திங்கள், 9 ஆகஸ்ட், 2010

பலவந்தமாக சிங்கள குடியேற்றம்...!

இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள் உட்பட 3ஆயிரம் ஏக்கர் சுற்றி வளைக்கப்பட்டு சிஙகளவர்கள் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப்போர் முடிவடைந்த பின்னரும்,

புலிகளின் தலையில்......தெரிந்தோ தெரியாமலோ??

நோர்வே நாட்டில் நிறுவனங்களில் பெயரலால் வங்கிகளில் கடன்களை பெற்றவர்கள் மற்றும் நிறுவனங்கள் நஷ்டமடைந்து விட்டது என கைகளை உயர்த்தியவர்கள் யாவரும் அதற்கான பொறுப்புக்களை புலிகளின் தலையில் சுமத்துவது தெரியருகின்றது. நோர்வே நாட்டின் தேசியப் பத்திரிகையான டக்பிளாடட் (Dagbladet) மேற்படி இத்தகவல்களை வெளியிட்டுள்ளது.

கப்டன் அன்பரசன்

‘ஐயா’ என்றுதான் அவன் எங்களால் அழைக்கப்பட்டான். அவன் அதை விரும்பாதபோதும், சிலவேளைகளில் ‘இப்பிடிக் கூப்பிட்டா இனி நான் கதைக்க மாட்டன்’ என்று விசனத்துடன் சொன்னாலும் இறுதிவரை நாங்கள் அவனை ‘ஐயா’ என்றுதான் கூப்பிட்டோம். மற்றப் பிரிவினர் அவனை அன்பரசன் என்று கூப்பிட்டாலும் நாங்கள் அவனை ‘ஐயா’ என்றுதான் அழைப்போம். அவன் யாழ்ப்பாணத்தில் ஐயர் குடும்பமொன்றைச் சேர்ந்தவன் என்பதுதான் அதற்குக் காரணம்.