வியாழன், 30 செப்டம்பர், 2010

வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம் கையளிப்பு நாடகம்

யாழ். மாவட்டத்தின் வலிகாமம் வடக்கு அதியுயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம் கடந்த செவ்வாய்கிழமை திறந்து வைக்கப்பட்டது. அது சம்பந்தமான செய்திகள் அனைத்து ஊடகங்களிலும் பரவலாக முக்கியத்துவம் மிக்க செய்தியாக வெளிவந்தது. இதனையடுத்து அதியுயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள பல கல்லுரிகள் மக்கள் குடியிருப்புக்கள் மற்றும் ஆலயங்கள் என்பன தொடார்சியாக மக்களின் பாவனைக்கு வரலாம் என்ற நம்பிக்கை யாழ். மக்களின் மனங்களில் தோன்றின. ஆனால், இந்த நிகழ்வில் பாடசாலை கையளிப்பு என்பது மக்களை ஏமாற்றுவதற்கு நடத்தப்பட்ட ஒன்று போல் தென்படுகின்றது.
 இந்நிகழ்வு முடிந்த கையோடு அங்கு இருந்த பாடசாலைத் தளபாடங்கள் மற்றும் பாடசாலைக்கு வழங்கப்பட்ட பொருட்கள் அனைத்தையும் ஏற்றிச் செல்லும்படி பாடசாலை நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காரணம் வினவப்பட்டபோது, அந்தப்பகுதியில் முழுமையாக வெடிபொருட்கள் அகற்றப்படவில்லையெனவும் அவைகளை முழுமையாக அப்புறப்படுத்திய பின்னர் அங்கு செல்லும்படியும் அதன்பின்னர் பாடசாலை இயங்கலாம் எனவும் விக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை யாழ். வலய கல்வி அதிகாரிகள் தரப்பும் உறுதி செய்துள்ளது. இக்கல்லுரி கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இடம்பெயர்ந்த நிலையில் உரும்பிராய் இந்துக்கல்லுயின் முன்பாக  தனியார் வீட்டில் இயங்குவருகின்றது. தற்போதும் அதே இடத்திலேயே இயங்கிவருகின்றது. அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் மக்களை குடியமர்த்துகின்றோம் என்ற செய்தியை முதன்மைப்படுத்தவே இந்த நாடகம் . இந்த கையளிப்பு என்ற நாடகத்தில் அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி, மற்றும் வடமாகாண ஆளுநர் ஆகியோர் கலந்துகொண்டனார் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக