சனி, 5 ஜூன், 2010

பாலித இஸ்ரேலின் மனித உரிமை மீறலை விசாரிக்க நியமனம்; ஐ. நாவுக்கு மதி கெட்டு விட்டதா?



பலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசாரணை ஆணைக்குழுவின் தலைமைப் பொறுப்பிற்கு பாலித கொஹன தெரிவு செய்யப்பட்டுள்ளார். இனப்படுகொலை செய்த ஓர் நாட்டின் பிரதி நிதியினை இன்னொரு நாட்டின் மனித உரிமை மீறல்களை விசாரிக்க எப்படி அனுமதிக்கின்றது.

இந்த நியமனத்தின் மூலம் ஐக்கிய நாடுகள் பாலஸ்தீனர்களை ஏமாற்ற நினைக்கின்றதா? அல்லது இஸ்ரேலை காப்பாற்ற முனைகின்றதா?
இஸ்ரேலின் நடவடிக்கைகளினால் பலஸ்தீன மக்கள் மற்றும் ஏனைய அரேபியர்களுக்கு எதிர்நோக்கி வரும் உரிமை மீறல்கள் தொடர்பிலேயே பாலித கொஹணே தலைமையிலான ஆணைக்குழு விசாரணைகளை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விசாரணைகளை மேற்கொள்ளும் நோக்கில் எகிப்து, சிரியா மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளுக்கு இந்தக் குழு விஜயங்களை மேற்கொள்ள உள்ளது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆராயும் விசாரணைக் குழு 1968ம் ஆண்டு முதல் பணிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேற்குக் கரை, காஸா பள்ளத்தக்கு, கிழக்கு ஜெருசேலம் மற்றும் சிரிய மலைப்பிரதேசம் ஆகியவற்றில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து குழுவினர் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபைக்கு ஆட்பற்றாக்குறையா அல்லது மதி நுட்பகோளாறா என்றே இந்த நியமனம் மூலம் கேட்கவேண்டியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக