பெருமையாக உள்ளது. வடக்குக் கிழக்கு இணைப்பு, தமிழீழம் போன்ற வாதங்களுக்கு அப்பால் தமிழர் செல்வத்தை கொள்ளையிடுவதில்லை என்ற ஒப்பந்தத்தை எழுதுவதே வன்னிப்போர் தரும் முக்கிய பாடமாக உள்ளது. இதை விளங்க ரொனி பிளேயரின் வாதங்களை சகல விடயங்களுடனும் ஒப்பிட்டு நோக்குகிறோம்.. ரொனி பிளேயர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஈராக் போர் தொடர்பான வாக்குமூலம் ஒன்றை வழங்கியிருந்தார். சுமார் ஆறு மணி நேரமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் வழங்கினார். இது ஒரு திட்டமிட்ட, நன்கு ஒத்திகை பார்க்கப்பட்டு அரங்கேறிய நாடகம் என்றாலும் இதைக் கவனமாகப் பார்க்க வேண்டியது பிரிட்டனால் சுதந்திரமிழந்த தமிழினத்திற்கு அவசியம். சதாம் உசேனிடம் அணு ஆயுதம் இல்லை என்று தெரிந்திருந்தாலும் போருக்கு போவதை நிறுத்தியிருக்க மாட்டேன் என்று முன்னர் கூறிய பிளேயர் இப்போது அதை மாற்றியிருக்கிறார். இந்த மாற்றத்திற்குள்தான் எல்லாமே புதைந்திருக்கிறது. உலகத்தின் முக்கிய தொலைக்காட்சிகளில் எல்லாம் பிளேயரின் கருத்துக்கள் நேரடியாக ஒளிபரப்பாகியிருந்தன.. அந்த ஆறு மணி நேர வாக்குமூலத்தை முதலில் இரண்டே வரிகளில் சுருக்கிப் பார்க்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தின் வரவிற்குப் பின்னர் வளமான நாடுகளை சூறையாடாவிட்டால் அமெரிக்காவும் பிரிட்டனும் தமது முதன்மையை 21ம் நூற்றாண்டில் தக்கவைக்க இயலாது ! இதுதான் அவருடைய கருத்துக்களில் இருந்து நமக்குக் கிடைக்கும் இரண்டேயிரண்டு வரிகளிலான கதைச் சுருக்கம். இந்தக் கதைச் சுருக்கத்தில் இருந்து பல உண்மைகளை பார்த்துவிட்டுத்தான் நாம் வன்னிக்குள் போக வேண்டும். ஏனெனில் இரண்டு கதைகளும் அடிப்படையில் ஒன்றுதான். ஈராக் நாட்டின் பழைய பெயர் பாபிலோனியா. கடந்த 10.000 வருட வரலாற்றில் பாபிலோனியாவை சூறையாடாத வல்லரசுகளே கிடையாது. மகா அலெக்சாண்டர் முதல் நெப்போலியன் தொடங்கி உலகப் புகழ் பெற்ற பேரரசர்கள் எல்லோருமே பாபிலோனியா மீது படையெடுத்தவர்களே. அதன் கடைசி அத்தியாயமே 2003ம் ஆண்டுப் போர். ஈராக்கைப் போல செல்வம் கொழிக்கும் பூமியாக இருந்து இதே மன்னர்களின் தாக்குதல்களை சந்தித்தது எகிப்திய பேரரசு. பேரழகி கிளியோபாற்றாவையும் அவளுடைய செல்வங்களையும் சூறையாட அங்கு போகாத பேரரசுகளே கிடையாது. செல்வம் திரட்சியடைந்தால் பிரிட்டன் போர் தொடுக்கும், ஆகவே குடியேற்ற நாடுகளை அமைத்து செல்வத்தை பெருக்க வேண்டாம் என்று அக்கால ஜேர்மனிய சக்கரவர்த்தி பேர்டினன்ட் வில்லியத்திடம் பிரபல இராஜதந்திரி வொன் பிஸ்மார்க் பல்லாயிரம் தடவைகள் கேட்டான். அவனைப் பதவி விலத்திவிட்டு வில்லியம் செல்வத்தை குவித்த காரணத்தால் உலகப்போரில் ஜேர்மனி மாட்டிக் கொண்டது. முப்பதிற்கும் மேற்பட்ட சிறிய இராட்சியங்களாக இருந்த ஜேர்மனியை ஒரு நாடாக்கிய பிஸ்மார்க் மிகவும் கவனமாக இருந்தது ஒரேயொரு விடயத்தில்தான், தேசம் உருவாக முன் செல்வத்தை குவித்தால் அந்தத் தேசம் சுடுகாடாகும் என்பதை தெளிவாக அறிந்த உலகின் ஒரேயொரு இராஜதந்திரி அவன்தான். இவைகளை மனதில் வைத்து மேலே செல்வோம்.. 2001 செப் 11 தாக்குதலுக்குப் பின்னர் சுமார் 20ற்கும் மேற்பட்ட அமைப்புக்கள் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கப்பட்டன. 1. சதாமிடம் இருந்த எண்ணெய் வளம், தங்க வளம், டாலர்களின் குவியல் யாவும் அந்தப் பட்டியலுக்கு உயிர் கொடுத்தன. 2. உலகக் கஞ்சா ஏற்றுமதியில் 99 வீதமான வருமானம் உழைப்பவர்கள் ஆப்கானின் தலபான்கள் அது மேலும் அசைவைக் கொடுத்தது. இப்படி பட்டியலில் இடம் பெற்ற அனைத்து பயங்கரவாத அமைப்புக்களுமே செல்வங்களை குவித்து வைத்திருந்த அமைப்புக்களே. இவைகளுக்குள் புலிகளை எதற்காக சேர்த்தார்கள், அவர்கள் உண்மையாகவே ஒரு விடுதலை அமைப்பு என்று நாம் வாதிட்டோம், ஆனால் உலக நாடுகள் அதை ஏற்க மறுத்து அவர்களையும் பட்டியலில் சேர்த்தார்கள். அதற்கு என்ன காரணம் ? தென்னாசியாவின் போராட்டக் குழுக்களிலேயே அதிக பணமுள்ள, வளமுள்ள அமைப்பு விடுதலைப் புலிகள்தான். அவர்கள் உருவாக்கிய பண சாம்ராஜ்ஜியமே அவர்களை இந்தப் பட்டியலுக்குள் அநியாயமாகக் கொண்டு வந்துள்ளது என்பதை விளங்க ரொனி பிளேயரின் வாக்கு மூலமே போதுமானதாகும். ஈராக் மீதான போர் மேலை நாடுகளுக்கு மிகவும் இலாபகரமான போர்.. அதுபோல புலிகளுக்கு எதிரான போருக்கு செலவிட்ட பணத்தோடு புலிகளிடம் இருந்த பணத்தையும், ஆயுதங்களையும் கணக்கிட்டால் சிறீலங்கா அரசிற்கும் அதற்கு ஆதரவளித்த நாடுகளுக்கும் வன்னிப் போர் மிகப்பெரிய ஆதாயமாகும். வன்னியில் ஒரு தேங்காய் உரிக்கும் அலவாங்கு விடாமல் அள்ளிச் சென்றுவிட்டார்கள். புலிகளின் வாகனங்களில் ஒரு வாகனத்தைக் கூட வன்னியில் காண முடியவில்லை. லாரி லாரியாக வன்னியின் பொருட்கள் சூறையாடப்பட்டுவிட்டன. இதைப்போல இலாபகரமான போர் எதுவுமே கிடையாது. அந்த உருசியில் இப்போது புலிகளின் வெளிநாட்டு சொத்துக்களும் தமக்கே உரியது என்கிறார் கோத்தபாய ராஜபக்ஷ. புலிகளிடம் எடுத்த நிதி இருக்கும்வரை சிறீலங்கா ஆட்சியாளருக்கு மேலும் பல ஆண்டுகள் நிதித் தட்டுப்பாடே கிடையாது..சிறீலங்காவின் மிக அதிர்ஷ்டமான ஜனாதிபதி தானே என்று மகிந்த இன்று கூறியிருப்பது தவறல்ல. கடந்த வாரம்; புலிகள் சேர்த்த 4000 கிலோ தங்கம் எங்கே என்று கேள்வி எழுந்தது.. அவர்கள் சேர்த்த பணம் எங்கே… வருடாவருடம் அவர்கள் சேகரித்த அவசர பாதுகாப்பு நிதிகள், வரிகள் எல்லாம் வன்னியில் திரண்டுவிட்டதாலேயே இந்தப் போர் நடாத்தப்பட்டுள்ளது. இதற்கும் பிளேயரின் ஈராக் போர் வியூகத்திற்கும் யாதொரு வேறுபாடும் கிடையாது. இது மாபெரும் அபாயம், இந்த அபாயத்தில் புலிகளை மாட்டாதீர்கள் என்று எவ்வளவோ கூறியும் யாரும் கேட்கவில்லை. அதனால்தான் இதற்கான பொறுப்பு புலம் பெயர் தமிழரையும் கணிசமான அளவு சார்கிறது.. வன்னிக்குள் சொத்துக்களை குவிக்காதீர்கள் என்று புலிகளுக்கு பிஸ்மார்க் போல அறிவுரை கூற சரியான மதியுரைஞர் இருக்கவில்லை, அப்படி மதியுரைஞர் சொன்னாலும் அதை அவர்கள் கேட்கமுடியாதவிற்கு நிதி குவிந்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் நிதியைவிட வேறு எதுவுமே இல்லை என்ற இடத்திற்கு புலம் பெயர் நாடுகள் கூர்ப்படைந்தது பெரும் தவறு. 1983 யூலைக் கலவரத்தை இனவாதம் என்பதை விட தமிழரின் சொத்தை சுரண்டும் ஒரு கலவரம்தான் என்பதை உணர்ந்தால் பலும் பெயர் தமிழர் வன்னிக்குள் சொத்தை முடக்குவதன் ஆபத்தைப் புரிந்திருப்பர்.. பிளேயரின் வாதங்களைக் கேட்டால் இவைகள் உங்கள் எண்ணங்களில் எழுந்து வரும்.. அப்படியானால் சொத்தை வைத்திருப்பவர் என்ன செய்வது.. கேணல் கடாபியிடம் இதற்கு பதில் இருக்கிறது. அவர் இந்த ஆபத்தை உணர்ந்து தனது செல்வத்தில் பெரும்பகுதியை கொடுத்துவிட்டார். விமானம் தகர்ப்பிற்காக அவர் வழங்கிய நட்டஈடு மிகப்பெரிய தொகை.. ரொனிபிளேயர் அவரைச் சந்தித்து வந்த பின் ஆபத்துக்களில் இருந்து தப்பினார். இப்போது ஈரான் விளிம்பு நிலையில் நிற்கிறது.. சோமாலியக் கடற் கொள்ளையர் விஷயம் தெரியாமல் கொள்ளையிடுகிறார்கள், அவர்களுடைய குதம் நிரம்பி வழியும்போது எல்லாவற்றையும் ஒரே வாரத்தில் இழக்க நேரிடும், இதுதான் அவர்களுடைய தலையெழுத்து.. சுதந்திரம் பெற்றாலும், பெறாவிட்டாலும் செல்வம் அளவிற்கு அதிகமாகக் குவியும் இடங்கள் ஏதோ ஒரு பயங்கரவாதமாக அடையாளப்படுத்தப்பட்டு சுடுகாடாக்கப்படும்.. சூறையாடப்படும்.. ஆறுமணி நேரம் பிளேயரின் பேச்சைக் கேட்க எம்மிடம் ஏது நேரம்.. ஏதோ ஆறு போன போக்கில் போகிறோம் என்று வாழ்வோர் இதை ஓர் எடுகோளாக வைத்து சிந்தித்தால் மேலும் பல உண்மைகளை புரிய முடியும். பிளேயரின் பேச்சு பிழையல்ல..