வியாழன், 8 ஜூலை, 2010

இந்திய - சீனா யுத்தத்தின் முடிவில் இலங்கைத் தீவு இரண்டாகும்! பகுதி 02

உலகின் ஏனைய நாடுகளின் தொழிலாளரை விடவும் இவர்களுக்கு உயர்ந்த ஊதியம், சலுகைகள், வீட்டுவசதிகள், சமூக நலன்பேண் நடவடிக்கைகள் என்பவற்றின் மூலமும் கைத்தொழிலை யுத்ததளபாட தயாரிப்புக்கு மாற்றியமைப்பதன் மூலமும் இத் தொழிலாளர்களுக்கு பங்கிடப்படும் ஒருவகை உயர்தபட்ச ஊதியம் என்பவற்றின் வாயிலாகவும் இத் தொழிலாளப் பிரபுத்துவ ஏற்பாடு சாத்தியமானது. உலகின் ஏனைய தொழிலாளி வர்க்கங்களையும், ஒடுக்கப்படும் இனங்களையும் இராணுவ ரீதியில் கொன்றொழிக்கவும் ஒடுக்கவும் மேற்படி தொழிலாளி வர்க்கம் தயாரிக்கும் இராணுவ தளபாட கைத்தொழில் உற்பத்தி ஒரு காரணியாய் செயல்படுதையும் இங்கு அவதானித்தல் அவசியம்.

இந்திய - சீனா யுத்தத்தின் முடிவில் இலங்கைத் தீவு இரண்டாகும்! பகுதி 01

சர்வதேச அரசியல் உறவுகளைச் சரிவரப் புரிந்து அவற்றை மிகுந்த மதிநுட்பத்துடன் கையாள்வதிலேயே தமிழீழ மக்களின் எதிர்காலம் பெரிதும் தங்கியுள்ளது. தேசிய இனப்பிரச்சனை என்பது ஒருபோதும் ஒர் உள்நாட்டுப் பிரச்சனை அல்ல. அது எப்போதும் ஒரு சர்வதேச பிரச்சனை என்ற மிக எளிமையான அடிப்படை உண்மையை பெரிதும் கருத்திலெடுக்கத் தவறியமையின் விளைவே கடந்த ஒரு நூற்றாண்டிற்கும் மேலான தொடர் தோல்விகளுக்கான மையப் புள்ளியாய் உள்ளது. இவ் வகையில் சர்வதேச யதார்த்தத்தை சரிவரப் புரிந்து கொள்ளவும், அதற்குப் பொருத்தமான வகையில் எம்மை மறுசீரமைத்து ஒழுங்குபடுத்திக் கொள்ளவும் வேண்டிய இரு முக்கிய பணிகள் உடனடித் தேவைகளாய் உள்ளன.

தமிழனுக்கு சிவப்புக்கொடி சிங்களவனுக்கு பச்சை கோடி

இலங்கை ஓர் ஜனநாயக நாடு என்ற முறையில் மக்களுக்கு தமது கருத்துக்களைச் சொல்வதற்கும் குறித்த ஒரு விடயத்திற்கெதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கும் உரிமை உள்ளது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மீண்டும் பாரத பரதநாட்டிய அரங்கேற்றம் ..............

இந்தியா சென்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் தமிழ் மக்களின் தேவைகள் என்ன என்பதை பரிசீலித்து அதற்கு ஏற்றவாறு இந்தியா செயற்படும் எனவும் தமிழ் அரசியல்வாதிகளின் தேவைகள் யாவும் தமிழ் மக்களின் தேவைகளாகாது எனவும் கூறப்பட்டுள்ளது.

புதிய நகைச்சுவை கலந்த திரைப்படம் ..................

அமைச்சர் விமல் வீரவன்ச ஆரம்பித்திருக்கும் சாகும் வரையிலான உணவிரதப் போராட்டத்திற்கான திரைக்கதை வசனம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவால் எழுதப்பட்டதாகவும் இதில் பிரதான நகைச்சுவைப் பாத்திரமே அமைச்சர் விமல் வீரவன்ச எனவும் ஜனநாயக தேசிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமாரதிசாநாயக்க தெரிவிக்கின்றார்.