திங்கள், 24 மே, 2010

ஊடகங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் விடுத்திருக்கும் வேண்டுகோள்!





காணமல் போன உறவுகளைத் தேடி கண்ணீர் வடிக்கும் ஜீவன்கள்




சவாலாகும் போர் வெற்றிக் கொண்டாட்டங்கள்.!


விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த முதலாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கு கடந்த வாரம் அரசாங்கம் பெருமெடுப்பிலான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. கடந்த 20ஆம் திகதி காலிமுகத்திடலில் பிரமாண்டமான வெற்றிவிழா, இராணுவ அணிவகுப்பு என்பன நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவையெல்லாம் இயற்கையின் கோரத் தாண்டவத்துக்கு முன்பாக நின்று பிடிக்க முடியாமல்

பகத்சிங்கும் தேசிய தலைவரும்!!


புரட்சி என்பது ரத்த ஆறு பெருக்கெடுக்கும் ஒரு போராட்டமாய் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அது ஒன்றும் வெடிகுண்டு அல்லது துப்பாக்கியின் மீதான பக்தி இல்லை. குறிக்கோளை அடைவதற்கு அவை சில வேளைகளில் வெறும் வழிகளாக அமைவதுண்டு. நான் பயங்கரவாதி இல்லை. என் பலம் முழுவதையும் ஒன்றுக்கூட்டி உறக்க அறிவிக்கிறேன். நான் பயங்கரவாதி இல்லை.

தடுக்குமா புலம்பெயர் தமிழர் சமூகம்?

நாட்டின் தற்போதைய நிலவரம் குறித்து தற்போது பிரசல்ஸிற்கு விஜயம செய்துள்ள சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் தலைமையிலான இராஜதந்திரிகள், ஐரோப்பிய ஒன்றிய முக்கியஸ்தர்களுக்கு இலங்கை நிலவரம் குறித்து விளக்கமளித்துள்ளனர். குறிப்பாக இலங்கையில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்காக எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

சிறுமியைக் கடத்தும் முயற்சி சாவகச்சேரியில் முறியடிப்பு

சாவகச்சேரி நவீன சந்தைப் பகுதியில் வைத்து ஆறு வயதுச் சிறுமி ஒருவரைக் கடந்த வெள்ளிக்கிழமை கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் முள்ளிவாய்க்கால் பகுதி யில் கணவனை இழந்த பெண் ஒருவர் தனது உறவினரைப் பார்ப்பதற்கு வவுனியா செல்வதற்காக சாவகச்சேரிக்கு வந்திருந்தார். அங்கு இவரது ஆறு வயது மகளை நவீன சந்தை விறாந்தையில் விட்டு விட்டு சந்தைக் குள் மரக்கறி வாங்கச் சென்றி ருந்தார். மரக்கறி வாங்கிவிட்டு அவர் வந்து பார்த்தபோது மகளைக் காணாது அப்பகுதி முழுவதும் தேடிவிட்டுக் கடைசியாகப் பொலிஸ் நிலை யத்திலும், சாவகச்சேரிப் புலனாய்வுப் பிரிவி லும் முறையிட்டார். இதையடுத்து புலனாய்வுத்துறையினரும் தேடுதல் வேட்டையில் இறங்கினர். இதன் பயனாக இரவு 7மணியளவில் சாவகச்சேரி டச்சு வீதியிலுள்ள பேக்கரி ஒன்றுக்கு முன் பாக உள்ள மிதிவண்டி திருத்தும் நிலை யத்தில் காணாமல்போன சிறுமி கண்டு பிடிக் கப்பட்டார். அங்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்த வேளையில் கடத்திச் சென்ற நபர் அங்கு வந்தபோது மிதிவண்டி திருத்தும் நிலைய உரிமையாளர் அவரை அடையாளம் காட்டினார். சிறுமியைக் கடத் திச் சென்ற நபர் நிலைமை அறிந்து ஓடத் தொடங்கினார். எனினும் நின்ற பொதுமக்க ளும் பொலிஸாரும் அந்த நபரைத் துரத்திச் சென்று பிடித்தனர். மட்டுவிலைச் சேர்ந்த இந்நபர் தனிப் பட்ட பகை காரணமாகவே சிறுமியை கடத் தியதா கக் கூறப்பட்டது. இந்நபரை பொலி ஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

1987 ஆம் ஆண்டின் உடன்படிக்கையை மீண்டும் அல்படுத்துக !


1987 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இந்திய – இலங்கை உடன்படிக்கையை மீண்டும் அல்படுத்துமாறு இலங்கையிடம் இந்தியா கோரியுள்ளது. இந்த உடன்படிக்கையின் அடிப்படையிலேயே அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாணசபை முறைகள் தொடர்பான செயல்முறைகளுக்கு வழிகோலப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் வடமாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் இரண்டாகப் பிரிக்கும் உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்தது. வடகிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கு சமமாக இந்திய -இலங்கை உடன்படிக்கையை அல்படுத்த வேண்டும் என்பது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் எண்ணமாகும் எனவும் இந்தியத் தலைமைகள் இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாகவும் தூதரக வட்டாரத் தகவல் மூலம் தெரியவருகிறது. வடக்கில் பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கு இந்திய அரசு பூரண ஒத்துழைப்பை இலங்கைக்கு வழங்கியுள்ளதால் இப்போது இந்தியா இலங்கை உடன்படிக்கையை அல்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்ற கருத்து நிலவுவதாகத் தெரியவருகிறது. இந்தியாவின் இந்தக் கோரிக்கை தொடர்பாக அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்தியாவுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளன. அதற்கு முன்னர் ஆரம்பக் கட்டம் பேச்சுவார்த்தைகளை நடத்தும் பொருட்டு அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் அடுத்த வாரம் புதுடில்லி செல்லவுள்ளார்.

உண்மையை நிரூபிக்கும்வரை தொடரப்போகும் போர்க்குற்றச்சாட்டு..

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப்போரின் போது போர்க்குற்றங்கள் நடந்ததாக இலங்கை அரசுக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்ச்சியாக வரத்தொடங்கியுள்ளது. அடுத்தடுத்து சனல்4 தொலைக்காட்சி இரண்டு ஒளிப்பதிவுகளை வெளியிட்டது. முதலாவது ஒளிப்பதிவு பொய்யானது என்று பாதுகாப்பு அமைச்சு உள்ளூர் நிபுணர்களைக்கொண்டு கூற வைத்தது. ஆனால் இதுகுறித்து ஆய்வு நடத்திய அமெரிக்க நிபுணர்கள் அது உண்மையானதே என்று கூறியிருந்தனர்