திங்கள், 26 ஜூலை, 2010

இலங்கை தீவில் குறுகியகால இடைவெளியில்430 சிறார்கள் காணாமல் போயுள்ளனர்

வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் சுமார் 430 சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக காவல்துறைத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதில் 270சிறுமிகளும், 150சிறுவர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காணாமல்போன குழந்தைகளில் இதுவரையில் 225சிறுவர் சிறுமியர் மட்டுமே கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். ஏனைய சிறுவர் சிறுமியரை இன்னமும் காணாவில்லை எனவும், தொடர்ச்சியாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர். அநேகமான சந்தர்ப்பங்களில் கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. அனுராதபுர பிரதேசத்தில் அதிகளவு சிறுவர் சிறுமியர் காணாமல் போயுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. 12முதல் 18வயது வரையிலான சிறுவர் சிறுமியரே அதிகளவில் காணாமல் போயுள்ளனர். இவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட சிறுமியர் பாலியல் தொழில்களிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக