திங்கள், 24 மே, 2010

சிறுமியைக் கடத்தும் முயற்சி சாவகச்சேரியில் முறியடிப்பு

சாவகச்சேரி நவீன சந்தைப் பகுதியில் வைத்து ஆறு வயதுச் சிறுமி ஒருவரைக் கடந்த வெள்ளிக்கிழமை கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் முள்ளிவாய்க்கால் பகுதி யில் கணவனை இழந்த பெண் ஒருவர் தனது உறவினரைப் பார்ப்பதற்கு வவுனியா செல்வதற்காக சாவகச்சேரிக்கு வந்திருந்தார். அங்கு இவரது ஆறு வயது மகளை நவீன சந்தை விறாந்தையில் விட்டு விட்டு சந்தைக் குள் மரக்கறி வாங்கச் சென்றி ருந்தார். மரக்கறி வாங்கிவிட்டு அவர் வந்து பார்த்தபோது மகளைக் காணாது அப்பகுதி முழுவதும் தேடிவிட்டுக் கடைசியாகப் பொலிஸ் நிலை யத்திலும், சாவகச்சேரிப் புலனாய்வுப் பிரிவி லும் முறையிட்டார். இதையடுத்து புலனாய்வுத்துறையினரும் தேடுதல் வேட்டையில் இறங்கினர். இதன் பயனாக இரவு 7மணியளவில் சாவகச்சேரி டச்சு வீதியிலுள்ள பேக்கரி ஒன்றுக்கு முன் பாக உள்ள மிதிவண்டி திருத்தும் நிலை யத்தில் காணாமல்போன சிறுமி கண்டு பிடிக் கப்பட்டார். அங்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்த வேளையில் கடத்திச் சென்ற நபர் அங்கு வந்தபோது மிதிவண்டி திருத்தும் நிலைய உரிமையாளர் அவரை அடையாளம் காட்டினார். சிறுமியைக் கடத் திச் சென்ற நபர் நிலைமை அறிந்து ஓடத் தொடங்கினார். எனினும் நின்ற பொதுமக்க ளும் பொலிஸாரும் அந்த நபரைத் துரத்திச் சென்று பிடித்தனர். மட்டுவிலைச் சேர்ந்த இந்நபர் தனிப் பட்ட பகை காரணமாகவே சிறுமியை கடத் தியதா கக் கூறப்பட்டது. இந்நபரை பொலி ஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக