புதன், 22 டிசம்பர், 2010

வடலிகள் வானுயரும்........

ஏன் மொட்டைப் பனைமரங்களைப் பார்த்து ஏங்குகிறீர்கள். கீழே நிலத்தைப் பாருங்கள். வடலிகள் வளர்ந்து வருகின்றன. வடலிகள் வானுயரும்’

அடர்ந்த காடுகளுக்குள் மீள்குடியேற்றியுள்ள அரசு.

வன்னிப்பிராந்தியத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் தொடர்ந்தும் ஏதோ ஒரு வகையில் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருவதாகவும் தொடர்ந்தும் இன்னல்களை சந்தித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை அரசு பிரச்சாரம் செய்கின்ற போல அல்லாமல் நிவாரணக்கிராமங்களில் இருந்து அழைத்துவந்து எங்களை அடர்ந்த காடுகளுக்குள் விசப்பாம்புகளுக்கும், யானைகளுக்கும் இரையாக்குவதற்காகவே மீள்குடியேற்றியுள்ளதாக அம்மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் மாந்தை மேற்குப்பிரதேசச்செயலாளர் பிரிவுக்குட்பட்சன்னார், ஈச்சலவக்கை,பெரியமடு கிராமத்தைச்சேர்ந்த மக்களே அடர்ந்த காட்டுப்பகுதியினுள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

விக்கிலீக்ஸ் வன்னி வைத்தியர்களின் இரகசியத்தை! போட்டுடைத்தது.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது யுத்த சூனிய வலயத்தில் பணிபுரிந்த 5 வைத்திய அதிகாரிகள், அழுத்தங்களுடன், பயிற்றுவிக்கப்பட்ட கருத்துகளையே, 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்ததாக இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்க உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரி ஜேம்ஸ் மோர், ஐக்கிய அமெரிக்காவிற்கு கூறியுள்ளதாக விக்கிலீக்ஸ்  மற்றுமொரு புதிய தகவலை வெளியிட்டுள்ளது.

கருணாவிடம் உரிமையினை பெறப்போகிறாராம் மாவை!

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தினை மிகப் பாரிய அழிவை நோக்கி இட்டுச் சென்ற கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை யாழ்ப்பாண எம்.பி மாவை சேனாதிராசா வாயாரப் புகழ்ந்து தள்ளியதுடன் அவரிடம் இருந்து உரிமையினைப் பெற்றுக் கொள்ளப்போவதாகத் தெரிவித்துள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் வேதனையினைத் தோற்றுவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டம், துணுக்காப் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் மாவை சேனாதிராசா உரையாற்றும் போது கருணாவை வாயாரப் புகழ்ந்திருக்கின்றார்.