புதன், 29 செப்டம்பர், 2010

நீர்வழங்கல் சபைக்குத் தண்ணீர் காட்டும் யாழ்ப்பாணத்து சண்டியன்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் பாரம்பரிய கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கொழும்பில் வசித்து வரும் இரண்டு வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீர் விநியோகத்திற்காக கட்டணமாக நூற்றி ஒரு லட்சத்து, 36 ஆயிரத்து, 443 ரூபாவை செலுத்த  வேண்டும்.கொழும்பு 5 பார் வீதியில் அமைச்சர் வசித்து வரும் இலக்கம்; 121 வீட்டிற்கான குடிநீர் விநியோக கட்டணமாக 83 லட்சத்து 65 ஆயிரத்து 695 ரூபாவை செலுத்த வேண்டியுள்ளதாகவும் கடந்த மாதம் 25 ஆயிரம் ரூபா மாத்திரமே செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதேவேளை கொழும்பு 4 லெயாட்ஸ் வீதியில் உள்ள அமைச்சர் தேவானந்தாவின் 15 கீழ் 1 என்ற இலக்க வீட்டின் குடிநீர் கட்டணமாக 17 லட்சத்து 70 ஆயிரத்து 750 ரூபா செலுத்த வேண்டிள்ளது
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தின்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நிரோஷன் பாதுக்க இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார். யுத்தம் நடைபெற்ற காலத்தில் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு தண்ணீரை போத்தல்களில் அடைத்து அனும்பும் தொழிற்சாலையை நடத்தியதால், இவ்வாறு குடி நீர் கட்டணங்கள் அதிகரித்துள்ளதா? என பாதுக்க கேள்வி எழுப்பியுள்ளார். சாதாரண மக்கள் இரண்டு மாதங்கள் குடி நீர் கட்டணங்களை செலுத்த தவறினால் நீர் விநியோகம் துண்டிக்கப்படும். எனினும் அமைச்சர் தேவானந்த 101 லட்சம் ரூபாவுக்கு மேல் கட்டணம் செலுத்தாத நிலையில், அவருக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்படவில்லை. அமைச்சர் என்ற காரணத்தினால் அவரது நீர் விநியோகம் துண்டிக்கப்படவில்லையா எனவும் பாதுக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக