திங்கள், 26 ஜூலை, 2010

மணலாற்று தாக்குதலின் அதிர்ச்சி பின்னணி ...

கடந்த வருடம் தடைமுகாமில் இருந்து தனியே பிரித்து எடுக்கப்பட்ட போராளிகளில் தீவிரமான விடுதலைப்
புலிப் போராளிகளைபிரித்து (பெண் போராளிகள் உட்பட )தனி வதைமுகாமில் அடைத்து வைத்திருந்தது அனைவரும்
அறிந்த ஒன்றே .அப் போராளிகுழுவில் இருந்து ஒரு தொகுதியினரை பல குழுக்களாக பிரித்து கள சேவைக்காகவும்தேடுதல் வேட்டைக்காகவும் அவர்கள் பயன் படுத்தி 
வந்தனர்.




இக் குழுவில் யுத்தகளமுனையில் விழுப்புண் அடைந்து இராணுவத்தால்
கைது செய்யப்பட்ட போராளிகளும் அடங்குவர்.இத் தருணத்தில் இராணுவத்தின் கட்டளைக்கு அடி பணியாத கொள்கையில் உறுதி
கொண்ட போராளிகள் சிலரை இராணுவ சீருடை அணிவித்து அவர்களை நய வஞ்சகமாக கொலை செய்து விட்டு,இது புலிகளுக்கும்
ராணுவத்திற்கும் இடையில் நடந்த மோதலாக தமிழ் ஊடகங்கள் வாயிலாக செய்திகளை மெதுவாக கசியவிடுகிறது. மணலாற்றில் நேற்றைய தினத்திற்கு முன்பு கொல்லப்பட்டவர்களும் காயப்பட்டவர்களும் மேற்படி ராணுவத்தால் கைது செய்யப்பட்டு சித்திர வதைகலுக்கு உள்ளாகி வந்த விடுதலைப் புலிப் போராளிகளே. இத்தகவல்சரத் பொன்சேகா தரப்பிலிருந்து இருந்து கசிய விடப்பட்ட புலனாய்வு செய்தியாகும்.
ஜி.எஸ் .பி வரி சலுகை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து பெற்றுக் கொள்ள வேண்டுமானால் சில முக்கிய நிபந்தனைகளை ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருந்தது. அதில் இலங்கை அரசாங்கமானது நீண்ட காலமாக இருந்து வரும் அவசர கால சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முக்கியமாக விடுத்திருந்தது. இதை கருத்தில் கொண்டே மேற்கண்ட மணலாற்றுச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக அறிய முடிகிறது. அதாவது, இலங்கைத் தீவில் இன்னும் பயங்கர வாதம் ஒழியவில்லை ஆகையால் அவசர கால சட்டத்தை நீக்க முடியாது என்று ஐரோப்பிய ஒன்றியம் உட்பட அனைத்து உலக நாடுகளையும் நம்ப வைக்கும் ஒரு சதித் திட்டமாகும். அரசாங்கத்தின் இச்செயலானது அரச சார்பற்ற நிறுவனங்கல் மற்றும் ஊடகவியலாளர்களின் பிரசன்னம் மற்றும் செயல்பாடுகளை மட்டுறுத்தும் நோக்கமாகவே அறிய முடிகிறது. தமிழர்களுக்கெதிராக தமிழர்களைக் கொண்டே தமிழ் ஊடகங்கள் வாயிலாக உலகுக்கு பறை சாற்றுவதே ராஜபக்ஷே அரசாங்கத்தின் சாதுர்யமாகும்.

சிங்களவரின் ஆர்ப்பாட்ட ஊர்வலம் சுவிசில் நடந்தேறியது !

இலங்கைக்கு எதிரான ஐ.நா நிபுணர் குழுவின் நியமனத்தைக் கண்டித்து இத்தாலியில் வாழும் சிங்களவர்கள் இன்று ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமைக் காரியாலயத்தின் முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தினார்கள்.

தென் கொரியா -அமெரிக்கா கூட்டு பயிற்சி வட கொரியா எச்சரிக்கை

அமெரிக்க-தென் கொரியப் படைகள் வட கொரியாவின் தாக்குதல் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாது நேற்று ஜப்பானியக் கடலில் பயிற்சியைத் தொடங்கின. இந்த மாபெரும் போர்ப் பயிற்சியில் 20 போர்க்கப்பல்கள், 200 விமானங்கள், அமெரிக்கா, தென் கொரியா ஆகிய இரு நாடுகளையும் சேர்ந்த 8,000 வீரர்கள் கலந்துகொள்கின்றனர்


மீண்டும் வீதிக்கு இறங்கிப் போராட வேண்டும் சிவந்தன் அழைப்பு

தமிழ் மக்கள் தமது இனத்தின் விடுதலைக்காகவும், தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகளை விடுவிக்கவும் மீண்டும் வீதிகளில் இறங்கிப் போராட்டங்கள் மேற்கொள்ள வேண்டும் என, ஐ.நா மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடைப்பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கை தீவில் குறுகியகால இடைவெளியில்430 சிறார்கள் காணாமல் போயுள்ளனர்

வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் சுமார் 430 சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக காவல்துறைத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதில் 270சிறுமிகளும், 150சிறுவர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உரிமைக்காக போராடி வென்ற வியட்னாம் எமது போராட்டத்தை புரியாமல் ....இலங்கையுடன் கூட்டு நடவடிக்கையாம் ...

தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு வியட்நாம் அரசு இணக்கம் தெரிவித்துள்ளது.
 இது தொடர்பில் இலங்கை அரசு வியட்நாம் புலனாய்வுத்துறையினரிடம் விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அந்நாட்டு அரசு இலங்கையுடன் இணைந்து செயற்படு வதாக உறுதியளித்தது.

2ம் லெப்.தமிழழகி


மிக இளைய பராயத்திலேயே அறிவியல் புத்தகங்களிலிருந்து ஆராய்ச்சிப் புத்தகங்கள் வரையிலும் சிற்றிதழ்களிலிருந்து சிறுகதைகள், நாவல்கள் ஈறாக ஊடாடிய உயரம் அவள்.


அவளது வாசிப்பாற்றலே, அவளது பல்துறை ஆற்றலினதும் அளவுகோல். புத்தகம் என்றால் சந்தடிஎல்லாமே சமாதியாகிவிடுவாள்.

எங்கே எம் ஈழ கவி புதுவை .....?

தமிழன் வெல்வான் தமிழீழம் மலரும்..


இந்தக் கேள்வியை கடந்த ஒரு வருடமாக எனக்குத் தெரிந்தவர்கள் எல்லாரிடமும் கேட்கிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலை சொல்கிறார்கள்.ஆனால் கவிஞர் எங்கே இருக்கிறார் என்று திட்டமாக எவரும் சொல்கிறார்களில்லை.

எல்லாளன் படை நடவடிக்கை.... இன்னொரு.... கரும்புலிகளின் அதிஉச்ச உறுதி கூடிய தாக்குதல்

'தலைவர் இருக்கின்ற காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் மீட்போம் . இது உறுதி. அதற்கு உங்கட பங்களிப்புத்தான் முக்கியம் . அண்ணைக்கு நீங்கள் தான் தோள் கொடுக்கவேண்டும் . உங்கட பங்களிப்பில்தான் எங்கட மண்ணை மீட்க முடியும் .

1983 இற்கு முன்னும் பின்னும் நடந்தேறி கொண்டிருக்கும் இனப்படுகொலைகள் ....

பல இனங்கள் வாழும் இலங்கை போன்ற நாடுகளில் இனரீதியான பிரச்சினையின் தீவிரத்திற்கு கடந்தகால அனுபவங்களை வெளிக்காட்டும் வெறுப்பான சம்பவங்களைக் கொண்ட வரலாறே காரணமாக இருந்துள்ளது என்பது தெளிவு. காலத்துக்குக் காலம் மேற்கொள்ளப்பட்ட அகிம்சாவாதிகளின் போராட்டங்களினால் கிடைத்த கசப்பான அனுபவங்கள் மற்றும் ஏமாற்றங்கள், ஒதுக்கு முறைகள், ஒடுக்கு முறைகள் போன்றவற்றை வெளிக்காட்டிய வரலாறு இலங்கையின் தமிழர் தாயகப் போராட்டத்தை தீவிரப்படுத்திக்கொண்டு செல்வதில்

25,27-ஜீலை-1983 வெலிக்கடசிறையில் படுகொலை செய்யப்பட்டோர்..

வெலிக்கடைச் சிறைச்சாலையில்படுகொலை செய்யப்பட்டவர்களின்
விவரம்பின்வருமாறு :
தங்கதுரை என்று அழைக்கப்படும்நடராசா தங்கவேல் ,
குட்டிமணி என்று அழைக்கப்படும்செல்வராஜா யோகச்சந்திரன் ,

மணலாறு சம்பவம் பற்றி தெரியவருவதாவது ...

விடுதலைப் புலிகளால் முன்னைய பொழுதுகளில் பொருத்தி வைக்கப்பட்ட கண்ணிவெடிகளால் ஏற்பட்ட.............
விபத்துகளால் பல இராணுவத்தினர் இறந்தும்,படுகாயம் அடைந்துள்ளனர் என அறியவருகிறது .இது தற்செயலாக
நடந்தசம்பவமே அன்றி தாக்குதல் சம்பவமில்லை.இராணுவமும்,அரசும் திட்டமிட்டு உள்ளிருக்கும் போராளிகளை
விடுதலை செய்யாமல் சிறைகளில் வைத்திருக்கும் நோக்குடனே செய்யப்பட்டு வரும் பிரசாரமாகும்.எனவே அரசின்
திட்டமிட்ட பிராசார போரை எதிர்கொள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டுகிறோம்.

குண்டுச் சத்தங்களும், துப்பாக்கிச் சத்தங்களும் ஓய்ந்துள்ளதே தவிர மக்களின் வாழ்க்கை நிலை இன்னமும் வழமை நிலைக்கு திரும்பவில்லை

இலங்கையில் கிழக்கு மாகாணம் அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்டு மூன்று வருடங்கள் ஆகியுள்ள போதிலும் அங்கு முற்றிலுமாக இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை என பலதரப்பினர் கூறுகிறார்கள்.

வாகரையில் புராதன அம்மன் சிலை கண்டுபிடிப்பு

வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கதிரவெளி, வெருகம்பல் மலைப்பகுதியில் புராதன காலத்தில் உருவாக்கப்பட்டதாக நம்பப்படும் உலோகத்தாலான 2 அடி உயரமான அம்மன் சிலையையும் மலையில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களையும் பிரதேசவாசிகள் இன்று கண்டுபிடித்துள்ளனர்.

வெள்ளைவானில் வந்தோரால் கடத்தப்பட்ட வவுனியா வாடிவீட்டு உரிமையாளர் 6 லட்சம் ரூபா கப்பம் செலுத்திய பின் விடுவிக்கப்பட்டார்..

இச்சம்பவம் கடந்த 23ஆம் திகதி வெள் ளிக்கிழமை இரவு வவுனியா தோணிக்கல் வீதிப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
வவுனியா வாடிவீட்டு உரிமையாளரான தோத்ணிக்கல், சிவன் கோயிலடியைச் சேர்ந்த

இலங்கை அரசு வெளிநாட்டு அரசுக்களுக்கு விடுத்திருக்கும் கோரிக்கை ....

இலங்கையிலிருந்து அகதிகள் என கூறிக்கொண்டு வருபவர்களின் புகலிடக் கோரிக்கையை ஏற்கின்றமை சட்டத்துக்கு புறம்பான ஆட்கடத்தல், சட்டவிரோத குடியேற்றம் ஆகியவற்றை ஊக்குவிப்பதாக அமையும் என்று சர்வதேச சமுதாயத்தை அரசு எச்சரித்துள்ளது.