புதன், 11 ஆகஸ்ட், 2010

கிழக்கைப் போன்று யாழ்ப்பாணத்திலும் சிவில் சட்டம் வலுப்படுத்தப்படும்.



யாழ்ப்பாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற சிவில் சட்டமானது கிழக்கு மாகாணத்தைப் போன்று மேலும் வலுப்படுத்தப்படும் என யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நேவின் பத்மதேவா தெரிவித்தார்.


இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தம் முடிபுற்ற பின்னர் யாழ்ப்பாணத்தில் சுமுகமான சமாதான நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் அண்மைக்காலமாக விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் சிலரை மிகவும் இரகசியமான முறையில் குடாநாட்டின் பிரதேசங்களில் கைது செய்ததன் விளைவாகவும் , அவர்கள் வழங்கிய தகவல்களின் பிரகாரம் பல இடங்களில் மறைத்து வைக்கபட்ட வெடிபொருட்கள் மீட்கபடுவதுமான சம்பவங்கள் இடம்பெறுவதால் இறுக்கமானதொரு சட்ட, பாதுகாப்பு நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொள்வார் இந்தச் சூழலில் பொது மக்கள் பயம் அற்றவர்களாக வாழ வேண்டும். இதற்காக யாழ்ப்பாண பொலிஸார் தமது அளப்பரிய சேவையினை மேற்கொள்ள முன்வந்துள்ளனர்.


இதனடிப்படையில் சட்டத்தை சீர் குலைப்போருக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இதன் முதற்கட்டமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை விசேட நட வடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதற்காக 180 பொலி ஸாரும் அவர்களுக்குத் தேவையான வாகனங்களும் பயன் படுத்தப்பட்டது. மாலை 6 மணி தொடக்கம் நள்ளிரவு 12 மணி வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


இதன்போது பாரிய குற்றங்களை விளைவித்தவர்கள், மறைந்திருந்த பிடியாணைக்குரியவர்கள், சட்டவிரோத மது மற்றும் போதைப் பொருட்களை விற்பனை செய்தவர்கள், திருடர்கள் உட்பட 66 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறான நடவடிக்கை கள் யாழ்ப்பாணத்தில் விரிவு படுத்தப்பட்டு பொதுமக்களின் பாதுகாப்புக்கு பொலிஸார் உறுதுணையாக இருப்பார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்



அந்தண சிரேஷ்டர்களுக்கு!.........

அந்தண சிரேஷ்டர்களுக்கு ஓர் அன்பு மடல்



அந்தண சிரேஷ்டர்கள் அத்தனை பேருக்கும் முதலில் அன்பு வணக்கம். சில வருடங்களுக்கு முன்பும் உங்களுக்குக் கடிதம் எழுதிய ஞாபகம்.கடிதம் எழுதியதன் முடிபு எம்மீதான கோபமாகவே இருந்தது. பரவாயில்லை. சரியைச் சரியெனவும், பிழையைப் பிழையயனவும் கூறிவிடுவது பாவத்திலிருந்து நாம் விடுபடுவதற்கான வழியாகும்.


எனவே சிலவற்றைக் கூறித்தான் ஆக வேண்டும். நேற்று முன்தினம் கீரிமலைக்குச் சென்றோம் ஆடி அமாவாசை. தந்தையர்க்கும் அவர்தம் முந்தையர்க்கும் பிதிர்க்கடன் செய்யும் நாள். ஏகப்பட்டவர்கள் பிதிர்க்கடன் செய்யவந்திருந்தார்கள். கீரிமலை உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த போதிலும், அந்த புண்ணிய சமுத்திரத்தில் நீராடி பிதிர்க்கடன் தீர்க்க வேண்டும் என்ற பேரவா அவர்களிடமிருந்ததை காண முடிந்தது.

கொலை முயற்சியின்...........


திருகோணமலையில் சமாதானமும் சகச நிலையும் வந்துவிட்டது என்று நினைத்து சுவிஸில் வசித்து வந்த கந்தையா சிவபாலன் குடும்பத்தினர் திருகோணமலைக்கு சென்றனர். ஆனால் அங்கே அவரை குறிவைத்து யுத்தம் நடந்த காலத்தில் நடப்பதைப் போல் தலைக்கவசம்(Helmet) அணிந்து முகத்தை மறைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்தோரால் 02.08.2010 மாலை
 கழுத்தறுத்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்கள். அவர் தெய்வாதீனமாக கழுத்தில் வெட்டுக்காயத்துடன் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளார்.

மேற்படி இவர் கடந்த தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட கந்தையா - ஆனந்தராஜா என்பவரின் சகோதரன் எனும் காரணத்தினாலும் ,இவ் கொலை முயற்சி நடந்தேற முயன்று இருக்கலாம் என இவ்வூர் மக்கள் கருத்து தெரிவித்தனர்..

இளம் யுவதி மயக்கமடைந்த நிலையில் மீட்பு...!

துன்னாலைக் குடவத்தைப் பகுதியில் இளம் யுவதி ஒருவர் மயக்கமடைந்த நிலை யில் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட் டுள்ளார்.இச் சம்பவம் நேற்றுக் காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாகத் தெரிய வருவதாவது,
துன்னாலை குடவத்தை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு அருகில் நேற்று அதி காலை 2.30 மணியளவில்