புதன், 18 ஆகஸ்ட், 2010

விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் ஆபத்தானவர்கள்.........

கே.பியை நம்புகிறேன் ஆனால் புலிகளால் மூளைச் சலவை செய்யப்பட்டவரை நம்பத்தயாரில்லை..காடுகளில் தொடர்ந்து இராணுவம் நிறுத்தி வைக்கப்படும். இலங்கை அரசிடம் சரணடையாத, அடையாளம் காணப்படாத விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் ஆபத்தானவர்கள் என்று தாம் கருதுவதாக இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்

மேஜர் மாதவன்

நமது காலம் போரில் மலர்ந்தது. போரின் பாடலை நாங்கள் பாடினோம். அதை மாதவனும் பாடினான். போரின் நாட்களில் நாங்கள் தீயென இருந்தோம். அதில் மாதவனும் கனன்றான். மாதவன் மிக இளைய வயதில் தேசப்பற்றோடும் விடுதலைக் கனவோடும் போராட்டத்தில் இணைந்தவன். தன்னுடைய பயணம் தாயக விடுதலையில்தான் என ஆழமாக நம்பியவன்.  எல்லோரையும் வியப்பூட்டும்படியாக மாதவனுடைய செயற்பாடுகள் இருந்தன. அன்பில் விளைந்த மனம் இவனுடையது.

மண்டியிட்டு யாசகம் கேட்கின்றேன்.........

ஓட்டிப்போன வயிற்றோடும் -குழி
விழ்ந்த கன்னத்தோடும் -பசி
மயக்கதோடும் -நான்
கேட்கும் யாசகம் எனக்கில்லை...என் இனத்தின் சந்ததிக்கு -வன்னிக்குள்
வெட்டவெளியில் சுட்டெரிக்கும் வெயிலும்
கொட்டும் மழையிலும் தவிக்கும்-என்
இனத்தின் மீட்சிக்காய் நான்.....மண்டியிட்டு யாசகம் கேட்கின்றேன்
உங்களிடம் அவர்களை -நீங்கள்
தூக்கி சுமக்கவேண்டாம் ஒரு கைகொடுங்கள்
மீண்டும் இமயமாய் நிமிர்ந்துகொள்வார்கள்....!!

தென்னிலங்கை வியாபாரிகளின் தகாத செயற்பாட்டால் வாள்வெட்டு !.

தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த தளபாட வியாபாரிகள் மூவர். வீதியால் சென்று கொண்டிருந்த மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதன் விளைவாக மோட்டார் சைக்கிளில் வந்த சுமார் 10 பேர் கொண்ட மர்ம நபர்கள் கொக்குவில் பகுதியில் துணிகரத் தாக்குதல் ஒன்றை நடத்தி விட்டு மாயமாக மறைந்துள்ளார்கள்.

இராணுவத்தின் தொண்டர் படையணியில் கே.பி ?.

விடுதலைப்புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக செயற்பட்டு வந்த கே.பி என்ற குமரன் பத்மநாதனை இராணுவத்தின் தொண்டர் படையணியில் இணைந்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக "சதிமெத லங்கா" பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
முப்படைகளின் தளபதியான ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் நிர்வாகத்துறையுடன் சம்பந்தப்பட்ட கௌரவ பதவியை கே.பிக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

யாழில் மீண்டும் படையினரின் சோதனைக் கெடுபிடிகள்.

யாழ்ப்பாணத்தில் வழமைக்கு மாறாக படையினர்  கோப்பாய், அச்சுவேலி, மிருசுவில், நாவற்குழி பகுதிகளில் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இவ் வீதிகள் ஊடாக போக்குவரத்தில் ஈடுபட்ட அனைத்து வாகனங்களும் வழிமறிக்கப்பட்டு தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் இளைஞர்கள் துருவித் துருவி விசாரிக்கப்பட்டனர்.

வன்னி பெண்கள் மீதான.............


பல உயிர்களையும் , சொத்துகளையும் இழந்து தமது அன்றாட வாழ்வாதரத்திற்க்கு கையேந்தும் பெண்களை இனம்கண்டு கவர்ச்சிகரமான சலுகைகளையும்,     சம்பள கொடுப்பனவுகளின் ஊக்கதொகைகள் தருவதாக கூறியே அண்மையில் கிளிநொச்சியில் பகுதியில் பல இளம் யுவதிகளை தேர்வு செய்து கொண்டது.