சனி, 5 ஜூன், 2010

இந்தியாவை வைத்து காரியம் சாதிக்க முனைகிறதா இலங்கை ?

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு நாளை மறுதினம் இந்தியாவுக்குப் பயணமாகவுள்ளார். இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர், மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் இது.
இலங்கையில் ஜனாதிபதியாகப் பதவியேற்கின்ற எவரும் முதலில் இந்தியாவுக்குத் தான் பயணத்தை மேற்கொள்வது வழக்கம். ஆனால், மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் இந்தியாவுக்குப் பயணம் செய்யவில்லை. ரஷ்யாவுக்குத் தான் முதற்பயணத்தை மேற்கொண்டார்.

பாலித இஸ்ரேலின் மனித உரிமை மீறலை விசாரிக்க நியமனம்; ஐ. நாவுக்கு மதி கெட்டு விட்டதா?



பலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசாரணை ஆணைக்குழுவின் தலைமைப் பொறுப்பிற்கு பாலித கொஹன தெரிவு செய்யப்பட்டுள்ளார். இனப்படுகொலை செய்த ஓர் நாட்டின் பிரதி நிதியினை இன்னொரு நாட்டின் மனித உரிமை மீறல்களை விசாரிக்க எப்படி அனுமதிக்கின்றது.

மட்டக்களப்பு மீளக்குடியேறிய மக்களின் துயரம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் முன்னர் இருந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் வாழும் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக முன்னணிப் பத்திரிகையான இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
இப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த கிணறுகள் அனைத்தும் வரட்சியால் வற்றிவிட்டதால் அம் மக்கள் குடிநீரைப் பெறுவதற்கு பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அப் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

முள்ளிவாய்க்கால் மூட்டிய பெருந்தீ!


”தொடர்ந்து வடக்கே போய்க் கொண்டிருந்தால் தெற்கே தான் மிதக்க வேண்டும். அதுவும் தொடங்கிய இடத்திற்தான்.”
வரலாற்றின் பக்கங்களில் முள்ளிவாய்க்கால் ஒரு பாடநூல். இதன் தொகுப்பாசிரியர் மகிந்த ராஜபக்ச. இதன் உப ஆசிரியர்கள் பல்வேறு வெளிநாடுகளும், நாமும் தான்.
நாம் எதிரியை நோக்கி கேள்வி எழுப்ப வேண்டியதில்லை. ஏனெனில் அவன் எதிரி, அவன் எதிரி மட்டுமல்ல, அறநெறிகள் சிறிதும் இல்லாத எதிரி. ஆதலால் நாம் வீழ்ந்துபட்டதற்கான கேள்விகளை முதலில் எம்மை நோக்கியும், அடுத்து சர்வதேச சமூகத்தை நோக்கியும் எழுப்ப வேண்டி உள்ளது.

எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம்,,,,

தென் கொரியாவுடன் எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்று வட கொரியா எச்சரித்துள்ளது. அண்மையில் வட கொரிய போர் கப்பல் ஒன்று, தென் கொரிய கடல் எல்லைப் பகுதியில் மர்மமான முறையில் மூழ்கடிக்கப்பட்டது.


இந்நிலையில் தென் கொரியாதான் தங்கள் நாட்டு கப்பலை மூழ்கடித்ததாக வட கொரியா குற்றம் சாற்றியது.அத்துடன் தென் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படுவதாகவும் அது கூறியிருந்தது. ஆனால் கப்பலை தாங்கள் மூழ்கடிக்கவில்லை என்று தென் கொரியா அதனை மறுத்தது. இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வந்தது.
இந்நிலையில் ஜெனீவாவில் ஆயுத ஒழிப்பு தொடர்பாக நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய வட கொரிய தூதரக அதிகாரி ரி ஜாங் கான், கொரிய தீபகற்பத்தில் தற்போது நிலவும் சூழல் மிகவும் அபாயகரமாக உள்ளது என்றும், எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்றும் கூறினார்.
வட கொரியாவின் போர் கப்பலை மூழ்கடித்து நிலைமையை மோசமாக்கியது தென் கொரியாவும், அமெரிக்காவும்தான் என்றும் குற்றம் சாற்றிய அவர், ஆனால் இந்த இருநாடுகளும் வட கொரியவுக்கு எதிராக மேலும் பொருளாதார தடைகளை விதிக்க கோருவதோடு,வட கொரியாவை தனிமைப்படுத்த முயற்சிப்பதாகவும் கூறினா

ஜூன் 5ல் உலக சுற்றுச் சூழல் தினம்..

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச் சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது. 2009 ம் ஆண்டுக்கான உலக சுற்றுச் சூழல் தினத்தை ‘வானிலை சவாலை எதிர்கொள்ள ஒன்றுபட வேண்டும்’ என்ற கருப்பொருளின் அடிப்படையில் கொண்டாட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இந்த நாளை சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தினமாக ஐக்கிய நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.

தமிழீழத்தை படைத்தளிப்போம்!!-கண்மணி

கடந்த ஆண்டு மே திங்களில் தமிழீழ விடுதலை போராட்டக் களத்தில் நான்காம் கட்ட இறுதி நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டிருந்தது. இறுதியாக தேசிய தலைவர் கொல்லப்பட்டுவிட்டதாக ஊடகங்கள் அறிவித்தன. இந்திய ஊடகங்கள் சிங்கள பேரினவாதத்தின் மூளையைக் கொண்டு தமது குரலில் பேசியது. தேசிய தலைவரின் அடையாளம் கொண்ட ஒரு உருவத்தை கருணா என்கின்ற இன துரோகியை வைத்து அடையாளம் காட்டினார்கள். பேய் அறைந்ததைப் போல் காணப்பட்ட கருணாவின் முகம் ஒரு சிறு சலனம் இல்லாமல்---