வியாழன், 6 மே, 2010

பிரான்சிஸ் மக்ஸிமின் என்பவர் யார்?


கடந்த சில மாதங்களாக தன்னை அருகன் என அடையாளப்படுத்தும் பிரான்சிஸ் மக்ஸிமின் என்பவர் யார். இத்தாலியில் இருந்து
 சமீபத்தில் கொல்லப்பட்ட தமிழ் பெண் ஒருவருக்கு உதவிதேவை என்ற விளம்பரத்தோடு தன்னை தமிழ் இணையங்களில் அறிமுகப்படுத்தியவர் அருகன். இவர் இயற்பெயர் பிரான்சிஸ் மக்ஸிமின் . தற்போது இவர் எழுதும் கட்டுரைகள் தமிழ்வின் போன்ற இணையத்தளங்களில் வெளிவருகின்றன. தன்னை ஒரு எழுத்தாளர் என்றும், ஊண்Gஆ அமைப்பைச் சார்ந்தவர் என்றும், மற்றும் இத்தாலிய குடிவரவு அலுவலகத்தின் அதிகாரி எனவும் தன்னை இவர் அடையாளப்படுத்துகிறார். இருப்பினும் இவர் நடவடிக்கை தொடர்பாக இத்தாலிய மக்களால் பல சந்தேகங்கள் வெளியிடப்பட்டன. வழமை போல இவர் இலங்கை அரசுடன் சேர்ந்து செயல்பட்டுவருவதாக பலர் கூறினாலும், தற்போது அதற்கான போட்டோ ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. இவர் இத்தாலில் உள்ள தமிழர்களின் தகவல்களைத் திரட்டுவதும், போராட்டங்களை முடக்கும் செயலில் மறைமுகமாகச் செயல்பட்டுவருவதாக, பல இத்தாலிய தமிழர்கள் கூறுகின்றனர். இவர் சமீபத்தில் இலங்கை தூதரகம் சென்று தூதுவரைச் சந்தித்து எடுத்த படங்கள் வெளியாகியுள்ளது. அத்தோடு இவர் வலைப் பூவில், இணைப்புகள் என்ற இடத்தில் அதிரடி போன்ற இணையங்களுக்கே முன்னுரிமை கொடுத்துள்ளார். இத்தாலியில் தமிழ் தேசியம் பேசி, இலங்கை அரசிடம் விலைபோய், போராட்டத்தைக் காட்டிக் கொடுக்கும் இவர்போன்ற பச்சோந்திகளை தமிழர்கள் உடனடியாக அடையாளம் கண்டு, இவரைப் புறக்கணிக்கவேண்டும். முதலில் தமிழ் தேசியம் பேசி தனது கட்டுரைகளை எழுதி, மக்களிடம் நன்மதிப்பைப் பெற்று பின்னர் அதனைப் பயன்படுத்தி, தனது அபிலாஷைகளை நிறைவேற்றுவதே இவர் நோக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக