புதன், 29 செப்டம்பர், 2010

நீர்வழங்கல் சபைக்குத் தண்ணீர் காட்டும் யாழ்ப்பாணத்து சண்டியன்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் பாரம்பரிய கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கொழும்பில் வசித்து வரும் இரண்டு வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீர் விநியோகத்திற்காக கட்டணமாக நூற்றி ஒரு லட்சத்து, 36 ஆயிரத்து, 443 ரூபாவை செலுத்த  வேண்டும்.கொழும்பு 5 பார் வீதியில் அமைச்சர் வசித்து வரும் இலக்கம்; 121 வீட்டிற்கான குடிநீர் விநியோக கட்டணமாக 83 லட்சத்து 65 ஆயிரத்து 695 ரூபாவை செலுத்த வேண்டியுள்ளதாகவும் கடந்த மாதம் 25 ஆயிரம் ரூபா மாத்திரமே செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதேவேளை கொழும்பு 4 லெயாட்ஸ் வீதியில் உள்ள அமைச்சர் தேவானந்தாவின் 15 கீழ் 1 என்ற இலக்க வீட்டின் குடிநீர் கட்டணமாக 17 லட்சத்து 70 ஆயிரத்து 750 ரூபா செலுத்த வேண்டிள்ளது

இலங்கை ஜனாதிபதியைச் சந்திக்க விருப்பம் கொள்ளாத தலைவர்கள்

ஐக்கிய நாடுகளின் 65-வது மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதியை உலகத் தலைவர்கள் எவரும் சந்திக்கவில்லை எனச் சிங்கள இணையத்தளமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கைக்கு இதுவரை காலமும் காணப் பட்ட நற்பெயருக்குத் தற்போது களங்கம் ஏற்பட்டுள்ளதாக அந்த இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையினால் நடத்தப்பட்ட விருந்துப சாரத்திற்கு 100 நாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் ஒரு நாட்டுத் தலைவரே இந்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.