வியாழன், 6 மே, 2010

மானிப்பாயில் மாணவி ஒருவரைக் காணவில்லை

யாழ்ப்பாணம், மானிப்பாய் வேலக்கைப் பிள்ளையார் கோயிலுக்கு அருகில் உள்ள விவேகானந்தா வித்தியாசாலை மாணவியான பதினொரு வயதுச் சிறுமியை நேற்று நண்பகலுக்குப் பின்னர் காணவில்லை என்று மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மானிப்பாய், சங்கரப்பிள்ளை வீதியைச் சேர்ந்த நகுலேஸ்வரம் ரேணுகா (வயது 11) என்ற மாணவியே காணாமல் போனவராவார். இதுபற்றி கூறப்படுவதாவது: நேற்றுக்காலை பாடசாலைக்குச் சென்ற பிரஸ்தாப மாணவி, பாடசாலை நேரம் முடிந்தும் வீடு திரும்பாதததை அடுத்து தாயார் தேடிச் சென்றதாகவும் அவரைக் காணததையடுத்து பொலிஸில் முறைப்பாடு செய்யததாகவும் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவத்தையடுத்து பெரும் எண்ணிக்கையான படையினர் மானிப்பாய் பகுதியில் குவிக்கப்பட்டு நேற்றிரவு வரை தேடுதல் இடம்பெற்றது. சிறுமியின் தந்தை வழக்கு ஒன்றில் சம்பந்தப்பட்டுச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறுமியின் குடும்பம் வசதிகள் குறைந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் யாழ்ப்பாணத்தின் கட்டளை தளபதி, இது போன்ற சம்பவங்களின் போது தமக்கு உடனடியாக தெரிவிக்குமாறும், இவ்வாறான சந்தர்ப்பங்களில் நாங்கள் சரியான நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் இவ்வாறான கடத்தல், கொலை போன்ற சம்பவங்களால் தமக்கும் தமது கட்சிக்கும் சேறு பூசும் செயலாக அமைகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் டக்களஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரான்சிஸ் மக்ஸிமின் என்பவர் யார்?


கடந்த சில மாதங்களாக தன்னை அருகன் என அடையாளப்படுத்தும் பிரான்சிஸ் மக்ஸிமின் என்பவர் யார். இத்தாலியில் இருந்து

சதியை முறியடித்து விட்டார்களாம்???!!!

தகுதி வாய்ந்தவர்கள் முன்னே செல்லட்டும் ‘நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்‘ என்ற போர்வையில் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடிப்படை இலட்சியங்களை சிதறடித்துக் காற்றில் பறக்க விடுவதற்கு சில நாசகார சக்திகள் எடுத்த முயற்சிகள் புலம்பெயர்வாழ் தமிழீழ தேசிய உணர்வாளர்களால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டிருப்பதை நடைபெற்று முடிந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன.

கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். இது காலத்தின் கட்டாயம்.

இன்று கேமரா என்றதும் நம் நினைவிற்கு வருவது கைத்தொலைபேசிதான். ஆனால் நாம் கொஞ்சம் கூட சந்தேகம் கொள்ளாத, நாம் தினமும் பயன்படுத்தி வருகின்ற பொருட்களான

அதிர்ச்சித் தகவல்!!


மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் இன்று கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவி ஒருவர் தப்பி வந்து தெரிவித்துள்ள தகவல்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. களுதாவளை தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10இல் கல்வி கற்கும் மாணவியை பாடசாலை முன்றலில் வைத்து கறுப்பு வாகனத்தில் சென்ற இனந்தெரியாத நபர்கள் இன்று காலை கடத்திச் சென்றுள்ளனர். அவரை மறைமுகமான இடமொன்றில் தடுத்து வைக்க முற்பட்ட வேளை, அந்த மாணவி அங்கிருந்து தப்பி, எருவில் கண்ணகி வித்தியாலயத்திற்குச் சென்று பாடசாலை அதிபர் கைலாசபிள்ளையிடம் சம்பவத்தை விபரித்துள்ளார். இதனையடுத்து அப்பாடசாலை அதிபர் கைலாசபிள்ளை அந்த மாணவியுடன் சென்று களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக மட்டக்களப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தான் கடத்திச் செல்லப்பட்ட வேளை, தன்னைப் போன்று மேலும் ஆறு மாணவியர் மயக்கமான நிலையில் அங்கிருந்ததாக அதிர்ச்சி தரும் தகவலை இம்மாணவி வெளியிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற பா.அரியநேத்திரன், சிறிலங்கா அரசாங்கத்துடன் தொடர்புடைய துணைக்குழுக்களே இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகவும், இதற்கு உரிய தீர்வுகள் காணப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கேள்வி யாருக்கு ?பதில் கூறுங்கள் ...............

“சங்கிலியன் ஆட்சி செய்தான் என்பதற்காக அந்த நிலத்தில் ஒன்றும் செய்யடியாதென்றால் மன்னாரிலும் எதனையும் செய்யமுடியாதே? வடமாகாணம் அனைத்தையும் சங்கிலிய மன்னன் ஆண்டான்தானே. அவன் ஆட்சி செய்த இடம் பாதுகாக்கப்பட வேண்டுமென்று இன்று கூறுவோர் ஏன் கடந்த காலங்களில் அதனைச் செய்யவில்லை.

தமிழீழத்தை அழித்தவர்களை புலம்பெயர் தமிழீழம் பழிவாங்க வேண்டும்!!! மறக்குமா?? மன்னிக்குமா?? பழிவாங்குமா??


ஈழத் தமிழர் மீதான அழித்தொழிப்பு யுத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு ஒரு ஆண்டு நெருங்கிக்கொண்டிருக்கின்றது. ஈழத்தமிழ் இனத்தின் வரலாற்றில் என்றைக்குமே மறக்கமுடியாத நாட்கள் அவை. ஈழத் தமிழர்கள் ஒரு மூலைக்குள் முடக்கப்பட்டு பட்டினி போடப்பட்டு இரசாயனக் குண்டுகளாலும் கனரக ஆயுதங்களாலும் துடிக்கத் துடிக்க

அவசரகாலச் சட்டத்தினால் இளைஞர் யுவதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்

அவசரகாலச் சட்டத்தினால் என்னை போன்ற இளைஞர், யுவதிகள் தான் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இந்த அவசரகாலச் சட்டத்தை நீக்க வேண்டியதன் நேரம் நெருங்கியுள்ளது- எனினும் உடனடியாக செய்ய முடியாது என அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது கன்னி உரையில் தெரிவித்தார்.