ஞாயிறு, 27 ஜூன், 2010

ரத்தத்தை கழுவுகிறான் நரிச்சிரிப்புடன்

வெறுப்பாய் இருக்குது தமிழே!
நெருப்பாய் இல்லாத தமிழனால்!
உன் மீதே
வெறுப்பாய் இருக்குது தமிழே!


ஆரிய அடக்குமுறைக்கு எதிரான
ஆயுதமாய் இருந்தாயே! தமிழே


சமத்துவம், சமதர்மம் என கொள்கைகளை
பறக்கவிட்ட சமணமுனிகளின் சாம்ராஜ்யத்தை
சரித்த ஆயுதமாய் இருந்தாயே! தமிழே

குடிவரவினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் பிரித்தானியா!

குடிவரவினை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரித்தானியாவின் புதிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிரித்தானியாவிற்குள் குடியேறுவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

கடற்கரும்புலி லெப்டினன்ட் கேணல் அமுதசுரபி - அல்பா சின்னப்பு நந்தினி யாழ்பாணம்

தாயகத்தைக் காப்பதற்காய் கனத்த மடிகளாய் கரையைத் தேட முயலும் படகுகள் இயந்திரப் பிழைகளால் வேகம் குறைய, தொடரணியாய் எம் கடற்பரப்பில் நகரும் எதிரிகளோடு மாட்டுப்பட வேண்டிவரும் பொழுதுகளில், அல்பாவின் குரல் உயர் அலை வரிசைச் சாதனத்தில் ஒலிக்க நம்புவோம் நாங்கள், எங்கள் கரை தூரத்தில் இல்லை என்று.

உமக்கென தலையெழுத்தோ,
யாருக்கும் இலா உணர்ச்சி
உமக்கு ஏன்?எங்கே உம் உடமைகள்?
எங்கே உம் இருப்பிடம்?
எங்கே உம் உறவுகள்?
எங்கே உம் செல்வங்கள்?
முற்றும் துறந்தவனே மேல்..
உண்ண, உறங்க மடமுண்டு...
உமக்கோ?யாருக்காக?.
அடுத்திங்கு மண்ணில் பிறக்கும்
ஒவ்வொரு சிசுவிலும் உமதுணர்ச்சி
குருதியோடு கலந்திட வேண்டும்..
வாழ்க தமிழ், வாழ்க தமிழினம்,
வாழ்க தமிழினத் தலைவன் நீர்

சர்வதேச ரீதியில் வலிமைமிக்க இரண்டு தரப்புகளுடன் இலங்கை அரசாங்கம் பகிரங்க மோதலில் இறங்கியுள்ளது!

சர்வதேச ரீதியில் வலிமைமிக்க இரண்டு தரப்புகளுடன் இலங்கை அரசாங்கம் பகிரங்க மோதலில் இறங்கியுள்ளது. முதலாவது -தரப்பு ஐ.நாவும் அதன் பொதுச்செயலர் பான் கீ மூனும். இரண்டாவது -தரப்பு ஐரோப்பிய ஒன்றியம்.
இந்த இரண்டு தரப்புகளுடன் இலங்கை அரசு அண்மைக்காலமாக முரண்பட்டு வந்தது. ஆனால் இப்போது அது பெரும் பூகம்பமாக வெடித்துள்ளது.