வெள்ளி, 28 மே, 2010

நேற்று இன்று நாளை ...................

தமிழீழத் தேசியத்தலைவர் ஈழ மக்களின் இதயங்களை வென்ற கதாநாயகனாக மூன்று தசாப்தமாக இருந்து வந்துள்ளார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதற்கான பல காரணங்கள் முன்வைக்கலாம். எனினும் சுறுக்கமான விளக்கம் என்று சொன்னால் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் கடந்து சென்ற ஆண்டுகள் அனைத்திலுமே சிறந்த ஒரு வெற்றிக் கதாநாயகனாகத்தான் வாழ்ந்திருக்கிறார்.. எந்த ஒரு காலத்திலும் ஒருசில பின்னடைவுகளை தவிர தோல்வியென்று எதுவும் அவரை நெருங்கியதில்லை.

அதனால்தான் இன்றும்கூட விடுதலைப் புலிகளின் முழுமையான அழிவு என்று வர்ணிக்கப்படும் காலத்தின் பின்னும் தலைவர் அவர்களின் மரணம் சம்ந்தமான அறிக்கை முன்னுக்கும் பின் முரணான செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளது. இறுதிகால வன்னி யுத்தத்தின் போது, இந்தியப் புலனாய்வுத் துறையினால் ஐம்பதுக்கு மேற்பட்ட "றோ" உளவாலிகள் இயக்கப்பட்டு வந்ததும் யாவராளும் அறிய முடிந்தது. அப்படியான ஒரு திறமை மிக்க இந்தியப் புலனாய்வுதுறையினரால் இன்று வரை கூட தமிழீழத் தேசியத்தலைவருக்கு இறுதி நேரத்தில் என்ன நடந்தது என்பதை அறியமுடியாது போயிற்று. அதனால்தான் " இதோ இப்போது முடிகிறது ராஜீவ் காந்தி கொலை வழக்கு என்று இருந்த கதை போய் இந்திய தினததந்திப் பத்திரிக்கையில் வரும் சிந்துபாத் கன்னித்தீவு போன்று நீண்டு கொண்டே போகிறது.


இலங்கை அரக்க குணம் கொண்ட அரசுக்கு, விடுதலைப்புலிகளை அழிப்பதற்காக எத்தனையோ விதமான தொழில்நுட்பசாதனங்களையும். காட்டிக் கொடுப்புக்களையும் செய்து கொடுத்த இந்திய புனலாய்வுத்துறை இப்போது கொஞ்சம் தல்லாடத்தொடங்கியிருப்பது என்பதுதான் உண்மை. இல்லையேல் ஆயிரம் மையில்களுக்கு அப்பால் நின்று கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பலுக்கு கண் வைத்தவர்கள், இறுதி நேர ஐந்நூறு மீட்டர் சதுரப்பரப்பில் நடந்தது என்னவென்று தெரியாமல் ஏன் தலையை சொறிய வேண்டும். தலைவரின் தீர்க்கதரிசனம் பற்றி எலுத புறப்பட்டால் பந்தி பந்தியாக எழுதலாம். அவைகளில் ஒன்றிரண்டினைக் குறிப்பிடலாம் என விரும்புகிறேன்.


முதலாவது


இந்திராகாந்தி பிரதமராக இருந்த காலத்தில்தான் விடுதலைப்புலிகள் அமைப்பு ஆழமாக இந்தியாவில் காலூன்றி போர்ப்பயிற்ச்சியினை இந்திய புலனாய்வுத்துறை ஊடாக தமிழீழ விடுதலைப்புலிகள் பெற்று வந்தனர். அப்போது விடுதலைப்புலிகளின் முதலாவது அணி பயிற்சியை முடித்து இந்திய போர் பயிற்ச்சியாளர்கள்டமிருந்து பிரிய விடை பெறும் நேரம். பயிற்சி பெற்ற போராளிகளின் மனதில் பெரும் கவலை. ஏக்கம். என்னவென்றால் பயிற்சியாளர்களை விட்டு பிரிகிறோம் என்று. அப்போது இந்தியாவில் தங்கியிருந்த தலைவர் தகவல் அறிந்து சிரித்துக் கொண்டே கூறியிருக்கிறார். "எதிர் வரும் காலங்களில் இவர்களுக்கு எதிராகவே போராட வேண்டி வரும்." கவலைப்் படாமல் புறப்படுங்கள் என்று கூறியிருந்தார். 1987 இல் அதுவும் நிகழ்ந்தது.


இரண்டாவது


நான்காம் ஈழகட்ட போரிற்குப் பின்னர், விடுதலைப் புலிகளின் பாரிய வெற்றிகளுக்கு பின்னர், விடுதலைப் புலிகளிடம் சம பலம் உள்ளது என்று உலகே ஒப்புக் கொண்டு, 2002 பேச்சு வார்த்தை உடன்படிக்கை உண்டாகியது ! பல உலக அரசியல் தலைவர்கள், ராஜதந்திரிகள் அனைவரும் தமிழீழ விடுதலைப்புலிகளின் கிளிநொச்சி சமாதான் அரசியல் செயலகத்துக்கு படை எடுத்த காலம். அப்போது தேசியத்தலைவருக்கு அருகாமையில் இருந்த போராளி தலைவரிடம் கூறியிருக்கிறார், "அண்ணே, பெரிய உலக அரசியல் வாதிகள் யார், யாரோ எல்லாம் வாராங்கள், இதோட எங்களுடைய பிரச்சனையை முடிச்சிடலாம் தானே" என்று. தலைவரின் தீர்க்கதரிசனம் அப்போதும் சிரித்து விட்டுக் கூறினார் அதெல்லாம் இப்ப நடக்காது, தமிழீழ விடுதலைப் போராட்டமும், நாங்களும் இதுவரை சந்திக்காத பேரழிவை இனிமேல்தான் சந்திக்க போகிறோம்" என்று. பக்கத்திலிருந்த அந்த போரளி மட்டுமல்ல அதை கேட்டு கொண்டிருந்த ஏனைய போராளிகளுக்கும் அப்போது அது ஒரு விளங்காத புதிராகத்தான் இருந்திருக்கும்.
தமிழீழ தேசிய தலைவரின் போராட்ட வரலாற்றில் தலைவர் கணித்த போரியல் முன் ஏற்பாடுகள் பற்பல.... 1983 இல் போரியலில் பெரிதாக எந்த அனுபவம் இல்லாத போதே தலைவர் அவர்கள் வகுத்த கணக்கு தவறியதில்லை. அப்படி இருக்கும் போது வரலாறு எனது வழி காட்டி என கூறி தேசிய தலைவர் தனது வரலாறுகளில் இருந்து அவர் எப்படி கற்று தேறி ஒரு முன்ணோடியாக முடிவெடுத்திருப்பார். அன்மையில் வெளிவந்த இன்னுமோர் செய்தி மே 14ம்,15ம் திகதியளவில் அமெரிக்காவின் அனுசரனையுடன் எரித்திரியா அரச்சங்கத்திடம் அரசியல் தஞ்சம் அடைவதாக தமிழீழ விடுதலை புலிகள் முடிவெடுத்திருந்தனர், எனினும் பிராந்திய வல்லரசான இந்தியாவின் தலையீட்டால் அதுவும் நடைபெறாமல் போய் இருந்தது.


இந்த செய்தி நாடாளமன்ற உறுப்பினர் சிவஜிலிங்கம் அவர்களின் டி. டி. ஆர். வானொலி செவ்வியூடாக வெளிவந்த ஒரு செய்தி. இப்படியான பல சூழ்ச்சி, சதி, இவைகள் எல்லாவற்றையும் கடந்த போராட்டம்தான் தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டம். சரி இனி வரப் போகும் காலம் எப்படியானது ? அதனை தமிழர் எப்படி முகம் கொடுக்க போகிறார்கள், என்பது யாருக்குமே தெரியாத ஒரு இருட்டாகி விட்டது. எனினும் தேசியத் தலைவர் அவர்களது நகர்வினை ஆரம்ப காலத்திலிருந்தே உன்னிப்பாககூர்ந்தவர்களால் ஒரு முடிவுக்கு வரக்கூடியதாக இருக்குமென நம்புகிறேன்.


உலக தீவிரவாத நடவடிக்கையான செப்டம்பர் பதினொன்றுக்கு பிறகு உண்மையான சுதந்திரப் போராட்டமும், தீவிர வாத போராட்டமாக உலக நாடுகளால் சித்தரிக்கப்பட தொடங்கி விட்டது. அதில் எமது போராட்டமும் விதி விலக்கின்றி போய்விட்டது. எமது போராட்டமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் தீவிரவாத இயக்கமாக இந்திய அரசின் ஏகோபித்த ஆதரவுடன் உலகெங்கும் அறியப்பட வைத்து, இது விரும்பியோ, விரும்பாமலோ நடந்தேறிவிட்டது. அதனை எப்படியாவது மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்காக 2002 இல் தமிழீழ விடுதலைப்புலிகள், இலங்கை அரசாங்கம் பேச்சு வார்த்தை ஒப்பந்தம். அப்படியிருந்தும் ஏழு வருடத்திற்கு பிறகு இன்று ஈழ போராட்டத்துக்கு இப்படியொரு நிலமை. இந்த நிலமைக்கு முழுமையான காரணம் இந்தியா என்றால் அது மிகையாகாது.
இந்த இடத்தில் நான் ஒன்றை மட்டும் விளக்க கடமைப்பட்டுள்ளேன். இந்தியா என்பது ஒரு முகம், அதன் பின் இரண்டு சக்திகள் இயங்கிவருகின்றது. இந்தியா ஒரு பிராந்திய வல்லரசாக இருக்க வேண்டும் என்பதற்காக அயராதுபாடுபடும் இந்திய புலனாய்வுத்துறை(றோ). இரண்டு, இந்தியா பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம்பெற்ற பின் தொடர்ந்து பற்பல வருடமாக ஆட்சியில் அதிகாரம் செலுத்தும் நேரு குடும்பம். இந்த இரு சக்திகளும் சேர்ந்துதான் எமது தமிழீழ விடுதலை போராட்டத்தை இன்று இந்தளவுக்கு பின்ணோக்கி தள்ளி சென்றன. நேரு குடும்பத்தில் வந்த ராஜீவ் கந்தி, அப்போதைய அரசியலில் ஒரு கற்றுக்குட்டி. அப்போதைய இலங்கை ஜனாதிபதி அரசியல் நரி. ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் சூழ்ச்சியில் உள்வாங்கப்பட்டு காணாமல் போனார் ராஜீவ் காந்தி.


பிரதமர் ராஜீவ்காந்திக்கும் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கும் எந்தவிதமான தனிப்பட்டோ அல்லது பொதுப்படையான விரோதங்கள் ஏதும் இருந்திருக்கவில்லை. எலி எலிப்பொறியை கோவித்து பிரயோசனை இல்லை. எலிப்பொறியை எவன் வைத்தான் என்பதைத்தான் அறிய வேண்டும். உலக வல்லரசாக வரத் துடிக்கும் இந்திய, உலக அரசியல் தெரியாமல் முக்கி முனகுவது இப்போதுதான் மெல்ல மெல்ல புலப்படுகிறது. அப்படியாயின் அன்மையில் இந்தியா தன்னைத்தானே புரிந்து கொள்ள காரணமாக இருந்தது என்னவாக இருக்கும்.
எதுவென்று நீங்கள் அறிய ஆவல் படுகிறது எமக்குத் தெரிகிறது. எல்லொருக்கும் தெரிந்த விடயம்தான். சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் பெரிதாக படர ஆரம்பித்துள்ளதுதான். நாம் முன்பு குறிப்பிட்டது போல இந்தியாவின் முதலாவது சக்தியான இந்தியப் புனலாய்வுத்துறை(றோ) இப்போது கொஞ்சம் சிந்திக்கத்தொடங்கியிருக்க வேண்டும். இல்லையே கொஞ்சம் திணரத்தொடங்கியிருக்க வேண்டும். அதுவும் இல்லையென்றால் பின்வரும் காலம் இந்தியாவிற்கு சீனாவல் பாரிய அச்சுறுத்தலாக் அமையும். சிங்கள அரசும் சீன அரசும் கை கோர்க்க ஆரம்பித்துவிட்டது. தமிழீழ அழிப்புப் போருக்கு பாரிய உதவி செய்த இந்தியாவை இலங்கை அரசு மெல்ல மெல்ல புறக்கணித்து வருகிறது. இலங்கை அரசு ஒப்புக்காக மட்டும் இந்தியாவின் மனதை குளிர வைப்பதற்கு அவ்வப்போது அறிக்கைகளை விட்டு வருகிறது. உண்மையில் இந்தியாவை விட இலங்கை உலக அரசியலில் கெட்டித்தனம் காட்டி வருகின்றது.


சீன பெரும்படை அரசு சமீப ஆண்டு காலமாக இந்தியாவை சுற்றி தனது படை பல படைப் பல கண்காணிப்பை ஷ்திரப்படுத்தி வருவது உலகமே அறிந்த ஒன்று. அதாவது checkmate என்று சொல்லப்படுகிற வகையில் இறுதியாக கடல் வழி கண்காணிப்பிற்கும், இந்தியாவின் பல ஆராய்ச்சி மையங்களனைத்துமே தென்னிந்திய மாநிலங்களில்தான் அமைந்துள்ளது. அவை அனைத்தையும் கண்காணிக்க இலங்கைத் தீவு சீன அரசாங்கத்திற்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக அமைந்து விட்டது. எனவே சீன அரசாங்கத்தின் அன்பளிப்புகள் பல இப்போது இலங்கை அர்சாங்கத்திற்கு வந்தடைந்த வண்ணமே உள்ளது. இவ்வகை நடவடிக்கைகளை இந்தியாவால் தடுத்து நிறுத்த இலங்கை அரசாங்கத்தை தன் கைக்குள் கொண்டுவர இந்தியா பல நடவடிக்கைகளை கையாண்டு பார்த்துவிட்டது. பலன் பூச்சியம்தான்.
தற்போது இலங்கை இந்தியாவிடம் இருந்து பல உதவிகளை பெற்று வருகிறது. ஆனால் இலங்கை அரசாங்கம் மனதளவால் எந்த நன்றி உணர்வும் இல்லை. " நீ தருவதை தா ... நான் வாங்கிக் கொள்வேன் . ஆனால் எனது விசுவாசமெல்லாம் என் மத நாடான சீனாவிற்கே" என்று வஞ்சமாக முன்னேரி வருகிறது. தமிழீழ விடுதலைப் போராட்டம் நடைபெற்ற காலத்தில் இந்திய அரசாங்கத்திற்கு இப்படியொரு தர்மசங்கடம் கிடைத்தது இல்லை. பொல்லை கொடுத்து அடிவாங்க வெளிகிட்ட கதையாகி போகிறது. அதனால் இனி வேறு வழியில்லை என்பதால் தமிழ் கட்சிகளை கைக்குள் போட்டு ஏதாவது செய்து கொள்ளலாம் என்று நினைத்து ஒரு சில தமிழ்க் கட்சிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதுஇ இந்தியா வெளிவிவகார அமைச்சர்கள் அவ்வப்போது இலங்கை விஜயம், அப்படி இப்படி என்று ஏதோ தூபம் போட்டு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.


அரசாங்கமோ எல்லாத்தையும் பார்த்து மனதிற்குள் எள்ளி நகைத்துக் கொண்டிருக்கிறது. முன்னை நாள் பிரதமர் இராஜிவ் காந்தியை அந்நாளில் அழைத்து, இராணுவ மரியாதை தருகிறோம் என்று கூறி துப்பாக்கியால் பிரடி மண்டையில் அடிக்கும் போதே உறைக்காத விசயம் இப்போது மட்டும் உறைக்க போகிறதா? ஆகவே இந்தியாவிற்கு உண்மையான நண்பன் யார் என்பதை இந்திய புலனாய்வுத்துறையோ அல்லது குடும்ப ஆட்சி நடத்திவரும் காங்கிரஸ் கட்ச்சியினரோ தெரிந்து கொள்ள வலுவின்றி உள்ளார்கள்.
சோனியாகாந்தி நேற்று வந்தவர். அவர் இந்திய பாதுகாப்பில் உண்மையிலேயே எந்தவித அக்கரை அற்றவர். அவரை பொறுத்தவரை தனது கணவனின் சாவுக்கு பழி தீர்க்கும் படலத்திற்காகவே காங்கிரஸில் சேர்ந்து பல வருடம் பொருத்திருந்து பல அரசியல் வாதிகளை தன்பாக்கம் இழுத்து தனது பழிவெறியை தீர்த்து முடித்தார். இதில் மிகவும் கேவலமான விடயம் என்னவென்றால், சிரித்துப் பேசும் காங்கிரஸ் கட்சி அரசியல் பிரமுகர்களைவிட தமிழ் பேசும் தமிழக கட்சி பிரமுகர்கள்தான் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு பாரிய பங்களிப்பு செய்துள்ளனர். அந்த முள்ளிவாய்காலிரத்த ஆறோட்டத்தில் அன்னை சோனியா காந்தியின் மனம் குளிர்ந்து போயிருந்தால் அதுதான் அவரின் குறிக்கோளாக இருந்திருக்க வேண்டும். தனது கணவனின் உயிருக்காக அன்னை சோனியா காந்தி கேட்ட உயிர்களின் எண்ணிக்கை நாற்பதினாயிரம் அப்பாவித்தமிழ் மக்கள்.


இத்தாலி காங்கிரஸின் பிடிவாதத்தால் தற்போது இந்திய புலனாய்வுத்த்றைக்குத்தான் அதிக வேலை வந்து விட்டது. இந்திய அரசாங்கம் தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு உதவுவதால் பயன் பெறப்போவது இந்தியாவே அன்றி வேறு யாருமில்லை. இந்திய பெருநாட்டிற்கு வடமாகடல் வலயத்தின் ஒரு காவலரனாக தமிழீழம் அமையுமென நினைத்தால்இ இந்திய அரசாங்கமோ, இந்திய புலனாய்வுத்துறையினரோஇ நின்று சிந்திக்க வேண்டிய காலம் இது. ஏன் எனில் இதைத்தான் அமெரிக்காவும் விரும்புகிறது. எதிரிக்கு எதிரி நண்பன் என்பதைப்போல அமெரிக்காவின் விரும்பாத நாடாக சீன வளர்ந்து வருகின்றது. அமெரிக்காவைப் பொறுத்தவரை இந்தியா என்றுமே தேவைக்கேற்ப நண்பன்.
நண்பன் எப்போது ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதில் இப்போது கவனம் செலுத்த தொடங்கிவிட்டது அமெரிக்கா. அதனால் இந்தியாவின் பல சில விருப்புகளை அமெரிக்கா மீறுவதற்கு விரும்பவில்லை. அதனால்தான் மே 14 15 அமெரிக்காவின் தலையீட்டைக் கூட இந்தியா தடுத்த போது கூட தயக்கமின்றி அமெரிக்கா விலகி சென்றது. இந்தியாவை பொறுத்தவரை இப்போது என்ன நடந்தேறிக்கொண்டு இருக்கிறது. பிள்ளையார் பிடிக்கப் போய் பெருச்சாலியான கதையாக மாறுகிறது. மீண்டும் நான் ஆரம்பித்த இடத்திற்கே போகலாம் என விரும்பிகிறேன்.
தமிழீழ தேசிய தலைவரின் தீர்க்க தரிசனம் பற்றியது.
நான் குறிப்பிட்டது போன்று, இந்திய நேரு குடும்ப காங்கிரஸ் ஆட்ச்சி, அன்னை சோனியாவின் பழி வெறி, உலக நாடுகலின் தீவிரவாத கொள்கை, அமெரிக்கா இந்தியா ஆதரவுடன் தமிழீழத்தை அங்கீகரிப்பது, புலம் பெயர் மக்களின் கைகளின் அரசியல் நடவடிக்கைகளை ஒப்படைப்பது, எப்படி கையாள்வது, இவை அனைத்தையும் தேசியத் தலைவர் முன்கூட்டியே தீர்மாணித்து விட்டார். இவை அனைத்துமே தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவிற்குப் பிறகுதான் நடந்தேற் தொடங்கும் என்பதை தேசியத் தலைவர் முன்னரே நிகழ்ச்சி நிர்ல் தயாரித்து விட்டார்.


அதில் எந்த வித பிசுறுமின்றி இன்றுவரை நகர்ந்து கொண்டு செல்கிறது. இவை அனைத்தும் வேறு யாரினாளும் நடந்துவிடவில்லை. தேசியத் தலைவர் அவர்கலின் தீர்க்க தரிசனத்தின் வழியில் கண்டு பிடித்து கடைந்தெடுத்த ஓருலகை புரட்டி போடும் உண்ணத சாதனை. இவையெல்லாம் ஒருநாள் உலகிற்கு தேசிய தலைவரின் உதடுகள் உதிரும்போதுதான் உலகம் உறைந்து போகும். ஏனென்றால் ஒரு தசாப்த வருடங்களுக்கு முன்னமே பல மேற்குலக இராஜ தந்திரிகள் தேசியதலைவர் பற்றி இப்படிக் கூறியிருக்கார்கள். HE IS A UNESTIMATED MAN.


மீண்டும் இந்தியா பக்கம்.


இன்னும் சில மாதமோ.. சில வருடமோ கடந்து போனால், இந்தியாவின் பாதுகாப்பு சீனாவினால் அச்சுருத்தலாக இருக்கும். என்பதில் துளிகூட சந்தேகமில்லை. அதற்காக இலங்கையை பாரிய துருப்புச்சீட்டாக சீனா பயயன்படுத்தி கொள்ளும். ஆகவே, இனிமேல் ஒரு ஆயுத போராட்டத்தை இந்தியாவால் புதிதாக புதிய நபர்களால் ஆரம்பிக்க முடியாது என்பது நன்றாக தெரியும். அப்படி ஆரம்பித்தால் இலங்கை அரசாங்கம் சீனாவின் உதவியுடன் முளையிலே கிள்ளுவது போல். அழித்துவிடும், ஆகவே ஆயுத போரியல் திறமையில் சித்தி பெற்ற போராளிகளை வைத்துதான் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான ஆயுத போராட்டத்தை செய்யலாம் என்பதுதான் உண்மை. அதற்கான பல உதவிகளை இந்தியா இனிமேல் ஈழ போராளிகளுக்கு செய்தே ஆக வேண்டும். இந்தியா விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இது காலத்தின் கட்டாயமாகும்.


அத்தோடு மேற்குலக நாடுகளின் இலங்கை மீதான போர்க்குற்ற நடவடிக்கை முன்னெடுப்பு எடுத்து வரும் இந்நாளிற்கு பின் தமிழீழ விடுதலைப்புலிகளால் ஆரம்பிக்கப்பட உள்ள ஒரு போராட்டத்தின் போது இலங்கை அரசாங்கத்தால் பாரிய இராணுவ தோல்விகளை எதிர் நோக்க வேண்டி வரும். இனிவரும் போராட்ட களத்தில் தமிழீழ விடுதலைப்போரளிகள் பயன்படுத்த உள்ள போராட்ட யுக்தி என்ன என்பதுதான் முக்கியத்துவம் பெறும்.
அவ்வேளையில் உலகெங்கும் வாழும் தமிழர்களின் வீறு கொண்ட எழுச்சி, ஐநா சபையையே அதிர வைக்கும். அப்போதுதான் ஈழத்தமிழர்களின் ஈழப்போர் முடிவுற்று சுதந்திரதமிழீழம் பெறும். அதை உலக நாடுகள் உட்பட ஐநா சபையும் ஏற்று ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை புரிந்து உலக பந்தில் தமிழனுக்கென்று புதிய நாடு பிறப்பதை அங்கீகரிக்கும். இவை அனைத்துமே காலத்திற்கு ஏற்ப நடந்தே தீரும். ஆகவே புலம் பெயர்மக்களின் கைகளில் என்று தமிழீழ அரசியல் நடவடிக்கைக்கான பொறுப்பு ஒப்படைக்க பட்டதோ, அன்றே ஐந்தாம் ஈழக்கட்ட போர் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. அது இனி முடிவுறும் காலத்தை நோக்கித்தான் இனி நாம் பயணிக்க வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக