ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

உலக தமிழ் உறவுகளுக்கு மெராக் தமிழ் அகதிகள் கப்பலிலிருந்து ஒரு மடல்

கடந்த 2009 ஒக்ரோபர் 11ம் திகதி 254 இலங்கை தமிழ் அகதிகளை உள்ளடக்கிய கப்பல் அவுஸ்திரேலியா நோக்கி சென்று கொண்டிருந்த வேளை அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் றூட் அவர்களின் பணிப்பின் பேரில் இந்தோனேசிய கடற்படையினரால் கிறிஸ்மஸ் தீவிற்கு செல்வதற்கு முன்னதாக இடை நிறுத்தப்பட்டது. [ [ வீடியோ எழுத்தில் திருத்தம்]கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக ] கப்பல் இடை நிறுத்தப்பட்ட வேளை அவுஸ்திரேலியா ஐ.நாவின் அகதிகள் சாசனத்தில் கையொப்பமிட்ட நாடாகையால் நாம் அவுஸ்திற்ரேலியாவிற்கே செல்வோமென கப்பலை இந்தோனேசியாவிற்கு நகர்த்த மாட்டோமென அடம்பிடித்தோம். அந்த வேளையில் அவுஸ்திரேலிய தூதரக அதிகாரியென இந்தோனேசிய கடற்படையால் அறிமுகப்படுத்திய பெண்மணி ஒருவர் எம்மை கரைக்கு வருமாறும் எமக்கு தேவையான எரிபொருள் மற்றும் நீர் வசதிகளை வழங்கி மீண்டும் கிறிஸ்மஸ் தீவிற்கு செல்ல அனுமதிப்பதாக பொய் உறுதி மொழியை வழங்கி கரை செல்ல பணித்தார். அவரின் உத்தரவின் பேரிலும் இந்தோனேசிய அதிகாரிகளின் கட்டாயத்தின் பேரிலும் இந்தோனேசியாவின் மெராக் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு தடுத்து வைக்கப்பட்டோம். ஆனால் அவுஸ்திரேலியா எங்களுக்கு பதில் தரும் வரை நாங்கள் கப்பலை விட்டு இறங்க மாட்டோமென மறுத்து வருகிறோம். நாம் இந்தோனேசியாவில் இறங்குமிடத்து தடுப்பு முகாமில் வைக்கப்படலாம் அல்லது நாட்டுக்கு திருப்பியனுப்பபடலாம் என்ற பயத்தினாலேயே இறங்க மறுத்து 6 மாத காலமாக குழந்தைகள் சிறுவர் இன்னும் சில நாட்களுக்குள் மகப்பேற்றினை எதிர்பார்த்துள்ள கர்ப்பிணிப் பெண் உட்பட குடும்பஸ்தர் மற்றும் இளைஞர் யுவதிகள் உள்ளிட்டோர் கப்பலில் வாழ்ந்து வருகிறோம். அவுஸ்திரேலியா இன்று வரை எமது விடயம் தொடர்பில் இரட்டை வேடம் பூண்டு வருகிறது. முன்னதாக எமக்கு கரிசனை காட்டி வருவதாக தெரிவித்து வந்த போதும் இன்று எமது விடயம் தொடர்பில் கை கழுவி விட்டதாக சமிக்கை காட்டி வருகின்றது. 6 மாத காலமாக பல நோய் நொடிகளுக்கு மத்தியில் கடலில் மிதந்து கொண்டிருக்கும் நாம் சந்தித்த துயரங்கள் சொற்களால் வர்ணிக்க முடியாதவை. கடந்த டிசம்பர் மாதம் உரிய நேரத்தில் மருத்துவ வசதி கிடைக்காததன் காரணத்தால் எம்மோடு ஒருமித்து பயணித்த உறவு “ஜேக்கப் சாமுவேல் கிறிஸ்டின் “காலனால் அரவணைத்துச் செல்லப்பட்டார். சுதந்திர கனவுகளோடு கப்பலேறிய அப்பாவி இளைஞன் அந்நிய மண்ணில் அநியாயமாக அழிக்கப்பட்டான். நாம் எச்சந்தர்ப்பத்தில் அகதிகளாக்கப்பட்டோம் என்ற நியாயப்பாட்டினை எமது உறவுகள் அறிந்துள்ளீர்கள். தமிழ் மக்களாகிய நாம் இலங்கை அரசின் கொடிய ஆட்சியை நிராகரிக்கின்றோமென்பதை அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வாக்களிக்க மறுத்த 75 வீதத்திற்கு அதிகமான தமிழ் மக்கள் நிரூபித்துள்ளார்கள். எமது கண் முன்னே எங்கள் உடன் பிறப்புகள் அழிக்கப்பட்டனர். உடமைகளை இழந்து சொந்த மண்ணிலேயே அனாதைகளாக்கப்பட்டு இன்று மீண்டும் அகதிகளாக்கப்பட்டோம். சுதந்திரத்தையும் சமாதானமான வாழ்க்கையையும் தேடிவந்த நாம் இன்று தண்ணீரில் தவிக்க விடப்பட்டோம். சர்வதேசத்தின் போக்குகளில் கரிசனையில்லாதவிடத்து எம்மை தோள்களில் சுமந்து எமது விடயத்தை வெளிச்சமாக்கி வருகின்ற அவுஸ்திரேலிய, கனேடிய, நியூசிலாந்து மற்றும் பிற நாடுகளின் அகதிகள் ஆர்வலர் பெருந்தகைகளுக்கு எமது மனமார்ந்த நன்றிகள். உங்களுடைய கரம் எம்மை என்றும் பற்றி பிடித்திருக்க வேண்டுமென பணிவுடன் வேண்டி நிற்கிறோம். கடந்த 7ந் திகதி இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகள் யு.என்.எச்.சி.ஆர் பிரதிநிதி மானுவேல் மற்றும் சில இந்தோனேசிய அதிகாரிகள் உள்ளிட்டோர் கப்பலுக்கு வந்து எம்மை கப்பலை விட்டு இறங்குமாறு நிர்ப்பந்தித்தார்கள். நாங்கள் திருப்பியனுப்பப்பட மாட்டோம் என்றோ தடுப்பு முகாமில் வைக்கப்பட மாட்டோமென்றோ எதுவித உறுதி மொழிகளையும் வழங்கவில்லை. மீள்குடியேற்றம் தொடர்பிலும் எந்த ஒரு உறுதி மொழிகளும் வழங்கப்படவில்லை. ஒரு பெரிய கட்டிடத்தின் படத்தை காட்டி நாம் தங்குவதற்கான இடம் இதுதானெனவும் உங்களுக்கான சகல வசதிகளையும் பெற்றுத்தருவோமெனவும் குறிப்பிட்ட அவர் அதன் அமைவிடத்தை குறிப்பிட மறுத்து விட்டார். உடனடியாக இறங்க மறுத்த நாம் 5நாட்கால அவகாசமொன்றை அவர்களிடம் பெற்றுக்கொண்டோம். நாம் தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்படுவோமோ அல்லது இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவோமோ என்ற அச்சத்தில் இன்று தடுமாறிக்கொண்டிருக்கின்றோம். நாம் நாளையும் இறக்கப்படலாம். இறங்க மறுக்குமிடத்து வலுக்கட்டாயமாக இறக்கப்படலாம். வெளி உலகை தொடர்பு கொள்ள முடியாதவாறு எமது தொடர்பு சாதனங்கள் பறிக்கப்படலாம். இன்னுமோர் மடலை எழுத சந்தர்ப்பம் வழங்கபடுவோமோ என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஆகவே இந்த இக்கட்டான சூழ்நிலையில் உங்கள் அனைவரது ஒருமித்த குரல்களையும் எமக்காக வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ் அமைப்புகள் மற்றும் அனைத்துலக ஊடகங்கள் எமக்கு கரிசனை காட்டுங்கள். உங்கள் நாடுகளிலுள்ள இந்தோனேசிய தூதரங்களிடம் எமது பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்துங்கள். உங்கள் நாடுகளில் புகலிடம் பெற்றுத்தருவதற்காக உங்கள் அரசாங்கங்களை வலியுறுத்துங்கள். உங்களாலான உதவிகளை எங்களுக்கு வழங்குங்கள். என்றும் நாம் உங்களுக்கு நன்றியுடையவராக இருப்போம்.

வி. உருத்திரகுமாரன் "சிறப்புச் செவ்வி":

"வீண் அவதூறுகள் வேண்டாம்" நாம் யார்? என்பதுவும் எமது பணி என்ன? என்பதையும் "வரலாறு எடுத்துரைக்கும்" 2009 மே மாதத்திற்குப் பிறகு உருவான நாடு கடந்த தமிழீழ அரசு ஈழத் தமிழ் மக்களிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது? நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இன்னும் அமைக்கப்படவில்லை; அதனை உருவாக்குவதற்கான பணிகள்தான் தற்போது நடைபெற்று வருகின்றன என்பதனைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். 2009 ஆம் ஆண்டு யூன் மாதம் 16 ஆம் திகதி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான முன்மொழிவு வெளிப்படுத்தப்பட்டதிலிருந்து இவ் அரசாங்கத்தினை அமைக்கும் பணி முன்னேற்றமடைந்து வருகிறது. இவ் அரசாங்கம் எவ்வாறு அமைக்கப்படவேண்டும் என்பதனை ஆய்வு செய்து இதனை அமைக்கும் வழிவகைகள் தொடர்பான அறிக்கையினை மதியுரைக்குழு தைத்திருநாளன்று மக்கள் கருத்துப் பரிமாற்றத்திற்காக வெளியிட்டிருந்தது. 15.02.2010 வரை மக்கள் கருத்துக்கள் பெறப்பட்டு அதன் அடிப்படையில் மீளமைக்கப்பட்ட அறிக்கை 15.03.2010 அன்று வெளியிடப்பட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான முதலாவது அரசவையில் 135 பிரதிநிதிகள் இடம் பெறுவர். இவர்களில் 115 பேர் மக்கள் மத்தியிலிருந்து இதற்கென நடாத்தப்படும் தேர்தல்கள் மூலமாக ஈழத் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் பல்வேறு நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்தல்கள் உடனடியாக நடாத்துவதற்கு கடினமான இடங்களில் 20 பேராளர்கள் முதலாவது அரசவையால் தெரிந்தெடுக்கப்படுவார்கள். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான நேரடித் தேர்தல்கள் மே மதம் 2 ஆம் திகதி உலகளாவியரீதியில் நடாத்தப்படுகிறது. அரசாங்கத்தின் முதலாவது அமர்வினை மே மாதம் 17-19 காலப்பகுதிக்குள் கூட்டுவதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவை இக் காலப்பகுதிக்குள் கூடுவது முள்ளிவாய்க்காலுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முறியடித்து விட்டதாகக் கூறி மார் தட்டும் சிறிலங்கா அரசுக்கு ஈழத் தமிழர் தேசம் கொடுக்கும் குறியீட்டு வடிவிலான பதிலடியாக அமையும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்படுவது ஈழத் தமிழ் மக்களிடம் புதியயொரு நம்பிக்கையையும் நாம் தோற்றுப் போய்விடவில்லை என்ற உணர்வையும் கொடுத்து வருகிறது. கே.பி. பற்றி ஏராளமான குற்றச்சாட்டுகள். குறிப்பாக அவர் இலங்கை அரசோடு பேசிக் கொண்டு தானாக முன் வந்து கைதாகி கொழும்பில் அரசு அரவணைப்பில் இருக்கிறார் என்பது பிரதான குற்றச்சாட்டு இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? திரு செ. பத்மநாதன் அவர்கள் (கே.பி.) மலேசியா கோலாலம்பூரில் வைத்து மலேசிய இராணுவப் புலனாயு;வுத்துறையால் கடத்திச் செல்லப்பட்டு பின்னர் சிறிலங்கா அரசிடம் கையளிக்கபட்டிருக்கிறார். இது தொடர்பான நம்பகமான தகவல் எமக்குக் கிடைத்தமையால் சட்டநெறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட இக் கடத்தலைக் கண்டித்தும் இச் சம்பவம் குறித்து விசாரணை கோரியும் நாம் அறிக்கை ஒன்றினை விடுத்திருந்தோம். அவர் தானாக முன்வந்து கைதாகியது என்று கூறப்படுவதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை. 30 வருடங்களுக்கு மேலாக விடுதலைப் போராட்டத்தில் இயங்கிய ஒரு போராளி குறித்து எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் இத்தகைய குற்றச்சாட்டுக்களை சுமத்துவது எவ்விதத்திலும் நியாயமானதும் அல்ல. இவர் சிறிலங்காவின் கைதியாகிய பின்னர் பல்வேறுவகையான தகவல்கள் ஊடகங்களில் வந்த வண்ணம் உள்ளன. இவர் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளார் என்பதில் இருந்து வசதியாக வைக்கப்பட்டள்ளார் என்பது வரையிலான செய்திகள் வரை ஊடகங்கள் வெளியிடுகின்றன. இவற்றின் உண்மை பொய் குறித்த விடயங்கள் எதுவும் எமக்குத் தெரியாது. இருந்த போதும், சிறிலங்கா தமிழ் அரசியல் கைதிகளைக் கையாளும் விதம் உலகறிந்தது. அனைத்துலக மனித உரிமை அரங்குகளில் சித்திரவதை சிறிலங்காவில் ஒரு நிரந்தர விடயம் எனத் தொடர்ச்சியாகக் கூறப்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததொன்று. எனவே அவர் மட்டுமல்ல தமிழீழ விடுதலைப்புலிகளது ஏனைய தலைவர்களும் போராளிகளும் என்ன சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். சிறைக்கைதிகளாக இருக்கும் அவர்களது நிலையை அந்தச் சூழலில் இருந்து தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான முதல் அறிவிப்பினை இவரே விடுத்திருந்தபடியால் எத்தயை ஏற்பாட்டின் அடிப்படையில் இவ் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது என்பதனை இச் சந்தர்பத்தில் வெளிப்படுத்தல் பொருத்தமானது எனக் கருதுகிறேன். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் பணியைப் பொறுத்த வரையில்; நாம் இந்த முயற்சியினை ஆரம்பிக்கும் போதே எழக்கூடிய சட்டப்பிரச்சினைகள் காரணமாகவும் தற்போதய சர்வதேச அரசியல் யதார்த்த நிலை காரணமாகவும் இது ஒரு சுயாதீனமான முயற்சியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியான கருத்தைக் கொண்டிருந்தோம். இந்த அடிப்படையிலேயே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் முயற்சியை ஒருங்கிணைக்கும் பணியை நான் ஏற்றுக் கொண்டேன். இதற்கமைய திரு செ.பத்மநாதன் அவர்களும் 15.06.2009 அன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குறித்து தான் விடுத்திருந்த அறிவிப்பில் இதனை அமைக்கவுள்ள செயற்குழு சுயாதீனமானது என அறிவித்திருந்தார். ஆரம்பம் முதல் நாம் எமது முயற்சியினை சுயாதீனமான குழு என்ற நிலையிலிருந்தே முன்னெடுத்து வருகிறோம். இதற்கிடையில், திரு செ.பத்மநாதன் அவர்கள் கைது செய்யப்பட்ட பின்னரும் நாம் அவருடன் தொடர்புகளைப் பேணுவதாகவும் அவரது வழிகாட்டலில் செயற்படுவதாகவும் வதந்திகளை சிலர் பரப்ப முனைவதான தகவல்கள் எமக்குக் கிடைத்துள்ளன நாம் அவருடன் எந்தவகையான தொடர்புகளையும் பேணவில்லை. அவரது வழிகாட்டலில் செயற்படவும் இல்லை. இந்த விசமத்தனமான வதந்தி பரப்பும் முயற்சி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் எமது முயற்சிக்கு இடையூறு விளைவிக்கும் கெட்ட உள்நோக்கம் கொண்டதாகவே நாம் கருதுகிறோம். இவை மட்டுமன்றி, நாம் எடுத்துள்ள முயற்சி ஒரு ஜனநாயக வழியிலான முயற்சி. இதில் வெளிப்படைத் தன்மை முக்கியமானதாக உள்ளது. நாடு கடந்த அரசாங்கத்தை நடத்தப்போகிறவர்கள் திரு கே.பி யோ அல்லது ருத்ரகுமாரனோ அல்லது மதியுரைக்குழுவோ அல்லது நாடுவாரியான செயற்பாட்டுக்குழுக்களோ அல்ல. இதனை நடத்தப்போகிறவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்காக நடத்தப்படவுள்ள நேரடித் தேர்தல்களில் போட்டியிட்டு மக்களால் தெரிவு செய்யப்படுபவர்கள். கொள்கை மீதும் மக்கள் மீதும் நேர்மையான விசுவாசம் கொண்ட, சுதந்திர இறைமையுள்ள தமிழீழம் அமைக்கும் பணிக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பு வழங்கும் ஆற்றல் உள்ளவர்களைத் தான் மக்கள் தமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்வார்கள் என்பது எனது திடமான நம்பிக்கை. எல்லா தரப்புக் குழுக்களையும் ஒருங்கிணைத்து பரந்து பட்ட ஒரு தமிழர்களுக்கான அமைப்பை உருவாக்கி மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த முடியாதா? நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்படுவதற்கு இத்தகைய நோக்கமும் உண்டு. இத் திட்டம் தொடர்பாக நாம் 16.06.2009 அன்று விடுத்த முதலாவது முன்மொழிவில், ”1976ல் வரையறுக்கப்பட்ட வட்டுக்கோட்டைப் பிரகடனத்தினதும், 1977ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்களால் ஒரு மனதாக வாக்களித்து வரவேற்கப்பட்டதும், பின்பு 1985ல் திம்புப் பிரகடனத்தில் வெளிப்படுத்தப்பட்டதும், 2003ல் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரப்பகிர்வின் தளமாக அமைந்ததுமாகிய - தமிழர் ஓர் தேசிய இனம் - வடக்கு- கிழக்கு தமிழர் தாயக நிலம் - ஈழத் தமிழரின் தன்னாட்சி உரிமை போன்ற அடிப்படைக் கோட்பாடுகளை ஈழத்தமிழரின் அரசியல் அபிலாசைகளின் ஆதார சுருதியாக ஏற்றுக் கொள்ளும் அனைத்துத் தமிழ் மக்களையும் ஓன்றிணைப்பது” என்பதனை இம் முயற்சியின் அடிப்படைகளில் ஒன்றாகக் குறிப்பிட்டிருந்தோம். மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்பட்டவுடன் தமிழர் சமூகத்தின் மத்தியில் இயங்கி வரும் உருவாகி வரும் அமைப்புக்களுடன் இணைந்து செயற்படுவதற்குpய திட்டங்களையும் அதற்குரிய கட்டமைப்பு வடிவங்களையும் உருவாக்கும் போது நீங்கள் குறிப்பிடும் வகையிலான இணைவு நடந்தேறும் என்றே நான் கருதுகிறேன். புலத்து மக்கள் போராட்டங்களை கைவிட்டு விட்டார்கள். மே மாதம் கடும் கொந்தளிப்போடு வீதிகளுக்கு வந்தவர்கள் இன்று மௌனமாகி விட்டார்கள். இந்நிலைக்கு நிலவும் குழுச்சண்டைகளும் ஒரு காரணம் இல்லையா? மே மாத நடுப்பகுதி வரை நாhளாந்தம் பெருந்தொகையான மக்கள் சிறிலங்காபடையினரால் கொல்லப்பட்டபோது – உலகின் மனச்சாட்சியினைத் தட்டியெழுப்பி யுத்தநிறுத்தத்தையும் அதைத் தெடர்ந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளையும் வேண்டி – புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும், தமிழ்நாடு மற்றும் உலகப்பரப்பெங்கும் உள்ள தமிழ் மக்களும் வீதியில் இறங்கிப் பெரும் எழுச்சியுடன் போராட்டங்களை நடாத்தினார்கள். இருந்த போதும் உலகம் எமக்காக அருகில் வரவில்லை. நம் கண் முன்னாலேயே நடந்த இனப்படுகொலையினை தடுத்து நிறுத்த நம்மால் முடியவில்லை. மே 2009 க்குப் பின்னரான காலம் நான் முன்னர் குறிப்பிட்டவாறு ஒரு இடைமாறு காலகட்டம். வீதியில் இறங்கிப் போராட்டங்கள் நடாத்தவதனை விட உலகினை எம்மை நோக்கி அசையச் செய்யதற்காகச் செயற்படக்கூடிய கட்டமைப்புக்களை உருவாக்குவது குறித்துக் கூடுதல் கவனங்கள் செலுத்தப்பட்டன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதுவும் இத்தகைய ஒரு முயற்சியே. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்னர் உலங்கிலும் உள்ள தமிழர்கள் தலைமை ரீதியாக பிளவு பட்டிருக்கிறார்கள். இது பெருங்குறை இல்லையா? முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்டம்வரை இருந்த சூழலும் தற்போதய சூழலும் முற்றிலும் வேறுபட்டது. இப் புதிய சூழலில், புலம் பெயர்ந்த நாடுகளில் முன்னெடுக்கப்படும் முயற்சிகள் மாறுபட்ட குறிக்கோள்களைக் கொண்டுள்ளதாக நான் கருதவில்லை. என்னைப் பொறுத்தவரை இவற்றின் குறிக்கோள் ஒன்றுதான். ஆனால் அவற்றை அடையும்; மூலோபாயங்களில் தான் வித்தியாசம். வித்தியாசமான மூலோபாயங்களைக் கொண்டு ஒரே குறிக்கோளை நோக்கி இயங்குவது நன்மை பயக்கக்கூடியதே. இதற்கு இம் முயற்சிகளிடையே ஏதோ ஓரு வகையான ஒருங்கிணைவு இருத்தல் அவசியம். இவ் ஒருங்கிணைவு ஒரு ஒருமைப்பாடு என்ற வடிவத்தில், வேற்றுமையிலும் உடன்பாடுகாணக்கூடிய ஒரு தளத்தில் (யபசநந வழ னளையபசநந) இருந்தாலே போதுமானது. இத்தகைய புரிந்துணர்வு செயற்பாடுகளுக்குள்ளால் எட்டப்படக்கூடியது என்பதனை நான் திடமாக நம்புகிறேன். தற்போதய இடைமாறு காலகட்டத்தில் ஏற்படக்கூடிய குழப்பங்கள் எல்லாம் செயற்பாடு எனும் தளத்தில் இணையும்போது தெளிந்து விடும். நாடு கடந்த தமிழீழ அரசு இன்றைய உலகச் சூழலில் உலக நாடுகளின் கவனத்தை குறிப்பாக ஐய்ரோப்பிய நாடுகளின் கவனத்தை தன்பால் ஈருக்குமா? நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முழுக்க முழுக்க ஜனநாயக விழுமியங்களுக்கு அமைவாக அமைக்கப்படுகிறது. இதன் செயற்பாடுகளும் முழுமையாய் அந்தந்த நாடுகளின் சட்டத்திற்கமைவாகவே வடிவமைக்கப்படுகின்றன. ஜரோப்பிய மற்றும் மேற்குலக மக்கள் ஜனநாயக விழுமியங்களுக்கு மிகுந்த மதிப்புக் கொடுப்பவர்கள். இதனால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை இந் நாடுகளால் நிராகரிக்கமுடியாது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே சிறிலங்கா அரசு தனது ஆரவாரத்தால் உலக நாடுகளின் கவனத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீது திருப்பி விட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குறித்து சிறிலங்கா அரசு அச்சமடைந்துள்ளது என்பதனை இதன் ஊடாகப் புரிந்து கொள்ளக்கூடியதாகவும் உள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உலக நாடுகளின் ஆதரவைப் பெறுவது, அது ஜரோப்பிய நாடுகளாக இருந்தாலும் சரி அல்லது ஏனைய உலக நாடுகளாக இருந்தாலும் சரி - இந் நாடுகளின் நலன்களும் ஈழத் தமிழர் தேசத்தின் நலன்களும் ஒரே கோட்டில் சந்திக்கும்போதுதான் முழுமையாக வெற்றியளிக்கும். தற்போது சிறிலங்கா அரசின் போக்கில் ஜரோப்பிய நாடுகள் உள்ளடங்கலான மேற்குலகம் அதிர்ப்தியடைந்திருப்பதனை உணரமுடிகிறது. இது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுப்பக்குத் துணைபுரியக்கூடிய சாதகமான ஒரு அம்சமே. உலகின் எந்த ஒரு நாடுமே ஒரு இன விடுதலைப் போராட்டம் என்கிற அளவில் கூட ஈழ மக்களின் இறையாண்மை உணர்வுகளை புரிந்து கொள்ள வில்லையே? இங்கு நாடுகள் எனும்போது அரசுகளையும் அந் நாட்டு மக்களையும் நாம் பிரித்து பார்த்தல் நல்லது. ஈழத்தமிழர் தேசம் தனது இறையாண்மையினை பிரயோகிப்பதற்கு போராடும் போது அவ் இறையாண்மையின் அடிப்படையில் ஈழத் தமிழர் தேசம் தனிஅரசினை அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்குரிய சூத்திரம் அரசுகளைப் பொறுத்த வகையில் நலன்கள் என்ற மந்திரக்கோலில்தான் தங்கியுள்ளது. அதற்குரிய சமன்பாடு மிக எளிதானது. இலங்கைத்தீவு ஒரு நாடாக இருப்பதா அல்லது இரு நாடுகளாக இருப்பதா தமது நலன்களுக்கு நல்லது என்ற கணக்கிலிருந்துதான் அரசுகளின் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இதனால் ஈழத்தமிழ் மக்களின் இறையாண்மை உணர்வினை உலக நாடுகள் புரிந்து கொள்ள முயலவில்லை. இவ் விடயத்தில் இந்தியாவின் நிலையும் உலக நாடுகளின் நிலைப்பாட்டிற்கு காரணமாகவிருந்திருக்கிறது. ஆனால் மக்களைப் பொறுத்தவரை ஈழத்தமிழர் தேசம் தனது இறையாண்மையினை பிரயோகிப்பதற்கான நியாயப்பாடுகள் உரியமுறையில் அவர்களைச் சென்றடையும் போது எமது கோரிக்கையின் நியாயத்தன்மையினைப் புரிந்து கொளகிறார்கள். ஆதரவினைத் தருகிறார்கள். வன்னி மீதான போரில் இந்தியாவின் பங்களிப்பு வெளிப்படையானது. தமிழர்களுக்கு எதிரான இந்தியத் தலையீடு தமிழகத்திலும் புலத்திலும் இந்தியாவின் மீது கடும் விசனத்தை உண்டு பண்ணியிருக்கும் நிலையில் இந்தியா உங்களின் கோரிக்கைக்காக உதவும் என்று நம்புகிறீர்களா? ஈழத் தமிழர் தேசத்திற்கு இந்திய அரசு உதவுவது என்பது அதன் நலன்களோடு தொடர்புபட்டது. முற்றி வரும் உலக ஒழுங்கில் இந்தியாவின் நலன்களும் ஈழத் தமிழர் தேசத்தின் நலன்களும் ஒரே கோட்டில் சந்திப்பதற்கான வாய்ப்பக்கள் உண்டு எனறே நாம் கருதுகிறோம். சிறிலங்கா அரசினைத் தனது செல்வாக்கிற்கு உட்படுத்தி வைத்திருத்தல் தனது பிராந்திய மற்றும் ப+கோள நலன்களுக்கு அவசியம் என இந்தியா கருதுகிறது. அதற்காக சிறிலங்கா அரசுக்கு உதவியளித்து – அதனைத் தனது செல்வாக்கிற்குட்படுத்தி வைத்திருக்கும் கொள்கையை தற்போது நடைமுறைப்படுத்தி வருகிறது. இது தான் வன்னிப்போரிலும் எதிரொலித்தது. இலங்கைத்தீவினை சீனமயப்படுத்தும் முயற்சியில் சிறிலங்கா அரசு தற்போது ஈடுபட்டிருப்பதானது தற்செயலானதல்ல. அல்லது உதவி செய்யும் சீனாவின் விருப்பத்திறகிணங்க மட்டும் நடைபெறுமொன்றுமல்ல. இந்தியாவின் தன் மீதான ஆதிக்கத்தை மட்டுப்படுத்தும் நோக்குடன் சிறிலங்கா அரசு தனது நலனின் அடிப்படையிலும்தான் சீனாவுக்குக் கதவு திறந்து விட்டுள்ளது. காலவோட்டத்தில் சீனா இந்தியாவின் செல்வாக்கினையும் மீறி இலங்கைத்தீவினை விழுங்கத்தான் முயலும். இவ்விடத்திலிருந்து இந்திய நலன்களும் ஈழத் தமிழர் நலன்களும் இணையக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. இன்னமும் முகாம்களுக்குள் ஒன்றரை லட்சம் மக்கள் அடைபட்டிருக்கிறார்கள். பன்னிரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் வதை முகாம்களில் சிக்கியிருக்கிறார்கள். இவர்களின் உயிர் பாதுகாப்பு... விடுதலை குறித்தெல்லாம் முன்னெடுப்புகளை உங்களால் செய்ய முடியாதா? இவை குறித்து தற்போது எமது மதியுரைக்குழு உறுப்பினர்கள் தம்மால் ஆன முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்படும் போது இவ் அரசாங்கம் இவை குறித்த நடவடிக்கைக்கான திட்டங்களை வகுத்துச் செயற்படும் என்பது எமது நம்பிக்கை. புலத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு அஞ்சி நாம் எமது வெளிநாட்டுப் பயணங்களை கைவிட மாட்டோம் என்று இலங்கை அரசு சொல்லியிருக்கிறதே?இது பற்றி என்ன நினைகிறீர்கள்? சிறிலங்கா அரசு இவ்வாறு கூறுவதே புலம் பெயர் தமிழ் மக்கள் தொடர்பான அச்சம் அவர்களுக்கு உண்டு என்பதனை வெளிப்படுத்துகிறது. மேலும், புலம் பெயர் தமிழ் மக்கள் முக்கியமான அரசியல் சக்தியாக பரிமாணம் அடைந்துள்ளனர் என்பதனையும் இது காட்டுகிறது. புலத்து மக்கள் போராட்டங்களை கைவிட்டு விட்டார்கள். மே மாதம் கடும் கொந்தளிப்போடு வீதிகளுக்கு வந்தவர்கள் இன்று மௌனமாகி விட்டார்கள். இந்நிலைக்கு நிலவும் குழுச்சண்டைகளும் ஒரு காரணம் இல்லையா? மே மாத நடுப்பகுதி வரை நாhளாந்தம் பெருந்தொகையான மக்கள் சிறிலங்காபடையினரால் கொல்லப்பட்டபோது – உலகின் மனச்சாட்சியினைத் தட்டியெழுப்பி யுத்தநிறுத்தத்தையும் அதைத் தெடர்ந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளையும் வேண்டி – புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும், தமிழ்நாடு மற்றும் உலகப்பரப்பெங்கும் உள்ள தமிழ் மக்களும் வீதியில் இறங்கிப் பெரும் எழுச்சியுடன் போராட்டங்களை நடாத்தினார்கள். இருந்த போதும் உலகம் எமக்காக அருகில் வரவில்லை. நம் கண் முன்னாலேயே நடந்த இனப்படுகொலையினை தடுத்து நிறுத்த நம்மால் முடியவில்லை. மே 2009 க்குப் பின்னரான காலம் நான் முன்னர் குறிப்பிட்டவாறு ஒரு இடைமாறு காலகட்டம். வீதியில் இறங்கிப் போராட்டங்கள் நடாத்தவதனை விட உலகினை எம்மை நோக்கி அசையச் செய்யதற்காகச் செயற்படக்கூடிய கட்டமைப்புக்களை உருவாக்குவது குறித்துக் கூடுதல் கவனங்கள் செலுத்தப்பட்டன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதுவும் இத்தகைய ஒரு முயற்சியே. இனக்கொலை, தடுப்பு முகாம்களில் மக்கள், அரசியல் கைதிகள், இதற்கெல்லாம் என்ன வேலைத் திட்டம் உங்களிடம் இருகிறது? இத்தகைய விடயங்களை கையாள்வது குறித்து தொடர்பான சில விபரங்கள் மதியுரைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை குறித்த விரிவான திட்டங்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட்டவுடன் வகுத்துச் செய்யப்படவேண்டியவை. அமெரிக்க நீதிமன்றத்தில் நீங்கள் வாதாடும் பயங்கரவாதம் தொடர்பான வழக்கு எந்த நிலையில் இருக்கிறது? அமெரிக்காவில் பயங்கரவாத அமைப்புக்களாக பிரகனடப்படுத்தப்பட்ட அமைப்புக்களில் தமிழீழ விடுதலைப் புலிகளும் ஒன்றாகும். அமெரிக்கச் சட்டப் படி இவ் அமைப்புக்களுக்கு பொருண்மிய உதவி வழங்குதல் குற்றமாகும். ஆயினும் இவ் அமைப்புக்களின் அரசியல் கொள்கைகளுக்கு சுயாதீனமான முறையில் ஆதரவு வழங்குவது சட்டத்திற்கு ஏற்புடையது. விளக்கமாக கூறுவதாயின், ஒரு நபர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் குறிக்கோளை, அரசியல் வேலைத்திட்டத்தை சுயாதீனமான முறையில் எடுத்துச் செல்லலாம், அமெரிக்க உச்ச நீதி மன்றத்தில் எடுத்துக்கொண்ட சாரம் என்னவெனில், ஒரு நபர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் வேலைத்திட்டம் தொடர்பாக அவர்களுடன் இணைந்து செயல்படும் உரிமையை மறுப்பது அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட பேச்சுச் சுதந்திரம், ஒன்று கூடும் சுதந்திரத்திற்கு முரணானது என்பதாகும். உச்ச நீதிமன்றதின் தீர்ப்பு ஜுன் மாதத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. புலிகள் இன்னமும் இருக்கிறார்கள் என்றீர்களே? அவர்கள் ஈழப் போராட்டத்தில் அரசியல் போராட்டத்தில் உறுதியாக இருக்கிறார்களா? ’புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது’ நம் மத்தியில் உள்ள பழமொழி அல்லவா! தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை

கைவிட்டுவிடாதீர்கள்……!!!

தனித்தவில் வாசித்தவர்களுக்கு புலித்தமிழர் தகுந்த பாடம் படிப்பித்திருக்கின்றார்கள். தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி நாடாளுமன்றத் தேர்தலில் தமிழீழ மக்களால் நிராகரிக்கப்பட்டமையானது சில பாடங்களைக் கற்றுத் தந்துள்ளது. வெறும் கோஷங்களுக்காக தமிழ் தேசியத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு வந்தவர்களை யாழ்ப்பாணம் மற்றும் திருமலை மக்கள் சரியாகவே இனம்கண்டுள்ளனர். ஒரு சிலரை தோற்கடிப்பதற்காக கூட்டமைப்பின் கட்டமைப்பை உடைத்தவர்கள் இன்று விலாசமில்லாதவர்களாகியுள்ளனர். புலம்பெயர் அமைப்புகள் சிலவற்றின் – குறிப்பாக பிரான்ஸ் தமிழ் சங்கங்கள் கூட்டமைப்பின் – தவறான வழிநடத்தலின் விளைவே கஜேந்திரன்களின் தனிவழிப் போக்குக்கும் அவர்களின் படுதோல்விக்கும் காரணமாகிவிட்டது. அவர்களை உடைத்ததில் காட்டிய அக்கறையை இணைப்பதில் காட்டியிருந்தால் இன்றைக்கு கூட்டமைப்பு இன்னும் மூன்று ஆசனங்களைக் கூடுதலாகப் பெற்றிருக்கும். கடைசிவரை பிரான்ஸ் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு தளத்தில் உள்ள தமிழர்களின் மனநிலையை புரிந்துகொள்ளாமல் போனமையும் கஜேந்திரன்களின் படுதோல்விக்கு வித்திட்டது. அதுசரி..தவறான வழிநடத்தலில் கஜேந்திரன்கள் பிழையாகப் போயிருக்கலாம். இனி அவர்களை சரியான வழியில் பயணிக்க வைப்பது புலம்பெயர் தமிழர்களினதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் முக்கிய கடமையாகும். தளத்திலுள்ள தமிழர்கள் எங்களுக்கு சரியான பதிலைத் தந்திருக்கின்றார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளை தாங்கள் ஆதரிக்கின்றோம் என்றும் அவர்களின் பின்னால் தளத் தமிழர்கள் அணி திரண்டு நின்கின்றார்கள் என்றும் எங்களுக்குச் சொல்லியிருக்கின்றார்கள். இவற்றையெல்லாம் சரிவரப் புரிந்துகொண்டு கஜேந்திரன்களை மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்ளீர்ப்பது, பிரித்துவைத்த புலம்பெயர் தமிழர்களின் கடமையாகும். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாங்கள் நேசித்த – எங்களை இறுதி மூச்சுவரை நேசித்த மாமனிதர் பெற்றெடுத்த புதல்வர். அவர் தற்போது பயணிக்கும் பாதை பிழையானது என்று தேர்தலில் மக்கள் தெரிவித்துவிட்டார்கள். இனி அவராக யோசித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயலாற்ற முன்வரவேண்டும். பொன்னம்பலங்களின் குடும்பம் தமிழர்களுக்கு நன்மையே செய்துவருகின்றார்கள் என்று தம்பி கஜேந்திரகுமார் நிரூபிக்கவேண்டும். அதற்காகவது பொறுக்கித்தன அரசியலைக்கைவிட்டு – தளத் தமிழர்களின் விருப்புகளை புரிந்து தம்பி செயற்பட வேண்டும் என்பதே அநேக புலம்பெயர் மக்களின் அவா. அடுத்தது செல்வராசா கஜேந்திரன். தேர்தலில் இவரின் பொங்குதமிழ் பாச்சா பழிக்கவில்லை. பொங்குதமிழ் நிகழ்வுகள் நடைபெறத் தானே காரணம் என்று தேர்தல் மேடைகளிலும் பேட்டிகளிலும் முழங்கினார். ஆனால் அவை எடுபடவில்லை. எனினும் பொங்குதமிழ் நிகழ்வுகளின் ஒரு நாயகனாகவே இன்றும் அந்தச் செல்லக்குழந்தையை நாங்கள் பார்க்கின்றோம். ஒரு பல்கலைக்கழக மாணவனாக – பல்கலைக்கழக மாணவர் தலைவராக – தமிழீழ சர்வதேச மாணவர் தலைவராக கஜேந்திரன் அவர்கள் தமிழீழத் தேசியப் போராட்டத்திற்கு பல உதவிகளைப் புரிந்திருக்கின்றார். தற்போது அவர் பிழையான வழிநடத்தலுக்கு உட்பட்டிருக்கின்றார். அவரும் மக்களின் தீர்ப்பை உணர்ந்திருப்பார். இனிமேலாவது தமிழ் தேசியத்தை அவர் வெறும் தேர்தல் கோஷமாக எடுக்கமாட்டார் என்பது உறுதியானது. அவர் இனித் தெளிவடைய வேண்டும். தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பதைக் கலைத்துவிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பை மேலும் பலம்பொருந்திய அமைப்பாக - தமிழர்களுக்காக பேரம் பேசும் ஆற்றல் கொண்ட அமைப்பாக மாற்ற கஜேந்திரன்கள் முன்வரவேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு. தமிழ் தேசிக் கூட்டமைப்பின் தலைமையிடம் புலம்பெயர் தமிழர்களாகிய நாங்கள் முன்வைக்கும் ஒரே வேண்டுகோள். கஜேந்திரன்களைக் கைவிட்டுவிடாதீர்கள். அவர்களைச் சரியான பாதையில் பயணிக்கவைப்பதறகாக நீங்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்

வணக்கம்!

மே 2 - நாடுகடந்த தமிழீழ அரசுக்கு தேர்தல்! கேட்கும் போதே மெய்சிலிர்க்கின்றது. மயிர்க்காம்பெல்லாம் கூச்செறிந்து புல்லரிக்கின்றது. புதிய வடிவம் !புதிய சிந்தனை! புதிய பாதை! தமிழீழம் தமிழர்களுக்கானது மட்டுமல்ல: அங்கு இரண்டு தாயகங்கள் என்கின்றீர்கள்! ஒன்று முஸ்லிம்களின் தாயகம், மற்றையது தமிழர்களின் தாயகம் என்கின்றீர்கள் ஈழத்தீவில் தமிழீழ அரசமைக்கும் உரிமை தமிழர்களுக்கு உண்டென்றால்... தமிழீழத்தைத் துண்டாடி அரசமைக்கும் உரிமை முஸ்லிம்களுக்கு உண்டென்கின்றீர்கள்! இப்படித்தான் உங்கள் இறுதி அறிக்கை கூறுகின்றது. தமிழர்களைப் போன்று முஸ்லிம்கள் ஒரு தனித்துவமான இனம் என்கின்றீர்கள். மதசார்பற்ற தமிழீழம் அமைப்பது உங்கள் இலக்கு என்கின்றீர்கள். ஆனால் முஸ்லிம்களின் மதத் தனித்துவம் பேணப்படும் என்கின்றீர்கள். ஐயா! தமிழீழத்தைத் துண்டாடி அரசமைக்க வேண்டும் என்று எப்போது உங்களிடம் எங்கள் முஸ்லிம் சகோதரர்கள் மனுச்செய்தார்கள்? தமிழீழத்தில் தமிழ் - முஸ்லிம் பிராந்தியங்கள் இருப்பதாக உங்களிடம் எந்த வரலாற்று அறிஞர் கூறினார்? இந்து, கிறிஸ்துவம், இஸ்லாம் என மூன்று மதங்களைத் தழுவி வாழும் ஈழத்தமிழர்களை, தமிழர்கள் என்றும் முஸ்லிம்கள் என்றும் இரு தேசிய இனங்களாகக் கூறுபோடும் உரிமையை உங்களுக்கு யார் அளித்தார்கள்? ஈழத்தீவு என்பது தமிழர்களின் பூர்வீகப் பூமிஅங்கு ஆண்டாண்டு காலமாய் ஆட்சி செய்தவர்கள் தமிழர்கள். பௌத்தத்தின் வருகையோடு அங்கு தோற்றம்பெற்றது சிங்களம். அதற்கு முன் மாதகலில் இருந்து இருந்து தெய்வேந்திரமுனை வரை தமிழர்கள் ஆட்சிசெய்தது பண்டைய வரலாறு. திருகோணமலையும், மாந்தையும், அனுராதபுரமும் தமிழர்களின் தலைநகர்களாக விளங்கியது அன்றைய கல்வெட்டு. பின்னர் யாழ்ப்பாண அரசாகவும், வன்னிமைகளாகவும் ஈழத்தீவின் வடகிழக்கு மாநிலத்தில் தமிழரது ஆட்சி சுருங்கிப் போக, கண்டியும், கோட்டையுமாக தென்னிலங்கையில் சிங்கள ஆட்சி விரிந்தது வரலாறு. 16ஆம் நூற்றாண்டில் ஈழமண்ணில் வெள்ளையர்கள் கால்பதித்த பொழுது அங்கு இருந்தது இரண்டு இனங்களின் அரசுகள்: ஒன்று தமிழரசு, மற்றையது சிங்கள அரசு. பின்னர் எங்கிருந்து முஸ்லிம் அரசு முளைத்தது? தனித்துவமான மதத்தையும், பண்பாட்டையும் எமது முஸ்லிம் சகோதரர்கள் கொண்டிருப்பதை எவரும் மறுக்கவில்லை.தமது மதத்தையும், பண்பாட்டையும் இஸ்லாமியத் தமிழர்கள் பேணிப் பாதுகாக்கும் உரிமையை யாரும் மறுதலிக்கவுமில்லை. தமிழீழ மண்ணின் விடிவிற்காகப் போராடி வீழ்ந்த மாவீரர்களில் எத்தனையோ முஸ்லிம் சகோதரர்களும் உள்ளார்கள். இறுதியாக ஆனந்தபுரத்தில் நிகழ்ந்தேறிய நெருப்பாற்றில் கனரக ஆயுதமேந்தி வீரகாவியமாகிய முஸ்லிம் போராளியை நாங்கள் மறந்துவிட முடியாது. வீட்டுகொரு மாவீரன் என்ற நிலைமாறி வீட்டில் இரண்டு மாவீரர்களைக் கண்ட முஸ்லிம் குடும்பங்களும் இன்றி வன்னி மண்ணில் வாழ்கின்றன.தமிழகத்தில் தீக்குளித்து ஈகைச்சாவெய்திய எங்கள் அப்துல் ரவூப்பை நாங்கள் யாரும் மறக்கவில்லை. இந்த மாவீரர்களின் வாழ்வும் சாவும் தமிழீழத்திற்கானது.தமிழீழத்தைக் கூறுபோடுவதற்காக அல்ல! ஐயனே! தமிழீழத்தில் இருந்து பிரிந்து சென்று முஸ்லிம் தனியரசை முஸ்லிம்கள் நிறுவலாம் என்கின்றீர்கள். சரி. அந்த அரசுக்கான தொடர்ந்தேர்ச்சியான நிலம் எது? காத்தான்குடியா? சம்மாந்துறையா? பொத்துவிலா? மூதூரா? புத்தளமா? மன்னாரா? அல்லது யாழ் நகரமா? பலஸ்தீனர்களை காசாவிலும், மேற்குக்கரையிலும் இஸ்ரேலிய ஏகாதிபத்தியம் முடக்கியமை போன்று எமது முஸ்லிம் சகோதரர்களை முடக்கிச் சிதறடிப்பதா உங்கள் எண்ணம்? அப்படித்தான் இருந்தாலும்... அங்கு வாழும் ஏனைய தமிழர்களின் கதி? ஆரையம்பதியும், வீரமுனையும், சம்பூரும், வண்ணாத்திவில்லும், திருக்கேதீச்சரமும், முற்றவெளியும் எந்த அரசின் ஆளுகைக்கு உட்படும்? தமிழீழ அரசினதா? முஸ்லிம் அரசினதா? அல்லது சிங்கள அரசினதா?தமிழீழத் தனியரசை நிறுவுவது ஈழத்தமிழர்களின் கடன். அதற்கு இராசதந்திர அங்கீகாரம் பெற்றுக்கொடுப்பது புகலிட உறவுகள் ஒவ்வொருவரின் கடன்.ஆனால் தமிழீழத்தை துண்டாடுவது எவரது கடன்? தமிழீழத்தை தமிழ், முஸ்லிம், சிங்களப் பிராந்தியங்களாகப் பிரித்து தீர்வுத் திட்டமொன்றை 1985இல் இந்தியப் பேரரசு முன்வைத்த போது அதனை அடியோடு நிராகரித்தவர் எமது தேசியத் தலைவர். அந்த சூரியத்தேவனால் நிராகரிக்கப்பட்ட திட்டத்திற்கு நீங்கள் செயல்வடிவம் கொடுக்க முற்படுவதன் சூத்திரம் என்ன? இதுதான் உங்கள் நாடுகடந்த அரசமைக்கும் திட்டத்தின் விஞ்ஞாபனம் என்றால் இதற்கு எதற்காக புகலிட தேசத்தில் தேர்தல்? இந்தியாவிலேயே உங்கள் தேர்தலை நிகழ்த்தலாமே? புகலிடத் தமிழர்களை சிதறடிப்பது சிங்கள அரசின் திட்டம் என்றால்... தமிழீழத்தை துண்டாடுவது இந்தியாவின் திட்டமா? புலம்பெயர் உறவுகளை இணைப்பதற்காக நாடுகடந்த அரசமைப்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் ஈழத்தமிழர்களின் தன்னாட்சியுரிமையைப் பற்றிப் பேசுவதை விடுத்து புதிதாக முஸ்லிம்களின் தனியரசு உரிமையைப் பற்றி நீங்கள் பேசுவதன் சூத்திரத்தைத்தான் எம்மால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. தயைகூர்ந்து விளக்குவீராக. நிற்க: தமிழீழத் தேசியக் கொடியாகிய புலிக்கொடியை நீங்கள் அங்கீகரிக்கவில்லையாமே? உங்கள் நாடுகடந்த அரசின் கொடியாக புலிக்கொடி அமையாது என்று உங்கள் அறிவாலோசகர் பீற்றர் சால்க் கூறியுள்ளாராமே? இதன் அர்த்தம்தான் என்ன? உங்களின் தேசியக் கொடிதான் என்ன? அதுசரி... உங்கள் நாடுகடந்த அரசுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒவ்வொரு வேட்பாளரும் தலா ஆயிரம் பவுண்கள் கட்டுப்பணம் செலுத்த வேண்டுமாமே? எதற்காக? ஏழை எளியவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்ப்பதற்கா? அல்லது தடுப்பதற்கா? பிரித்தானிய நாடாளுமன்றம் செல்வதற்கு ஐநூறு பவுண் கட்டுப்பணம் செலுத்தினால் போதும். ஆனால் உங்கள் அரசில் இணைவற்கு ஆயிரம் பவுண்களா? நினைக்கவோ பிரமிப்பாக இருக்கின்றது. சட்ட அறிஞரே! நாடுகடந்த தேர்தல் திருவிழா தொடங்கும் நிலையில் இறுதியாக உங்களிடம் இரண்டு கேள்விகள். தென்சூடானிற்கு இடைக்கால நிர்வாகம் கிடைத்தது போன்று தமிழீழத்திற்கும் இடைக்கால நிர்வாக ஆட்சி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக 2003ஆம் ஆண்டில் தேசியத் தலைவரிடம் வாக்குறுதி அளித்திருந்தீர்களே, உங்கள் வாக்குறுதி என்னவாயிற்று? அதுதான் போகட்டும். ஐ.நா செக்கியூரிட்டிக் கவுன்சிலிலும், ஒபாமாவுடனும் பேசி அமெரிக்கப் படைகளை முள்ளிவாய்க்காலுக்கு அனுப்புவதாக நடேசன் அண்ணாவிடம் கதையளந்தீர்களே, அதற்கு என்ன நடந்தது? எங்கள் போராளிகளும், பொறுப்பாளர்களும் நயவஞ்சகமாக படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியும், சிறைப்பிடிக்கப்பட்டதன் சூத்திரமும் உங்களுக்கும், திருவாளர் கே.பி அவர்களுக்கும் நன்கு தெரியும். தயைகூர்ந்து விளக்குவீராக!

தேர்தலின் பின் சிறிலங்காவின் அரசியல் நிலைவரம்

அணுசக்தி பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மன்மோகன் சிங், அந்நாட்டு அரசு தலைவர் பராக் ஒபாமாவுடன் சிறிலங்காவின் தற்போதைய அரசியல்நிலைவரம் குறித்து முக்கிய பேச்சுக்களில் ஈடுபடவுள்ளார். இந்த சந்திப்பு நாளை திங்களன்றும் நாளை மறுதினமும் வோஷிங்டனில் இடம்பெறவுள்ளது. சிறிலங்காவில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் மகிந்த அரசு கூட்டணிக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் கிட்டக்கூடிய அதிக வாய்ப்பு ஏற்பட்டிருப்பதால், இனிவரும் காலங்களில் சிறிலங்காவில் ஏற்படக்கூடிய அரசியல் மாற்றங்களில் சர்வதேச சமூகத்தின் சக்தி எவ்வகையானதாக இருக்கப்போகிறது மற்றும் அதற்கான சாத்தியங்கள் என்ன என்பது குறித்து இந்த சந்திப்பில் பேசப்படலாம் என்று கொழும்பிலுள்ள இந்திய தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன. இதேவேளை, சிறிலங்கா நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணை செயலர் ரொபேர்ட் ப்ளாக் கருத்து தெரிவிக்கையில் - "பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள விரும்புவதாக ஜனாதிபதி எப்போதும் கூறியிருந்தார். அவ்வாறு பெற்றுக்கொள்வதானது இலங்கையின் அரசியலமைப்பைத் திருத்துவதற்கு அவருக்கு இடமளிக்கும். "13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதில் தான் உறுதிப்பாட்டுடன் இருப்பதாக அவர் (ராஜபக்ஷ) கூறியுள்ளார். இந்த 13 ஆவது திருத்தமானது மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும். வடமாகாணம் உட்பட மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதாக அது அமையும். "நல்லிணக்கம் தொடர்பாக எப்போதும் அவர் உறுதிப்பாட்டுடன் இருப்பதாக நான் நினைக்கிறேன். அதனை இப்போது முன்னெடுப்பது மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன்" - என்று கூறியிருந்தார்

சுவிஸ் நாட்டு பெண் மணி யாழில் கொலை?

யாழ் திருமறைக் கலாமன்ற அலுவலகத்தின் பிற்பகுதியில் சுவிஸ் நாட்டு பெண்மணி ஒருவர் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த வெளிநாட்டுப் பெண்மணி மின்கம்பியில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சடலத்திற்கு அருகில் கடிதமொன்று காணப்பட்டதாகவும் யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ் குருநகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைத் திருமணம் செய்த இந்தப் பெண்மணி இலங்கைக்கு வந்து 10 நாட்களே ஆகும். குறித்த வெளிநாட்டுப் பெண்மணி சுவீஸ் நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.