வியாழன், 2 டிசம்பர், 2010

தமிழ் அரசியல்வாதிகள் போர்க்குற்ற விசாரணைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை!!!

"ராஜபக்ச சகோதரர்களும், சரத் பொன்சேகாவும் போற்குற்றத்திற்கு பொறுப்பாளிகள். ஆனால் போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு இந்த அரசாங்கம் பதவியில் இருக்கும் வரையில் எந்தவொரு விசாரணையும் நடைபெறப் போவதில்லை. அதே நேரம், தமிழர் தரப்பிலும் போர்க்குற்ற விசாரணைக்கு ஒத்துழைப்பு கிட்டவில்லை...
ஆயுதங்களை கையளித்துவிட்டு சரணடையக் கேட்டவர்கள் எல்லோரும் மெளனமாக இருக்கின்றனர். சொல்கைம் எங்கோ ஓடி மறைந்துவிட்டார்.. வாயே திறப்பதில்லை.
சிங்களம் தமிழினப் படுகொலையை இன்று நேற்றல்ல 1952 இல் இருந்து ருசித்து ருசித்து எந்த ஒரு சர்வதேச விசாரணைக்கும் இடமின்றி செய்து வருகிறது. இந்திய வல்லாதிக்கம் அதற்கு எப்போதும் உறுதுணையாக இருந்து காய்நகர்த்தி தமிழின அழிவை ஊக்குவித்து வருகிறது.
இந்த இரண்டும் இந்தப் பூமிப்பந்தில் எனியும் இருக்கத்தான் வேண்டுமா...???!
தற்போதைக்கு இந்தக் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தினாலும்.. கொசவோ போன்ற ஒரு நிலையை ஏற்படுத்தி.. மாண்ட இந்த வீரர்களினதும்.. மக்களினதும் கனவான தமிழீழம் மீட்டெடுப்பதே இவர்களுக்கு செய்யும் நன்றிக்கடனாக இருக்கும்.
உயிர் வாழும் ஒவ்வொரு இனமானமுள்ள தமிழனும்.. அதற்காகப் பாடுபட வேண்டும்..!

மானத்தி அவள்......தமிழச்சி!!

 மண்ணின் விடுதலைக்குப் போராடிய தமிழச்சியின் நிர்வாணம் இணையமெங்கும் ஒளிபரப்பு;
உயிரிருந்தும் உலவும் நாம் - அதை கண்டும் - சாகாத; இழி பிறப்பு!!

27-11-2010 தமிழீழத்தில் இடம் பெற்ற தமிழீழ மாவீரர் நாள் சுடரேற்றல் விபரங்கள் கிடைக்கபெற்றுள்ளன....

1. திருகோணமலை ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம் அதனை அண்டிய பகுதிகளில் விடுதலைக்கு விதையானவர்களுக்கான பொதுச்சுடரினை விமல் அவர்களும்






2. திருகோணமலை வெளியகுளம் மாவீரர் துயிலுமில்லம் அதனை அண்டிய பகுதிகளில் விடுதலைக்கு விதையானவர்களுக்கான பொதுச்சுடரினை குகன் அவர்களும்

புலிகளின் படைத்தளபதிகளில் ஒருவரான ரமேஷ்........

விடுதலைப் புலிகளின் படைத்தளபதிகளில் ஒருவரான ரமேஷ் அவர்கள் உட்பட முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதிப்போரில் அரசியல் துறைப்பொறுப்பாளர் நடேசன், சமாதானச் செயலக பொறுப்பாளர் புலித்தேவன் அவர்கள் ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்ததாக முன்பு செய்திகள் வெளிவந்திருந்தமை யாவரும் அறிந்த உண்மை. ஆனால் பிரித்தானியாவின் ரெலிகிராப் மற்றும் இன்டிபென்டன் ஆகிய பத்திரிகைகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் படையணியின் தளபதிகளில் ஒருவராக ரமேஷ் அவர்கள் ராணுவத்தினரிடம் சரணடைந்த போது ராணுவத்தினரால் விசாரிக்கப்படும் காணொளியை வெளியிட்டுள்ளது