திங்கள், 27 செப்டம்பர், 2010

பாகிஸ்தானுக்கு ஆயுத சப்ளை : அதிபர் ஒபாமா விரும்பவில்லை

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு ஆயுதம் வழங்குவதை அமெரிக்கா விரும்பவில்லை' என, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பாகிஸ்தான் அதிபர் சர்தாரியிடம் உறுதியுடன் கூறியதாக, "ஒபாமா'ஸ் வார்' என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியர் எழுதியுள்ளார்.அமெரிக்கப் புலனாய்வு எழுத்தாளரான பாப் உட்வேர்ட் சமீபத்தில், அமெரிக்கா மேற்கொண்ட சமீபத்திய போர்களைப் பற்றி, "ஒபாமா'ஸ் வார்' என்ற புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார். மொத்தம் 417 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தில், பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, ஒபாமாவைச் சந்தித்த போது நடந்த உரையாடல்களை பதிவு செய்துள்ளார்.

பௌத்த தேரர் மட்டக்களப்பில் சாகும்வரை உண்ணாவிரதம்

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட பிரதி பிரதம சங்கநாயக்கரும் மட்டக்களப்பு ஸ்ரீமங்களாராம ரஜமகா விகாரையின் விகாராதிபதியுமான அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மட்டக்களப்பு நகரில் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மட்டக்களப்பில் வைத்து தன்னை அவமானப்படுத்தியைக் கண்டித்தே தான் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருப்பதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மங்களா ராம விகாரைக்கு முன்னால் இப்போராட்டம் தொடர்கிறது.அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேரடியாக வந்து தன்னிடம் மன்னிப்புக் கோரும் வரை சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் தொடருமென அவர்மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் போராளிகளின் தடுப்பு .ஐ.சி.ஜே கவலை

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள  முன்னாள் போராளிகளும், சரணடைந்தவர்களும், ஒரு சட்டரீதியான கருஞ்சூன்யத்தை எதிர்நோக்குவதாகக் கூறும் இந்த அமைப்பு, இந்தப் புனர்வாழ்வு முயற்சிகளுக்கான சர்வதேச உதவி, இந்த நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்கள் மற்றும் தரவுகளின்படியே எடுக்கப்படவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே தரப்படவேண்டும் என்று கூறுகிறது. இவ்வாறு எந்த நிபந்தனைகளும் இல்லாமல் சர்வதேச உதவி தரப்பட்டால், அது நியாயமற்ற தடுப்பு நடவடிக்கைகளில் சர்வதேச சமூகமும் ஒத்திசைவாகச் செல்லும் ஆபத்தை ஏற்பத்தும் என்று இந்த அமைப்பு கூறுகிறது. இலங்கையில் இவ்வாறான தடுப்புக்காவல் கைதுகள், அவசரகாலச் சட்ட விதிகளின் கீழும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழும் செய்யப்படுவதை சுட்டிக்காட்டும் இந்த அமைப்பு, இந்த சட்டங்களின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலி போராளிகள், புனர்வாழ்வு நடவடிக்கைகள் என்ற பெயரில், இரண்டு ஆண்டுகள் வரை எந்த ஒரு குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படாமல், நிர்வாகத்தால் தடுத்துவைக்கப்படுவது, அவர்களுக்கு தனிப்பட்ட முறையிலோ அல்லது கூட்டாகவோ விதிக்கப்படும் , விசாரணையில்லாத தண்டனை என்றும் வர்ணிக்கிறது.