செவ்வாய், 29 ஜூன், 2010

இந்த நாட்டில் கடைசி தேசப்பற்றாளன் இருக்கும் வரையில் பான் கீ மூனின் குழுவினர் இங்கு கால்பதிக்க இடமளிக்க போவதில்லை-ஹெல உறுமய

உயிரைக் கொடுத்தேனும் பான் கீ மூனின் மூவர் கொண்ட குழுவை நாட்டுக்குள் காலடி வைக்க விடமாட்டோம். இந்த நாட்டின் கடைசி தேசப் பற்றாளன் இருக்கும் வரை பான் கீ மூனின் எண்ணம் ஈடேறாது.


இவ்வாறு ஜாதிக ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான தலைமையகத்திற்கு முன்பாக நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேஜர் மாறன்(சின்னத்துரை சுகுமாரன் - வவுனிக்குளம் )

பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்தை இறுதிவரை எதிர்த்து நின்று போராடி வீர வரலாறுபடைத்த தமிழ் மன்னன் பண்டாரவன்னியனால் பெருமைப்படுத்தப்பட்ட மண் வன்னிப் பெருநிலப்பரப்பு. காடுகளும், குளங்களும், விளைநிலங்களும், காட்டு விலங்குகளும், மந்தைகளும் இம்மண்ணின் செல்வங்கள். இத்தகையதொரு விவசாயக் கிராமமான வவுனிக்குளம்தான் சுகுமாரன் என்ற இயற்பெயரோடு மேஜர் மாறன் பிறந்த ஊர்.

களத்திலும் புலத்திலும் ஒருமித்த அரசியல் பாதையூடாக செயலூக்கம் பெறவேண்டும்: கேணல் ஹரிஹரன்

“ஈழத்தமிழர்களின் உரிமைப் பிரச்சினையை இலங்கையிலும் மற்றும் சர்வதேச அளவிலும் அரசியல் பாதையில் முன்வைக்க வேண்டும். அதற்கு ஒருங்கிணைந்த செயல்பாட்டில் ஈழத்தமிழர்கள் பங்குபெற வழி செய்ய வேண்டும். நடைமுறையில் இயங்கக்கூடிய அடிப்படை செயல்பாட்டை. உருவாக்கி அதை ஒரு குரலுடன் எடுத்து முன்வைக்க தமிழ் தலைவர்கள் தயாராகவேண்டும். புலம்பெயர்ந்த தமிழர்கள் கடந்த காலத்தில் தாங்கள் நடந்து கொண்ட வழிமுறைகளை மனக்கண்ணாடியில் பார்த்து புதிய செயலாக்கங்களை உருவாக்க வேண்டும். பழையன கழித்துப் புதியன புகுத்தும் நேரம் வந்துவிட்டது.”

53 வது படைப்பிரிவின் கட்டளையிடும் தளபதி- புதிய இராணுவ பேச்சாளர்

இதுவரை இராணுவப் பேச்சாளராக பதவி வகித்த மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க இராணுவத்தின் பிரதான தொலைத் தொடர்பு அதிகாரியாகவும், சமிக்ஞை அதிகாரியாகவும், இராணுவ மருத்துவ பிரிவின் பொறுப்பாளராகவும் தொடர்ந்து சேவையாற்றுவார்.

சந்திப்பு?!

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் அவசிய, அவசரப் பிரச்சினைகள் குறித்து தமிழ்க் கட்சிகள் ஒருமித்துக் குரல் கொடுக்க வேண்டும் என்ற நோக்குடன் தமிழ்க்கட் சிகளின் கூட்டம் ஒன்று நாளை மறுதினம் முதலாம் திகதி நடைபெறவுள்ளது.

புலம்பெயர் மக்களை தம்மிடம் மண்டியிட வைப்பதே சிறீலங்கா அரசின் நோக்கம் -மருத்துவர் வேலாயுதபிள்ளை அருட்குமார்

செல்வராசா பத்மநாதனை சிறீலங்காவின் படைப் புலனாய்வாளர்களே இயக்கி வருவதாகவும், அவரூடாக புலம்பெயர் மக்களை தம்மிடம் மண்டியிட வைப்பதே சிறீலங்கா அரசின் நோக்கம் என, அண்மையில் கே.பியுடன் சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கொட்டாபய ராஜபக்சவைச் சந்தித்து, பிரித்தானியா திரும்பியுள்ள மருத்துவர் வேலாயுதபிள்ளை அருட்குமார் அம்பலப்படுத்தியுள்ளார்.

இந்தியா எங்களோடு இருந்தால் போதும்.....!

தமிழர்கள் எதிராக நடந்த போர்க் குற்றங்கள் குறித்து உலக நாடுகளும், ஐ.நா.வுன் என்ன கூறுகின்றன என்பது குறித்து தனக்கு கவலையேதும் இல்லை என்று கூறியுள்ள சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச, இந்தியாவும், அண்டை நாடுகளும் தங்களோடு இருந்தால் போதுமானது என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவில் 10 ரஷ்ய உளவாளிகள் கைது!

அமெரிக்காவில் சாதாரண மக்களைப் போல தங்கி உளவு பார்த்து வந்த 10 ரஷ்யர்களை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பத்து பேரும் கடந்த சில ஆண்டுகளாகஅமெரிக்காவில், சாதாரணர்கள் போல வசித்து வந்துள்ளனர்.