சனி, 26 ஜூன், 2010

அரசாங்கத்தின் சாட்சியாக தற்பொழுது கே.பி!!!!??


வன்னிப் போரின் இறுதிக்கட்டத்தின் பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியுறவுத் தொடர்பாளராக நியமிக்கப்பட்ட கே.பி என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன், சிங்கள அரசுடன் இணைந்து இயங்கி வருவது தொடர்பான தகவல்கள்

எதிரியை வீழ்த்துவோம் ........

எமது கருத்துக்கெதிராக முரண்களம் அமைப்பதாக கருதி இனவிரோதிகளாக சிலர் கருத்து தெரிவிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். பழமை பேசாதீர்கள், குழந்தைகளை வன்முறையாளர்களாக்காதீர்கள் என்றெல்லாம் பேசுவதின்மூலம் இவர்களில் பலர் புத்தனின் வாரிசுகளாக இல்லையெனில் அமைதியின் குழந்தைகளாக தம்மை பாவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறார்களோ என்று தோன்றுகிறது.

மேஜர் நேரியன்

ஓ அந்த நாள் எங்கள் இதயத்தை இடி வந்து தாக்கிய நாள் எம்முயிர்த் தோழன் விதையாகிப் போன செய்தியது. எம் செவிப்பறையை அதிரவைத்த நாள். எம் வாழ்வுக் காலமதில் காலக்கடல் கரைத்துச் சென்ற நாட்களில் சோகத்தின் எல்லையைத் தொட்ட நாள். நீளும் எங்கள் இவன் கனவினை வாழ்வில் சுமப்போம். என்பதை எங்கள் எழுத்தால் மட்டுமல்ல எம் உள்ளத்தாலும்.....

கபட நோக்கம் கொண்ட சிறிலங்கா அரசின் முயற்சிகள் தொடர்பில் புலம்பெயர் மக்கள் மிக விழிப்புடனும் கூட்டுப்பொறுப்புணர்வுடனும் செயற்படவேண்டும்.

சிறிலங்கா அரசு முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் சர்வதேசத்தின் நெருக்கடிகளை எதிர்கொண்டுவருகின்ற அதே வேளை தமிழர் உரிமைக்கான போராட்டத்தினை நசுக்க தொடர்ந்தும் திட சங்கற்பம் பூண்டுள்ளது.


தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் என்பது சர்வதேச ரீதியாக பல வழிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தமிழீழ விடுதலைப்புலிகளை அழிப்பதன் மூலம் தமிழர்களின் போராட்டத்தின் இலட்சியத்தை அழித்துவிடலாம் என்ற............

சிறீலங்கா ஐ.நா முறுகல்!

இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து தனக்கு ஆலோசனை வழங்க ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்திருக்கும் விசேட நிபுணர் குழு இலங்கை வர அனுமதி வழங்கப்பட மாட்டாதென அரசாங்கம் நேற்று வியாழக்கிழமை திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறது.இந்த விசேட நிபுணர் குழு இலங்கை வருவதற்கான விசா அனுமதி வழங்கப்பட மாட்டாதென

வரலாறு உங்கள் கைகளில்! தந்துள்ள காலங்களையும், சந்தப்பத்தையும் பயன்படுத்துங்கள்....

விடுதலைப் புலிகளின் தலைமைகளின் அழிவுடன் அதன் தகமைகளும் அழிவடைந்துவிட்டதை யாராலும் மறுக்க முடியாத கட்டாய கால கட்டத்திற்குள் உள்ளோம் என்பதை சகல தரப்பாரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இங்கு தகமை இழந்தது வெறும் விடுதலைப் புலிகள் மட்டுமல்ல தமிழர்களும் தான். இக் கருத்தை ஏற்பதில் கடினமாக இருக்கலாம், ஆனால் அதுவே உண்மை.

சட்டத்தரணியான சந்திம அனில் வித்தானராச்சி என்பவரை லண்டனில் கைது செய்ய கொழும்பு நீதிமன்று உத்தரவு

இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான பொய்யான செய்திகளை வெளியிட்டுவரும் லங்கா நியூஸ் வெப் இணையத்தளத்தை பிரித்தானியாவிலிருந்து நிர்வகித்துவரும் இலங்கை சட்டத்தரணியான சந்திம அனில் வித்தானராச்சி என்பவரைக் கைதுசெய்வதற்காக கொழும்பு மேல் நீதிமன்றம் பகிரங்க பிடிவிராந்து ஒன்றை பிறப்பித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. போலி ஆவணங்களைத் தயார் படுத்தியமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இவருக்கு எதிராக தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டம்பர் 16ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மீள் குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணாண்டோ கைதட்டபைலாவிற்கு ஆடுகின்றார் அம்மான்! கருணா சுழன்று சுழன்று

புலிகளின் மட்டு – அம்பாறை முன்னாள் இராணுவத் தளபதியும் , ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதித் தலைவரும் மீள் குடியேற்ற பிரதி அமைச்சருமாகிய கருணா அம்மான் என அழைக்கப்படும் வினாயக்கமூர்த்தி முரளிதரன் மாலம்ப பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில் பைலா பாடல் ஒன்றிற்கு ஆடுவதை படத்தில் காண்கின்றீர்கள்.

சரணடைவது தொடர்பாக அரசுடனும், கே.பி யுடனும் நோர்வே தொடர்பு !

இலங்கை விவகாரம் தொடர்பில் ஆலோசனை பெறுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் நியமித்துள்ள நிபுணர் குழுவுக்கு நோர்வே ஆதரவு வழங்குவதாக நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக்சொல்ஹேய்ம் தெரிவித்தார்.