செவ்வாய், 9 மார்ச், 2010

தமிழீழக் கோரிக்கை தோல்வியடைந்தால் இந்தியாவின் பூகோள அரசியல் ஓர் துக்க சாகரமாக மாறலாம்

நாராயணன் ‘டில்லி மூவர் அணி’ புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் சிங்கள சிறிலங்கா நடத்திய, தமிழினப் படுகொலையையும், தமிழரின் போராட்டத்திற்கு எதிரான போருக்கும் முற்று முழுவதுமாக டில்லியின் ஆதரவைப் பெற்றுக்கொடுத்த நாரணயனின் “டில்லி மூவர் அணி”, டில்லிக்கு சீனாவையே காரணம் காண்பித்தனர். ஆனால், இந்தியாவிற்கெதிரான தன்னுடைய யுத்த தந்திரத் திட்டத்தில் இந்தியாவைச் சுற்றி வளைக்க வெளிப்படையாக முயற்சிகளை மேற்கொண்டதும் மட்டுமன்றிப் பகிங்கரமாக அறிவிக்கவும் செய்த சீனாவின் பக்கம் செல்லும் இலங்கையை, தன்பக்கம் இழுக்கும் டெல்லியின் முயற்சிகள் அனைத்தும் பலனற்றுப் போனது மனவருத்தத்திற்குரியதே. நேரு - சூயென்லாய் ஆகியோரது கொள்கைச் சார்;பற்ற நாடுகள் அமைப்புகளின் (NAM) ‘தேனிலவு’ ஆண்டுகள் ; முடிந்த கையோடு, இந்தியா எதிர்பாராத நேரத்தில், அதன்; வட-கிழக்கு எல்லைகளில் படையெடுத்துப் பெருமளவிலான நிலப்பரப்பைக் கபளீகரம் செய்த சீனாவின் அதிரடியான நிலை இன்றும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு அச்சுறுத்தலாக அமைந்திருப்பதைப் பிரபல ஆய்வாளர்கள் உறுதிபடுத்துகின்றனர். தற்போதைய நிலையில், இந்தியாவைச் சுற்றியுள்ள அண்டை நாடுகளான பர்மா, பங்களாதேஷ், பாக்கிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளைத் தனது நேசமிகு நாடுகளாகச் சீனா உருவாக்கியிருக்கிறது. மே 2009 வரை, சிங்கள இலங்கையின் ஊடாகச் சீனாவால் இந்தியாவிற்கு வரக்கூடிய அபாயத்தைத் தமிழீழ நிர்வாகம் (விடுதலைப் புலிகள்) தவிர்த்தது. ஆனால், சிங்கள இலங்கையோடு கைக்கோர்த்துக் கொண்டு, இனப்படுகொலையை ஆதரித்ததன் மூலம், தமிழீழ நிர்வாகத்தால் கிடைத்துவந்த பலத்தைத் இந்தியா தூக்கியெறிந்தது என ஆய்வாளர் பத்திரக்குமார் ஆணித்தரமாகச் சுட்டிக்காட்டுகிறார். இலங்கையில் உள்ள இராணுவத் தளங்கள் வாயிலாக, இந்தியாவின் அமைதிப் பிராந்தியமான தென்னகத்தே, வரக்கூடிய சீனாவின் அச்சுறுத்தலை, நடேறி அடிகள், அனில் அத்லே போன்ற பிரபல ஆய்வாளர்கள் அறிவுறுத்தும் வகையில் விமர்சிக்கின்றனர். இலங்கையில் நிலைகொண்டுவிட்ட சீனாவின் அச்சுறுத்தல், தேசப்பக்தியுள்ள ஒவ்வொரு இந்தியனையும் கவலைப்படச் செய்தாலும், டில்லியில் இருக்கும் அரசியல் பீடத்தை அவை அசைக்கவில்லை என்றே தோணுகிறது. சீனாவால் ஏற்படும் பூகோள அரசியலில், தமிழீழத்தினால் இழந்த பாதுகாப்பை நிவர்த்தி செய்ய, அமெரிக்க - இலங்கையின் தொடர்பில் நிர்மாணிக்கப்பட வேண்டிய கொள்கைபற்றி, அமெரிக்க வெளியுறவுக்கான செனட் குழுவின், ஜான் கெர்ரி அறிக்கையில் தெளிவாக எடுத்துக் கூறப்பட்டது. இவ்விடயம் அமெரிக்காவை நேரடியாக அச்சுறுத்தாத போதும் இதை அமெரிக்கா அவசரமாகக் கவனத்தில் கொள்கிறது. ஆனால், தனக்கு மிக அருகாமையிலும் தனது பிராந்தியத்தில் உருவாகிவரும் இத்தகைய மிக முக்கியமான அச்சுறுத்தலை இந்திய கொள்கை வகுப்பாளர்கள் கருத்திலெடுக்காது, கும்பகர்ண தூக்கத்தில் ஆழ்ந்திருப்பது கவலை ஊட்டுகிறது. அரசியல், பொருளாதார-இராஜதந்திர ரீதிகளில் பெருந்தொகையான முதலீட்டையும் செய்து அமைதியான தெற்குப்புறத்தின் வாசற்படியில் இத்தகைய ஓரு அச்சுறுத்துலை கொண்டுவந்ததில் டில்லியின் மூவர் அணியே முக்கிய காரணம் ஆவர். இப்படியாக, ஆழங்காண முடியாத, ஆபத்தான செங்குத்துச் சரிவை நோக்கி, டில்லியின் இலங்கை-இந்திய கொள்கைகள் திசைதடுமாறி இழுபட்டுச் செல்கின்றன. நாராயணனின் தற்கொலைக்கு ஒப்பான கொள்கைகள், இந்திய தமிழ் நாட்டின் கரையோரங்களின் அருகே இதுவரை காலமும் இல்லாத அளவிலான, சீனாவின் ஆபத்தைக் கொண்டு வந்துள்ளன. நாராயணன், தமது குறுகிய நோக்குக் கொண்ட தமிழ் எதிர்ப்புக் கொள்கைகளை மூடி மறைப்பதற்காக, பூகோள அரசியல் ஒன்றைப் படைத்து, அதன் மூலம் டிக்சித்தைப் போன்று தலையிடும் கொள்கையைத் தவிர்த்து, அதற்கெதிரான இராஜபக்சேவை சந்தோஷப்படுத்தும் கொள்கையைத் தான் மேற்கொள்வதாக விளக்கம் கொடுத்தார். 1983-ல் டிக்சித் மேற்கொண்ட பிரதேசத் தலையீட்டுக் கொள்கை, அவரிடம் இலங்கையரசின் மதிப்பை ஏற்படுத்தி, அதன் விளைவாக 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை உருவாக்கியது. இதன் பலனாக, இலங்கை அரசானது இந்தியாவின் பிராந்திய வலுவிற்குப் போட்டியான வேறு சக்திகள் எதுவும் நேர்முகமாகவோ மறைமுகமாகவோ இலங்கையுடன் கொண்டாடுவது கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது, நாராயணனின் குறுகிய நோக்குக் கொண்ட கொள்கையினால், ஈழத்தமிழரின் தடைவலு இல்லாத இடத்து, சீனா, இந்தியாவின் பிராந்திய வலுவைச் சுலபமாகக் கட்டுப்படுத்தும் நிலையில் உருவாகிவிட்டது. அதே போல, டில்லி மூவர் அணியின் குறுகிய நோக்குக் கொண்ட பூகோள அரசியல் பணி மூலம், தமிழீழப் பாதுகாப்பை அழித்ததால் சிங்கள இலங்கையில் காலூன்ற, இந்தியாவிற்கு சீனாவோடு நேரடியாக அபாயகரமாக மோதிக்கொள்ளும் நிலையை உருவாக்கி, இலங்கையில் நிலைகொள்ளும் நோக்குடன் வளர்ச்சிக்கேற்ற வேலைத்திட்ட ஒப்பந்தங்களை இலங்கை அரசிடம் சீனாவுடன் போட்டிபோட்டுப் பெறும் நிலைக்கு இந்தியாவைத் தள்ளிவிட்டது. யுத்த தந்திர ரீதியில் ஐயப்பாட்டிற்குரிய ஒரு சில வேலைத்தி;ட்டங்கள் மட்டுமே சிங்கள இலங்கையில், இந்தியாவிற்குக் கொடுக்கப்பட்டுள்ளன என்றாலும், அவற்றில் இருந்து வரும் இலாபங்கள், சிங்கள இலங்கையில் சீனாவின் வேலைத் திட்டங்களால், இந்தியாவின் இறையாண்மைக்கு உருவாகிவரும் யுத்த தந்திர ஆபத்துகளைத் தடுத்துக்கொள்வதற்காக ஏற்படும் செலவுகளுடன் ஒப்பிடும்போது, இந்த வருமானம் ஒரு தினையளவு ஆகும். தமிழீழத்தால் கிடைத்த பாதுகாப்பை இழந்தபின், “உலகில் உள்ள போட்டியாளர்களிடையில் காணப்படும் பேரம் பேசும் சூழ்நிலையை இலங்கை தனக்குச் சார்பாகப் பயன்படுத்திக் கொள்ளும் நிலையை நன்கு உணர்ந்திருக்கிறது” என அமெரிக்க செனட் குழுவின் கெர்ரி அறிக்கை கூறுகிறது. அதுமட்டுமன்றி, தமிழீழப் பாதுகாப்பு, இலங்கையின் கடலோர எல்லையில் மூன்றில் இரண்டைக் கட்டுப்படுத்தி, தேவையேற்பட்ட போது ஜப்பான் உட்பட்ட நேச நாடுகளுக்குச் செல்லும் எண்ணை விநியோகம் முதலியனவற்றைத் தலையீடு ஏற்பட்டால் தடுப்பதற்கேற்ற சக்தியைக் கொடுத்தது என அந்த அறிக்கை மேலும் கூறுகிறது. அத்துடன் சீனா, சிங்கள இலங்கையைப் பாவித்து இந்தியாவின் ஸ்திரத்தன்மையை பலவீனபடுத்தும் முயற்சியை மேற்கொள்வதையும் தெளிவாக குறிப்பிடுகிறது. தமிழீழத்தை அழித்ததன் மூலம் இலங்கையானது சீனாவை நோக்கிச் சென்றுவிட்டது என்பதானது, அமெரிக்கா சந்தித்த சவால்கள் எல்லாவற்றிலும் பெரிதெனக் கூறுகிறது. அதற்கு இராஜபக்சேவே பொறுப்பாகின்றார் என கெர்ரி அறிக்கையானது மேலும் தெரிவிக்கின்றது.. இப்படிப்பட்ட ஆபத்தான, பதட்ட நிலையில் உள்ள அரசியல் நிலைமை ‘நாராயணனின் மூவர் அணியினால்’ உருவாக்கப்பட்ட பின்பும் சீனாவிடம் இழுத்துச் செல்லப்படும் பயமூட்டக்கூடிய நிலையைத் தடுப்பதற்கான முயற்சிகளை எதிர்ப்பதிலும் அது உடந்தையாக இருந்தது என்பது ஆச்சரியம் ஊட்டுகிறது. இத்தகைய ‘பூகோள அரசியல்’ சோனியாவின் குழுவினரின் பசியைத் தீர்க்க மாத்திரம் உகந்தது. பெரிய புத்திஜீவி என மதிக்கப்பட்ட நாராயணன், போர்த்தந்திரத்தின் முக்கியத்துவம் பெறும் அம்பாந்தோட்டையில் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஒரு பிடியைச் சீனாவுக்கு இலங்கை கொடுத்ததை அலட்சியம் செய்தார். இதன் மூலம், ‘டில்லி மூவர்’ எந்த நாட்டுக்காகப் பாடுபடுகிறார்கள் என்ற கேள்வி வாசகர்களிடையே எழலாம். இந்த விடயத்தில் நாராயணின் வெளிப்படையான குறுகிய தமிழ் விரோதப் போக்கு ஒரு முக்கிய பங்கினை வகிக்கிறது. இப்படியான நாராயணின் தவறுதலான கொள்கையினால், மும்பாய் மற்றும் தெலுங்கானா விடயத்தில் மாநில பிரிவினைவாதத்தைத் தூண்டி இந்தியாவின் ஒற்றுமைக்கு பாரிய அழிவை அடித்தளமிட்டது. அவரின் வர்க்க பாகுபாடும் இந்தியாவிற்கு ஏற்படுத்திய பயங்கர விளைவுகள் மூலம் வெளிச்சமிட்டுக் காட்டும். சீனப் பிரச்சனையின் வாயிலாக, சேது கால்வாய் திட்டத்தின் மூலம் தமிழ் நாட்டிற்கு கிடைக்கவிருந்த நண்மைகள் அனைத்தையும் அழித்தொழிக்கும் என்பதையும் நாராயணன் நன்கு அறிந்திருந்தார். பாக் ஜலசந்தி வழியாகப் போகும் கப்பல்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் அம்பாந்தோட்டையானது, இராணுவத்தளமான மன்னார் மற்றும் கச்சதீவில் உள்ள முக்கிய தளங்களிலிருந்தும் ஒரு சில மணி நேர பயண தூரத்திலேயே அமைந்துள்ளன. நன்கு இராணுவ மயப்படுத்தப்பட்ட வட இலங்கைக்கு மேலாக இவற்றையும் இராணுவ மயப்படுத்த வேண்டிய தேவையென்ன என்ற கேள்விக்குத் தகுந்த நியாயம் கூறப்பட வேண்டும். வெளிநாட்டுச் சக்திகளுக்கு எதிராக இலங்கை இராணுவமயப்படுத்தப்படுவது ஏற்கக்கூடியது. ஆனால் இந்தியாவும் தமிழ் நாடும் இலங்கையைத் தயவில் வைத்திருக்க முயற்சிக்கையில், அவர்கள் எதிராளிகளாக முடியுமா? இலங்கை அரசை மகிழ்ச்சிப்படுத்துவதற்கு டில்லி, தமிழ்நாட்டு மீனவர்களாகிய தனது சொந்தக் குடி மக்களின் பாதுகாப்பையே புறந்தள்ளி வருகிறது. இராஜிவின் காலத்திற்கு பின் சோனியாவின் தமிழ் நாட்டு எதிர்ப்புக் கொள்கைளின் உட்காரணங்களைப்பற்றி ‘இலங்கையின் இரத்தக்களரியின் பின்’ எனும் தனது ஆங்கில நூலில் புது டில்லியின் யுத்த வியூக ஆராய்ச்சியாளரான பிரம்ம செல்லானி கூறுகிறார். இவற்றின் நோக்கின்படி டில்லி மூவர் அணியானது சீனாவோடு சேர்ந்துக் கொண்டு, தமிழ் நாட்டை இன்னுமொரு காஷ்மீராக மாற்றும் பணியினில் செயற்படுகிறது எனக்கொள்ளலாம். அம்பாந்தோட்டையில் சீனா தன்னுடைய வேலையாட்களையே பணியில் இருத்தும் என்பதை அறிந்திருந்தும் ‘டில்லி மூவர்’ பாராமுகமாக இருந்தனர்.. (இது இராணுவத்தினரை உட்புகுத்தப் பல ஆப்பிரிக்க நாடுகளில் சீனா கையாண்ட ஒரு தந்திரமாகும்). தமிழ்நாட்டை அச்சுறுத்தி தன்பிடியில் வைத்துக்கொள்ள, கொழும்பு-டில்லி-பீஜிங்-ன் யுத்த தந்திரமென இதை நோக்க முடியுமா? இவை எல்லாவற்றிலும் சீனாவே கூடிய இலாபமடைந்தது எனலாம். ஹிமாச்சல் பிரதேசத்தை மீட்க முயற்சிக்கும் அதே நேரத்தில், இந்தியாவின் ‘அடிவயிற்றில்’ இன்னுமொரு கணக்கிடப்பட்ட இராணுவ யுத்த முனையைத் திறப்பது என்பதானது விலை மதிப்பிடமுடியாத பலன் அளிக்கும் எனக்கொள்ளலாம். தமிழீழ அச்சுறுத்தல் இல்லாத நிலையில் இலங்கையானது, பாக் ஜலசந்தியில் ஆயுதமற்ற இந்திய மீனவரைத் தனது கடற்படையால், அடிக்கடி தாக்கி அவமானப்படுத்தி உயிருக்கும் உடமைகளுக்கும் சேதம் ஏற்படுத்துவதன் மூலம் இந்தியாவையும் தமிழ் நாட்டையும் தன்பால் கவனம் ஈர்த்து வருகின்றது. மூன்று தசாப்தங்களாகத் தமிழீழ கடற்படையானது, தமிழ் நாட்டு மீனவர்களை இலங்கைக் கடற்படையிலிருந்து காப்பாற்றி வந்தது. வெளிநாட்டு அரசுகள் இலங்கையில் இராணுவ ரீதியில் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் காலூன்றுவதைத் தடுப்பதற்கு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் சில சரத்துகள் வழிவகுக்கும். தெற்கு எல்லை இந்தியாவிற்கு ஒரு சிம்ம சொப்பனமாக மாறும் முன்பு, இலங்கையின் ஊடாக, இந்தியாவிற்குச் சீனாவால் ஏற்படக்கூடிய ஆபத்தைத் தவிர்க்க இத்தகைய நடவடிக்கைகள் உடனடியாக பலப்படுத்தப்பட வேண்டும். பேராசிரியர் சூரியநாராயணின் ‘இந்தியாவின் இருதரப்பு ஒப்பந்தங்களும் - மத்திய அரசும் தொடர்பும் - தமிழ் நாட்டு பார்வை’ எனும் பிப்ரவரி 2010 சாக் (SAAG) மாநாட்டில் வெளியிடப்பட்ட கட்டுரை இந்நேரத்தில் பரிசீலிக்கப்பட வேண்டியது ஒன்றாகும். இலங்கை அரசை இந்தியா சமாதானப்படுத்த முற்பட்ட ஒவ்வொரு தடவையும் அதனால் இந்தியாவிற்கு ஏற்பட்ட பாதிப்புகள் பாரதூரமானவை. 1966 சிரிமாவோ-சாஸ்திரி ஒப்பந்தத்தில் 5 இலட்சம் மலையகத் தமிழர்களை அவர்களின் தலைவனாகிய தொண்டமானுடன் கலந்தாலோசிக்காது உள்வாங்கியதும், அதன்பின் 11-ல் 4 தமழர்கள் மாத்திரமே இலங்கை குடியுரிமை பெற்றதும், மீதி 64 வீதம் வாக்குரிமை இழந்ததும் நாம் அறிந்ததே. இப்படியான ஒப்பந்தமானது, வருங்காலத்தில் தமிழர்கள் அதிகளவில் வாழும் மலேசியா போன்ற வேறு நாடுகளும் இந்தியரை நாடு கடத்த வாய்ப்பளிக்கிறது. இராமநாதபுர இராஜாவின் சாமிந்தரப் பரப்பின் ஒரு பகுதியான கச்சதீவையும் அங்கு தமிழ்நாட்டு மீனவரின் மீன்பிடி உரிமையையும் 1974 சிரிமாவோ-இந்திரா ஒப்பந்தத்தின் மூலம் இலங்கைக்குக் கையளிக்கப்பட்டது. ஆனால் மேல் நீதி மன்ற வழக்கின் மூலம் இதனை தமிழ் நாட்டு அரசு மீளப் பெறலாம் (மேற்கு வங்காள முன்னாள் முதலமைச்சர், டாக்டர் பி.சி. ராய், எவ்வாறு பெறு பாரி பகுதியை கிழக்கு பாக்கிஸ்தானிடமிருந்து மீட்டது போல) எனச் சட்ட வல்லுநர் கருதுகின்றனர். இலங்கையின் ஐயப்பாடு நிறைந்த நட்பிற்காக, தமிழ்நாட்டில் நிலவும் கசப்புணர்வையும் டில்லி அரசு அலட்சியம் செய்கிறது. இந்திய வெளிநாட்டுக் கொள்கையைத் தட்டிக் கேட்க இந்தியாவின் அரசின் யாப்பில் சரத்துகள் இல்லாதது துர்ப்பாக்கியம் ஆகும். அமெரிக்காவில் உள்ளது போல் ஓர் அரசியல் யாப்பு இருந்தால், ‘நாராயணன் மூவர் அணியினர்’ மத்திய அரசின் கொள்கையைத் தமிழ் நாட்டினதும் இந்தியாவினதும் பாதுகாப்புக்கு எதிராக வகுப்பதைத் தடுத்திருக்க முடியும். http://www.Tamilwin.com

வழிகாட்ட ஒருவரின்றி...?

உண்மையான தமிழ்த் தேசியவாதிகள் யார்? உண்மையாக- நேர்மையாக நடந்து கொள்வது யார்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தொடங்கிய உட்கட்சிப் பூசல் இன்று பிரதேசவாதத்தையும், தமிழ்த் தேசியத்தையும் கையில் எடுத்து- விமர்சித்து- மோதிக் கொள்ளும் நிலையை உருவாக்கி விட்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான தயாரிப்புகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறங்கியபோது- ஏற்பட்ட விரிசல் தமிழ்கட்சிகள் மத்தியிலும் பல பிளவுகளை ஏற்படுத்தி விட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணி என்று மூன்று அணிகளாகப் பிரிந்து போய் நிற்கின்றன. கடந்த தேர்தலில் இந்த மூன்று அணிகளுமே ஒன்றாக நின்றவை- ஆனால் இப்போது பிளவுபட்டு நிற்கின்றன. இது தமிழ்த் தேசியத்துக்கு விழுந்து பேரிடி- இன்னொரு வகையில் சொல்லப் போனால் தமிழ் மக்களுக்கு கிடைத்த ஒரு சாபக்கேடு. புலம்பெயர் சமூகத்தினரின் தவறான வழிகாட்டலில் தான் கஜேந்திரகுமார் தலைமையில் தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணி உருவாக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டுகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலம்பெயர் சமூகத்தினர் தம்மை வழிநடத்த முடியாது என்றும் கூறுகிறது. இன்னொரு பக்கத்தில் தமிழ்த் தேசியம், தாயகம், தன்னாட்சி உரிமை ஆகியவற்றைக் கைவிட்டு, இந்தியாவின் கைப்பொம்மையாக- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அதன் தலைவர்கள் மாற்றி விட்டதாக விமர்சிக்கிறது தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணி. அதேவேளை தாம் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்ற அடிப்படைக் கோட்பாடுகளில் இருந்து விலகமாட்டோம் என்றும்- ஆனாலும் தற்போதுள்ள சூழ்நிலைக்கேற்ப நெகிழ்வுப் போக்குடனான இராஜதந்திர அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதாகவும் நியாயம் கற்பிக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இப்படியே ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டுவதும் கேவலப்படுத்துவதுமாகச் சென்று கொண்டிருக்கிறது தமிழ்த் தேசிய அரசியல். இந்தக் கட்டத்தில் தமிழ்மக்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஒன்று தோன்றுவது இயல்பு. உண்மையான தமிழ்த் தேசியவாதிகள் யார்? உண்மையாக- நேர்மையாக நடந்து கொள்வது யார்? என்பன போன்ற கேள்விகள் அவர்களிடத்தில் உருவாகியுள்ளன. தமிழ் மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை ஆகிய அடிப்படைக் கொள்கைகளில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விலகவில்லை என்று கூறியுள்ள நிலையிலும்- அது சில விடயங்களில் முன்னைய நிலைப்பாடுகளில் இருந்து பின்வாங்க ஆரம்பித்துள்ளது உண்மை. அதாவது கடந்த தேர்தலில் புலிகளை ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டு வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தையே மறந்து விடும் நிலைக்கு வந்து விட்டதாகவே தெரிகிறது. இது சரியான மாற்றமா அல்லது தவறான முடிவா என்பதைத் தீர்மானிக்கப் போவது தமிழ்மக்கள் தான். அது தேர்தலின் போது வெளிப்படும். தமிழரின் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த ஒரு அரசியல்தீர்வு நோக்கிச் செல்வதே இன்றைய தேவை. ஆனால் கூட்டமைப்பு தாம் இந்தக் கோட்பாடுகளில் இருந்த விலகவில்லை என்று கூறியிருந்தாலும், இன்னொரு பக்கத்தில் சர்வதேச அதரவைப் பெறுவதற்கும்- யதார்த்தத்துக்கும் ஏற்ப நெகிழ்வுப் போக்குடனான சில முடிவுகளை எடுத்திருப்பதாகவே கூறுகிறது.. தமிழ் மக்களின் அடிப்படைக் கோட்பாடுகள் தொடர்பான விட்டுக் கொடுப்புகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகி விட்டதா என்ற சந்தேகத்தையே இது எழுப்பியுள்ளது. இந்தியாவினதோ அல்லது சர்வதேசத்தினதோ விருப்பத்துக்கேற்ப தீர்வொன்றைத் தயாரிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயராகி விட்டது. இதை அதன் தலைவர்களே உறுதி செய்துள்ளனர். ஆனால் தமிழ் மக்களின் விருப்பத்துக்கேற்ற தீர்வை தயாரிப்பது முக்கியமா அல்லது சர்வதேசத்தின் விருப்பத்துக்கேற்ற தீர்வை நடைமுறைப்படுத்துவது முக்கியமா என்று தீர்மானிக்க வேண்டிய கட்டம் இது. தமிழ்மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட போது-அந்த உரிமைகளுக்காக தொடங்கப்பட்டதே அரசியல் மற்றும் ஆயுதப் போராட்டங்கள். ஆனால் இந்தக் கட்டத்தில்; தமிழரின் விருப்பம்-அபிலாஷைகளைப் பற்றிக் கருதிலெடுக்காமல், சர்வதேசத்தின் விருப்பத்தை நிறைவேற்றுகின்ற தீர்வை உருவாக்குவது பொருத்தமான காரியமாக இருக்காது. ஏனென்றால் சர்வதேசத்தின் விருப்பத்துக்காகத் தொடங்கப்பட்ட போராட்டமல்ல இது. இந்தத் தெளிவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளை, கடந்த வருடம் ஒரு அரசியல்தீர்வை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாரித்திருந்தது. ஆனால் அதை தமது உறுப்பினர்களிடமே காண்பிக்கவில்லை. கிட்டத்தட்ட சந்திரிகா ஒரு தீர்வுப் பெட்டகத்தை வைத்திருப்பதாகக் கூறிக் காலத்தைக் கடத்தியது போலவே இதுவும் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாருக்காக தீர்வுத்திட்டத்தை உருவாக்கியது.? எதற்காக அதை உருவாக்கியது? என்ற கேள்விகள் முக்கியமானவை. தீர்வுத்திட்டம் உருவாக்கப்பட்டது பெட்டிக்குள் பூட்டி வைத்திருப்பதற்காகவல்ல. அதை தமிழ் மக்களிடம் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். அது அவர்கள் செ;யதிருக்க வேண்டிய முதலாவது வேலை. அடுத்து அதை சர்வதேசத்தினதும் இலங்கை அரசினதும் கவனத்ததுக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். எதையுமே செய்யாமல் அதை வைத்திருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒஸ்லோ உடன்பாட்டுக்கு அமைவாகவே தீர்வுத்திட்டத்தை தயாரித்திருப்பதாக இரா.சம்பந்தன் கூறியிருக்கிறார். இலங்கை அரசும் புலிகளும் இணக்கப்பாடு கண்டதன் அடிப்படையில் இந்தத் தீர்வுத்திட்டத்தை உருவாக்கியதாகவும் புதிய எம்.பிகள் அதுபற்றித் தீர்மானிப்பார்கள் என்றும் கூறியிருக்கிறார் அவர். ஆனால் ஒஸ்லோ உடன்பாட்டுக்கு அமைவாக தீர்வுத்திட்டததை உருவாக்கியிருந்தால் கூட- அதை வெளியிடாமல் மறைத்து வைப்பதால் எதுவும் நடக்கப் போவதில்லை. தமிழ்மக்களிடம் கொண்டு சென்று அவர்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களி;ன் ஆணையைப் பெற்றிருப்பினும்- தீர்வுத் திட்டம் தொடர்பாக தமிழ் மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் அதற்கு இருக்கிறதென்பதை மறந்து விடக் கூடாது. அதேவேளை அந்தத் தீர்வுத் திட்டத்தை இந்தப் பொதுத்தேர்தலுக்கு முன்னர் தமிழ்மக்களிடத்தில் முன்வைத்து அவர்களின் ஆணையைப் பெறுவதற்கு கூட்டமைப்பு முனைய வேண்டும். 1977 பொதுத்தேர்தலில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு ஆதரவாகப் பெற்ற ஆணையைக் கொண்டு தான் இன்று வரை பெரும்பாலான தமிழ்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமது அரசியல்தீர்வுத் திட்டத்தை முன்வைத்து மக்களின் ஆணையைப் பெறுமானால் அதற்கு சர்வதேச ஆதரவும் பலமும் இன்னமும் அதிகமாகவே கிடைக்கும். அத்துடன் இலங்கை அரசினாலும் தட்டிக் கழிக்க முடியாத நிலை உருவாகும். தமிழ்த் தேசியகத்தை முன்னிறுத்தி வார்த்தைகளால் மோதிக்கொள்வதால் யாருக்கும் எதுவும் கிடைத்து விடப் போவதில்லை. இது உறுதியானது. அதேவேளை தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டு பிரதேச வாதத்தை கிளறிவிட்டு அதில் குளிர் காய முற்படுவதும், ஒன்றுபட்ட பலத்தை வெளிப்படுத்துவதற்கு முரணான காரியங்களில் இறங்குவதும் தமிழரின் எதிர்காலத்துக்கு சாவுமணி அடிப்பதாக அமையும். கடந்த வருடம் முள்ளிவாய்க்கால் பேரழிவுடன் தமிழரின் ஆயுதபலம் சிதைந்து- பேரம்பேசும் ஆற்றல் பறிபோனது. அதை அரசியல் வழியில் பெறுவதற்கான முயற்சிகளில் இறங்குவதே பொருத்துமானது. அதேவேளை தமிழரின் அபிலாஷைகள் விருப்பங்களுக்கு முரணாக எதையும் செய்யலாம் என்ற நினைப்பு எந்தவொரு தமிழ் அரசியல் கட்சிக்காவது இருக்குமேயானால் அதை இப்போதே தூக்கியெறிந்து விடவேண்டும். உலக நெறிமுறைகளைக் கருத்தில் கொண்டு இராஜதந்திரத்துடன் நடந்து கொள்வதாக கூட்டமைப்பு கூறினாலும், அவர்களின் இராஜதந்திர ஆற்றலைத் தமிழ்மக்கள் அண்மையில் நடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதே பார்க்க முடிந்தது. எனவே அனைத்து வேறுபாடுகளையும் புறந்தள்ளிவிட்டு ஒரே வழியில் தமிழ்த் தேசியத்தின் பிடிமானத்தில் இருந்து விலகாத வகையில்- தமிழரின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க முன்வருவது தான் தமிழ்த் தேசியத்தின் பெயரால் அரசியல் நடத்துவோரின் முன்பாக இருக்கும் வரலாற்றுக் கடமை. "அன்றும் சரி, இன்றும் சரி, தமிழரின் உணர்வுகளை, அவர்களது வாழ்நிலை அவலங்களை, அவர்களது தேசிய அபிலாசைகளைச் சிங்களப் பெரும்பான்மை இனம் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ள எத்தனிக்கவுமில்லை. புரிந்து கொள்ளும் ஆற்றலும் அறிவுத் திறனும் ஆன்ம பக்குவமும் அவர்களிடம் இருப்பதாகவும் தெரியவில்லை... சிங்கள மக்களின் மகாவம்ச மனவமைப்பில், அவர்களது சமூகப் பிரக்ஞையில், அவர்களது அரசியற் கருத்துலகில் அடிப்படையான மாற்றம் நிகழுமென நாம் எதிர்பார்க்கவில்லை. சிங்கள - பௌத்த மேலாண்மைவாதத்தின் வீச்சும் வலுவும் தணிந்து போகவில்லை. மாறாக, அது புதிய, புதிய வடிவங்களை எடுத்துப் புத்துயிர்பெற்று வருகிறது... " தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் ஹரிகரன் - ஒரு தலைவனின் வெற்றியானது எத்தனை எதிரிகளை அழித்தான் என்பதல்ல. "எத்தனை மக்களை போராடவைத்தான்" என்பதிலிருக்கிறது "தலைவனின் ஆளுமையும் வெற்றியும்" புரிகிறது

தமிழ்க் கூட்டமைப்பின் நிலைமை....

இரண்டு நாள் விஜயமாகக் கொழும்புக்கு வந்திருந்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமாராவ், தமது பயணத்தை முடித்துக்கொண்டு புதுடில்லி திரும்பிவிட்டார். தமது கொழும்பு விஜயத்தின் போது இலங்கை ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ உட்படப் பல தரப்பினரையும் அவர் சந்தித்துப் பேசியிருந்தார். இந்தச் சந்திப்புகளில், இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை, அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களோடு நடத்திய பேச்சுகளே முக்கியமானவையா கும். இந்தச் சந்திப்பு அர்த்தபுஷ்டியாகவும் திருப்தி தரும் விதத்திலும் அமைந்தது என்ற சாரப்பட வெளியில் செய்தி கள் தெரிவிக்கப்பட்டாலும், உண்மையில் இச்சந்திப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பலத்த ஏமாற்றத்தையும் அதிருப்தியையுமே தந்து நிற்கின்றது என்கின்றன உள்வீட் டுத் தகவல்கள். நேற்று முன்தினம் பிற்பகலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்திப்பதற்கு முன்னர், நேற்றுமுன்தினம் காலை யில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நிருபமாராவ் சந்தித் திருந்தார். அந்தச் சந்திப்புத் தொடர்பாக இலங்கை ஜனாதி பதியின் அலுவலகம் விடுத்த செய்திக் குறிப்பு நேற்று முன் தினம் பிற்பகலில் வெளியிடப்பட்ட சமயம், கூட்டமைப்புப் பிரதிநிதிகள் நிருபமாராவுடன் பேசிக்கொண்டிருந்தனர். அந்தச் செய்திக்குறிப்பில், வன்னி யுத்தத்தினால் இடம்பெயர்ந்த தமிழ் அகதிகளை மீளக்குடியமர்த்துவதில் இலங்கை அரசு கண்ட வெற்றியை இந்திய வெளியுறவுச் செயலர் விதந்து பாராட்டினார் எனத் தெரிவிக்கப்பட்டி ருந்தது. தமிழ்க் கூட்டமைப்பினர், தாங்கள் நிருபமாராவைச் சந்தித்த சமயத்தில் இந்தச் செய்திக் குறிப்பின் விவரத்தை அறிந்திருக்காவிடினும், அப்படி இலங்கை அரசை மீள்குடி யேற்ற நடவடிக்கைக்காகப் பாராட்டும் தொனியில்தான் இலங்கை விஜயத்தின் போது நிருபமாராவ் நடந்துகொள் கின்றார் என்பதை முழுமையாக உணர்ந்திருந்தனர். மேற் படி சந்திப்புக்குப் பின்னர் அவர்கள் தரப்பில் கசிந்த தகவல் கள் அதனை உறுதிப்படுத்தின. * அகதிகள் மீள்குடியேற்றம் என்ற பெயரில் இலங்கை அரசு பண்ணும் பம்மாத்தை ஏற்றுப் பாராட்டுவது போல இந் திய வெளியுறவுச் செயலாளரின் கருத்துகள் அமைந்தி ருந்தன. * தமிழர் தாயகப் பகுதியில் வல்வந்தமான திட்ட மிடப்பட்ட சிங்களக் குடியேற்றம், இராணுவ ஆக்கிரமிப்பு போன்ற இலங்கை அரசின் அடாவடித்தனங்கள் பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முறைப்பாடு செய்தபோது, இன்னொரு இறையாண்மை உள்ள நாட்டின் மீது இந்தியா வின் செல்வாக்கு மட்டுப்படுத்தப்பட்டதே என்ற சாரப்பட விட்டேத்தியாக நிருபமாராவ் பதிலளித்தார். * இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் நீதியான, நியாயமான அதிகாரப் பரவலாக்கல் கட்ட மைப்பை இலங்கைத் தமிழருக்குப் பெற்றுக் கொடுப்ப தற்கு தனது சகல வலிமையையும் அழுத்தமாக இலங்கை ஆட்சியாளர்கள் மீது இந்தியா பிரயோகிக்கும் என்ற சமிஞ் ஞையை இச்சந்திப்பின்போது காட்டுவதற்கு நிருபமாராவ் தவறிவிட்டார். இப்படி இந்தச் சந்திப்பின் பெறுபேறுகள் தொடர்பில் அதிருப்தியான ஏமாற்றகரமான விசனமான கருத்து நிலைப்பாடு தமிழ்க் கூட்டமைப்புத் தரப்பில் பிரதிபலிக் கப்படுகின்றது. ""எது, எப்படியென்றாலும் விடயங்கள் வெளிவிவகாரச் செயலாளருடன் அடங்கிவிடுவதில்லை. அதற்கு அப்பா லும் மேலேயும் அதிகார வர்க்கங்கள், பதவி நிலைகள் உள்ளன. அந்தந்த மட்டங்களில் இதைக் கையாண்டு நிலை மையை எமக்குச் சார்பானதாக மீண்டும் மாற்றுவோம்.'' என்று நம்பிக்கை வெளியிடுகின்றார் தமிழ்க் கூட்டமைப் பின் மூத்த தலைவர் ஒருவர். ஆனால் இந்தியத் தரப்போ இச்சந்திப்புக் குறித்து வேறு விதமாகத் தகவல் வெளியிடுகின்றது. ""தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்கள், ஏதோ தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிவிட்டு நேரடியாக இந்தச் சந்திப் புக்கு வந்தவர்கள் போல உணர்ச்சிவசப்பட்டவர்களாக அங்கு உரையாடினார்கள். தீர்வுக்கான யோசனைத் திட்டம் குறித்து அதன் அடிப்படை குறித்து தமிழர் தரப்பிலி ருந்தே ஏதும் முன்வைக்கப்படவில்லை; பேசப்படவில்லை. அப்படியிருக்கையில் நாம் (இந்தியத் தரப்பு)அதுபற்றி எப் படிக் கருத்தை முன்னெடுக்க முடியும்? எது, எவ்வாறாயி னும் ஆட்சிப் பீடத்தில் இருக்கின்ற அரசுத் தரப்புடன் நேரடி விடயங்களில் ஈடுபட்டுத்தான் (உணஞ்ச்ஞ்ஞு) பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்று இந்தியத் தரப்பு கோடி காட்டி யமை சில சமயங்களில் கூட்டமைப்புக்குப் பிடிக்காமல் போயிருக்கலாம்.'' என்று இந்தியத் தரப்பில் இப்போது சமாதானம் கூறப்படுகின்றது. மேற்படி சந்திப்பு தமிழ்க் கூட்டமைப்புக்குத் திருப்தி தராமல் முடிவுற்றமைக்கு யார் காரணம் அல்லது என்ன காரணம் என்பது இருந்து விட்டுப் போகட்டும். அது பிரச்சி னையல்ல. ஆனால், ஏற்கனவே இந்தியத் தரப்பின் எடுப்பார் கைப்பிள்ளையாக கைக்கூலியாக தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு மாறிவிட்டது என்ற குற்றச்சாட்டு கூட்டமைப்புக்கு எதிராக அண்மைக் காலத்தில் பரபரப்பாகப் பரப்பப்பட்டு வருகின்றது. இந்தச் சமயத்தில் இந்தியத் தரப்புடன் கூட்டமைப்பு நல்லுறவையும் இறுக்கமான பிடிப்பையும் தொடர்ந்து பேண வேண்டிய தேவை உண்டு.

மொபைல் போன் பயன்படுத்தினால் மூளையில் கேன்சர் வருமா?

மொபைல் போன் பயன்படுத்தினால், மூளையில் கேன்சர் வருமா? இந்த கேள்வி இன்னும் விவாதத்திற்கும் ஆராய்ச்சிக்கும் உரிய பொருளாகவே இருந்து வருகிறது. Food and Drug Administration மற்றும் CTIAThe Wireless Association போன்ற அமைப்புகள் புற்று நோய் உருவாக்கும் அளவிற்கு, மொபைல் போனிலிருந்து கதிர்வீச்சு இருப்பதில்லை என்று கூறுகின்றனர். ஆனால் Environmental Working Group (EWG) மற்றும் World Health Organization (WHO) ஆகிய அமைப்புகள் பத்து ஆண்டுகளுக்கு மேல் மொபைல் போன்களைப் பயன்படுத்தினால், மூளை மற்றும் எச்சில் சுரப்பியில் புற்றுநோய்க்கான கட்டிகள் வர வாய்ப்புகள் இருப்பதாக அறிவித்துள்ளன. மேலும் ஒருவரின் அன்றாட நடவடிக்கைகளில் மாற்றங்கள் வரவும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளன. குறிப்பாக வளரும் பருவத்தில் உள்ள மூளை உடைய சிறுவர்களிடம் இது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளன. இன்னும் இரண்டு அமைப்புகள் ஒன்றுக்கொன்று மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளன. எது எப்படி இருந்தாலும், இத்தகைய சூழ்நிலையில் நாம் எப்படி இயங்க வேண்டும். மொபைல் போன்கள் நம் அன்றாட வாழ்க்கையின் ஓர் இன்றியமையாத சாதனமாக மாறிவிட்ட நிலையில், எந்த அளவிற்கு அதன் பாதிப்பிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று பார்க்கலாமே! 1. குறைவான கதிர்வீச்சு உள்ள போன்: மொபைல் போனில் ஸ்பெசிபிக் அப்சார்ப்ஷன் ரேட்(SARSpecific Absorption Rate) என்று ஒரு அளவைக் கூறுகின்றனர். மொபைல் போன்கள் வாய்ஸ் மற்றும் டெக்ஸ்ட் அனுப்பிப் பெறுவதற்கு ரேடியோ அலைவரிசையை சக்தியைப் பயன்படுத்து கின்றன. இதனை நம் உடல் தசைகள் உறிஞ்சுகின்றன. ஒரு கிலோ தசையில் எந்த அளவு உறிஞ்சப்படும் வகையில் வெளியாகிறதோ அதனை SAR ரேட் என அழைக்கின்றனர். ஒவ்வொரு போனுக்கும் ஒருSAR ரேட் உண்டு. இந்த SAR ரேட் அதிகமாக இருந்தால், போனின் கதிர்வீச்சும் அதிகமாக இருக்கும். உங்கள் போனின் பேட்டரிக்குக் கீழாக, போனுடைய FCC (Federal Communications Commission) எண் தரப்பட்டிருக்கும். FCC யின் இணைய தளம் சென்று, உங்கள் போனின் FCC எண் கொடுத்து அதன் கதிர்வீச்சு மற்றும் அபாய தன்மையினைத் தெரிந்து கொள்ளலாம். EWG.org என்ற தளத்தில், மொபைல் போன்கள் குறித்த தகவல்கள் அடங்கிய டேட்டா பேஸ் உள்ளது. அங்கு சென்று நீங்கள் பயன்படுத்தும் மொபைல் போனின் அபாயத் தன்மையினை அறிந்து கொள்ளலாம். இதன் அடிப்படையில் சாம்சங் நிறுவனத்தின் இம்ப்ரஸன் (Impression) என்னும் போன் தான் மிக மிக குறைவான கதிர்வீச்சு உடையது. மோட்டாரோலாவின் மோட்டோ வியூ 204 மற்றும் டி–மொபைல் மை டச் 3ஜி ஆகியவை அதிக கதிர் வீச்சு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வெளியான மொபைல் போன்களில் மோட்டாரோலா ட்ராய்ட், பிளாக்பெரி போல்ட் 9700, எச்.டி.சி. மேஜிக் மற்றும் எல்.ஜி.சாக்லேட் டச் ஆகியவை அதிகமான கதிர்வீச்சு உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த ஆண்டு போன்களில் மிகவும் குறைவாக கதிர்வீச்சு உள்ளவையாக மோட்டாரோலா ப்ரூட் ஐ680, சாம்சங் மிதிக், பான்டெக்ஸ் இம்பேக்ட் (Motorola Brute i680, Samsung Mythic, and Pantech Impact) அறிவிக்கப்பட்டுள்ளன. (இவற்றில் சில இந்தியாவில் தற்போது விற்பனைக்கு வராமல் இருக்கலாம்) எனவே நீங்கள் வாங்கும் போன் குறைவான கதிர்வீச்சு உள்ளதாக வாங்குவது நலம். 2. ஹெட்செட் / ஸ்பீக்கர்: போனுடன் ஹெட்செட் அல்லது ஸ்பீக்கரை இணைத்துப் பயன்படுத்துவது பயன் தரும். ஏனென்றால் போனை உடலுடன் ஒட்டி இல்லாமல் வைத்துக் கொள்ளலாம். போனை ஸ்பீக்கர் மோடில் வைத்து இயக்குவதனால், போன் கதிர் வீச்சு தலைக்குச் செல்லாமல் பார்த்துக் கொள்ளலாம். 3. அதிகம் கேள், குறைவாகப் பேசு: போனில் நாம் பேசும் போதும், டெக்ஸ்ட் அனுப்பும்போதும் கதிர்வீச்சு அதிகம் இருக்கும். ஆனால் வரும் அழைப்பினைக் கேட்கும் போது இது குறைவாக இருக்கும். எனவே குறைவாகப் பேசுவது நல்லது. 4. பேசும்போது ஏற்படும் கதிர்வீச்சினைக் காட்டிலும், டெக்ஸ்ட் அனுப்புகையில் குறைவான வீச்சே இருக்கும். எனவே அதிகம் டெக்ஸ்ட் பயன்படுத்தவும். 5. சிக்னல் வீக்? மூடிவிடு: உங்கள் போனுக்கான சிக்னல் குறைவாக இருந்தால், உங்கள் போன் ஒலி அலையைப் பெற முயற்சிக்கையில் கதிர் வீச்சு அதிகமாக இருக்கும். எனவே அப்போது பேச முயற்சிப்பதை நிறுத்தி, பின் சிக்னல் அதிகமாக இருக்கையில் பேசவும். 6. சிறுவர்களே கவனம்: சிறுவர்களின் உடல் மற்றும் மூளை பெரியவர்களைக் காட்டிலும் அதிகம் மொபைல் கதிர்வீச்சின் பாதிப்புக்குள்ளாகும். எனவே சிறுவர்களை மொபைல் பயன்படுத்து வதிலிருந்து தடுக்கவும். 7. மூடிகளா? வேண்டாம்: மொபைல் ஆன்டென்னா மூடி, கீ பேட் மூடி போன்றவை போனுக்கு வரும் சிக்னல்களை ஓரளவிற்குத் தடுப்பதால், சிக்னல்களைத் தெளிவாகப் பெற உங்கள் போன் அதிக கதிர்வீச்சினை அனுப்பும். எனவே இந்த வகை மூடிகளைப் பயன்படுத்துவதனைத் தடுக்கவும். அறிவியல் சாதனங்கள் நம் வாழ்வில் வளம் சேர்த்தாலும், இது போல ஆபத்துக்களையும் தாங்கியே வருகின்றன. நாம் தான் இத்தகைய இடர்ப்பாடுகளிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்

வயாகரா மாத்திரையில் பறவையின் கழிவுகள்

மனிதர்களின் நோயை குணப்படுத்த பயன்படுத்தப்படும் சில மருந்து மாத்திரைகள் போலியாக தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. அவற்றில் நச்சு பொருட்கள் கலக்கப்படுவதால் பக்க விளைவுகள் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தை விளைவிக்கின்றன.சிலவற்றில் பறவைகளின் மல கழிவுகள் சேர்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக “வயாகரா” மாத்திரையில் கலக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் தெரிவிக்கிறது. நியூசிலாந்தில் இவை கலக்கப்படுவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வவ்வால்கள் மற்றும் பறவைகளின் எச்சங்கள், மிக சிறிய பூச்சிகள், உரோமங்கள், மரக்கரி போன்றவையும் சேர்க்கப்பட்டு அவை தயாரிக்கப்படுவதாக அந்நாட்டு விஞ்ஞானி தல்லாஸ் மில்டன் ஹால் தெரிவித்துள்ளார். இவை தவிர நச்சுத்தன்மை வாய்ந்த உலோகங்கள் மற்றும் பாதரசம் போன்றவையும் வயாகராவில் கலக்கப்படுவதாக சுற்றுச்சூழல் அறிவியல் ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது. எனவே, ஆன்லைனில் இவற்றை மிகவும் கவனமாக வாங்க வேண்டும் என்று ஒட்டாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் கிளார் ஸ்ட்ராசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிங்களர்கள் டூரிஸ்ட்டுகளாக, தமிழர்கள் அகதிகளாக

யாழ்ப்பாணத்தில் புதிய படமாளிகை ஒன்றை அமைப்பதற்கான இடம் தேவை’ என்றொரு விளம்பரம் பத்திரிகைகளில் வந்து கொண்டிருக்கிறது. இதைவிட ஹொட்டல் கட்டுவதற்கு, வெளிநாட்டு கொம்பனிகளின் ஏஜென்ஸிகளுக்கு, வாகன விற்பனை நிலையங்களுக்கு, வங்கிகளுக்கு என கட்டடங்கள் தேவை விளம்பரங்கள் வருகின்றன. அவசர அவசரமாக வீடுகள் புதிதாகப் பெயின்ற் அடிக்கப்பட்டு விடுதிகளாக்கப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் இப்போது அதிக வருமானம் தரும் தொழில் விடுதிகள் நடத்துவதுதான். குடிவகைகளும் தாராளம். சாப்பாட்டு வகைகளும் புதுசும் தினுசும். பல இடங்களில் மளமளவென்று புதிய கட்டடங்கள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. சொன்னால் நம்பமாட்டீர்கள். இதில் அநேகமானவை கண்ணாடிக் கட்டடங்கள். தியேட்டர்களிலும் சனக்கூட்டம் அலை மோதுகின்றது. பஸ் நிலையத்துக்கு வடக்கே இருந்த சிறிய ஒழுங்கை இப்போது பெரும் பரபரப்பான பாதை. அங்கேதான் ஐந்து முக்கியமான பெரிய வங்கிகள் இருக்கின்றன. பழைய புல்லுக்குளத்தின் கிழக்குப்பகுதியது. அதைப் பார்த்தால், இதுதானா புல்லுக்குளம் என்று ஆச்சரியம் வரும். யாழ்ப்பாணத்திலுள்ள சனங்களை விட யாழ்ப்பாணத்தில் இப்போது விற்கப்படுகிற பொருட்கள் அதிகம். எங்கு பார்த்தாலும் ஏதாவது சாமான்கள் இறக்கப்பட்டுக் கொண்டேதானிருக்கின்றன. பழங்கள், காய்கறிகள், பிளாஸ்ரிக் பொருட்கள், துணிவகைகள், தளபாடங்கள், அழகுசாதனங்கள், வீட்டு அலங்கார ஏற்பாடுகள், பூக்கன்றுகள், கைவினை வெளிப்பாடுகள், மின்சார சாதனங்கள், வீட்டுப்பாவனைப் பொருட்கள், இலத்திரனியல் உபகரணங்கள் என்று உலகத்திலிருக்கிற அத்தனை அயிற்றங்களும் யாழ்ப்பாணத்தில் இறக்கப்படுகின்றன. புத்தம் புதிய சந்தை அல்லவா. இதற்குள் யாழ்ப்பாணத்தில் புதிதாக ஏழெட்டு வட்டிக்கடைகளும் முளைத்திருக்கின்றன. வங்கிகளைத்தான் சொல்கின்றேன். இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி என்று மூன்று நான்கு வங்கிகளைத்தான் பலரும் அறிந்திருப்பீர்கள். ஆனால், இப்போது தேசிய அபிவிருத்தி வங்கி, சம்பத் வங்கி, ஹற்றன் நசினல் வங்கி, செலான் வங்கி, யூனியன் வங்கி, கொமேர்சல் வங்கி, ……. ஏன்று கிழமைக்கு ஒன்றாக அறிமுகமாகிக் கொண்டேயிருக்கின்றன. எல்லா வங்கிகளும் ஏராளம் சலுகைகளை அறிவித்திருக்கின்றன. பொருளாதாரத்தடை, போர், போக்குவரத்துப் பிரச்சனைகள் என இதுவரை யாழ்ப்பாணத்துச் சனங்களிடம் காசில்லை என்று இந்த வங்கிகள் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கின்றன. அதனாலேயே, குறைந்த வட்டியோடு தாராளக் கடன் என்ற திட்டத்தை அறிவித்திருக்கின்றன. அடகு வைக்கிற ஆட்களுக்குச் சிறப்புப் பரிசு என்ற விளம்பரங்களை இலங்கையில்தான் பார்க்கலாம். அடகு வைக்கிற ஆட்களின் தொகையும் யாழ்ப்பாணம், வவுனியா போன்ற இடங்களில்தான் அதிகம். இங்கேதான் வன்னி அகதிகள் ஏராளமாக இருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்ய முடியும்.. அடகுதான் வைக்க முடியும். யாழ்ப்பாணத்தின் பொருளாதார முதுகெலும்பு புலம்பெயர்ந்த சொந்தங்கள் அனுப்புகிற பணம்தான் என்பதை யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. யாழ் நகரத்தின் பிரபல நகைக்கடைகளில் உண்டியலில் தினமும் பல லட்சங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதே வேளை புலம்பெயர் உறவுகள் அறவே அற்ற வன்னி மக்களும் வன்னியில் தங்கியிருந்த மலையக மக்களும் இன்னமும் வீட்டுக்கும் சோற்றுக்கும் வழியற்ற நிலையில் எஞ்சிய நகைகளை அடகு வைக்கிறார்கள். இதுதான் தருணமென்று வங்கிகள் கடை விரித்திருக்கின்றன. வன்னிப் பகுதிகளில் மீளக்குடியேற்றப்பட்ட மக்கள் நிதி மூலங்கள் ஏதுமற்று நான்கு தகரங்களைச் சுற்றவர மூடிய மாட்டுக் கொட்டகை வாழ்வை விட மோசமான வாழ்வின் மீதிருக்கிறார்கள் என்பது ஏ 9 பாதையால் வரும் போது தெரிகிறது. அவர்களுக்கான மீள் நிர்மாணத்தை அரசு செய்யும் என்ற நம்பிக்கை யாருக்கும் இல்லை. யாழ்ப்பாணம் வின்ஸர் தியேட்டரில் இப்ப படம் ஓடுவதில்லை. அது போருடன் களஞ்சியமாகி, பிறகு வெளவல்களின் இருப்பிடமாகி இப்போது, ‘சதொச’ பொருள் விற்பனை மையமாகி இருக்கிறது. நகரத்தில் பல கண்ணாடிக் கட்டடங்கள் எழும்பியுள்ளன. சர்வதேச நிறுவனங்கள் ஒரு நகரத்துக்குப் படையெடுக்கும்போது அவற்றின் நாகரிகங்களையும் அங்கே கொண்டு செல்லும் என்பார்கள். அவற்றின் முதல் வியாபார நுட்பம் அவற்றின் விளம்பரங்களும் கவர்ச்சியும்தான். அதனால், யாழ்ப்பாணத்தில் இந்தக் கவர்ச்சி மையங்கள் தாராளமாக அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இப்போது நகரம் விரிந்து விரிந்து நாவலர் வீதி, இந்துக்கல்லூரி, மானிப்பாய் வீதியில் பழைய ஈழநாடு அலுவலகம், என்று பெருத்துக் கொண்டு போகிறது. இதேவேளை முந்தைய யாழ்ப்பாணத்தின் பல பகுதிகள் இன்னும் இடிந்து அழிந்தபடியே இருக்கின்றன. யாழ்ப்பாணம் பழைய பூங்கா, கண்டி வீதி, முதலாம் இரண்டாம் குறுக்குத் தெருக்கள், சுப்பிரமணியம் பூங்காப் பகுதி எல்லாம் போர் வடுக்களுடன் மாறாமல் அப்படியே இருக்கின்றன. போரின் பிறகு, பாதை திறந்தவுடன் ஏராளம் வெளியாட்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகிறார்கள். அவர்கள் தங்குவதற்கு போதிய ஏற்பாடுகள் இல்லை. அதிலும் தென்னிலங்கையிலிருந்து வடக்கே வருகிற சிங்கள சுற்றுலாப்பயணிகள் தங்குதவற்கு இடங்கள் போதாது. ஏராளம் சிங்களவர்கள் தினமும் வருகிறார்கள். கிட்டத்தட்ட ஐந்தாயிரத்திற்கும் குறையாத ஆட்கள். வருகிற சிங்களச் சனங்கள் புதிதாகத் திறந்திருக்கும் விடுதிகளுக்குப் போகிறார்கள். விடுதிகள் போதாது என்றால் வீரசிங்கம் மண்டபம் தொடக்கம் யாழ்ப்பாண நகரத்திலிருக்கின்ற பொது மண்டபங்கங்களில் இரவுப் பொழுதைக் கழிக்கிறார்கள். வேறு வழியில்லை. ஒரு பாய்க்கு நூறு ரூபாய்வரை அவர்கள் கொடுப்பதாகக் கேள்வி. அவர்களைத் தவிர அதே தொகையில் வேறும் பலரும் யாழ்ப்பாணம் வருகிறார்கள். அவர்கள் தமிழர்கள். வவுனியா முகாம்களில் விடுவிக்கப்படுகிற தமிழ் அகதிகள் அவர்கள். யாழ்ப்பாணத்துக்கு சிங்களவர்கள் சுற்றுலாப்பயணிகளாக வருகிறார்கள். தமிழர்களோ இன்னமும் அகதிகளாக அலைகிறார்கள். அவர்களை விடுவித்து கையில் கொஞ்சக் காசும் கொடுத்ததோடு அரசு தன் கடனைச் சிவனேயென்று முடித்துக் கொள்கிறது. அதற்குப்பிறகான வாழ்க்கை அவர்களைப் பயமுறுத்துகிறது. பேசாமல் முகாமிலேயே இருந்திருக்கலாம் என்றார் வவுனியாவிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர்களில் ஒருவர். யாழ்ப்பாணத்தில் சீவிப்பதற்கு குடும்பத்தில் யாராவது வெளிநாட்டில் இருக்க வேண்டும். அல்லது அரசசார்பற்ற நிறுவனம் எதிலாவது வேலைசெய்ய வேண்டும். முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டு பல்கலைக் கழகத்தில் கல்வியைத் தொடர வந்த சில மாணவிகள் திருமணமாகி தம் துணைகளை யுத்தத்தில் இழந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் பலர் கைக் குழந்தைகளோடு இருக்கிறார்கள். அண்மையில் யாழ் போதனா வைத்தியசாலையில் கணவனை போரில் இழந்த பெண்ணொருத்தி பிறந்த தன் குழந்தையை விற்பதற்கு முயன்றமை அறியப்பட்டு சமூக அமைப்புக்களின் தலையீட்டில் தடுக்கப்பட்டிருந்தது. தற்போது சொந்தங்களுக்கென அனுப்பப்படும் புலம்பெயர்ந்தவர்களின் உதவிகள் கட்டமைக்கப்பட்ட முறையில் பகிர்ந்தளிக்கப்படும் நிலை ஏற்படாது போனால் மும்பை மாநகர செல்வச்செழிப்பான கட்டடங்கள் நடுவே சேரிகளும் குடிசைகளும் இருப்பதுபோன்ற நிலை யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் ஏற்படும். இவ்வாறாக புதிய வர்த்தக வரவுகள் கவர்ச்சி மிகு உள் நுழைவுகள் என ஒருபக்கம் வீங்கியும் மீளக்குடியேற்றப்பட்ட மக்களின் சூனியமான எதிர்காலம் இன்னமும் தமது நிலத்தை இழந்து தவிக்கும் யாழ் உயர்பாதுகாப்பு வலய மக்களின் நிலம் திரும்பும் ஏக்கமென இன்னொரு பக்கம் வெந்தும் இன்றைய யாழ்ப்பாணம் இருக்கிறது.

போலீஸாரின் தொந்தரவால் ஈழ ஏதிலிப் பெண் தீக்குளிப்பு

தமிழகத்தில் கரூர் ஈழ ஏதிலிகள் முகாமிலுள்ள பெண் ஒருவர் தமிழக காவல்துறையினர் கொடுத்த தொல்லை காரணமாக தீக்குளித்துள்ளார். ராயலூர் முகாமில் சுமார் 1000 ஈழ ஏதிலிகள் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர், இங்கு உள்ள மூவரை சில நாட்களுக்கு முன்பு காவல்துறையினர் கைதி செய்து , முன்று வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு கொலை வழக்கில் அவர்களை தொடர்பு படுத்தி கொலை குற்றவாளிகளாக ஒப்புக்கொள்ளும்படி மிரட்டி உள்ளனர். அவர்கள் மறுத்த நிலையில், அந்த முன்று ஏதிலிகளில் ஒருவரின் மனைவியை சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் அழைத்து சென்று தன் கணவனை கொலை குற்றத்தை ஒப்புகொள்ள சொல்லும் மாறு அந்த பெண் துன்புறுத்தப்பட்டு உயிருக்கு அச்சுறுத்தப்பட்டதால் மன உளைச்சலின் காரணமாக அந்தப் பெண் தீக்குளித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கரூர் அரசு மருதுவமையில் சிகிச்சை பெற்று வரும் தீக்குளித்த பெண்ணின் தோழி நம்மிடம் கூறியதாவது : நான் ராயலூர் எதிலி முகாமில் இருக்கும் பெண், எனது தோழி தான் தீக்குளித்து இப்பொது உயிருக்கு போராடி கொண்டு இருக்கும் பெண்,இந்த பெண்ணின் கணவர் உட்பட முன்று ஆண்களை காவல் துறையினர் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு கைது செய்து சென்றனர், பத்து நாட்களாக கணவர் வீடு திரும்பாத நிலையில் கவலையுற்று இருந்த இந்த பெண்ணை நேற்று ஐந்து காவல்துரையினர் காவல்துறையினரின் உடுப்பில் இல்லாமல் மாற்று உடுப்பில் வந்து உனது கணவர் உன்னை சந்திக்க விரும்புகிறார் நீ உடனே கிளம்பி வா என்றதும் இந்த பெண் அவர்கள் சொல்வதை நம்பி தான் கணவனை பார்க்கும ஆர்வதுடன், கால்வதுரையினர் உடன் அவர்கள் வந்து இருந்த வாகனத்தில் மதியம் சுமார் 1.30 மணி அளவில் கிளம்பி சென்றார். பிறகு மாலை 6.30 மணியளவில் அந்த பெண் கையில் மாதிரை, ரொட்டியுடன் வாகனத்தில் இருந்து மிகுந்த சோர்வுற்ற நிலையில் இறங்கி அழுதுகொண்டே வந்தார், அவள் இடம் சென்று நாங்கள் என் ஆனது என்று கேட்டபோது, அவளது வாழ்வு வீனாக போனதாகவும் இனி வாழ்வதில் அர்த்தம இல்லை எனவும் அழுது கொண்டே கூறினால், நாங்கள் அந்த பெண்ணுக்கு ஆறுதல் சொல்லி விட்டு வீடு திரும்பிய போது அவள் தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணை தன் மீது உற்றி தன்னை எரித்து கொண்டாள், அதை பார்த்ததும் நாங்கள் விரைந்து சென்று அவளை கரூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தோம் இப்பொது மருத்துவர் இந்த பெண்ணை காப்பாற்ற முடியாது என்று கூறிவிட்டார், அந்த பெண்ணின் கணவர் இன்னும் சிறையில் தான் உள்ளார், அவர் தனது மனைவியை பார்க்க அனுமதிக்கவில்லை போலும், இந்த பெண்ணிற்கு ஒரு மகன் உள்ளார் அவர் பெங்களூரில் படித்து வருகிறார், அவர்க்கு செய்தியை சொல்லியுள்ளோம் எங்களுக்கு வேண்டியது எல்லாம் இந்த பெண்ணிற்கும் அவளது மகனுக்கும் நீதி, அதேபோல் எங்களுக்கும் பாதுகாப்பு, இன்று இந்த பெண்ணிற்கு நடந்தது போல் நாளை எனக்கும் என்னை போன்ற பெண்களுக்கும் நடக்க கூடும், அப்போது நாங்களும் இதே போன்ற துன்பத்திற்கு தான் ஆளாக நேரும். என்று அவர் தெரிவித்தார் .

மஹிந்தவுடனான புரிந்துணர்வில் எந்தவித முன்னேற்றமும் இல்லை

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான்கீமூன் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த வருடம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பான்கீமூனும், இலங்கை ஜனாதிபதியும் இணைந்து கூட்டாக அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தனர். இது தொடர்பில் தான் இலங்கை ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியிருந்ததாகவும் பான்கீமூன் குறிப்பிட்டார். இந்தக் காரணத்திற்காக, அரசியல் விவகார பிரதிநிதி லியான் பெஸ்கோ இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாகவும் நியூயோர்க்கில் ஊடகவியலாளர்களிடம், பான்கீ மூன் கூறினார். கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடனான தொலைபேசி உரையாடலின்போது, வெளிப்படையாகவும், நேர்மையாகவும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டதாகவும் அவர் கூறினார். அரசியல் மீள்கட்டுமாணம், இடம்பெயர்ந்திருக்கும் மக்களின் நிலைமை ஆகியன குறித்து கவனம் செலுத்தப்பட்டதாகவும் பான்கீமூன் தெரிவித்தார்.

நைஜீரிய மதக்கலவரத்தில் 500 பேர் பலி

நைஜீரியா நாட்டில் ஏற்பட்ட மதக்கலவரத்தில் 500 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக 95 பேர் கைது செய்யப்பட்டனர். ஆபிரிக்காவில் உள்ளது நைஜீரியா. இங்கு பெருந்தொகையான முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் வாழ்கின்றனர். இவர்களிடையே அடிக்கடி கலவரம் வெடிப்பது வழக்கம். கடந்த ஜனவரி மாதம் நடந்த கலவரத்தில் 550 பேர் பலியானார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இந்த 2 பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நைஜீரியாவின் மத்திய பகுதியில் ஜோஸ் நகர் அருகே உள்ள கிராமங்களில் இந்த மோதல் சம்பவங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தன. ராட்சாட் மற்றும் ஜோட் ஆகிய கிராமங்களுக்குள் புகுந்த ஒரு தரப்பினர்,வீடுகளுக்கு தீ வைத்தனர். அவர்கள் பெரோன் இனத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகளையே தீ வைத்தனர். இந்த தாக்குதலை புலானி இனக்குழுவினர் நடத்தினார்கள். அவர்கள் 3கிராமங்களுக்குள் புகுந்து தாக்குதலை நடத்தினர். பழிக்குப் பழி இது தொடர்பாக ஜோஸ் நகரின் புலானி இனக்குழுவைச் சேர்ந்த சுப் அல்காலி கூறுகையில், “இரு வாரங்களுக்கு முன் எங்கள் இனத்தினர் மீது எதிர் தரப்பினர் நடத்திய தாக்குதலில் 4 பேர் பலியானார்கள். இதற்கு பழிக்குப் பழி வாங்குவதற்காக தான் இந்தத் தாக்குதல் நடந்தது” என்றார். தாக்குதல் நடந்த போது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் கண்டும் காணாமல் இருந்து விட்டனர் என்றும் ஒரு பொலிஸ் அதிகாரியைக் கூட கலவரப்பகுதியில் காணவில்லை என்றும் உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள். 500 பேர் பலி இருதரப்பினரும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டனர். பலர் கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்டனர். சிலர் பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொண்டனர். இந்தக் கலவரத்தில் 100 பேர் பலியானதாக தான் முதல் கட்டத் தகவல்கள் வெளியாயின. ஆனால் இந்தத் தாக்குதல்களில் பலியானவர்கள் எண்ணிக்கை இப்போது 500 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களில் பெண்களும், குழந்தைகளுமே அதிகம் என்று கூறப்படுகிறது. நூற்றுக் கணக்கானவர்கள் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்காலிக ஜனாதிபதி குட்லக் ஜோனாதன் கலவரத்தை ஒடுக்கும்படி இராணுவத்துக்கு உத்தரவிட்டிருக்கிறார்.