வியாழன், 1 ஜூலை, 2010

இலங்கைக்கான வரிச்சலுகையை மீளாய்வு செய்வதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது

இலங்கையில் தொழிலாளர் உரிமைகள் ஒழுங்காக பின்பற்றப்படவில்லை என அமெரிக்காவின் தொழிலாளர் சம்மேளனம் குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பில் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்று, இக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்வதற்கும், இலங்கைக்கான வரிச்சலுகையை மீளாய்வு செய்வதற்கும் அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

நாம் ஒருபோதும் அடிபணிய மாட்டோம்.......பசில்

மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணங்கள், கொடுப்பனவுகள் வரவு செலவுத் திட்டத்தின் மூலமாக வெட்டப்படவில்லை என்பதுடன் நாட்டின் இறைமைக்கு பங்கத்தை ஏற்படுத்தும் நிபந்தனைக்கு நாம் ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என்று அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். மீள் குடியேற்றம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நல்ல கருத்துகளை கொண்டிருக்கின்ற நிலையில் தென்னிலங்கை கட்சி அதனை சீர்குலைக்க முயற்சிக்கின்றது. அதற்கு இடமளிக்க முடியாது என்றும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முதலாவது கரும்புலித்தாக்குதல் .........

 இயக்கத்தில் சேர்ந்து விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் எல்லோருக்குமே தன்னுடைய அரிய உயிரை இலட்சியத்திற்காக துறப்பதற்க்கு எப்பொழுதுமே தயாராய் இருக்கின்றனர். இயக்க உறுப்பினர்கள் அனைவருமே சைனைட் குப்பிகனை கழுத்தில் அணிந்து கொண்டு இருப்பார்கள். மிக இக்கட்டான சூழ்நிலையில் எதிரிகளிடம் பிடிபடாமலும் இயக்கத்தை பாதிப்படையவிடாமலும் செய்ய உயிர் துறந்தவர்கள் எத்தனையோ பேர்.
ஆனாலும் கரும்புலிப்பிரிவைச் சேர்ந்தவர்கள்

ஈழத்தமிழனாகப் பிறந்ததுதான் குற்றமா?



த.பெ. குணசீலன்,


கிளைச் சிறை முகாம்,


பூவிருந்தவல்லி,


சென்னை - 600 056.


பெறுநர்


மதிப்பிற்குரிய ஐயா,


பொருள்: நீதியான நியாயமான, சுதந்திரமான வாழ்வு வேண்டியும் தடையின்றி முறையான சிகிச்சை பெற பரிந்துரைக்க வேண்டியும் எனது நாட்டிற்கு திரும்பச் செல்ல உதவி வேண்டியும் மனிதாபிமான ரீதியில் உதவிபுரியுமாறு ஒரு ஈழத்தமிழ் அகதியின் விண்ணப்பம்.

கரும்புலி மேஜர் அறிவுக்குமரன்

ஆண்குரல்:- “அம்மா.... எங்களுடைய தாயகமண்ணின் மீட்சிக்காக.... என்னால் செய்யக்கூடிய தியாகம் எதுவோ.... அதைத்தான் நான் செய்யப்போகிறன்.. அதை மனமகிழ்வோடும் பூரண சந்தோஷத்தோடும் செய்கின்றேன். உங்களுக்கு இது ஜீரணிக்க முடியாத வேதனையாய்த்தான் இருக்கும். எனவே எங்களின் சாவுக்காக கண்ணீர் வடித்து கவலையடைவதைவிட நீங்கள் அதை ஏற்றுக்கொள்வதே எனக்கு நீங்கள் செய்யும் இறுதிக்கடனாய் ஆத்மாசாந்தியாய் இருக்கும் அம்மா..... உங்கள் மகன் நினைவுக்கல்லில் நிமிர்ந்து நிற்பான்.. நீங்கள் சுவாசிக்கும் காற்றில் நனையும் மழைத்துளியில் எல்லாம் உங்கள் மகன் கலந்திருப்பான்....”

தமிழக முதல்வரும் போர்க்குற்றவாளிதான்- அ.தி.மு.க

இலங்கை அதிபர் மகிந்த மற்றும் அந்நாட்டு ராணுவத்தில் பணிபுரியும் வீரர்கள் எவ்வாறு போர்க் குற்றவாளிகள் எனக் கருதப்படுகிறார்களோ, அதைப் போல தமிழக முதல்வரும் போர்க்குற்றவாளிதான் என அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.

லண்டன் வெம்பிளியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு லண்டன் நீதிமன்றம் 50 மாத சிறைத்தண்டனையை விதித்துள்ளது.

நிதிமோசடி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் வடக்கு லண்டன் வெம்பிளியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு லண்டன் நீதிமன்றம் ஒன்று மொத்தமாக 50 மாத சிறைத்தண்டனையை விதித்துள்ளது.
தமிழ் குடும்பத்தை சேர்ந்த இவர்கள் போலி ஆவணங்களை சமர்ப்பித்து, சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட்களை நிதிமோசடி செய்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

நாடாளுமன்றத்தில்விஜயகால மகேஸ்வரன் -டக்ளஸ் வாய்த்தர்க்கம்

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகால மகேஸ்வரன் உரையாற்றிக் கொண்டிருந்த போது அவருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் கடுமையான வாய்த்தர்க்கம் இடம்பெற்றது.

செய்திகள்


பாலியல் துஷ்பிரயோகம்-அரசு மறுப்பு

கொழும்பு ஆடைத்தொழிற்சாலைகளில் இலங்கை அரசாங்கத்தால் பணிக்கு சேர்த்துவிடப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் பெண் போராளிகள் பாலியல் துஷ்பிரயோக பிரச்சினைகளை எதிர்கொள்வதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் ஸ்ரீதரன் நாடாளுமன்றத்தில் முறையிட்டுள்ளார்