வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

11 ஆயிரம் புலிச் சந்தேக நபர்களையும் இன்னும் கூட சந்திக்க முடியாத நிலைமை மனிதாபிமான அமைப்புகள் விசனம்

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடை யவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 11,000 பேரை தாம் சந்திக்க முடியாத நிலை காணப் படுவதாக மனிதாபிமான அமைப்புகள் தெரிவித்துள்ளன. விடுதலைப் புலிகளுடன் தொடர்புடை யவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 11,000 பேரை தாம் சந்திக்க முடியாத நிலை காணப் படுவதாக மனிதாபிமான அமைப்புகள் தெரிவித்துள்ளன. விடுதலைப் புலிகளுடன் தொடர்புடை யவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நபர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்கு 2009 ஜூலை மாதத்திற்குப் பின்னர் தாங் கள் செல்லவில்லை எனத் தெரிவித்துள்ள செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது. முகாமில் உள்ளவர்களின் பெயர் விவ ரங்களை அவ்வேளையில் பதிவு செய்தோம். அதற்குப் பின்னர் எமக்குஅனுமதி வழங்கப்படவில்லை எனச் செஞ்சிலுவைச் சர்வதேசக்குழுவின் இலங்கைக்கான பேச்சாளர் சரசி விஜயரட்ண ஐ.பி.எஸ். செய்திச்சேவைக்குத் தெரிவித்துள்ளார். இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் இதே கருத்தை வெளியிட்டுள்ளார். இந்த முகாம்களில் யார், யார் உள்ளனர் என்பது தெரியாது. கடந்த தடவை ஜனாதிபதியை நாம் சந்தித்த வேளை அவர், சம்பந்தப்பட்டோரின் பெயர் விவரங்களை வெளியிடுவார் எனத் தெரிவித்திருந்தார். எனினும், இதுவரை எதுவும் இடம்பெறவில்லை என சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். அரசு தேர்தலுக்காகவே ஒரு சிலரை விடுவித்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, உள்ளூர் மனிதாபிமான அமைப்பொன்று தேர்தல் காரணமாக இவர்களைச் சந்திப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதை அரசு அதிகரித்துள்ளது எனத் தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களில் பெற்றோராலும் உறவினர்களாலும் இந்த முகாம்களுக்குச் செல்ல முடிந்துள்ளது. என்றாலும் அதிகாரிகள் மட்டத்தில் அதற்குப் பலத்த தடை காணப்படுகின்றது எனத் தெரிவித்துள்ள குறிப்பிட்ட அமைப்பின் பேச்சாளர், தமிழ் வாக்குகளைப் பெறுவதற்காகவே அரசு இதனைச் செய்ததாகக் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, காலியில் உள்ள அரச தடுப்பு முகாமொன்றில் விடுதலை செய்யப்பட்டவர்களில் 200 பேர் மீண்டும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனக் கிடைத்துள்ள தகவல்கள் குறித்துத் தாங்கள் ஆராய்ந்து வருகின்றனர் என்றும் அந்த அமைப்பின் பிரதிநிதி தெரிவித்துள்ளார். ஜனவரி 9ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டவர்கள் காலியில் உள்ள தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர் என 60 வயது நபர் ஒருவர் தெரிவித்தார் எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக