செவ்வாய், 25 மே, 2010

இரத்தத்தாலும், கண்ணீராலும் எழுதப்பட்ட வரலாறு.............


இலண்டனில் அமைந்துள்ள ஒரு உணவு விடுதி.
ஒரு நிறைமாத கர்ப்பிணித் தாயும், அவரது மகனும் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தத் தாய் ஒரு இந்தியப் பெண்மணியாகவோ அல்லது இலங்கைப் பெண்மணியாகவோ இருக்கலாம். அத்தாயின் அடையாளம் அப்படித்தான் இருந்தது.
ஆனால் அக்குழந்தை ஒரு பிரித்தானியருக்கு பிறந்தவராக இருக்கவேண்டும். அக்குழந்தையின் தோற்றம் அப்படித்தான் இருந்தது. ஆனால் எனது பிரச்சினை அதுவல்ல.

நவீன வசதிகளுடன் செயற்கை 'கை'

அதிகரிக்கும் விபத்துகளால் ஏராளமானவர்கள் உடல் உறுப்புகளை இழக்கிறார்கள். வேறுசில பயங்கர வியாதிகளாலும் உடல் உறுப்புகள் செயலிழக்கலாம். இதுபோல திடீர் சம்பவங்களால் கை, கால்களை இழந்தவர்கள் வாழ்வே திசைமாறிவிடும்.
செயற்கை கை, கால்கள் பொருத்திக் கொள்ளும் வசதி இருக்கிறது. ஆனாலும் அவை இயற்கையான கை, கால்கள்போல செயல்படாது. பெயரளவில் ஒரு அங்கமாகவே இருக்கும்.
இந்தக் குறையை களைந்து விபத்தில் கைகளை இழந்தவர்களுக்கு மீண்டும் மறுவாழ்வு அளிக்கும் விதத்தில் நவீன வசதிகள் நிறைந்த செயற்கை கை உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை உள்ள மற்ற செயற்கை கைகளைவிட இது கொஞ்சம் நவீனமானது. குறிப்பாக `புளூடூத்’ தொழில்நுட்பம் முலமாக செயல்படக்கூடியது. இதன் உதவியால் எந்த விதமான பொருட்களையும் இயற்கை கைகளைப் போலவே பற்றிப்பிடித்து தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். 5 விரல்களையும் தனித்தனியாக இயல்பான விரல்கள்போல இயக்க முடியும். இதன் உதவியுடன் 90 கிலோ எடையைக் கையாள முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு. ஸ்காட்லாந்தைச் சேர்ந்த டச் பயோனிக்ஸ் நிறுவனம் இந்த செயற்கை கையை வடிவமைத்துள்ளது. இதற்கு `ஐ லிம்ப் ஹேண்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. 2007-ம் ஆண்டே வடிவமைக்கப்பட்ட இந்த செயற்கைக் கை தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. விபத்தில் கையை இழந்த தீயணைப்பு வீரர் ஐயன் ரெய்டு என்பவருக்கு இந்த செயற்கைக் கை முதல் முறையாக பொருத்தப்பட்டது. `கை துண்டிக்கப்பட்டதால் இழந்த உணர்வுகளை மீண்டும் பெற்றிருப்பதாகவும், அனைத்து வேலைகளையும் தடையின்றி செய்ய முடிவதாகவும்’ அவர் தெரிவித்துள்ளார். அங்ககீனம் அடைந்தவர்களுக்கு அளவற்ற பயன்தரக் கூடியது இந்தக் கை!

உணர்வலைகள்......................?

2009 மே மாதத்தில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமிடையிலான யுத்தம் முடிவுக்கு வந்தது. ஆனால், இந்த இறுதி யுத்தம் மிகப் பெரிய மனிதப் பேரழிவுகளை ஏற்படுத்தியது. உலகத்தின் கனத்த மௌனத்தின் முன்னே, அந்த மௌனத்தைச் சாட்சியாக வைத்து நடத்தப்பட்ட மனிதப் பேரழிவானது, மனித நாகரிகத்தையே தலைகுனியவைக்கும் அளவுக்குக் கொடுமையானது.

மனிதர்கள் எந்த வகையிலும் பெறுமதியற்றவர்கள் என்று ஆக்கப்பட்ட கணங்கள் அந்தப் போர்க்களத்தில், அந்த நாட்களில் நடந்தேறியது. போர் வெற்றி எல்லா விழுமியங்களையும் அழித்த நாட்கள் அவை.

மாவீரர்களின் எண்ணங்களுக்கு ஏற்புடையவர்களாக...................


எதிரிகளிடமிருந்து நாம் பாடம் கற்க வேண்டும். சில நேரங்களில் அவர்களாகவே தமது அறியாமையை, அவர்கள் கற்றறிந்ததை, நாம் வெற்றிக் கொள்வதற்காக நம்மிடம் தாரைவார்த்துவிடுவார்கள். நாம் மண்ணைக் கீறி விதைத்த வித்துக்களிலிருந்து அறுவடைக்கான களத்திற்கு வருகிறோம். நாம் விளைச்சலை களத்துமேட்டில் சேர்க்கும் கட்டாய நிலைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறோம்.

வீழ்ச்சி என்பது நிரந்தரமானது அல்ல. ..................!


ஆதிக்க சக்திகள் எப்போதும் ஒரே மாதிரித்தான் இருந்திருக்கிறார்கள். அது ஜெர்மனாக இருக்கட்டும், இந்தியாவாக இருக்கட்டும், பிரிட்டனாக இருக்கட்டும், ரஷியாவாக இருக்கட்டும். ஆதிக்கமும் அதன் அடங்காப்பிடாரித் தனமும் வெவ்வேறாக இருந்ததில்லை. பல பத்தாண்டுகளை கடந்து நாம் போய் பார்த்தாலும், போராளிகள் சித்ரவதைப்பட்ட...ு இறந்துபோயிருக்கிறார்கள்.

உலக நாடுகள் பல வழங்கிய அதிநவீன ஆயுதங்களே புலிகளைத் தோற்கடிக்க உதவியது-திவயின

புலிகள் இயக்கத்தினருக்கு எதிராக அரசபடையினர் மேற்கொண்டிருந்த வன்னி இராணுவ நடவடிக்கைகளிலும் அதன் இறுதிக்கட்ட இராணுவ நடவடிக்கைகளிலும் பயன்படுத்துவதற்காக ஐக்கிய அமெரிக்கா, சீனா, இத்தாலி, கனடா, பாகிஸ்தான், பிரிட்டன், பல்கேரியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து பல்வேறு நவீன தொழில் நுட்பங்களைக்கொண்ட கனரக மற்றும் இலகுரக ஆயுதங்கள் உபகரணங்களை அரசு கொள்வனவு செய்திருந்தது.

திரும்பும் இடமெங்கும் பயங்கரக் காட்சிகள் வன்னி இறுதிப் போரின் போது நம்பமுடியாத கோர அழிவுகள்!


வன்னியில் இறுதிப்போர் நடைபெற்றவேளை நினைத்துப் பார்க்க முடியாத, கோரமான அழிவுகள் நடைபெற்றி ருக்கின்றன. அந்தப் பகுதிகள் நம்பமுடியாத அளவுக்கு பயங்கரமான அழிவுகளைக் கொண்டிருக்கின்றன. எங்கும் அதிர்ச்சிதரும் காட்சிகளையே காண நேர்ந்தது.
இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.