வெள்ளி, 28 மே, 2010

நேற்று இன்று நாளை ...................

தமிழீழத் தேசியத்தலைவர் ஈழ மக்களின் இதயங்களை வென்ற கதாநாயகனாக மூன்று தசாப்தமாக இருந்து வந்துள்ளார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதற்கான பல காரணங்கள் முன்வைக்கலாம். எனினும் சுறுக்கமான விளக்கம் என்று சொன்னால் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் கடந்து சென்ற ஆண்டுகள் அனைத்திலுமே சிறந்த ஒரு வெற்றிக் கதாநாயகனாகத்தான் வாழ்ந்திருக்கிறார்.. எந்த ஒரு காலத்திலும் ஒருசில பின்னடைவுகளை தவிர தோல்வியென்று எதுவும் அவரை நெருங்கியதில்லை.

கேணல் சங்கர் -வைத்தியலிங்கம் சொர்ணலிங்கம் - யாழ்

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற் றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன், தமிழீழ விடிவே குறியாகக்கொண்டு செயற்பட்டு வந்த கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம் சாய்ந்துவிட்டது. ஈழ விடுதலைக்காய் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று.

மீள்குடியமர்த்தப்படும் வன்னி மக்களின் ஆதிவாசிகளை விட மிகவும் மோசமானது: அம்பாறை மாவட்ட எம.பி பொ. பியசேன

ஆதிவாசிகளை விட மிகவும் மோசமான நிலையில் மீள்குடியமர்த்தப்படும் வன்னி மக்கள் காணப்படுகின்றார்கள். அவலத்திலும் அவலமாக உள்ளது. உடன் பிறப்புக்கள் என்போர், வீர வசனம் பேசுவோர் அமைப்புக்களாக இணைந்து விரைந்து சென்று உதவவேண்டும்’ இவ்வாறு வன்னி சென்று திரும்பிய தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சகநேயன் பொ. பியசேன அங்குள்ள நிலைவரம் பற்றித் தெரிவிக்கையில் குறிப்பிட்டார்.

முள்ளிவாய்க்காலும் ஸ்டாலின்கிராடும் .......................

உலக சமர் வரலாற்றில் மறக்கமுடியாத இதுவரை போர் குறித்து சிந்திக்கும் போதெல்லாம் நினைவுக்கு வரும் ஒரு களமாக ஸ்டாலின்கிராடு பேசப்படுகிறது. உலக சுற்றுலாப்பயணிகள் ரஷ்யாவிற்கு செல்லும்போதெல்லாம் ஸ்டாலின் கிராடை ஆர்வத்தோடு பார்க்கிறார்கள். இந்த நகரத்தில் நடைபெற்ற கடும் சமர்,

ஐக்கிய நாடுகளின் இலங்கை மீதான பங்களிப்பு அதிருப்தி தருகின்றது - மன்னிப்பு சபை

இலங்கையில் ஐக்கிய நாடுகளின் பங்களிப்பு திருப்தி தருவனவாக இல்லை என சர்வதேச மன்னிப்பு சபை குற்றம் சாட்டியுள்ளது. சர்வதேச நீதி அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது இலங்கை விவகாரத்தில் ஐ.நா அமைப்பின் பங்களிப்பு அதிருப்தி தருகின்றது என சர்வதேச மன்னிப்பு சபை குற்றச்சாட்டியுள்ளது.
சர்வதேச மன்னிப்புச் சபையினால் வெளியிடப்பட்டுள்ள ஆண்டறிக்கையில் 111 நாடுகளில் சித்திரவதைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது. பலம்பொருந்திய நாடுகள் தங்களது சுயலாப அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் சர்வதேச நீதியை நிலைநாட்டத் தவறியுள்ளதாக மன்னிப்புச் சபை விமர்சித்துள்ளது.குறிப்பாக கடந்த வருடம் இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவில்லை என குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பங்களிப்பு அதிருப்தி அளிக்கும் வகையில் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளது.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் இதுவரையில் எவரும் தண்டிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது. அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் ஆற்ற வேண்டிய கடமைகளை தவறவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக இஸ்ரேலினால் காஸா பள்ளத்தாக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளக்கு எதிராக எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் இடம்பெற்ற சித்திரவதைச் சம்பவங்கள் தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்பட வேண்டுமென மேலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போரின்போது சிறிலங்கா இராணுவம் ஒரு பொதுமகனைக்கூட கொல்லவில்லை: மகிந்த

"சிறிலங்கா இராணுவம் போரின்போது பொதுமக்கள் எவரையும் கொல்லவில்லை. அவ்வாறு கொலை செய்திருந்தால் மூன்று லட்சம் மக்களும் இராணுவத்தின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வந்திருக்கமாட்டார்கள். மக்கள் அனைவரும் இராணுவத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அதனால்தான் அவர்கள் அரச கட்டுப்பாட்டு பிரதேசத்துக்கு வந்தார்கள்" - என்று சிறிலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச அல் ஜஸீரா செய்திச்சேவைக்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார்.

உருவாகி வரும் புதிய சிக்கல்கள்..............

இலங்கையின் அரசியல் இப்போது மீண்டும் ஒரு சிக்கலான நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இரண்டு பிரச்சினைகள் இந்த நெருக்கடியை உருவாக்கியிருக்கின்றன. அல்லது இரண்டு விவகாரங்கள் இந்த நெருக்கடிக்குக் காரணமாக இருக்கின்றன. இனங்களுக்கிடையிலான அதிகாரப்பகிர்வு முதலாவது பிரச்சினை.

செய்தித் துளிகள்..

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு சார்பான பிரசாரங்களில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் கல்முனை மற்றும் களுவாஞ்சிக்குடி ஆகிய இரு பிரதேசங்களையும் சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இப்படியும் நடக்கின்றது.


நாட்டில் யுத்தம் நிறைவடைந்து சாதாரண மக்கள் இயல்பு வாழ்விற்கு திரும்ப முனைந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில் விசமிகளின் செயற்பாடுகள் மக்களை மேலும் அச்சத்திற்குள் தள்ளிவிடுகின்றது. கடந்த சில வாரங்களுக்கு முன் உடுப்பிட்டி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் இளைஞன் ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தபோது அப்பாதையின் குறுக்கே கால்நடை (மாடு) ஒன்று பாய்ந்தபோது இளைஞன் மோட்டார் சைக்கிளினால் கீழே விழநேரிட்டுள்ளது. தனக்கு நேர்ந்த விடயத்தில் ஆத்திரமடைந்த இளைஞன் கால்நடையின் வீட்டிற்கு சென்று உரிமையாளரை தாக்கி காயப்படுத்தியுள்ளான். சுமார் 75 வயதுக்கும் மேலான வயோதிபர் இளைஞனின் தாக்குலினால் மிகவும் நோய்வாய்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. குறிப்பாக யாழ் குடாநாட்டிலிருந்து வெளிவரும் வன்செயல்கள் தொடர்பான செய்திகள் யாவற்றிக்கும் தனிப்பட்ட குரோதங்கள் மற்றும் இவ்வாறான பகுத்தறிவு கெட்ட செயல்களுமே காரணமாகும் என அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

பதுங்குவது பாய்ச்சலுக்கான அடையாளம்..................

நமது வாழ்வும், நமது மகிழ்வும், நமது மண்ணின் விடுதலையிலே பிண்ணி பிணைந்திருக்கிறது. நமக்கான வாழ்வு என்பதை நமது மண்ணின் வாசத்திலே, நமது மண்ணின் அழகிலே, நமது மண்ணின் உயிர்மையிலே தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. நமது மண்ணை பிரிந்து நமது சுவாசமோ, சிந்தனையோ ஒருபோதும் கிடையாது