வியாழன், 19 ஆகஸ்ட், 2010

இந்திய பட பாட்சா பாணியில் தமிழருக்கு எச்சரிக்கை விடும்......பிள்ளையான்

முஸ்லிம் மக்களுக்கான மாதிரிக் கிராமம் அமைக்கப்படுவதை யாராலும் தடுக்க முடியாது. இதையும் மீறி தடுக்கும் முயற்சியில் யாராவது தமிழர்கள் ஈடுபட்டால் அதை எதிர்கொள்வதற்கு நான் ஒரு முதலமைச்சராக இன்றி பழைய பிள்ளையானாக மாற வேண்டி வரும். எச்சரிக்கிறார் - சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)

நாங்கள் மெலிந்து விட்டோம்
நிலத்திற்காய் குரல்கள் அழுகின்றன
நாங்கள் மீண்டும் மீண்டும் அகதிகளாக்கப்படுகிறோம்
இந்த நிலம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது
நிலத்திற்கான வழிகள் தடுக்கப்பட்டிருக்கின்றன.
பிறந்த நிலத்தில் சிறைவைக்கபபட்டவர்களாயிருக்க,
எங்கள் காணிகள் மிக சமீபமாயிருக்கின்றன,
மிதிவெடிகளை தூக்கி எறியும்,
குழந்தைகள் தயாராக முன்னால் நிற்கின்றனர்.
வீட்டுக்குச் செல்லத் துடிக்கும் இந்தக் குழந்தைகள்
குண்டுகளுக்கோ துப்பாக்கிச் சூடுகளுக்கோ அஞ்சாதிருக்கின்றனர்.

கேணல் ராயு

மனித வாழ்வில் ஒவ்வொருவருடைய வாழ்வனுபவமும் தனித்துவமானது. இவ வாழ்வனுபவ நிலையில் எல்லா மனிதர்களும் தனித்துவமானவர்கள். ஆனால் இத்தனித்துவத்தை மனித இருப்பு நிலையின் ஆழத்துக்குச்சென்று அதனைத் தரிசித்து அதை வெளிக்கொணர்பவர்கள் ஒருசிலரே. ஈழ விடுதலைப்போராட்டப் பாதையில் எத்தனையோ போராளிகள் தன்னலமற்ற ஆழமான தேசப்பற்றும் விடுதலை வேட்கையும் கொண்ட தனித்துவ மனிதர்களாக வாழ்ந்துள்ளனர்.

விடுதலைப்புலிகள் மிகவும் வல்லமை பொருந்தியவர்கள்......கோதாபய ராஜபக்க்ஷ

விடுதலைப்புலிகள் அமைப்பினைப் பொறுத்தவரையில் அவர்கள் மிகவும் வல்லமை பொருந்தியவர்களாகவே இருந்தனர்.விடுதலைப்புலிகள் இராணுவத்தினருக்கு சமமான பலத்தினை கொண்டிருந்தனர்.அத்துடன் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட சகல ஆயுதங்களும் யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.


படையினரின் சோதனை நடவடிக்கைகள்

கொக்குவில் மற்றும் பூநாறிமரத்தடிப் பகுதிகளில் படையினரின் சோதனை நடவடிக்கைகள் காலையில் இருந்து இரவுவரை தீவிரமாக்கப்பட்டிருந்தன. கொக்குவில், பிரம்படியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற அசம்பாவித சம்பவத்தை அடுத்தே இந்த நடவடிக் கையில் படையினரும், பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.